07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label எழில்பாரதி. Show all posts
Showing posts with label எழில்பாரதி. Show all posts

Friday, July 4, 2008

கதை சொல்லும் பதிவர்கள்!!!!

சிறுவயதிலிருந்து கதை கேட்டே வளர்ந்ததினாலோ? என்னவோ? நம்மில் பலருக்கும் கதை கேட்கவும் ,படிக்கவும் அதிக ஆர்வம் இருக்கும்.நம் பதிவுலகில் அப்படி தங்களது சிறுகதைகள் மூலமும், தொடர் கதைகள் மூலமும் கவர்ந்த சில பதிவர்களைப் பற்றி இன்று உங்களோடு பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன்...

அருட்பெருங்கோ இவரை எல்லோரும் காதல் கவிஞராய் அறிந்திருப்போம் இவர் தொடர்கதைகளும் சிறுகதைகளும் மிக அற்புதமாய் படைத்து இவரது அமராவதி ஆற்றங்கரையில் நம்மை சிறைப்பிடித்து வைத்திடுவார்...

இவரது காதல் பயணம் தொடர்கதையே அதற்கு ஒரு நற்சான்று.... 14 பகுதிகளை கொண்ட அக்கதை சிறந்த ஒரு பதிவு ஒவ்வொரு பகுதிக்கும் தொடக்த்தையும் அழகிய காதல் காதல் கவிதைகளோடு தொடங்கியிருப்பார்.....

இவரது காதல் பயணத்தில் ரசித்த சில கவிதைகள் உங்களுக்காக...

"என்னை அடிக்க நீ கை ஓங்கும் போதெல்லாம்
கண்களை மூடிக்கொண்டு சுகிக்கதான் நினைக்கிறேன்.
ஆனால் நீ அடிக்க வரும் அழகைக் கண்டதும்
இமைக்காமல் நிற்கின்றன என் கண்கள்."

"என் ஆயுள் முழுவதுக்குமான
சந்தோசம்,
உன் அரை நொடிச் சிரிப்பில்
இருக்கிறது!"

இக்கதையை அவர் நிறைவு செய்த விதம் எதிர்ப்பார்க்காத ஒரு திருப்பம். என்ன ? உங்களுக்கும் அப்படி என்ன திருப்பம்? என அறிய ஆவல் வந்து விட்டதா? மேலே உள்ள சுட்டியை படித்து தெரிந்துக்கொள்ளுங்களேன்.
அக்கதை முழுவதுமே இனிமையாய் இருக்கும்!

இவரது சென்னைக் காதலும், திருச்சிக் காதலும் சிறுகதை ஒரு வித்தியாசமான முயற்சி. பல பதிவர்கள் கலந்துக்கொண்ட, சர்வேசனின் 'நச்' கதை போட்டியில் முதல் பரிசுப் பெற்ற கதை

காதல் கதைகள் மட்டுமல்லாது, வட்டாரமொழி மணத்துடன் இவர் படைத்த கணக்கம்பட்டியாரு கத மற்றும் ஆறுமுவம் பொண்டாட்டி கதைகள் மிகவும் நல்ல பதிவு... இவை மட்டுமல்லாது, பல சிறந்த படைப்புகளை இவரது வலைத்தளத்தில் நாம் படித்து மகிழலாம்....

நிலாரசிகன் இவரை நாமெல்லாம் ஒரு கவிஞராய் அறிந்திருப்போம். சமிபகாலமாய் இவர் இவரது சிறுகதைகள் நம்மை வியக்க செய்கின்றது.... சிறுகதைகளுக்கு என்றே நிலாரசிகன் சிறுகதைகள் என்ற தனி வலைப்பூ மூலம் பல அருமையான கதைகளை பதித்து வருகிறார்..

இவரது நிமிடக்கதைகளும் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருக்கும்.. இவரது நிமிடகதைகள் இரண்டு கதைகள் (14வது கதை, இடுகாடு ) தினமணிக் கதிரில் பிரசுரமாகியிருக்கிறது ....

இவரது சேமியா ஐஸ் சிறுகதை, ரசிக்க வைத்த ஒரு கதை... சிறுவனின் அவ்வயது சின்ன ஆசையைக்கொண்டு அற்புதமாய் கொண்டுப்போயிருப்பார் அக்கதையை... தனலட்சுமி டாக்கீஸ் சிறுகதை, தான் வேலைசெய்யும் திரையரங்கம் மீது ஒருவர் வைத்திருக்கும் நேசத்தை விளக்கும் மிக நல்ல கதை..இவரிடம் மேலும் பல அற்புதக் கதைகளை எதிர்ப்பார்க்கலாம்...

ஜி தன் கதைகளின் உவமைகளின் மூலம் நம்மை ரசிக்க வைப்பார் இவர் காட்சிகளை விவரிக்கும் விதம் அழகாய் இருக்கும்... இவரது காதலா காதலா பதிவில் அவர் கதையின் கதாநாயகி இறகு பந்து விளையாடுவதை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார்

"மென்மையாய் பின்னிய வலையால், நளினமாய் சுழலும் ஆனந்தியின் ஒவ்வொரு அடியையும் வாங்குவதற்காகவே ஒவ்வொரு முறையும் தனது மொட்டை தலையைக் காட்டி கொண்டிருந்தது இறகுப்பந்து"

மிக அழகாக கொண்டு சென்றிருப்பார் இக்கதையை..

சிறகுகள் சிலுவைகள்... கதையையும் மிகவும் ரசிக்கும் விதத்தில் பதித்திருப்பார் இவரது தொடர்கதை தேவதை சிறகுகள் மிகவும் அருமையான் படைப்பு இதோ உங்களுக்காக இங்கே சுட்டிகள்
தேவதை சிறகுகள்-1
தேவதை சிறகுகள்-2
தேவதை சிறகுகள்-3
தேவதை சிறகுகள்-4
தேவதை சிறகுகள்-5

இவரது வலைப்பூவில் நம்மை ரசிக்க வைக்கும் பல கதைகள் உங்கள் கதையார்வத்திற்க்கு பரிசளிக்கும் வித்ததில் அமைந்திருக்கும். படித்து மகிழுங்கள் இவரது கவிதைகளும் சிறப்பாக அமைந்திருக்கும்...

கவிநயா இவர்களது கதைகள் சமீபத்தில்தான் கண்ணில் பட்டது . எதார்த்தமான நிகழ்வைக் கொண்டு எழுதிய அப்படி என்னதான் பேசுவாளோ? கதை மிகவும் கவர்ந்தது. பெண்பிள்ளைகள் மேல் அம்மாவிற்க்கு இருக்கும் ஒரு சின்ன பயத்தை மையமாய் வைத்து,கதையை அழகாய் கொண்டு போயிருப்பார் கதையை .கதையின் முடிவு நெகிழ்ச்சியாய் அமைந்திருக்கும்..

அவளைப் போல்... கதையில் தன் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசும் பெற்றோரை சிந்திக்க வைக்கும் படி எழுதியிருப்பார்.... இவரது எழுத்துநடை மிக இயல்பாக அமைந்திருக்கிறது இவரது கதைகள் அனைத்தையும் இங்கே படிக்கலாம்

கதைகளை படித்து மகிழங்கள் நாளை சந்திப்போம்!!!!
மேலும் வாசிக்க...

Thursday, July 3, 2008

இவர்களுக்குள்ளும் கவிதைகள்!!!

வலையுலகில், நம் சக பதிவர்களை நாம் பல்வேறு கோணங்களில் பார்த்திருப்போம். சிலர் பதிவுகளில் கவிதைகளைப் பார்ப்பது அத்திப் பூத்தது போன்று அரிதாக என்றாவது மலரும். அப்படி பூக்கும் கவிதைகள் அத்தனை இனிமையாய்,நம்மை ஆச்சர்யப் படுத்துவதாய் இருக்கும்.அப்படி என்னைக் கவர்ந்த, சில பதிவர்களின் வலைப்பூக்களை மகிழ்வுடன் இன்று உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.

பாலபாரதி -"தலை" என்று பதிவர்களால் மரியாதையோடு அழைக்கப்படுபவர். பா.க.ச பதிவுகளில் மிகவும் பிரபலமான நம்ம தல, அன்றாடும் தான் சந்திக்கும் நிகழ்வுகளை அழகாய் தொகுத்து நமக்கு அவரது விடுப்பட்டவை வலைத்தளம் மூலம் நமக்கு வழங்கி வருகிறார்.

சமீபகாலமாய் இவரது வலைத்தளத்தில் கவிதைகள் மலருகிறது. மல்லிகைச் செடியில், ரோஜாப் பூ பூப்பது போல, என்ன புதுசா கவிதையெல்லாம் எழுதுகிறாரேன்னு ஆச்சர்யமா பார்த்தால் தல நிறைய கவிதைகளை சத்தமே இல்லாமல் பதித்திருக்கிறார். நான் தான் தாமதமாய் பார்த்திருக்கிறேன் போலும்.. இதோ உங்களுக்காக சில கவிதைகளும் இணைப்புகளும்...

அடையாளம்

”தூசுகளால் நிறைந்த
கண்ணாடி கதவில்
பெயரெழுதிச் செல்கிறது
கோடைச்சாரல்.”

இதோ காதல் கவிதைகளையும் கொஞ்சம் எட்டிப்பாருங்க

நீ நான் மற்றும் கடவுள்
நீ நான் மற்றும் முத்தம்
நீ நான் மற்றும் வெட்கம்
நீ நான் மற்றும்…
நீ நான் மற்றும் கடவுள்

எல்லாம் தெரிந்ததாய் நினைக்கும் நாம் ஒரு சில விஷயங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம் அப்படி யாராலும் கண்டுக்கொள்ளாமல் விடப்பட்ட விவசாயிகளின் பிரச்சனையை ங்கொய்யால… கவிதை மூலம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பார்...

பிரபாகரன் - அதிகம் எழுதுவதில்லை, என்றாலும் அவரது கவிதைகள் ரசிக்கும்படி இருக்கும்.அரிதாய்,அவரது பதிவுகளில் அழகாய் பூக்கும் கவிதைகள். அவரது அலுவலக பணிகளால் அதிகம் எழுத முடியவில்லை.என்றாலும் அழகாய் ரசிக்கும்படி தனது உணர்வுகளை கவிதைகளில் கொண்டு வருகிறார்.....

அவனுக்கேனும் நினைவிருக்குமா? கவிதையில், பால்யகால நட்பை அழகாய் செதுக்கி இருப்பார். இது போன்று ”அழைக்கலாமா என எத்தனிக்கையில்” கவிதையிலும் தன் உணர்வுகளை பதித்திருப்பார்... இவரது காதல் கவிதைகளும் ரசிக்கும்படி இருக்கும்....

நந்தா -தனது வலைப்பூக்களில் பல அருமையான கட்டுரைகளால் நம்மை ஈர்ப்பவர். இவரது பெண்ணிய கட்டுரைகள் இதற்கு ஒரு நற்சான்று. அது போல் இவரது திரைவிமர்சனங்களும் ரசிக்கும்படி இருக்கும்.... இப்படி அமைதியாய் இருக்கும் இவருக்குள் ஒளிந்திருக்கும் கவித் திறமை எப்போதாவது வலையுலகை எட்டிப்பார்க்கும் போது அழகான கவிதைகள் நம்மை ரசிக்க வைக்கும். அப்படி இவரது தளத்தில் ரசிக்க வைத்த கவிதைகள் சில உங்களுக்காக...

திருமணத்திற்கு பிறகு சில பெண்களின் சுதந்திரம் தடைபெறுவது பற்றி சிந்திக்கும் வகையில் பத்தினிப் பெண்கள் என்ற கவிதையின் மூலம் சிறப்பாக சொல்லியிருப்பார் அக்கவிதையில் இருந்து சில வரிகள் இதோ உங்களுக்காக..

"'அவரு', 'என் வீட்டுக்காரர்'
உன் உதடுகள்
உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு
என் பெயர்
கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு."

நந்தா காதல் கவிதைகளும் அழகாய் எழுதியிருப்பார். இதோ இவரது காதல் கிறுக்கல்கள் சில படித்து மகிழுங்கள்.....

விழியன் தன் புகைப்படங்கள் மூலம் நம் விழிகளுக்கும் விருந்தளித்து வநதவர் இப்பொழுது அவரது கவிதைகள் மூலம் நம்மை அசத்தி வருகிறார்..

இவரது செல்லப்பெயர் கவிதை நம்மை கல்லூரிக் காலத்துக்கு அழைத்து சென்று நண்பர்களுக்குள் நாம் வைத்துக் கொண்ட செல்லப் பெயர்களை நினைவிற்கு கொண்டு வந்து விடும்...

தேவதையின் தோசை கவிதையில் அப்பா மகள் பாசத்தை அழகாய் சொல்லிருப்பார்..

நண்பனாகப்பட்டவன்:
விரட்டும் நினைவுகளுடன்
குரல்வளைக்குள் ஏதோ சிக்கி தவித்தவாறு
உன் தோள் சாய்ந்து
சட்டை நனைத்து விம்முகிறேன்
யாதென கேளாமல்
ஏதும் விசாரியாமல்
தோள் தட்டி அரவணைத்தபடி
"சரி..சரி..சரியாகிடும்…"
கணத்தில் கனங்கள் கரைந்ததும்
மீண்டும் அழுகிறேன்
நீ கிடைத்ததற்கு

நம்மை மிகவும் ரசிக்க வைக்கும் ஒரு கவிதை..

இவரது க.பி கவிதைகள் 1, 2 (க.பி கவிதை என்னடா புது பெயரா இருக்கேன்னு யோசிக்கிற மாதிரி தெரியுது எதும் இல்லைங்க இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது கல்யாணத்திற்கு பின்பு அவர் எழுதும் கவிதைகள் தான் இவை!!!) சிறப்பாக இருக்கிறது..

இவரது வலைப்பூவில் புகைப்படங்களும் கவிதைகளும் நம்மை ரசனையில் திணரச்செய்கின்றன....

மேலும் இவர்கள் பல கவிதைகளை படைத்திட வாழ்த்தி வரவேற்போம்....

நாளை சந்திப்போம்!!!!
மேலும் வாசிக்க...

Wednesday, July 2, 2008

ரசிக்க வைத்த அனுபவங்கள்!!!!

ஒரு சில அனுபவங்கள் வாழ்க்கையில் என்று நினைத்தாலும் பசுமையாய் நினைவுகளில் காட்சியளிக்கும்... அதுவும், நம்மோடு பயணிப்போரது அனுபவங்களை அவர்கள் நம்மோடு பகிர்ந்துக்கொள்ளும் பொழுது எழும் மகிழ்ச்சியே தனி சுகம் தான். அப்படி நான் ரசித்த பதிவர்களின் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளப்போகிறேன்.

"C.V.R" இவர் அமெரிக்கா சென்று தனது கார் ஓட்டும் திறமையின் மூலம் மாமாவிடம் மாட்டிக்கொண்டு விழித்த அனுபவத்தை "நான் மாமாவிடம் மாட்டிக்கொண்ட கதை" பதிவில் மிகவும் அற்புதமாய் பகிர்ந்துயிருப்பார். படிக்கும் நமக்கும் அவர் விழித்துக் கொண்டிருந்த நிமிடம் கண் முன் வந்து போகும்...... சார் தாய் நாடு திரும்பும் பொழுது,அவரை, ஒரு அம்மா தன் குழந்தைக்கு பூச்சாண்டியாக்கிய அனுபவத்தை மிக அருமையாய் போன மச்சான் திரும்ப வந்தான் பதிவில் அருமையாய் பகிர்ந்துக் கொண்டிருப்பார்.... அமெரிக்காவில் அவரது மேனேஜர் வீட்டு விழாவில் பாட்டு பாடி டேமேஜ் ஆன கதையை பாட்டு பாடவா பதிவில் ரசிக்கும் விதத்தில் சொல்லியிருப்பார். இவரது எழுத்து நடை ரசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கும்...

தமிழ்மாங்கனி, என்னதான் இவர் அம்மா, நான் schoolக்கு போகல... ன்னு கத்தினாலும் இவரால் பள்ளிக்கு போகமுடியாது. ஏன் என்றால் ? இவர் கல்லூரி படிக்கும் மாணவி. இவர் எப்படிங்க பள்ளிக்கு போக முடியும்?. இவர் கல்லூரி விடுமுறையில் 4 புது விஷயங்களை கற்றிருக்கிறாய் அவர் அப்படி என்ன கற்றுக் கொண்டார் என்பதை அவரது இநதப் பதிவைப் பார்த்தாலே நமக்கு புரிந்து விடும்..

"இவர் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் இசையமைப்பாளர்களை பயத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்பது முக்கியச்செய்தி...."

இம்சை அரசி, தனது திருமணத்தின் பொழுது அவரது மேக்-அப் அனுபவங்களை ரசிக்க ரசிக்க பகிர்ந்துக்கொண்டிருப்பார்

"கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் சொன்ன விஷயம் என்னன்னா உனக்கு 'மேக்-அப்' ரொம்ப நல்லா பண்ணி விட்டிருந்தாங்க. நீயும் ரொம்ப அழகா இருந்தே (ஐஸ் வைக்கலிங்க.நெசமாத்தான்). ஆனா எந்த 'மேக்-அப்'பும் இல்லாம எப்பவும் ஸ்மைலோட இருந்த உன் வீட்டுக்காரர் உன்னை விட அழகா இருந்தார்னு சொன்னாங்க. போட்டோஸ் வந்ததும் எங்க வீட்டுலயும் இதே கமெண்ட்தான் குடுத்தாங்க"

அது என்னமோ நிஜம்தாங்க என்னதான் பொண்ணுங்க மேக்கப் போட்டு போஸ்க் கொடுத்தாலும் மேக்கப்பே போடாம மாப்பிளைங்க பெயரை அள்ளிக்கிட்டு போய்டுராங்க....

இம்சை அரசி கடைசியாய் அழகாய் ஒரு விஷயம் சொல்லிருப்பார் "தலைல இருந்த கால் வரைக்கும் ரொம்ப நல்லா பண்ணின மேக்-அப் தர அழகைவிட முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது. " மிகவும் உண்மையான வார்த்தைகள்....

வலையுலகில் புதியதாய் தடம் பத்திருக்கும் கார்த்திக் தன் வானவில் வீதி மூலம் தனது சென்னை அனுபவங்கள ரசிக்கும் விதத்தில்
பதித்து வருகிறார்.. தனது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையை தொடங்குகிறார்.. இவரது சிங்காரமா ஊரு...சென்னையின்னு பேரு பதிவில் தன் முதல் சென்னை அனுபவத்தையும் குடும்பத்தை பிரியும் அந்த கடைசி நிமிட நெகிழ்ச்சியான தருணங்களையும் அழகாய் சொல்லியிருப்பார்... இவர் மென்மேலும் தன் தடங்களை பதிக்க வாழ்த்தி வரவேற்போம்!!!

இதுபோல் நான் மிகவும் ரசித்த ஒரு மறக்கமுடியாத அனுபவ பதிவு அருட்பொருங்கோவின் ஒரு சின்ன கால்குலேட்டருக்காக இத்தன ரணகளமா? பதிவு கல்லூரி கால நினைவுகளை நம் கண்முன் நிறுத்தி சிரிக்க வைக்கும் பதிவு......

என்னங்க அனுபவம்லாம் எப்படி இருந்தது..... சரி இப்போ நீங்க ரசித்த சில அனுபவங்களை சொல்லுங்க பார்ப்போம்....
மேலும் வாசிக்க...

Tuesday, July 1, 2008

பதிவுலகில் பெண்கள்!!!

பல காலமாய், மண்ணுக்குள் மறைந்திருக்கும் வேர்களைப் போல, சமுதாயத்தின் வளர்ச்சியில் தனது மறைமுகப் பங்காற்றலை வழங்கிய பெண்கள்,தன் உணர்வுகளை கரண்டிகளின் வழியாகவே பேசிக் கொண்டிருந்த பெண்கள் ,இன்று சிறகு முளைத்து எல்லாத் துறைகளிலும் தடம் பதித்து தங்கள் தனித் தன்மையை அழகாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..சமுகத்தின் சோதனைகளைத் தாண்டி, சாதனைகளைப் படைக்கிறார்கள். அப்படி நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கும் பல பெண்பதிவர்களில் சில பெண் பதிவர்களைப் பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன்...

திவ்யா மத்தாப்பாய் தன் உணர்வுகளை,அழகாய் வெளிப்படுத்துவார் இவரது எழுத்து நடை கவித்துவமாய் மிளிரும்.
இவர் தரும் ஆலோசனைக் குறிப்புகள் நிச்சயம் பெண்களுக்கு ஒரு நல்ல வழிக்காட்டி. சமிபத்தில் இவர் பதித்த 'வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக" பதிவு, அலுவலகம் போகும் பெண்களுக்கு மிகவும் அவசியமான பதிவு...
அதுவும், புதியதாய் திருமணம் ஆகபோகும் பெண்கள் மாமியாரிடமும் , நாத்தனாரிடமும் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று இவர் தந்த குறிப்புகள் நல்ல சிந்தனை. ஆண் பெண் மென்மையான நட்பில் இயல்பாக எழும் சில அவசியமில்லாத உணர்வுகளை எப்படி சரி செய்த்துக் கொள்வது என்ற மிக கவனமாக கையாள வேண்டிய விடயத்தைக் குறித்து இவர் கொடுத்த ஆலோசனைக் குறிப்பு என்னை ரசிக்கவும்,சிந்திக்கவும் வைத்தது.இவர் கதை எழுதும் திறமையை நாம் அனைவரும் அறிவோம்.நட்புக்கு இவர் கொடுக்கும் முக்கியத்துவமும் என்னை கவர்ந்தது.

ஆகாய நதி : பதிவுகளில் புதியதாய் பூத்திருக்கும் அழகிய பூச்செடி இவர். இதுவரை பதிவுலகில் அமைதியாய் உலாவிக் கொண்டிருந்தவரை, நம் நட்புலகில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.குழந்தைகளுக்கும் அழகாய் கதை சொல்லுகிறார் .கர்பிணிகளுக்கான மிகவும் பயனுள்ள குறிப்புகளை தெளிவாய் தொகுத்து பதித்துவருகிறார். சிறந்த பதிவுகளை தொடர்ந்து வழங்கிட, வாழ்த்தி வரவேற்ப்போம்.

காயத்ரி: தன் உணர்வுகளை கவிதைகளில் இயல்பாய்,அழகாய் வெளிப்படுத்துவதில் சிறந்தவர். இவரது உதிர்தல் கவிதை உணர்வுகளை வரிகளாய் வார்த்தெடுத்த ஒரு அற்புதம்.

இவரது சமீபத்து பெயரிடாத கவிதை

"யார் யாரிடமோ
உன் சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய்."

அழகிய ஒரு படைப்பு.....

இவரது பதிவெங்கும் நம்மை ஈர்க்கும் அற்புதக் கவிதைகள் அழகாய் மலர்ந்திருக்கின்றன.....

லக்ஷ்மி சாகம்பரி பதிவுலகில் சமீபத்தில் விரும்பி படிக்கும் வலைப்பூ. தன் கவிதைகளில், உணர்வுகளை மிகவும் அருமையாக வெளிப்படுத்திருப்பார். இவரது நத்தைக்கூடு என்னை மிகவும் கவர்ந்த ஒரு பதிவு... இவரின் சிந்தனையில், இன்னொரு குறிப்பிடும் படியான அருமையான கவிதை கண்ணாடி . மென்மையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்.

இவர்களை போன்று மேலும் பற்பல திறமைகளை வெளிப்படுத்தும் நிவிஷா, ஷாலினி, இனியவள் புனிதா... போன்ற பலர் நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்போம்

நாளை சில பதிர்வகளோடு உங்களை சந்திக்கிறேன்!
மேலும் வாசிக்க...

Monday, June 30, 2008

இதுவரை நான்!!!!

வலைச்சரத்தில் என் எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் இனிய வாய்ப்பினை எனக்கு வழங்கிய வலைச்சர நிர்வாக குழுவிற்கும்,வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா ஐயாவிற்கும் என் நன்றிகள்....

என்னைப் பற்றி என்ன சொல்வது?. கவிதை,பாசம்,நட்பு,தைரியம்,விடா முயற்ச்சி,மன நிறைவு எல்லாம் சரியான விகிதத்தில் கலந்த வாழ்க்கை என்னுடையது. என்னுள் பூத்து மணம் வீசும் கவிதை பூக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் பூந்தோட்டம் , என் கண்ணாடி மழைதான்

அதிக பதிவுகள் எழுதவில்லை என்றாலும் , ஓய்வில்லா பணிகளுக்கு இடையிலும் , என் மனதிற்கு நிறைவான பதிவுகளை பதித்திருக்கிறேன் என்பதில் ஒரு சின்ன மகிழ்ச்சி. மழலையாய் தொடங்கி உங்களுடன் நட்புக் கரம் பிடித்து, ஒரு சிறுமியாய் பயணிக்கிறேன், நட்புத் தடங்களோடு. இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும் உங்கள் வாழ்த்துக்களோடு.....

இன்றும் நான் எழுதியதில் எந்தக் கவிதை பிடிக்கும் என்று யார் கேட்டாலும், என் மனதில் சட்டென்று நினைவுக்கு வருவது வெற்றுத்திண்ணை தான்..... என் பால்ய கால மகிழ்ச்சிகளையும், பாசத்தை வாரி இறைந்த என் தாத்தாவின் இழப்பின் வருத்தத்தையும் சுமக்கும் கவிதை.....

கவிதையில் பயணித்த என் மனம் அன்றாட வாழ்வின் இயல்பான அனுபவங்களையும், அவற்றைப் பற்றிய எனது பார்வைகளையும் பகிந்துக் கொள்ள,பதிவு செய்ய ஆவல் கொண்டது . அப்படி எழுதியதில் ஆட்டோ பயண அனுபவம் என்னை மிகவும் கவர்ந்தது...

சென்னை போன்ற நகரங்களில் வளர்வதாலோ?, என்னவோ? கிராமங்களுக்கே உரிய சில இனிய அனுபவங்களை இழக்க வேண்டியிருக்கிறது.

உத்திப்பிரித்தல் மூலம் என் மனதிற்க்கு சமாதானம் கூறிக்கொண்டாலும், நாகரீக வளர்ச்சியால் மறையும் தருவாயிலிருக்கும் , அரிய திறமைகளை வளர்க்கும் கிராமிய விளையாட்டுகளைப் பற்றி பதிவு செய்து, தொலைக்காட்சிப் பெட்டிகளில் தனது மன/உடல் ஆரோக்கியத்தை அடகு வைக்கும் நகரத்து சிறார்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் என் எண்ணம் நிறைவேறாமலே இருக்கிறது. நட்புக்களின் அன்புக்கட்டளைக்கேற்ப விரைவில் அதையும் பதிவு செய்யவிருக்கிறேன்.

இத்தோடு என் அறிமுகத்தை முடித்துக் கொண்டு, வலையுலகில் என்னைக் கவர்ந்த இடுகைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். படிக்க தவறவிடக் கூடாத, இனிய இடுகைகளின் சுட்டிகளுடன் மீண்டும் சந்திப்போம்,
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது