07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label படிப்பனுபவம். Show all posts
Showing posts with label படிப்பனுபவம். Show all posts

Friday, September 9, 2011

தம்பிக்கு அண்ணாவின் கடிதம்...

அன்புள்ள தம்பி சித்துமொழியனுக்கு,

வணக்கம். நலம் விரும்புகிறேன். ”வலைச்சரம்” பள்ளியில் கடந்த திங்கட்கிழமை அன்று ஆரம்பித்து எதிர்வரும் ஞாயிறு வரைக்கும் ”ஒரு நாள் முதல்வர்’ போல , ”ஒருவார ஆசிரியராக” பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறேன். வேலை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. அதனால் தான் நேற்று நீ தொலைபேசியில் அழைத்தபோதும் உன்னுடன் அதிக நேரம் பேசமுடியவில்லை. நீ மனம் வருந்திவிட கூடாதென்று இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்.

வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணிக்கு நானே உனக்கு போன் செய்கிறேன். அதுவரை இந்த அண்ணனின் நினைவு உன்னை வாட்டாமல் இருக்க, இம்மடலில் சில வலைப்பூக்களையும், அவற்றில் எனக்குப் பிடித்த பதிவுகளையும் இணைப்பு கொடுத்து அனுப்பி இருக்கிறேன். நீ படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த வலைதளங்களை நண்பர்களுக்கும் தெரியப் படுத்து.
***
நம் ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசித்து வரும் சகோதரி மயூரா, தான் காணும் காட்சிகளையும், தன்னை பாதிக்கும் நிகழ்வுகளையும் புதுப்புதுச் சொற்களைக் கொண்டு புது நடையில் கவிதைகளாக்கி நதியானவள் என்னும் வலைப்பூந்தோட்டத்தில் மலரச் செய்திருக்கிறார். எல்லாக் கவிதைகளுமே எனக்கு பிடித்தவைகளே. சான்றாக, வாழ்தலில்... படித்துப்பார்.
***
அடுத்ததாக,
அரக்கோணத்தில் பிறந்து தற்போது U.K-வில் பணியாற்றி வரும் ப்ரியா அவர்கள், வெட்டிபுள்ளை என்ற புனை பெயரில்  “என் உலகத்தில்...” என்னும் வலைப்பூவில் தனது மன ஓட்டங்களை பதிவு செய்து வருகிறார். தலைப்புக்கேற்பவே இவரது உலகமே தனியானது தான். இவரது படைப்புகளும் தனித்துவமானது. நீ படித்து சுயம் உணர ”அசோக வனங்களும் ராதையும்” கவிதையைப் படி.
***

கீ ர்த்தி. இவரும் ஈழத்துச் சகோதரி தான். சொந்த மண்ணிலேயே வாழ்ந்து வருபவர். ”சிந்தனைச் சிறகினிலே” என்னும் வலைப்பதிவில் எழுதுகிறார். தமிழ்மண் மீது தீராத தாகம் கொண்டவர். இவர் எளிய சொற்களைக் கொண்டே அதி அற்புதமாக எதுகை,மோனையுடன் கவிதைகள் வடிப்பவர். ஓய்வாய் உணரும் தருணங்களில் எல்லாம் ஓடோடிச் சென்று அவரது கவிதைகளைப் படித்து இளைப்பாறி விட்டு வருவேன்.இதோ தலை நிமிர்ந்துச் செல்லுவோம் என்ற இக்கவிதையைப் படித்து பார்.
***
தி.பரமேஸ்வரி. அண்ணாவின் அன்னை மண்ணான காஞ்சியில் வசிப்பவர். தமிழாசிரியராக பணிபுரிகிறார். அண்ணாவைப் போன்றே தன் இனத்தை தட்டி எழுப்பும் வீரியச்சொற்களுக்குச் சொந்தக்காரர்.  அன்பென்று கொட்டு முரசே என்னும் வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரின் சமீபத்திய படைப்பான ”விழித்தெழுவாய் தமிழா” என்ற கட்டுரையைப் படித்து உணர்வு கொள்.
***
கார்த்திகேயன். சேலத்தைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன். தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறார். கார்த்திகேயன் கவிதைகள் , இரவல் இதயம் ஆகிய இரு வலைதளங்களில் எழுதி வருகிறார். சமீபத்தில் எழுதியிருக்கும் தலைப்பற்ற ஒரு கவிதை யைப் படித்து பார். உனக்கும் கவிதை எழுதத் தோன்றும். 
***
மதுரைவாசகன் என்னும் புனைப்பெயரில் ”மதுரைக்கும், தமிழுக்கும் நேர்ந்துவிடப் பட்டவன்” என்ற வசனத்துடன், சித்திர வீதிக்காரன் என்ற வலைப்பூவில் நமது வரலாற்றுப் புகழ் மிக்க தலங்களை தான் சென்று தரிசித்த பயண அனுபவத்தை அவர் பகிரும் பாங்கே தனி. படிக்கும் போதே அவருடன் சேர்ந்து பயணப்பட்ட அனுபவத்தை நமக்கு தந்து விடும் எழுத்து வண்மை மிக்கவர். பஞ்சப்பாண்டவ மலையில்.... கட்டுட்ரையைப் படித்து, வாய்ப்பு கிடைக்குமானால் உன் நண்பர்களுடன் ஒரு பயணம் போய் விட்டு வா.
***
ம்ம்ம்...!  சொல்ல மறந்து விட்டேன். நாளை இரவு நம் அன்பு மாமா சிங்கைத் தங்கம் சி.கருணாகரசு தாயகம் வருகிறார். நீ விரும்பி குடிக்கும் HEINEKEN பீர் வாங்கி கொடுத்தனுப்புகிறேன், பெற்றுக்கொள்ளவும். தூங்கச் செல்லும் முன் யாருக்கும் தெரியாமல் குடித்து விட்டு தனியே படுத்து தூங்கவும். குறிப்பாக உன் மனைவிக்கு தெரியக் கூடாது. தெரிந்தால் என்னை திட்டி தீர்த்து விடுவார். 

அன்புடன்,
அண்ணன் சத்ரியன்.


***

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது