07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label தொழில் நுட்பங்கள். Show all posts
Showing posts with label தொழில் நுட்பங்கள். Show all posts

Wednesday, December 3, 2014

கம்ப்யூட்டர் மற்றும் வாழ்க்கை நுட்ப பதிவர்கள்.

வலைச்சரம் மூன்றாம் நாள்  3-12-2014 புதன்கிழமை

கார் ஓட்டத் தெரிந்தவர்களுக்கு காரின் மெக்கானிஸம் தெரிய வேண்டியதில்லை. அது போல கம்ப்யூட்டர் உபயோகிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அதில் இருக்கும் தொழில் நுணுக்கங்கள் தெரியாது. கம்ப்யூட்டரை தொழில் நிமித்தமாக பயன் படுத்துபவர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய அளவு கம்ப்யூட்டரைப்பற்றி அறிந்திருப்பார்கள். அதற்கு மேல் அவர்களுக்குத் தேவையில்லை.

ஆனால் சில பதிவர்கள் (என்னைப் போன்ற கிறுக்கர்கள்) இந்தக் கம்ப்யூட்டரில் என்னென்ன ஜாலவேலைகள் செய்ய முடியுமோ அவைகள் அனைத்தையும் தங்கள் தளத்தில் செய்து பார்க்க ஆசை கொண்டவர்கள். ஆனால் அவர்களுக்கு இந்த வகையில் ஆராய்ச்சி செய்ய நேரம் இருப்பதில்லை. அவர்களுக்காகவே சில தொழில் நுட்பங்களைக் கண்டு பிடித்து தருவதற்கு சில பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.
இங்கு ஒரு எச்சரிக்கையும் தேவை. இந்தப் பதிவுகளில் கூறப்படும் உத்திகள் அல்லது புது அப்ளிகேஷன்கள் ஒருவருக்கு கட்டாயம் தேவை என்றால் மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும். இனாமாகக் கிடைக்கிறதே என்று தேவையில்லாதவற்றை உங்கள் கம்ப்யூட்டரில் சேகரிக்க வேண்டாம். பிறகு கம்ப்யூட்டர் வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகும்.

ஆனால் வாழ்க்கை என்பது அப்படி இல்லை. வாழ்வது எப்படி என்ற வகை தெரியாவிடில் ஒருவர் பல சங்கடங்களுக்கு ஆளாவார். அதற்கான நுட்பங்களை சில பதிவுகளில் பார்க்கலாம்.

1.  திரு வேலன் அவர்கள்

இவரின் தளம்:



லிங்க்: http://velang.blogspot.com/

தொழில்நுட்பப் பதிவர்களில் இவர்தான் நெம்பர் ஒன். ஏகப்பட்ட தகவல்களை தன் பிளாக்கில் தந்து கொண்டிருக்கிறார்.

கம்ப்யூட்டரில் வல்லவர் என்பதால் இவர் தளத்திலிருந்து ஒரு தூசியைக் கூட யாரும் எடுக்கமுடியாதபடி காபந்து செய்திருக்கிறார். ஆனால் என்னைப் போன்று கல்லிலிருந்து நார் உரிப்பவர்களுக்கு முடியாதது ஒன்றுமில்லை. அவர் பிளாக் முகப்பை எப்படி நகல் எடுத்து போட்டிருக்கிறேன் பாருங்கள்.

இவரின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. 


2.  திரு அன்பு அவர்கள்


இவர்தான் அன்பு என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரது போட்டோ அவரது தளத்தில் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இவரின் தளம்; அன்பை தேடி,,அன்பு
தெரியாத தொழில்நுட்ப செய்திகளை சரியான நேரத்தில் பகிரும் பயனுள்ள பாதுகாப்பான தமிழ் தளம்.  


லிங்க்: http://www.anbuthil.com/


பல கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களை இங்கு காணலாம். இவரும் தன் தளத்தை கவனமாகப் பேணிக் காக்கிறார்.


3. பெட்டகம் 



லிங்க் : http://pettagum.blogspot.in/

பல இயற்கை மருத்துவக் குறிப்புகள் மற்றும் வீட்டுக் குறிப்புகள் இத்தளத்தில் மண்டிக்கிடக்கின்றன. சிலவற்றை நான் உபயோகப்படுத்தி பயனடைந்திருக்கிறேன்.

4.  திரு கரந்தை ஜெயகுமார் அவர்கள்



தன் பெரிலேயே தளம் வைத்திருக்கும் இவரின் தள முகப்பைப் பாருங்கள்.



லிங்க் : http://karanthaijayakumar.blogspot.com/

உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம் என்று கூறும் இவர் அந்தக் கூற்றுக்கு ஏற்ற பதிவுகளைத் தன் தளத்தில் வெளியிடுகிறார். அவைகள் வாழ்க்கைக்கு பெரும்பயன் தருபவை.


5.  திரு சுப்பையா அவர்கள்


இவர் மனிதர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக ஒரு வகுப்பறையே வைத்திருக்கிறார்.


லிங்க்: http://classroom2007.blogspot.in/

தன் தளத்தை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். ஜோதிடம் மற்றும் வாழ்க்கைக்குறிப்புகள் பற்றியும் பல சமூகப் பிரச்சினைகள் பற்றியும்   எழுதி வருகிறார்.

கோவையில் வசிக்கும் இவரை இன்னும் நான் சந்தித்ததில்லை.

6.அவர்கள் உண்மைகள்


இந்த தளத்தை நடத்துபவர் தன்னை அநாமதேயமாக வைத்துள்ளார். காரணம் இவர் பல உண்மைகளைச் சொல்கிறார். இது ஒரு சமூக விழிப்புணர்வுத் தளம்.
இந்தத் தளத்தை பலரும் விரும்பிப் படிக்கிறார்கள் என்பது இதன் தமிழ்மணம் ரேங்கில் இருந்து தெரிகிறது.

சமகால சமுதாயப் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு மிகுந்த மன வலிமை வேண்டும். அத்தகைய மன வலிமை இவருக்கு இருப்பது கண்டு பாராட்டுகிறேன்.

7.தங்கம் பழனி அவர்கள்.


இவருடைய தளத்தின் பெயர்: வேலை வாய்ப்பு செய்திகள்


இவருடைய தளம் வேலை வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இது ஒரு பெரிய சமூக சேவை ஆகும். இவருக்கு எனது பாராட்டுகள்.


8. ஜீவி அவர்கள்


இவருடைய தளத்தின் பெயர்
லிங்க் : http://jeeveesblog.blogspot.in/2014/12/blog-post.html

2008 முதல் பிளாக்கில் எழுதிவரும் இவர் ஜனரஞ்சகமான பதிவுகளை எழுதி வருகிறார். சமீபத்தில் திரு, வை.கோபாலகிருஷ்ணன் நடத்திய சிறுகதை விமர்சனப் போட்டியில் நடுவராக இருந்து பெரும் தொண்டு ஆற்றியுள்ளார்.

இவர் பதிவுகள் எல்லாம் வாசிக்க வேண்டியவை. 

9.பிளாக்கர் நண்பன்


லிங்க் : http://www.bloggernanban.com/

தளத்தின் பெயர் - ப்ளாக்கர் நண்பன்

இந்த தளத்தின் சொந்தக்காரர் Abdul Basithஅவர்கள்


சிறந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பப் பதிவுகள் கொண்ட தளம். அனைத்து தொழில் நுட்ப ப் பதிவர்களும் தங்கள் விவரங்களை மிக மிக ஜாக்கிரதையாகப் பாதுகாக்கிறார்கள். ஏன் அவ்வளவு பயம்  என்று தெரியவில்லை.

புதிய பதிவர்களுக்காக பிளாக் தொடங்கி நடத்துவது எப்படி என்ற விவரங்கள் விரிவாகக் கொடுத்திருக்கிறார். பழைய பதிவர்களுக்கும் உபயோகமாகும் பல உத்திகளை தன் பதிவுகளில் பதிந்திருக்கிறார்.






10. தமிழ் கம்ப்யூட்டர்



தன் படத்தை தானே வரைந்திருக்கிறார். tc. kumaresan , இந்த தளத்தின் பொறுப்பாளர்



லிங்க்: http://tamilcomputerinfo.blogspot.in/

இந்த வலைப்பூ கணினியை பற்றி கற்றுக்கொண்டு இருக்கும் அடிப்படை பயனாளர்களுக்காக  என்று தன் தளத்தில் அளவித்திருக்கிறார்

அந்த அறிவிப்பிற்கு  ஏற்றவாறு கம்ப்யூட்டர் பற்றிய பல அரிய பயனுள்ள பதிவுகள் இந்த தளத்தில் உள்ளன.



     
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது