07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள்.. Show all posts
Showing posts with label பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள்.. Show all posts

Wednesday, December 24, 2014

மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள்

 

வலைச்சரப் பள்ளி,
வலைப்பூக்களூர்.
வலைச்சரத் தேர்வு - 2015.

காலம் : உங்களின் நேரம்           மதிப்பெண்கள் : உங்களின் தேர்வு.

குறிப்பு 1. எல்லா வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.
          2. விடைகள் தெரியவில்லை எனில் அதனுடன் தொடர்புடைய              விடைக்குறிப்பின் சுட்டியைச் சுட்டினால் விடை       
             கிடைக்கும்

பிரிவு -1

1.  மாவா நீதா தாநீ வாமா      
       வாயா வாமே மேவா யாவா                                
    நீவா ராமா மாரா வாநீ                                    
    தாமே மாரா ராமா மேதா

    இச்சித்திரக்கவியை எழுதியவர் யார்? இதன் விளக்கம் தருக.\

2.  “ வனவாசம்மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது   
        என்பதற்கான எடுத்துக்காட்டுகள். எப்படியெல்லாம் வாழக்கூடாதோ,
        அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்”,
         இக்கூற்று யாருடையது ? அவரைப்பற்றிச் சுருக்கமாக உரைக்க.

3.     சமையற்கலையில் அறிவியல்தொழில்நுட்பத்தைப் புகுத்திய
        பெண்களின் சாதனைகளுக்குச் சான்று தருக.

4.         இருள் பரவிய மனதில்
      வெளிச்சம்
      விரைந்தோடுகிறது….
      இருளை விரட்டி வருகிறது..
                          இக்கவிதை சுமந்துவரும் வலைப்பூ எது ?

5.  ”  உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் பெண்ணை
     அதிகாரம் செய்யும் முறைமையிலேயே அமைந்துள்ளது. காலம் 
     காலமாகப் பெண்களைப் பெண்களாகப் பார்க்கும் பார்வை 
     சமூகத்தில் இல்லாமல் போயிற்று, அவர்களை அடிமைகளாகப் 
     பார்க்கும் பார்வை ஏற்பட்டுவிட்டது ” - 

      இவ்வாய்வுக்கூற்றின் களம் பற்றி விவாதிக்க.

6.        இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு
         தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது.  நிச்சயமாக 
     அப்பொழுது  மூன்று மணிதான் என்று அவளால் அடித்துச்              சொல்ல முடியும்.  கடந்த  பத்து நாளாக இந்த மூன்று மணி              அவளை துரத்திக் கொண்டேயிருக்கிறது. - 
     
     எனத் தொடங்கும் சிறுகதையைப் பதிவிட்ட    வலைப்பூவானது 
     எழுத்தாளர்  எஸ்.இராமகிருஷ்ணனின்  பாராட்டிற்கு உரியதாக 
     விளங்குகிறது. அவ்வலைப்பூ பற்றி நீவிர்  அறிந்துள்ளீரா?

7.   உயர்ந்த பரம்பரையில் பிறந்தவர்களுடைய கம்பீரமும் உதார
    குணமும் எக்காலத்தும் அழியாதவை. "கெட்டாலும் மேன்மக்கள்
    மேன்மக்களே" என்ற அருமையான வாக்கியத்திற்கு இந்த
    வரலாற்றை விட வேறு சிறந்த உதாரணம் கிடைக்குமோ? 
       உ.வே.சா. பற்றிப் பதிவேற்றியிருக்கும் இவ்வலைப்பூ தேன் என்ற
    தலைப்பில் திகட்டாத நற்றமிழ் கருத்துகளை வழங்கி வருகிறது .
    இவ்வலைப்பூ பற்றித் தங்களது கருத்துகளைப் பதிவு செய்க.

8.   


     இந்நூலை எழுதியவர் யார்? இவரைப் பற்றிய குறிப்புகளைப் 
     பதிவு செய்த பேராசிரியர் யார்? அவரின் இலகியப்பயணப் 
     பதிவுகள் பற்றி விவாதிக்க.

9.    முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
      வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
      வாரேன் வாழிய நெஞ்சே -

           புறப்பாட்டு பட்டினப்பாலை பற்றிய செய்திகளைத் தொகுக்க.


10.      சீனப் பெருஞ்சுவர் பற்றிய செய்திகளைத் தொகுத்த
      ஃப்ரான்ஸ்ஃகாப்காவின் உரையைத் தமிழில் மொழிபெயர்த்தவர்          யார்?
                     அவரது கட்டுரை காணப்படும் வலைப்பூ எது ?




                                                       விடைக்குறிப்பு 


வினாஎண் 1  :    சுவாமிநாதன் 

வினாஎண் 2  :          திருவள்ளுவன்

வினாஎண் 3  :    பிரேமலதாஜவஹர்

வினாஎண் 4  :    தூரிகை கபிலன்


வினாஎண் 6  :    அழியாச்சுடர்கள்

வினாஎண் 7  :          தமிழ்க்கொங்கு

வினாஎண் 8  :          முனைவர் மு. இளங்கோவன்

வினாஎண் 9  :          வணக்கம் தமிழ்.

வினாஎண்10  :    உலக இலக்கியம்



 ( குறிப்பு : வலைப்பூ நண்பர்கள் யாரும் தேர்வு கண்டு பயப்படவேண்டாம். ஏனெனில் மதிப்பீடு செய்யப்போவது நீங்கள் நீங்கள் மட்டும் தான். மதிப்பெண்களை யாரும் தயவு செய்து பகிர்ந்துகொள்ள வேண்டாம் (!) ) தேர்விற்குப் பொறுத்தருள்க.)


                                                                                                  நன்றியுடனும் ,
                                      நான்காம்நாள் வணக்கங்களுடனும்,
                                                 சி.குருநாதசுந்தரம்,


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது