07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஆனந்த். Show all posts
Showing posts with label ஆனந்த். Show all posts

Sunday, July 17, 2011

தமிழின் முக்கியமான கதைகள் ..,

தமிழ் இலக்கியம் என்பது யாதார்த்த வாழ்வில் இருந்து விலகி வெகுதூரம் சென்று ஆண்டுகள் பல ஆகி விட்டன.., இன்றும் வாசிக்கும் பழக்கம் உள்ள என் நண்பர்களிடம் கேட்டால் Sidney Shelton , Chetan Baghat , Jeffrey Archer என்றே படிக்கிறார்களே தவிர சுந்தர.ராமசாமியோ , எஸ்.ராவோ , பிரமிளோ தெரிவதே இல்லை.நான் இணையத்தில் கிடைக்கும் கதைகளில் சிறந்ததாக கதைகளின் பட்டியலை கொடுத்து இருக்கிறேன்.., இது மிக மிக சிரியதே..,

முக்கியமான கதைகளாக நாம் கருதும் கதைகளின் பட்டியல் :

முள் - சாரு நிவேதிதா

சாரதா - வண்ணநிலவன்

எஸ்தர் - வண்ணநிலவன்

நகரம் - சுஜாதா

அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்

நான்காவது கனவு - யுவன் சந்திரசேகர்

பச்சைக்குதிரை - ஜி.நாகராஜன்

ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்

எலி - அசோகமித்ரன்

நதிக்கரையில் - ஜெயமோகன்





மேற்கூறிய கதைகள் யாவும் அழியாச்சுடர்கள் வலைப்பூவில் உள்ளன.., தமிழ் இலக்கியத்தின் சேமிப்பு பெட்டகமாக திகழ்ந்து வருகிறது.., அதன் ஆசிரியருக்கும் மற்றும் கதைகளை தட்டச்சு செய்து தரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...,

==========================================================================

சில நூல்களை பி.டி.ஃப் வடிவில் இணையத்தில் கிடைக்கின்றது .., அவற்றுள் சிலவற்றின் சுட்டிகள் இதோ..,







==========================================================================
வலைச்சரத்திற்க்காக எழுதும் கடைசி பதிவு .., வார நாட்களில் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் அதிகப்படியான வேலை காரணமாக நினைத்த அளவுக்கு பதிவுகள் எழுத முடியவில்லை.., என்னால் இயன்ற அளவு சிறப்பாக செய்து இருப்பதாக கருதுகிறேன் .., நண்பர்கள் அனைவரின் ஊக்கத்துக்கும் நன்றிகள் பல... இனியும்(?????) நான் எழுதுவதை படிக்க ஆர்வம் உள்ளவர்கள் இங்கே தொடரலாம் .....:)

நன்றி வணக்கம்....
மேலும் வாசிக்க...

மிக்ஸர் மசாலா - 2

வணக்கம் ..,

    சென்ற பதிவில் பலதரப்பட்ட பதிவுகளின் அறிமுகத்தை பார்த்தோம் . இந்த பதிவிலும் அதன் தொடர்ச்சியை பார்ப்போம்...,

    ப்ளீஸ் ஆன்சர் மீ என வலைப்பூவை முன்னேற்ற வழிமுறைகளை நம்மிடம் கேட்பது போல .., பதிவுலகை கலாய்க்கிறார் “ப்ரீதம் கிருஷ்ணா”..,

   நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து பதிவுகள் எழுதி வருகிறார் “மனக்குரல்” சுதன் ...., சமசீர் கல்வி குறித்த அவரின் தெளிவான பார்வை இங்கே படியுங்கள் ...,

   அழகழகான காதல் கவிதைகள் எழுதி வருகிறார் ”மழைகால  தவளைகள் “ சிவசங்கர் .., “காதல் கொலை” என்னும் காத்திரமான கவிதையை படியுங்கள் ..,

   நாட்டின் அரசியல் பிரச்சனைகளில் தன்னுடைய கருத்தை ஆழமாக பதிவு செய்கிறார் ”மானங்கெட்ட தமிழன்” சதீஷ் பாண்டியன்.., 

   தன் பெயரை போலவே எண்ணங்களை அழகாக பதிவு செய்கிறார் ”யோ வொய்ஸ்”.., அவரின் மனங்கவர்ந்த பாடல்களின் தொகுப்பை இப்படி வெளி இடுகிறார்..,

   வரிகையாக ஜோக் சொல்லி சிரிக்க வைப்பதில் வல்லவர் ”சிரிப்பு வருது”.., அதற்கு உதாரணம் இதோ...

   சினிமா சம்பந்தமான ஆராய்ச்சிகளில் வல்லவர் “டகால்ட்டி”.., அவரின் சினிமா கேரக்டர் குறித்த ஆராய்ச்சிகளை இங்கே பாருங்கள்..,

   பல்சுவையான பதிவுகளை எழுதி வருகிறார் ”திருப்பூர் சரவணகுமார்”.., தனது சொந்த ஊரான திருப்பூரின் சாயப்பட்டறைகள் குறித்த அவரின் பதிவு..,

    அழிந்த ஃபைல்கள் நினைத்து இனி வருந்த வேண்டியது இல்லை என அருமையான தொழில்நுட்ப வலைப்பதிவு மூலம் விளக்கி இருக்கிறார் “பச்சை தமிழன்”..,

     சிறப்பான சிறுகதைகள் எழுதி வருகிறார் ”புதுவை சந்திர ஹரி”.., அவரின் “புது செருப்பு” என்னும் இக்கதையை படித்து பாருங்கள் ..,

     உலக சினிமா விமர்சனங்களில் அழகாகவும் ஆழமாகவும் எழுது வருகிறார் ஜீ ...,

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே..,
மேலும் வாசிக்க...

Saturday, July 16, 2011

மிக்ஸர் மசாலா ....

            வலைப்பூக்களில் பலவகையான துறைகளில் அதில் நிபணத்துவம் பெற்றவர்க்ள் தங்கள் அனுபவத்தையும் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தாங்கள் கற்றதையும் எழுதி வருகிறார்கள்.. இன்னும் பலர் அவர்களின் விருப்பங்கள் பற்றியும் , சினிமா , அரசியல் எனப் பல துறைகளில் எழுதி வருகிறார்கள் அவர்களை பற்றிய சிறு குறிப்புகள் ...,

         காதலின் பிரிவையும் வலியையும் ”நீயில்லாத வாழ்க்கையா ?” என அழகான கவிதையாக வடித்து மனதை கனக்க வைக்கிறார் ”குட்டி சுவர்க்கம்” அமினா ..,

      தமிழ் சினிமாவின் வருங்காலம் குறித்து ஒரு விரிவான அலசலை தருகிறார் ”ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்” என்ற கட்டுரையில் தருகிறார் “கும்புடுரேனுங்க” நர்மதன்..,

    புத்தக கண்காட்ச்சியில் தனக்கு கிடைத்த அனுபவங்களை சுவைப்பட பகிர்கிறார் R கோபி .. ஈரோடு புத்தக கண்காட்சி 2011 என்ற பதிவில் சொல்கிறார்..,

   புதிய புதிய வகையான உணவுகள் செய்வது எப்படி என சுமாவின் குறிப்புகள் என்னும் தன் வலைப்பூவில் சொல்கிறார் சுபா ..,  பால் அல்வா செய்வது எப்படி என இந்த பதிவில் சொல்கிறார்...

    அழகழகான கவிதைகள் மூலம் நம் மனதில் நீக்கமற நிறைகிறார் தேணம்மை லக்‌ஷ்மன்... குறிப்பாய் சொல்ல வேண்டுமானால் இந்த பலூனை பற்றி சொல்லியாக வேண்டும்..,

   தான் சந்தித்த ஒரு மனித தன்மையற்ற ஒரு மிருகத்தை பற்றிய ஒரு பதிவை கோவத்துடன் பதிவு செய்கிறார் அஞ்சா சிங்கம்..,

   எல்லாருக்கும் தன்னுடைய அப்பா தான் ஹீரோ .., தந்தையின் பெருமைகளை சொல்லும் அருமையான கவிதையை நமக்காக தருகிறார் அஷ்வின்...

  ”எனது பயணங்கள்” திருமலை கந்தசாமி தனது வலைபூவில வெரைட்டியான
 பதிவுகளை தருகிறார் குறிப்பாக பேச்சுரிமை குறித்த அவரது இந்த கவிதயை படித்து பாருங்கள் ...,

   கைப்பேசி என்ற வலைப்பூவில் கைப்பேசி குறித்து அனைத்து விவரங்களும் நமக்கு அழகு தமிழில் கிடைக்கிறது.., அவரது  எப்போது திருந்தும் ஏர்டெல் பதிவை படித்து பாருங்கள்..

   நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சீரியசாகவும் எழுதுவதில் வல்லவர் “புலிவால் பிடித்தவன்”.., அவரது துது பாடுவதில் சிறந்தவர் யார் என்று அருமையான ஆராய்ச்சியை செய்துள்ளார்..

அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே...,
 

   
மேலும் வாசிக்க...

Friday, July 15, 2011

பட்டி பாத்து டிங்கரிங் பண்ண...

நாம எல்லாரும் ஏதோ ஒருக்காரணத்துகாக ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுடுவோம்.அதுக்கப்புறம் ட்ராவிக் அதிகரிக்குறது எப்படி , ஃபேஸ் புக்குல சேக்குறது எப்படி ...  எப்புடின்னு வரிசையா கன்ஃபீஸ் ஆகி   அப்புறம் வேண்டா வெருப்புக்கு புள்ள பெத்து காண்டாமிருகம்ன்னு பேரு வைச்ச கதையா ஆகிடும்.இதுக்கெல்லாம் தீர்வு சொல்வத்ற்க்கு என்றே சில தொழில்நுட்ப வலைப்பூக்கள் உள்ளன அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்...,



இணையத்தில் புழக்குபவர்கள் அனைவரும் ஆங்கில மேதைகள் அல்ல ., ரொம்பவும் அடிப்படை ஆங்கிலம் போதும் அதை பெருகேற்றும் வலைத்தளங்களின் பட்டியலை நமக்கு "ஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்" என பட்டியல் தருகிறார் சின்னவன்..

இப்போல்லாம் ஆபிஸ்ல ரொம்ப ஓவரா பண்றாங்கப்பா ... ஃபேஸ்புக்கெல்லாம் ப்ளாக் பண்றாங்கன்னு புலப்புவரா நீங்கள்.. உங்களுக்கு தேவையான பதிவு "ஆபீஸில் Facebook,Twitter blocked ??? இனி இல்லை கவலை"  பதிந்தவர் "பலே பிரபு" ..

இணையத்திலேயே 5.ஜி.பி வரை எப்படி சேமிப்பது என்றும் கூகுள் நண்பர்களை இணைப்பது எப்படி என்றும் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக சொல்கிறார் டெக்வின் ..

இப்போது ஸ்கூல் பசங்களுக்கு கூட லேப்டாப் குடுக்க ஆரம்பிகச்சுட்டாங்க .. அத எப்புடி பராம்பரிப்பது என "மடிகணினியை பாதுகாப்பது எப்படி ?" என்று விளக்கமளிக்க்றார் "நிலவைத்தேடி"..

இன்னிக்கு ஆண்ராய்டு  மொபைல் வைச்சுக்குரது தான் ஃபேஷன் .., ஆனா அதோட டொழில்நுட்ப வசதிகல் பற்றி பலருக்கு தெரிவதில்லை..,தமிழன் என்ற இந்த வலைப்பூவில்  "ANDROID ஒரு பார்வை..." இந்த பதிவு ஆன்ட்ராடு பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான அபிப்ராயத்தை ஏற்படுத்த கூடியது ..,

பொண்ணு பாக்க நஃபோட்டோ , பையன் பாக்க ஃபோட்டோ , ஃபிலக்ஸ் வைக்க போட்டோ , மண்டைய போட்டாலும் போட்டோ ..., ஆனா எல்லா இடத்துக்கும்  போட்டோ போறதுக்கு முன்னால போற இடம் ஃபோட்டோஷாப் தான் அதை பற்றி பக்கம் பக்கமாக பாடம் எடுக்குறார் ஸ்ரீதர்.அவரின் பாடத்தை படிக்க போட்டோஷாப் பாடம்..,

அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே...,
மேலும் வாசிக்க...

Thursday, July 14, 2011

சிரிப்பு வருது..., சிரிப்பு வருது ..., சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது..., (2)

சிரிப்பதால் கிடைக்கும் நற்பலன்கள்..,

உங்கள் மகிழ்ச்சியின் அளவை பலமடங்கு பெருக்கலாம்.

உங்கள் மனநிலையை மாற்றலாம்.

அடுத்தவர் மனநிலையை மாற்றலாம்.

அழுவதை விட சிரிப்பது சால சிறந்தது.

ஆமா , சிரிச்சா என்ன குறைஞ்சிட போகுது...

மொக்க போட்டது போதும்ன்னு நினைக்குறேன்.. போன பதிவின் தொடர்ச்சி தான் இது....,
                 
   சினிமா விமர்சனம் நெறய பேர் எழுதுறாங்க தனக்கு பிடிக்காத படம்ன்னாலும் சிரிக்க சிரிக்க விமர்சனம் எழுதி இப்படி நம்மை சிரிக்க வைக்கிறார் கா.கி

   பாட்டி வடை சுட்ட கதை எல்லாருக்கும் தெரியும் அதையே ஹாலிவுட்ல எடுத்தா எபுடி எடுப்பாங்கண்ணு “பாட்டி வடைசுட்டகதையை திரைப்படமாக எடுத்தால்!...” அப்புடின்னு கலக்கலா சொல்லி இருக்கார் விகடகவி

  அடிபைப்பிலோ பாரிலோ நாம எல்லாரும் தண்ணி அடிச்சிருப்போம் ஆனா தண்ணி அடிச்ச கதைய இப்படி செமயா ”தண்ணி” அப்புடிண்ணே எழுதி இருக்காங்க மிடில் கிளாஸ் மாதவி..,

   அரசியல் நையாண்டிகளில் அதகளம் பண்ணி இருக்கிறார் ”நெல்லி.மூர்த்தி” அவரின் ”அரைவேக்காடு அம்பியின் அலப்பறை ” படித்தால் சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்...

    சரவெடி போல் சர சர வென ஜோக்காக சிரிப்புக்கா பஞ்சம் என சொல்லி கொண்டே போகிறார் ”தென்றல்” ஜெயராமன்..

   வீட்டுல இருக்குற பொண்ணு வீடை விட்டு ஓடி போனா எப்புடி இருக்கும் அதையே இப்படி கலக்கல் காமெடியா சொல்லி இருக்கார் மைந்தன் சிவா..

இந்த முறை போல் இல்லாமல் விரைவில் சந்திப்போம் நண்பர்களே....
மேலும் வாசிக்க...

Tuesday, July 12, 2011

சிரிப்பு வருது..., சிரிப்பு வருது ..., சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...,

வாலிப வயோதிக நண்பர்களே..!!

     வேலையில் டென்ஷனா .... ???
     குடுப்பத்தில் பிரச்சனையா .... ???
     லவ்வருடன் சண்டையா ... ???
     மேனஜர் திட்டுகிறாரா ... ???

     நீங்கள் அனைவரும் அணுக வேண்டிய ஒரே இடம்...

    பதிவுலகம் ... பதிவுலகம் .... பதிவுலகம் .....

      எவ்வளவு மனநெருக்கடியில் நிங்கள் இருந்தாலும் உங்களை விழுந்து விழுந்து விட்டு சிரிக்க வைக்க கூடிய அளவுக்கு டரியலான பதிவர்கள் நிறையவே உண்டு அவர்களுள் சில...



       தான் பல்பு வாங்கிய கதையை சும்மா பல்பு வாங்களையோ பல்பு என கூவி கூ வி நம்மை சிரிக்க வைக்கிறார் நாஞ்சில் பிரதாப்... அதும் சும்மா எக்ஸ்பிரஸ் மாதிரி ....

       கவிதை எழுதலாம் , கிரிகெட் பற்றி எழுதலாம் .., நலைச்சுவை பதிவு எழுதலாம் ஆனால் மூண்றையும் கலந்து எழுத முடியுமா ??... கிரிக்கெட் பதிவு இப்படியும் எழுதலாம் !! என்று சிகஸ்ர் சிக்ஸராக அடித்து இருக்கிறார் ”சிறகுகள்” பாலவாசகன்...

         நண்பனுடன் பேசுவது போல பட பட வென மனசில் பட்டதையெல்லாம் என்னத்த சொல்ல என எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே போகிறார் ”தெனே” தினேஷ் ....
 
      ஐரோப்பிய நாடுகளில் குழந்தை வளர்க்கும் முறையை கிண்டலக்கும் படங்களோடு அந்த குழந்தைகள் சார்பாக கமெண்ட்டும் போட்டு “குழந்தையும் தெய்வமும் குரங்கும் நாயும் !!!” என்று சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார் கூடல் பாலா ...

    பொன்னியின் செல்லவனை நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் படிப்பதோடு நிறுத்தாமல் வந்திய தேவனின் காதல் தோல்வி அடைந்தது ஏன் என்று ஆராய்ச்சியும் செய்து இருக்கிறார் வேப்பந்தோப்பு சக்திவேல் ...

    அரசியல் நையாண்டிகள் எப்போதும் நம்மை சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைப்பவை. “முதலில் அம்மாவுக்கு,ரெண்டாவது அய்யாவுக்கு” என்று சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் வலிப்போக்கன் ...

   
அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே... !!
மேலும் வாசிக்க...

Monday, July 11, 2011

ஒரு இனிய தொடக்கம்..,

என்னை ஆசிரியராக பொறுப்பேர்க்க செய்தமைக்கு நன்றியையும் அவர் கேட்டு நீண்ண்ண்......ண்ட இடைவெளிக்கு பிறகு ஏற்றுக்கொண்டத்ர்க்காக வருத்தத்தையும்முதலில் தெரிவித்து கொள்கிறேன்...

    2009-ம் ஆண்டு இறுதியில் சரியான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டு தனியே நாட்க்களை ஓட்டிய காலத்தில் தனிமையை கொல்லவே “பேநா மூடி” என்ற பெயரில் ஒரு வலைப்பூ தொடங்கி எழுதிக்கொண்டு இருந்தேன்.ரொம்பவும் தீவிரமாய் எழுதிய கால கட்டம் அது தீவிரமான்னா தீவிர இலக்கியமெல்லாம் இல்லை தினமும் தவறாமல் பதிவு எழுதிவிடுவேன். அதன் பிறகு வேலைத்தேடும் படலம் காரணமாக வலை உலகத்திடம் ஒரு பிரியா விடை பெற்று கிளம்பினேன்..,

    கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் எதாவது எழுத ஆரம்பிக்கலாம் என்று “கிறுக்கல்கள்” என்ற வலைபூவை மிக சமீபத்தில் தொடங்கினேன்...,அந்த வலைப்பூவை மூடும் சமயத்தில் தான் என்னை ஆசிரியர் பொறுப்பு ஏற்க சொன்னார் சீனா ஐயா அவர்கள்..., அப்போது முடியாத சூழ்நிலையால் இந்த வலைப்பூ ஆரம்பித்த உடனேயே இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன்...,

     புதிதாய் வலைப்பூ தொடங்கி இன்னும் முழுசாய் 7 பதிவு போடவில்லை ஆனால் அதற்க்குள் குறைந்தப்பட்சம் 7 பதிவுகளாவது போடுவேன் என்ற வாக்குறுதியுடன் வருகிறேன் என்னால்லான அளவு சிறப்பாக செய்ய முயலுகிறேன்.. :)

      நான் எழுதியவற்றுள் சில ...,

                வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை
                
               வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை (பகுதி 2 )
                
              நீ... நல்லவனா கெட்டவனா...

             புரட்சி தளபதி விஷாலுக்கு நோபல் பரிசு..,


             Trainspotting [1996] - போதையே வாழ்க்கையாய் 

என்னை தொடர விரும்பும் நண்பர்கள் கிறுக்கல்கள் வலைப்பூவை தொடறுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்...,

சந்திப்போம் நண்பர்களே...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது