07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Wednesday, October 19, 2011

புதன் ஸ்வரம் - ' ரி '

            

 மிருதங்கம் ஓர் உறுதியான தோல் வாத்தியக் கருவி.இதன் இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத்தோல்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.

இது ‘மிருத்’ அல்லது ஒருவித கல்லின் தூளினை முக்கிய அங்கமாக உடையது. அந்த கல்லின் மண்ணை பசை சேர்த்து தோலினிடத்தே வட்டமாக பூசி ஒழுங்கு செய்வதால் அதனின்று ஆதார சுருதி ஒலிக்கின்றது. அதேபோல் அவரவர்களுக்கு வேண்டிய ஆதார சுருதியை அதில் அமைத்துக் கொள்வதற்கு உதவ தக்கப்படி வார்களால் இழுத்து கட்டப் பெற்றிருக்கின்றது.

இன்றைய ஸ்வரமான 'ரி' இரண்டாம் இடம் வகிப்பதாகும்

2 ரிஷபம்: இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் ஸ்வரம் ரிஷபம் எனப்பட்டது.ஸ்வர எழுத்து "ரி"


ஸ்வர எழுத்து 'ரி' கம்பீரமாகவும் பலமுள்ளதாகவும் இருப்பது போல் தோல் வாத்தியக் கருவியான மிருதங்கமும் உறுதியானதே.

உறுதியான "ரி" இசையில் இரண்டாம் இடம் வகிப்பது போல்,  உறுதி
சம்பந்தப் பட்ட  ஆரோக்கியம் பற்றிய எழுத்துக்கள் இன்று அடையாளம் காட்டப் படுகின்றன.

சங்கீதம் என்பது சரீரம்,சாரீரம்,ஸ்ருதி மற்றும் லயம் கொண்டது.
ஸ்ருதி என்பது மாதாவாகவும் லயம் பிதாவாகவும் கொள்ளப்படுகிறது.

ஸ்வரம் 'ரி' யை தாளம் தப்பாமல் வாசிக்கறவங்களை பார்க்கலாம்.

த தி தொம் நம்....

ஆரோக்கியமான உறுதியான உடல்நிலை இருக்கணும்னா அதுக்கு நாம செய்ய வேண்டிய முக்கியமான விஷயம்  நடைப் பயிற்சிதான்.அந்த நடைப்பயிற்சி எப்படி இருக்கணும், என்னல்லாம் செய்யக் கூடாது,எவ்வளவு தூரம் நடக்கணும்,அதோட பலன்கள் என்ன? இப்படின்னு ஒரு லிஸ்டே கொடுக்கறார் மெய்ப்பொருள் காண நினைக்கற இந்த தமிழ்க் குருவி

அதே  சமயத்துல இரத்த சோகை இல்லாமல் செய்வோம்னு சொல்லி அதுக்கு என்ன காரணங்கள்,எப்படி அதை தெரிஞ்சுக்கறது, அதுக்கு என்ன சிகிச்ச்சை முறைன்னு தெளிவா விளக்கி இருக்கார்.

மனதில் பட்டதை எழுதுகிறேன்னு சொல்லிக்கிட்டாலும் நமக்குத் தேவையான தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் கொடுத்து, என்ன மாதிரியான உணவு எடுத்துக்கணும்?உணவு நமக்கு எப்படி மருந்தா உதவி செய்யுதுங்கற விவரமெல்லாம் நமக்குத் தரார் இவர்.

ராத்திரி ஒழுங்கான உணவை சாப்பிடலேனா அதனால தூக்கம் பாதிக்கப் பட்டு வியாதிகள் வரும்.அதனால இரவு நேரத்துக்கேற்ற உணவுகள் பற்றி நமக்கு விளக்கமா சொல்றார்  இந்த பதிவர்

சாப்பிட்ட உடனேயே செய்யக் கூடாதவை பத்தியும் நாம கட்டாயம் தெரிஞ்சுக்கணும் இல்லையா.அதை தெரிஞ்சுக்கணும்னா நாம மேலப்பாளையம் வரைக்கும் போகணும்

உணவைப் பத்தி மட்டும் தெரிஞ்சுக்கிட்டா போதாதே.அதை தயாரிக்கும் பாத்திரத்தைப் பத்தியும் தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்னு சொல்றார்
இங்க ஒருத்தர்.

கொத்துமல்லி பத்தின விவரங்கள் அதோட மருத்துவப் பயன்கள் பத்தி தெரிஞ்சுக்கணுமா?அப்படின்னா மூலிகை வளத்துக்கு வாங்க.திரு குப்புசாமி அவர்கள் பல மூலிகைகள் பற்றி தன் வலையில எழுதிக்கிட்டு வரார்.
துளசி பத்தி பல விஷயங்கள் சொல்லிருக்காரு
 
இஞ்சி இடுப்புக்கு உறுதின்னு நிறைய பேருக்குத் தெரியும்.அதைத் தவிர அதுக்கு என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா?
இஞ்சியும் மருத்துவ குணமும் போய்ப் பாருங்க.
 
என்னென்னவோ சாப்பிடறோம்.ஆனா கீரையின் மகத்துவம் தெரிஞ்சா அதை யாரும் ஒதுக்க மாட்டாங்க.இந்த தமிழ்த் தோட்டம் வச்சுருக்கறவர்
பல விதமான கீரை வகைகளையும் அவைகளோட பலன்களையும் தெளிவா சொல்லியிருக்கார்.எல்லாரும் இவர் தோட்டத்தைப் போயி பாத்துட்டு விதவிதமான கீரைகளை எடுத்துக்கலாம்.
கீரை பறிச்சுக்கிட்டு கோடைகால நோய்களைத் தவிர்க்க குறிப்புகளும் தெரிஞ்சுக்கிட்டு வரலாம்.
 
என்னது? என்ன சொல்றீங்க? இப்படியே கணினி முன்னாடி உக்காந்துக்கிட்டு
இருந்தா முதுகு வலிக்குதா?அதனால கவலை வேண்டாம்.அன்போடு ஆனந்தமா முதுகு வலிக்குத் தீர்வு சொல்லித் தரார் இங்க ஒரு தங்கமணி(ப்ரொஃபைல் ல பாத்தா ரங்கமணி) .தாளம் தப்பாம சொல்லித் தரும்போது அப்பறம் என்ன?
 
நிறைய பேர் இன்னிக்கு சக்கரை வியாதில கஷ்டப் படறாங்க.இந்த நிலைமை மாறணும்னா நம்ம உடம்புல உள்ள இன்சுலினை பாதுகாத்துக் கொள்வது எப்படின்னு நாம கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.அதைத்தான் தமிழ்த்துளி சொல்றார்.இவர் வாசிக்கற தாளத்தை கேட்டு நடந்தா உடம்பு நல்ல சங்கீதம் மாதிரி இருக்கும்
 
 நோய் நாடி நோய் முதல் நாடி உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து.சமீப காலமா பெண்களுக்கு கருப்பை அகற்றும் சிகிச்சை நிறைய  நடக்குது.
இதை ஹிஸ்டரெக்டமினு சொல்வாங்க.இது ஏன் நடக்குது, என்ன நிலைமைல இதை செய்யணும்னு தகவல் கொடுத்திருக்காங்க பூங்குழலி.
 
உடல் மட்டுமில்லாம உள்ளமும் சம்பந்தப் பட்டதுதான் ஆரோக்கியம்.
உள்ளக் கமலத்தால உடலைக் கட்டுப்படுத்தும் சக்கரங்கள் பத்தி சொல்றார் மணிமேகலா. நம் உடம்புக்குள் இருக்கற ஏழு சக்கரங்கள் நம் உடலை எப்படி கட்டுப்பாட்டில் வைக்கின்றனனு இங்க தெரிஞ்சுக்கலாம்.


                                                          


ஷண்முகப்ரியா:


இசைப்பவர் மற்றும் இசையைக் கேட்டு ரசிப்பவரின் அறிவினைக் கூர்மைப்படுத்தும் திறன் கொண்ட ராகம் இது. மனதிற்கு வலிமையும் உயிருக்கு ஊட்டமும் தந்து சக்தி கொடுக்கும் ராகம். சிவபெருமானின் ஒளிவீசும் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஷண்முகனுக்குப் பிடித்த ராகம்.

முத்தைத் தரு பத்தித் திருநகை..............




இந்த ஆரோக்கியப் பதிவுகளை கடைப்பிடிச்சா உடல் நலம் மிருதங்கம் மாதிரி உறுதியும்,ஷண்முகப்ரியா ராகம் போல் மனதிற்கு உறுதியும்
பெற்று வாழலாம் இல்லையா?
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது