07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label நாஞ்சில் பிரதாப். Show all posts
Showing posts with label நாஞ்சில் பிரதாப். Show all posts

Friday, July 16, 2010

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள் - வெள்ளி

வணக்கம்

வலைப்பூ ங்கறது கேர்ள் பிரண்ட் மாதிரி, இல்லாதவங்க மத்தவங்ககிட்ட இருக்கறபார்த்துட்டு நமக்கும் ஒண்ணும் இருந்தா நல்லாருக்குமேன்னு தோண வைக்கும். அதை அதை வச்சிட்டுறவனுக்குத்தான் அதிலுள்ள கஷ்டங்கள் தெரியும். தொண்டைல மாட்டுன முள்ளு மாதிரி முழுங்கவும் முடியாம துப்பவும் முடியாமல் கஷ்டப்படறது.


இன்றைய அறிமுகங்கள்

உன்னைப்போல் ஒருவன்

என்னடா சினிமாபேரை போடுறான்னு நினைக்ககூடாது. வலைப்பூ பெயர்தான். கவிதை, சினிமா, செய்திகள் என பலவிசயங்களை எழுதுகிறார் திரு சீனிவாசன். அவரின் வலைப்பூவில் வெளியான
ஜீரோவில் தொடங்கிய ஹீரோக்கள் வலைப்புதிவு ஒவ்வொருத்தரும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு. ஒரு எனர்ஜீ டானிக் பதிவு. கட்டாயம் படிக்கவும் இது ஒரு வேண்டுகோள்.


வயக்காடு

மீண்டும் ஒரு சவாரஸ்யமான வலைப்பூ. நவநீதனின் ஹைக்கூ கவிதைகள் என்னைக்கவர்ந்தவை. அதிகம் எழுத மறுக்கிறார். மேல் படிப்புக்காக ஜப்பான் செல்லும்போது ஏற்பட்ட பிரச்சனைகளை சுருக்கமாக அவர் எழுதியிருக்கும் விதம் அருமை. சில நகைச்சுவைபதிகளும் எழுதியிருக்கிறார். எல்லாப்பதிவுகளும் சுவராஸ்யமாக இருக்கிறது. முன்பு அதிகம் படிப்பதுண்டு. இப்போது இல்லை, காரணம் அவர் அதிகம் எழுதுவதில்லை.

எழுத்தில் எண்ணங்கள்

வெளிநாட்டில் வசிக்கும் கரிகாலன் என்றபெயரில் எழுதுகிறார். சிலபேர் வலைப்பூ ஆரம்பித்து சில முத்துக்களை கொட்டிவிட்டு பேசாமல் இருந்துவிடுவர். அப்படித்தான் இவரும். எழுதிய எல்லாப்பதிவுகளும் அருமை. ஆனால் அதிகம் எழுதமறுக்கிறார். அவர் எழுதிய
தமிழ் மெல்ல சாகும் என்ற நகைச்சுவையுடன் கூடிய பதிவு யதார்த்த நிலையை காண்பிக்கிறது. ஒரு சுவராஸ்யமான வலைப்பூ.

தமிழ் தலைமகன்

அபுதாபில் இருக்கும் அமீரகப்பதிவர் வில்சனின் வலைப்பதிவு. கடல் ஆரயாச்சியாளர் என்று தன்னைப்பற்றி கூறுகிறார். அப்படி கடல்ல என்னத்தான் ஆராய்ச்சி பண்ணுவாங்களோ தெரில. அவரிடம் இருந்து துறைசார்ந்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம். கடவுள் பற்றிய பல சர்ச்சைகள் இருக்க அவரின்
கடவுள் இருக்கிறார் என்றப்பதிவின் மூலம் வித்தியாசமான தன் கருத்தை பதிக்கிறார். இவரும் அதிகம் எழுத மறுக்கிறார். பல சுவராஸ்யங்கள் இவரின் ஒளிந்துள்ளன. விடாதீங்க ஒரே அமுக்கா அமுக்கிடுவோம். அமீரகப்பதிவரா கொக்கா..?


இன்றைய பதிவர்

பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி

கவிஞர் யுகபாரதியின் வலைப்பூ. தனது கவிதைகள் மட்டுமன்றிய தனது சில கட்டுரைகள், தன் எண்ணங்களையும் பதிவு செய்கிறார். சமீபத்தில் அவர் எழுதிய எழுதியுள்ள நான் மகான் அல்ல என்ற படத்திற்கான ஒரு பாடலை தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நல்ல கவிதைகள் விரும்பி படிப்பவர்களுக்கான ஒரு தளம்.

மீண்டும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Wednesday, July 14, 2010

வலைச்சரத்தில் நான்காம் நாள் - வியாழன்

வணக்கம்,

தவிர்க்க முடியாத சில காரணங்கள் நேற்றைய அறிமுகங்களை வெளியிட முடியவில்லை.

பதிவுலகில் பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. பின்னுட்டம் அதிகம் வந்தால் சிறந்த பதிவு, சிறந்த பதிவர் என்ற நிலை. நிச்சயமாக இல்லை. சில சிறந்த பதிவுகள் ஈ ஓட்டுகிறது.. சில மொக்கைபதிவுகளில் ஈ மொய்க்கிறது. இதையே நம்ம சூப்பர் ஸ்டார் பாணியில் சொன்னால்
"கண்ணா கூட்டத்துக்கு வற்ற எல்லா மக்களும் ஓட்டுபோடுவாங்கன்னு நினைக்கிற அரசியல்வாதியும், பாலோவரா இருக்கற எல்லா மக்களும் பின்னுட்டம் போடுவாங்கன்னு நினைக்கிற பதிவரும்....



இன்றைய அறிமுகங்கள்

பிரபஞ்சப்ரியன்

ஒரு சூப்பர் வலைப்பூ. டார்வின் என்னும் குடும்பஸ்தன் என்ற பதிவை படித்தாலே தெரியும்.
டார்வின் கோட்பாடுகள் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறமிருக்க அவரைப்பற்றியும் அவரது வாழ்க்கைப்பற்றியும் ஒரு பெரிய அலசல் அலசப்பட்டிருக்கிறது. படிக்க படிக்க சுவராஸ்யம். பின் மரடோனா பற்றிய பதிவு தூள். மேலே சொன்னதுபோல சிறந்த பதிவுகள் சீண்டப்படாமல் இருக்கிறது. இனியாவது சீண்டுவோம்.


தீராத விளையாட்டுப்பிள்ளை

இவர் புதிய பதிவர் அல்ல. ஆனால் அவ்வளவு அறியப்படாத பதிவர். அறிப்படவேண்டிய பதிவர். பல விசயங்கள் பற்றி எழுதுகிறார். அவரின் ஆக்டோபஸ் பால் உடன் ஒரு நேர்காணால் பதிவு படித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.


மதுரை சரவணன்

கல்விதுறையில் இருக்கும் சரவணனின் வலைப்பூ. சமுக அக்கறையும், இளைய தலைமுறைக்கு உற்சாகமும் கொடுக்கும் கவிதைகள் நிறைய எழுதுகிறார். அவரின் மாணவர்களை அடிப்பது சரியா தவறா என்றது சமூககண்ணோத்துடன் ஒரு எழுதப்பட்டுள்ளது. இது போன்ற நல்ல பதிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.



பிருந்தாவனம்

புத்தம் புது பதிவர். நம்ம நோக்கமே இதுதானே. ஆனால் பிருந்தாவனம் என்ற பெயரில் இன்னொரு பதிவரும்(கோபி) இருக்கிறார். இந்த பிருந்தாவனம் என்றபெயரில் என்னத்தான் இருக்கோ தெரில. இவரின் எந்திரன் ரஜினி படம் பற்றிய பதிவை நான் இங்கு சொல்லியே ஆகவேண்டும். சொல்லாம போகவே முடியாது ஏன்னா அவர் எழுதியருக்கிறதே இந்த ஒருபதிவுதான். இனிமேலும் பல பதிவுகள் எழுத உற்சாகமூட்டுவோம்.


ரிஷபன் மீனா

மீண்டும் ஒரு உபயோகமான பதிவு. பட்டைய கணக்கராக இருக்கிறார். அதன் பிரதிபலிப்பு பதிவுகளிலும் தெரிகிறது. சென்செக்ஸ் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை விரிவாக சொல்லிருக்கும் பதிவு இதைப்பற்றி அறியாதவர்களுக்கு மிகவும் உபயோகமானது. மேலும் சில சுவராஸயமான பதிவுகளை எழுதியிருக்கிறார். அதிகம் எழுது மறுக்கிறார். துறைசம்பந்தமான பதிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.



இன்றைய பதிவர்

கவிஞர் அறிவுமதி

கவிஞர் அறிவுமதியின் கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்களை சில நண்பர்கள் சேர்ந்து பகிர்கிறார்கள். அறிவுமதியின் எழுத்துக்கள் அத்தனை சுவாரஸ்யம். மக்கள் தொலைக்காட்சி மூன்று ஆண்டுகள் நிறைவுக்காக கவிஞர் எழுதிய கவிதை அருமை. இலக்கியவாதிகள் அடைக்கலம் புக ஒரு அருமையான வலைப்பூ
மேலும் வாசிக்க...

Tuesday, July 13, 2010

வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - செவ்வாய்

சில ஆண்டுகளாய் வலைப்பூவில் எழுதுவதால் மட்டுமே ஒருவர் சிறந்த பதிவர் ஆகிவிடமுடியாது. அதற்கு நல்ல உதாரணம் வேறுயாருமில்லை நான்தான். எத்தனை வருடங்களாக எழுதுகிறோம்ங்கறது முக்கியமில்லை என்ன எழுதுகிறோம்ங்கறதுதான் முக்கியம்.

பல வருடங்களாக பல நூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியவர்களைவிட நேற்று ஆரம்பித்து எழுத ஆரம்பித்தவர்களின் எழுத்துக்கள் எந்தவிதத்திலும் குறைவானவை அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் தினமும் சில புதிய பதிவர்கள் வந்துஎழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காணப்படவேண்டும் என்றநோக்கத்தில் செயல்படும் வலைச்சரத்தின் பணி சிறப்பானது.


இன்றைய அறிமுகங்கள்

மனம் பிளஸ்

எஸ்.கே என்பவர் எழுதும் இந்த வலைப்பதிவில் உளவியல் சம்பந்தமான பல விசயங்கள் இருக்கிறது. மனமும் முக்கியத்தும் என்ற பதிவில் அவர் சில கேள்விகளை உளவியல் ரீதியாக கேட்டு அதற்கான பதிலும் நம்மிடம் பெற்று நம்மைநாமே உளவியல் ரீதியாக பரிசோதிக்கும் வகையில் எழுதியிருப்பது பாராட்டுகுறியது. பலருக்கும் பயன்படும் ஒரு வலைப்பதிவு.


JUST FOR LAUGH

ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறார். ஆனாலும் பதிவுகள் தமிழிலேயே இருக்கிறது. தமிழை தவறில்லாமல் எழுதுவது பற்றி கவலைப்படுகிறார். ஆச்சர்யமாக இருக்கிறது. தனது துர்தர்ஷன் பதிவில் பழைய நிகழ்ச்சிகளை பற்றிய குறிப்பிட்டு படிப்பவர்களையும் கொசுவத்தி சுத்த வைக்கிறார். பதிவு முழுவதும் நகைச்சுவை நிரம்பி வழிகிறது. ஒரு சுவாரஸ்யமான வலைப்பதிவு.

சுரேந்திரன் பிளாக்

மீண்டும் ஒரு உலகசினிமா, இலக்கியம் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான வலைப்பதிவு. தான் படித்த புத்தகங்கள், உலகப்படங்களை பற்றி எழுதுகிறார் சுரேந்திரன். சுஜாதாவின் விஞ்ஞானகதைகள் அதிகம் படிக்கிறார். அதைப்பற்றிய பதிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது. பாப்பிலோன் படம் பற்றிய பதிவு சுவராஸ்யம். தமிழில் பட்டாம்பூச்சி என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த கனமான புத்தகத்தை படித்து எனக்கு ஏற்பட்ட மயிர்கூச்செரியும் அனுபவம் தன்க்கும் ஏற்பட்டதை பகிர்கிறார்.


காதல் கவிதை சோலை

காதல் கவிதைகளுக்கு எதிர்கவிதையாக நான் எழுதும் காதல் கவுஜைகளை விட அழகாகவே எழுதுகிறார். முழுவதும் காதல் காதல் காதல். ரொம்ப அனுபவித்து எழுதுகிறார். இவரின் எல்லா கவிதைகளுக்கு எதிர்கவுஜை எழுதவேண்டும் என நினைத்திருக்கிறேன். எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கிறது. காதலிப்பவர்கள் தவறாமல் படிக்கவேண்டிய கவிதைகள்.



இன்றைய வலைப்பதிவர்

இன்றைய வலைப்பதிவர் என்னும் தலைப்பில், நமக்கு ஏற்கனவே வேறு முகத்தில் பரிச்சயமான ஒரு பிரபலத்தை வலைப்பதிவர் என்னும் முகத்தில் அறிமுகப்படுத்துகிறேன்.

நிஜந்தன்

முன்பு துர்தர்ஷன் சென்னைத்தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்தவர்கள் செய்திவாசிப்பாளர் நிஜந்தனை மறக்க முடியாது. கணீர் குரல் மற்றும் தெளிவான உச்சரிப்புக்கு சொந்தக்காரர். இவரும் இணையத்தில் எழுதி வருகிறார். டிவில் வரும் ஒரு விளம்பரத்தில் சரியான தமிழ்உச்சரிப்பு இல்லையென்று அவர் விமர்சனம் செய்யும் ஒரு பதிவு குறிப்பிடத்தக்கது. சில தொடர்கதைகளையும் எழுதிவருகிறார். கண்டிப்பாக அறியப்பபடவேண்டிய ஒருவலைப்பதிவு.


மீண்டும் சில புதிய பதிவர்களுடன் நாளை சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Sunday, July 11, 2010

அறிமுகம் - வலைச்சரத்தில் முதல் நாள் (திங்கள்)

வணக்கம் சீனா ஐயா,

சீனா சார் என்னை வலைச்சரத்தில் ஆசிரியராக அழைப்பு விடுத்ததில் மகிழ்ச்சி. எனக்கு மின்னஞ்சலில் விடுத்த அழைப்பு என் கண்ணில் படவில்லை. சில தினங்களுக்கு முன் மாம்சு தேவா மூலமாகத்தான் அறியவந்தது. இல்லையென்றால் வடைபோச்சே என்று புலம்பிக்கொண்டிருப்பேன்.
இருவருக்கும்நன்றிகள்.


வாசிக்கும் ஆர்வத்தில் இணையத்தில் தமிழை தேட ஆரம்பித்தேன். 2006ம் ஆண்டு முதன்முதலில் வலைப்பதிவு அறிமுகம். முதன்முதல் நான் படித்த வலைப்பூ பதிவர் மா.சிவகுமார் அவர்களுடையது. வலைப்பூ புதிதாக ஆரம்பிக்க இணையத்தளம் போல டொமைன் பதிவு செய்ய வேண்டும் எனநினைத்து அதைப்ப்பற்றி யோசிக்கவே இல்லை.


மா.சிவகுமார் அவர்களை தொடர்புகொண்டு அதைப்பற்றி கேட்டபோதுதான் தெரிந்தது வலைப்பூ இலவசமாக கிடைக்கிறதென்று. இலவசத்துக்கு நானும் மயங்கினேன். நானும் தமிழ்நாட்டை சேர்ந்தவன்தானே. அதன் விளைவுதான் 2007 ல் எனது எனது வலைப்பூவின் உதயம். எழுதி தமிழை வளர்க்கனும்னு ஆசை எதுவும் இல்லை, நான் எழுதாம இருந்தாலே தமிழை வளர்த்தா மாதிரிதான். இருந்தாலும் ஒரு ஆசை.


எழுத ஆரமபித்த புதிதில் புதியவர்களை ஊக்குவிப்பதில் புரட்சியே நடத்தும் பதிவர் கோவி.கண்ணன் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்தபோது எனது வலைப்பதிவை இங்கு அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து வலைச்சரம் அறிமுகமானது.


முதல் வலைப்பூவை நாஞ்சில் மைந்தன் என்ற பெயரில் ஆரமபித்து எழுதினேன். 3 வருடங்களாக எழுதினேன் எழுதினேன் மொக்கைப்பசி தீரும் வரை எழுதினேன். யார் கண்ணுபட்டுச்சோ எனது வலைப்பூ திடீரென மாயமானது.


என்னையும் படிச்ச சிலபேர் ஏன் எழுதறதில்லைன்னு மின்னஞ்சல்களில் கேட்க (சத்தியமா...நம்பித்தான் ஆகனும்) மீண்டும் வலைப்பதிவு ஆரம்பித்தேன். நகைச்சுவை பதிவுகள், சினிமா, அறிவியல், சம்பந்தமான பதிவுகளை விரும்பி படிப்பேன். அதுபோல் எழுதவும் ஆசை(ஆனா முடில). எனது சில பதிவுகள் விகடன் குட் பிளாக்ல் வந்துள்ளது. (தற்புகழ்ச்சி பிடிக்காது அதனால் எந்தப்பதிவுக்கும் இணைப்பு கொடுக்கவில்லை :).

இப்போது ஒரு அங்கீகாரம் கொடுத்த சீனா ஐயாவுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துகொண்டு ஒருவாரம் மட்டும் எனது எக்ஸ்பிரஸை வலைச்சரத்தில் ஓடவிட்டு பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த இருக்கிறேன். எக்ஸ்பிரஸ்-ல் பயணம் எப்படி இருந்தது என்பதை மறக்காமல் தெரிவிக்கவும்.


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது