பிரிவுரை - விடை பெறுகிறேன்
➦➠ by:
பிரிவுரை
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா. பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும் தேடிப்பிடிச்சு, தினம் ஒரு பதிவு வீதம் போட்டு, வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதி, மூச்சு முட்டிப் போச்சுங்க.
ஆச்சு, ஒரு மாதிரியாகத்தானே இந்த வலைச்சர ஆசிரியப் பொறுப்பு
என்னும் இன்பமான சுமையை இறக்கி வைக்கிறேன்.
ஸ்ரீரங்கத்து உலக்கை என்று சொல்வார்கள். அதை நான் பார்த்ததில்லை. அதை கீழே வைக்கப்படாதாமே,
அடுத்து யாராவதிடம்தான் கொடுக்கவேண்டுமாம். வலைச்சர ஆசிரியர் பணியும் அப்படித்தான். ஆனால் என் வேலை முடிந்து விட்டது என்று அதை அப்படியே அம்போவென்று
விட்டு விட்டு, “பாப்பாத்தி அம்மா, மாடு வந்திருச்சு, புடிச்சுக் கட்டிக்கோ” என்கிற
மாதிரி போகமுடியாது. (இந்தக்
கதை தெரியாதவர்களுக்காக, இதை என் தளத்தில் ஒரு பதிவாகப் போடுகிறேன். வரவர பதிவுகளுக்கு
சப்ஜெக்ட் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இப்படி எங்கே சான்ஸ் கிடைத்தாலும் லவட்டிக்கொள்ள
வேண்டியதுதான்.) ஒரு பிரிவுரை எழுதி கடைசிப் பதிவாப் போடவேண்டுமாம். அதனால்தான்
இந்தப் பதிவு.
இந்த ஒரு வாரமும் நான் தூங்கவில்லை என்றால் நீங்கள் நம்பித்தான்
ஆகவேண்டும்.
நான் எப்போதும்
முதல் வரியை மட்டும் முழுதாகக் கடைப்பிடிப்பவன். அதுவே சொர்க்கம் என்று இருப்பவன். உண்மையிலேயே என் வயதில் அதுதான் பூலோக சொர்க்கம். நண்பர் திரு
சீனா ஐயா அவர்கள் என்னை அந்த சொர்க்கத்திலிருந்து வெளியே வரும்படி செய்து, இரண்டாவது
வரியை அனுபவிக்கச் செய்து விட்டார். அவரை என்றும் நிஜ சொர்க்கத்தில் அனுமதிக்கக் கூடாது
என்று இந்திரனுக்கு மனு செய்திருக்கிறேன்.
நீச்சல் பழக்கும்
போது சிறுவர்களை டபால் என்று தூக்கித் தண்ணிக்குள் போட்டு விடுவார்கள். அவன் தண்ணிக்குள்
போய் மூச்சுத்திணறி தண்ணி குடிச்சு மேலே வந்த பிறகு அவனைத் தூக்கி விடுவார்கள். அந்த
மாதிரி இரண்டு நாளைக்கு முன்பாக “வரும் ஞாயிறு முதல் நீங்கள்தான் வலைச்சர ஆசிரியர்”
என்று திரு சீனா ஐயா சொல்லி விட்டார்.
நான் தண்ணியில் விழுந்த
சிறுவன் மாதிரி மூச்சுத் திணறி, தண்ணீர் குடிக்கும்போது இருவர் கை கொடுத்தார்கள். ஒருவர்
சகோதரி மஞ்சு. அடுத்தவர் தமிழ்வாசி பிரகாஷ். எப்படியோ கரை சேர்ந்து பதிவுகள் போட ஆரம்பித்தேன்.
இரண்டு மூன்று பதிவுகள் போட்ட பிறகுதான் நான் என் full form க்கு வந்தேன். ஆனால் மனதிற்குள் ஒரு அலாரம் அடித்தது. இன்னும் இரண்டு
நாட்கள்தான் உன் ஆட்ட பாட்டமெல்லாம். ஞாயிற்றுக்கிழமை இடத்தைக் காலி பண்ணவேண்டும். மூட்டை
முடிச்செல்லாம் கட்டி ரெடியாகுங்கள் என்று மனச் செய்தி நினைவு படுத்தியது. நான் ஊசி குத்தின பலூன் ஆனேன். என்ன செய்ய முடியும். ரூல்
என்றால் ரூல்தான்.
எப்படியோ நம்ம பதவி காலத்தில் கொடுத்த வேலையை முடிந்தவரை ஒழுங்காகப்
பார்த்துவிட்டேன் என்று நினைக்கிறேன். நூத்துக்கு நூறு வாங்காவிட்டாலும் பாஸ் மார்க்காவது வாங்கியிருப்பேன் என்று நம்புகிறேன். அதைப் பற்றி நீங்கள்தான் அபிப்பிராயம் கூற வேண்டும்.
இந்த வாரம் முழுவதும் என்னுடைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டும் கருத்துக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தும், எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
இந்த வாரம் முழுவதும் என்னுடைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டும் கருத்துக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தும், எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
எனக்குப் பரிச்சயமான நல்ல பல பதிவர்களை என்னுடைய கவனமின்மையாலும்
சோம்பேறித்தனத்தினாலும் அறிமுகப்படுத்தாமல் விட்டிருப்பேன். அவர்கள் பெரிய மனதுடன்
என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
இந்த வாய்ப்பை எனக்களித்த அன்பு நண்பர் சீனா ஐயா அவர்களுக்கும் வழி காட்டிய தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் திருமதி மஞ்சுபாஷிணி சம்பத்குமார் அவர்களுக்கும் மற்றும் வலைச்சரம் ஆசிரியர் குழுவிற்கும் என் ஆழ்ந்த
நன்றியை உரித்தாக்குகிறேன்.
நன்றி, வணக்கம்.