07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label இராம். Show all posts
Showing posts with label இராம். Show all posts

Saturday, June 9, 2007

பாதித்த சிறுகதைகளில் சில...

உண்மைச் சம்பவத்தை கட்டுரையாக எழுதுவதில் வாசிப்பவர்களை உணர்வுபூர்வமாக பாதிப்புக்குள்ளாக்குவது என்பது சற்றே கடினந்தான். அதே போல் கதைகளிலே உண்மைச் சம்பவத்தை எழுதும் பொழுது உணர்வுப்பூர்வமான பாதிப்பு ஏற்படுத்துவதும் சற்றும் கடினந்தான். அந்த கடினமான எழுத்துப்பணியை கதைகளில் எளிதாக வடிக்கும் சில எழுத்தாளர்களின் கதைகளை என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியவற்றை பார்க்கலாம்.


தம்பியின் இந்த கதை, லாரி ஓட்டும் டிரைவர் குடும்பங்கள் சிலவற்றில் நடக்கும் வருந்ததக்க நிகழ்ச்சியை கருவாக கொண்டு எழுதியது.

தேன்கூடு நடத்திய சிறுகதை போட்டியின் போது மரணம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கதை, முகமறிய, முகமறிந்த மனிதர்கள் தீடீரென்று மரணம் நிகழும் பொழுது நாம் அடையும் சோகம் இக்கதையை வாசித்தப் பொழுது உணரமுடியும்.

கப்பி பயல் எழுதிய மரணம் சிறுகதை

இவரின் மற்றொரு கதை. மற்றொரு உணர்வுபூர்வமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

கோ.இராகவன் எழுதிய பகலில் வந்த பூர்ணிமா

செதுக்கல் தேவ்'வின் கதிரேசன் கதை

லிவ்ங்ஸ்மைல் வித்யா தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கதையின் பாணியில் எழுதிய புனைவாக சொல்லும் முயற்சி.
மேலும் வாசிக்க...

Friday, June 8, 2007

சிவாஜி - The Boss

சிவாஜி தற்போது தமிழ் சினிமாவுலகிலும் தமிழ் ஊடகங்களிலும் அதிகமாய் இல்லை ரொம்பவே அதிகமாய் உபயோகப்படுத்தபடும் பெயர். ரஜினி சந்திரமுகி முடிந்ததும் அடுத்தப்படத்தை பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் ஊடகங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெகுசன ஊடகங்களுக்கு இணையான பதிவுலகிலும் சிவாஜி படத்தை பற்றிய பதிவுகள் வரதொடங்க ஆரம்பித்தன. அந்த வகையில் சிவாஜி படத்தை பற்றி பதிவர்கள் எழுதி நான் படித்த சில பதிவுகள்.



ரஜினி ரசிகர்களின் அதிகாரப்பூர்வ வலைப்பூ

சிவாஜி படத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ.

ஆ.வி.யில் ரஜினி பற்றி வந்த I.மோகன் தாஸின் பதிவு.

அவரின் மற்றுமொரு பதிவு.


பினாத்தல் சுரேஷ்'ன் சிவாஜி பதிவு பட்டியல்கள் ;)

சிவாஜி திரை முன்னோட்டம்

சிவாஜி2.0 revised Premier show (flash)


சிவாஜி-ஒரு திரை முன்னோட்டம்

சிவாஜி - ஒரு படம் - 1024 விமர்சனங்கள்!!!!!

லக்கிலுக்கின் சிவாஜி படத்தின் விமர்சனம்

படம் வெளியானதும் இது 100% உண்மையா இருந்தா கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ;)

சிவாஜி படத்தை பற்றி மாறுபட்ட பார்வையில் கண்டவர்களின் பதிவுகள் :-

கோவி.கண்ணனின் - சிவாஜி என்னும் பூச்சாண்டி வருகிறது..

சுரேஷ் கண்ணனின் சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்.

கச்சேரி தேவ்'ன் வாஜி வாஜி சிவாஜி - ரஜினி ரசிகர்களின் வரவேற்பு

மகியின் சிவாஜியை நான் விமர்சித்தால் எப்படி இருக்கும்?

சிவாஜி "டப்பும் பில்டப்பும்"

மனதின் ஓசையின் ரஜினி/சிவாஜி - சில கேள்விகள் - என் பதில்கள்.

நுனிப்புல் உஷா'வின் கிழட்டு நாயகனும், இளம் வயது நாயகியும்

செல்வனின் கிழட்டு நாயகனும், இளம் வயது நாயகியும்

ஓசை செல்லா'வின் கிறுக்குத் தமிழனுக்கு என்றே ஒரு சூப்பர் ஸ்டார்!

ஆகமொத்ததில் சிவாஜி படத்தோட முன்னோடத்திலே ரஜினி சொல்லுறமாதிரி பேரை கேட்டவுடனே சும்மா அதிருது'லே?? எல்லாரையும் படம் அதிரவைக்குமான்னு தெரிய இந்த ஏழு நாள்கள் நகர வேண்டும்.
மேலும் வாசிக்க...

Thursday, June 7, 2007

வட்டார வழக்கு பதிவுகள்.....

சென்ற இரண்டு நாளாக அலுவலகப் பணி அழுத்தம் காரணமாய் இங்கு பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். நம் தாய்மொழியான தமிழ் இடத்துக்கு இடம் பலவகையான மொழிவழக்கு பிரயேகப்படுத்தபடுகிறது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊர்களுக்கு செல்லும்போது அவர்கள் பேசும் மொழி நடையை வைத்து அவர்களின் சொந்த ஊரை அறியப்படும் பொழுது பிறக்கும் சந்தோஷம் அளப்பறியது அல்லவா?? பேசுவதில் இயல்பாக வரும் வட்டார வழக்கு மொழி எழுதும் பொழுது அவ்வளவு சுலபத்தில் வந்துவிடாது. நானும் பலமுறை முயன்று தோற்று இருக்கிறேன். அந்த வட்டார வழக்கை எழுத்துக்களில் கொண்டு வரும் முயற்சிகளில் சிலருக்கு கைவந்த கலையாக அமைகிறது.

இப்பதிவில் வட்டார வழக்கில் புகுந்து விளையாடும் சில பதிவர்களின் சுவராசிய பதிவுகளை பார்க்கலாம்.

நல்லா இருங்கடே'ன்னு எப்பவுமே சொல்லுற நம்ம அண்ணாச்சியோட தன்னோட படிப்பை பத்தி எழுதுன பதிவு.

திருநெல்வேலி பாணியே அப்பிடியே எழுத்திலே கொண்டு வந்துருப்பார்.


அந்த வட்டார வழக்கிலே எழுதும் மற்றுமொரு பதிவர் ஜியின் தொடர்கதை ஒன்று.

கதாப்பாத்திரங்களின் வசனபிரயோகங்கள் அனைத்தும் நெல்லை பாணி.


கோவை கொங்கு வட்டார வழக்கிலே அசத்துறது'க்கு வேறயார்... நம்ம கொங்கு ராசா'வின் அசத்தல் அழகு.


நம்முரு மதுரை வட்டார வழக்கில் எழுதும் வரவனையின் பதிவு

தருமி ஐயாவின் இப்பதிவு


ஈழத்து தமிழில் சமிபத்தில் நான் படித்த பதிவுகள்

கானாபிரபா'வின் மண்ணெண்ணையில் பார்த்த படங்கள். கடைசி வரியில் கண்கலங்க வைத்து விட்டார்.


சிநேகதியின் கானமும் கதையும் குரல் பதிவு.


சகோதரி தூயா'வின் நானும் என் ஈழமும் தொடர்

சயந்தனின் ஆராய்ச்சி பதிவான காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் என்ன தொடர்பு.

ஈழத்து தமிழ் பேச்சு வழக்கை மதுரையிலிருந்த அகதிகள் முகாமில் கேட்டப்பொழுது சில வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தமே புரியவில்லை. அவர்களிடமே அதுக்கு என்ன அர்த்தமின்னு கேட்டு நமது சொல்வழக்கு அவர்களுக்கு சரிவர தெரியாதனாலும் ஆங்கிலத்தில் எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள்.

இன்னமும் பல சுவாரசியமான பதிவுகளை நாளை பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Monday, June 4, 2007

எல்லாருக்கும் வணக்கமுங்க....

என் இனிய தமிழ் பதிவர்களுக்கு நாந்தான் உங்கள் பாசக்கார பய இராம் எழுதுகிறேன்னு பாரதிராஜா எப்க்ட்'லே பில்ட்-அப் எல்லாம் கொடுத்து எழுதமுடியாதுங்க. நம்ம மண்டையிலே இருக்கிற கொஞ்சகாணு பச்சை மண்ணிலே என்ன செய்யமுடியுமோ அதே மட்டுந்தானே செய்யமுடியும், சட்டி செய்யுற அளவுக்கு மண்ணை வைச்சிக்கிட்டு பானையா செய்யமுடியும். எதுக்கு இப்பிடி நீட்டி மொழங்குறன்னா வலைசரமின்னு ஒரு பதிவு. அதுக்கு ஒரு வாரத்துக்கு ஆசிரியர்'ன்னா கெத்தா இண்டரோ கொடுக்கவேணாமா? கொடுக்கிற அறிமுகத்திலே இவ்ங்கிட்டே என்னோமோ விஷயமிருக்குன்னு நம்ப வைக்கக்கூட வேணாம், அட்லிஸ்ட் சந்தேகப்பட வைக்கலாம் இல்ல.

இன்னவரைக்கும் நான் எப்பிடி வலைபதிய ஆரம்பித்தேன்னு யாருக்கிட்டேயும் சொல்லவே இல்லை. அதுக்கு எங்களுக்கு தெரிஞ்சு என்னா ஆகப்போகுதுன்னு நீங்க முணுமுணுக்கிறது என்னோட மானிட்டர் ஸ்பீக்கர் அலறுது. அப்பிடியெல்லாம் வலிக்கிறமாதிரியெல்லாம் நடிச்சா நாங்க விட்டுருவோமா?

வாங்க பாஸ்! என்னோட வலைபதிய வந்த வரலாற்றை சொல்லுறேன்.

2005 டிசம்பர் மாசம் நம்ம மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பத்தி கூகுளிலே தேடிட்டு இருந்தோப்போ எதோச்சையா ஷிரிஷிவ் பதிவை படிக்க நேர்ந்துச்சு, அவரு அதிலே உலக அதியசத்தை பத்தி எழுதிவைச்சிருந்தார், அதே படிச்சி பார்த்ததும் நம்ம ஊரு கோவிலை ஒலக அதிசயமா ஆகிறக்கூடாதுன்னு நடக்கிற வெளிநாட்டு சதியோ இல்ல உள்நாட்டு சதிக்கோ அவரும் துணைப்போறார்'ன்னு நான் போய் கருத்தை சொல்லிட்டு வந்தேன். அப்பிடியே அந்த பதிவிலே இருந்து மோகன்தாஸ், பினாத்தலார், கொழுவின்னு யாரல்லாம் பின்னூட்டம் போட்டுருந்தாங்களோ அவங்க பதிவுக்கெல்லாம் போய் படிச்சுப்பார்த்துட்டு மதியோட இந்த சுட்டிதான் முதலிலே அறிமுகம் ஆச்சு. ஓய்வுநேரங்களிலே ஒவ்வொரு பதிவா படிச்சிட்டு இருப்பேன். எவ்வளவு நாள்தான் படிச்சிட்டே இருக்கிற நாமெல்லும் தமிழிலே எழுதனுமின்னு என்னத்தயோ டவுண்லோட் பண்ணி இன்ஸடால் பண்ணுனேன். நாமே உபயோகப்படுத்துற லினக்ஸ்'க்கு இன்னும் Unicode Tool வரலைன்னு அப்போதான் தெரிஞ்சது. ஆபிஸிலே அதுக்காக சண்டைப்போட்டு ஒரு (வீணாப்போன) விண்டோஸ் சிஸ்டத்தையும் வாங்கி வைச்சிட்டு வலைப்பதிய ஆறு மாசம் ஆகிப்போச்சுங்க.

ஏண்டா இப்பிடி ஆரம்பத்திலே அறிமுகம் கொடுக்கிறேன்னு அறுவையே போடுறேன்னு இன்னொருதடவையும் ஸ்பீக்கர் அலறிருச்சு. ;)

நம்ம மக்கள்ஸோட சுவராசியமான அறிமுகத்தை பற்றி பதிவுகளின் சுட்டிகளை பாருங்க. அதுக்குள்ளே அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடைக்குதான்னு பார்க்கிறேன்.


கொங்கு ராசா'வின் கலக்கல் அறிமுகம்

ஆசிப் அண்ணாச்சியின் அறிமுகம்

'ஓ'மப்பொடியோட அறிமுகம்

தடாலடியாரின் அறிமுகம்

(பதிவிலே போய் டைரக்டர் கெளதமா'ன்னு கலாய்ச்சு வைக்க, அவரோ அதை சீரியஸின்னு நினைச்சிட்டு தனிமெயிலாம் அனுப்பி வைச்ச நல்லவரு... )

கைமண் அளவுதான்னு சொல்லிட்டு கடலளவு விஷயத்தை எழுதும் ஜெகத்'ன் அறிமுகம்

கல்யாணம் ஆனதும் பதிவே எழுதாத துபாய் இராஜா'வின் அறிமுகம்

தன்னடக்கத்தின் ஒட்டுமொத்த உருவம் CVR'வின் அறிமுகம்

கதையோ,கவிதையோ எல்லாத்திலேயும் அசத்தும் ஜி'யின் அறிமுகம்

மிகவும் சமிபமாய் வந்து கவிதைகளில் கலக்கும் காயத்ரியின் டிபிகல் அறிமுகம்

அடுத்த பதிவிலே இன்னும் சில சுவராசியமான பதிவுகளை பார்க்கலாம்.

பாபா வேலை எவ்வளோ கஷ்டமின்னு இப்போதாய்யா தெரியுது.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது