நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை !
இன்றைய வலைச்சரத்தில் நினைவுகளின் தொகுப்பைத் தொகுத்து இருக்கிறேன். எல்லோர்க்கும் நினைவுகளில் மூழ்குவது என்றால் பிடித்த மான விஷயம் தானே. பெரியவர்கள், ’அந்தக்காலத்திலே’ என்று ஆரம்பித்தால் ஓடும் குழந்தைகளும் உண்டு. ’சொல்லுங்கள். உங்கள் மலரும் நினைவுகளை’ என்று கேட்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்யும் குழந்தைகளும் உண்டு. அது போல் நீங்களும் இந்த மலரும் நினைவுகள் பதிவை ரசித்துப் படிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
சிறு வயது பள்ளிப் பருவ நினைவுகள்!
கிராமத்து நினைவுகள்!
காதலர் இருவர் சந்தித்த நாளை சிந்திக்கும் நினைவுகள்!
எட்டுஅடி எடுத்து வைக்க முடியவில்லை. இங்கே இருக்கும் இடத்திற்கு போக, ’வண்டி வேண்டும்’, என்று கேட்கும் குழந்தைகள்! நடப்பதையே மறந்து விடுவார்களோ என்ற நிலை இப்போது .அப்போது எல்லாம் எப்படி நடப்பார்கள் எல்லோரும் ! என்று பழையகாலத்தை எண்ணும் நினைவுகள்!
அந்த காலத்து சம்மர் கேப் கற்றுக் கொடுத்த பாடங்கள் பற்றிய நினைவுகள்!
அந்தக் காலத்து குழந்தைப் பாடல்கள் தந்த மகிழ்ச்சியான நினைவுகள்!
பேனா, பென்சிலில் வரைந்த கடந்தகால நினைவுகள்!
பேருந்துப் பயண நினைவுகள் !
என்று இங்கு வழங்கி இருக்கும் நினைவுகள் எல்லாம் என் மலரும் நினைவுகளை சிந்திக்க வைக்கிறது.
பதினைந்து வயதினிலே
’தவறு செய்து திருந்திய பையனை ஹீரோவாகக் கொண்டாடி, பரிசு கொடுத்து, தன் செல்லப் பிள்ளை போல அருகில் நிறுத்திக்கொண்டு, பிரேயரில் அத்தனை பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்திய நீங்கள், தவறே செய்யாமல் ஒழுங்காக இருக்கும் என்னை ஏன் இப்படி கௌரவிக்கவில்லை?’ இப்படி கேட்ட தன் பள்ளிப் பருவத்து மலரும் நினைவுகளைக்கூறுகிறார், ’உங்கள் ரசிகன்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் ரவி பிரகாஷ் அவர்கள்.
கிராமத்து நினைவுகள் - நீர் பாய்ச்சுதல்
//இந்தப் பாடலை எங்க ஐயா (அப்பாவின் அப்பா) பாடினார் என்றால் ரொம்ப தூரத்துக்கு கேட்கும். அவ்வளவு அழகாக பாடுவார். பள்ளியில் படிக்கும் போது இரவு நேரத்தில் டியூசன் விட்டு இருட்டில் வரும்போதே பாட்டை வைத்து யார் தண்ணீர் இறைக்கிறார்கள் என்று சொல்லிவிடுவோம். பெரும்பாலும் எங்க ஐயா இறைத்தால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.அந்தக்குரலை வைத்தே நடுவுலார் காஞ்சரமடையில தண்ணீர் இறைக்கிறார் போல பாட்டுச் சத்தம் கேக்குது எனச் சொல்லிவிடுவார்கள் ////
இப்படி தன் கிராமத்தில் வயலுக்கு தண்ணீர் இறைக்கும் போது பாடும் பாடல்களை நினைவுகூர்கிறார் ’மனசு’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் குமார் அவர்கள்.
மலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999
//அந்த நாள் நினைவுகள் சுகமாக இருக்கின்றது இப்பவும். வாழ்க்கையினை வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இந்த நினைவுகள் தான். சுவாசமாய் நிறைந்திருக்கிறது என்றென்றும்...
இப்படித் தன் மலரும் நினைவுகளைச் சொல்வது ,’ கோவை நேரம்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் ஜீவானந்தம் அவர்கள்.
எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்!
//ஆரோக்கியத்திற்கான பயிற்சி முறைகளிலேயே உலகம் பூராவும் எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான். இதனைத் தவறென்று எந்த மருத்துவ முறைகளும் சொல்லவில்லை. சொல்லமுடியாது. தினசரி நடைபயிலுங்கள் என்றுதான் எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள். எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான். எல்லா டாக்டர்களும் எல்லா மருத்துவர்களும்(சித்த ஆயுர்வேத யுனானி ஹோமியோ ரெய்கி அக்குபிரஷர் இன்னோரன்ன) சொல்கிறார்கள். மக்களுக்கும் தாமாகவே ஒரு விழிப்புணர்வும் வந்திருக்கிறது. //
இப்படி சொல்வது ’அமுதவன் பக்கங்கள்’ என்று வைத்து இருக்கும் அமுதவன் அவர்கள்.
சம்மர் கேம்ப்
//சம்மர் கேம்ப் என்றதும் நான் எதோ சம்மர் கேம்ப்
ஆரம்பிக்கிறேன் , அதைப் பற்றி எழுதுகிறேன் என்றோ இல்லை எங்கோ கேம்ப் அடிக்கப் போகிறேன் என்றோ யாரும் அவசரப்பட்டு யோசிக்க வேண்டாம். நான் சொல்வது என் சிறு வயது நினைவுகளை.
நான் சம்மர் கேம்பிற்கு சென்று கற்றுக் கொண்டு அனுபவித்து ஆனந்தித்தது பற்றி தான் இந்தப் பதிவு. // இப்படி மலரும் நினைவுகளை சொல்கிறார் அரட்டை என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ராஜலக்ஷ்மி பரமசிவம்.
குழந்தைகளுக்கான தமிழ் பாடல்கள் - 2
ஒன்று, யாவருக்கும் தலை ஒன்று
இரண்டு, உடம்பில் கை இரண்டு
மூன்று, முக்காலிக்கு காலி மூன்று
நான்கு, நாற்காலிக்குக் கால் நான்கு
இப்படி பழைய பாடல்களை நாம் பாடிய பாடல்களை நினைவுக்கு தருகிறார்
பூந்தளிர் என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் தியானா அவர்கள்.
குரு தட்சிணை - அன்றும் இன்றும்
//இன்று குரு தட்சிணை மதிக்கப்படுகிறதா? குருவின் மேல் மரியாதையாவது இருக்கிறதா? குருவும் மாணவர் மேல் அக்கறை கொண்டு கற்றுக் கொடுக்கிறாரா? என்று பல கேள்விகள் அடுக்காய் எழுகின்றன. மனிதருக்கு மனிதர், இடத்திற்கு இடம் இவை எல்லாம் வேறுபடுகின்றன.//
இப்படிச் சொல்கிறார், ’ தேன் மதுரத் தமிழ்’ கிரேஸ் அவர்கள்.
வீடும், பூவும்
//முன்பு பேனா கொண்டு பேப்பரில் ஓவியங்கள் வரைந்த நான் இப்போது கணினியில் வரைய ஆரம்பித்து விட்டேன்.அப்படி வரைந்த ஓவியம் ஒன்று உங்களுடைய பார்வைக்கு..//
இப்படிச் சொல்பவர், ’வெளிச்சக்கீற்றுகள்’ வலைத்தளம் வைத்து இருக்கும் ரோஷிணி. பிரபல பதிவர்கள் ஆதி வெங்கட், வெங்கட் நாகராஜ் அவர்களின் அருமை மகள்.
கிராமத்து பேருந்து -- சில நினைவுகள்
//12 வயது வரை தனியாக பேருந்தில் பயணம் செய்ததில்லை நான். முதல்முறையாக தனியாக பேருந்தில் பயணம் செய்த போது ஏதோ மிகப் பெரிய சாதனை செய்ததைப் போன்ற ஒரு ஆனந்தம். இத்தனைக்கும் மிகப் பெரும் தொலைவெல்லாம் இல்லை. வெறும் 10கிமீ மட்டுமே. ஆனால் அந்த 10கிமீ தூர பயணத்தைப் பற்றி நாள் முழுக்க நண்பர்களிடம் பேச விஷயங்கள் இருந்தன.//
இப்படிச் சொல்வது, ’என் எண்ணங்களின் வழித்தடம்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் அன்பு அவர்கள்.
இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பும் , உங்களுடன் கழித்த இந்த நாட்களும் நினைவுகளாய் என்னிடம் தங்கி மணம் பரப்பிக் கொண்டு இருக்கும்
பசுமை நிறைந்த நினைவுகள் என்றும் அழிவது இல்லை!
* * *
இந்த ஒரு வாரகாலமாய் வந்து ஆதரவு தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
எனக்கு மீண்டும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு அன்புடன் அழைத்த சீனா சாருக்கு நன்றி.
உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டு அனைவருக்கும் நல் ஆண்டாய் மலர இறைவன் அருள்வான். உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்வை இனிதாக்குவது அன்பு. கஷ்டங்களையெல்லாம் மீளச்செய்வது அன்பு. குடும்ப வாழ்க்கையை மேன்மைப்படுத்துவது அன்பு. உலக வாழ்க்கையைச் சுவைக்கச் செய்வது அன்பு. அழகற்றதற்கு அழகூட்டுவது அன்பு. அன்பு பொலியுமிடம் சுவர்க்கம், அன்பு மறைந்தவிடம் நரகம். மனமே நீ அன்பில் ஊறி வளர்க. -ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.
வாழ்க வளமுடன்!
-------------------
சிறு வயது பள்ளிப் பருவ நினைவுகள்!
கிராமத்து நினைவுகள்!
காதலர் இருவர் சந்தித்த நாளை சிந்திக்கும் நினைவுகள்!
எட்டுஅடி எடுத்து வைக்க முடியவில்லை. இங்கே இருக்கும் இடத்திற்கு போக, ’வண்டி வேண்டும்’, என்று கேட்கும் குழந்தைகள்! நடப்பதையே மறந்து விடுவார்களோ என்ற நிலை இப்போது .அப்போது எல்லாம் எப்படி நடப்பார்கள் எல்லோரும் ! என்று பழையகாலத்தை எண்ணும் நினைவுகள்!
அந்த காலத்து சம்மர் கேப் கற்றுக் கொடுத்த பாடங்கள் பற்றிய நினைவுகள்!
அந்தக் காலத்து குழந்தைப் பாடல்கள் தந்த மகிழ்ச்சியான நினைவுகள்!
பேனா, பென்சிலில் வரைந்த கடந்தகால நினைவுகள்!
பேருந்துப் பயண நினைவுகள் !
என்று இங்கு வழங்கி இருக்கும் நினைவுகள் எல்லாம் என் மலரும் நினைவுகளை சிந்திக்க வைக்கிறது.
பதினைந்து வயதினிலே
’தவறு செய்து திருந்திய பையனை ஹீரோவாகக் கொண்டாடி, பரிசு கொடுத்து, தன் செல்லப் பிள்ளை போல அருகில் நிறுத்திக்கொண்டு, பிரேயரில் அத்தனை பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்திய நீங்கள், தவறே செய்யாமல் ஒழுங்காக இருக்கும் என்னை ஏன் இப்படி கௌரவிக்கவில்லை?’ இப்படி கேட்ட தன் பள்ளிப் பருவத்து மலரும் நினைவுகளைக்கூறுகிறார், ’உங்கள் ரசிகன்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் ரவி பிரகாஷ் அவர்கள்.
கிராமத்து நினைவுகள் - நீர் பாய்ச்சுதல்
//இந்தப் பாடலை எங்க ஐயா (அப்பாவின் அப்பா) பாடினார் என்றால் ரொம்ப தூரத்துக்கு கேட்கும். அவ்வளவு அழகாக பாடுவார். பள்ளியில் படிக்கும் போது இரவு நேரத்தில் டியூசன் விட்டு இருட்டில் வரும்போதே பாட்டை வைத்து யார் தண்ணீர் இறைக்கிறார்கள் என்று சொல்லிவிடுவோம். பெரும்பாலும் எங்க ஐயா இறைத்தால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.அந்தக்குரலை வைத்தே நடுவுலார் காஞ்சரமடையில தண்ணீர் இறைக்கிறார் போல பாட்டுச் சத்தம் கேக்குது எனச் சொல்லிவிடுவார்கள் ////
இப்படி தன் கிராமத்தில் வயலுக்கு தண்ணீர் இறைக்கும் போது பாடும் பாடல்களை நினைவுகூர்கிறார் ’மனசு’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் குமார் அவர்கள்.
மலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999
//அந்த நாள் நினைவுகள் சுகமாக இருக்கின்றது இப்பவும். வாழ்க்கையினை வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இந்த நினைவுகள் தான். சுவாசமாய் நிறைந்திருக்கிறது என்றென்றும்...
எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி....// .