07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label யெஸ்.பாலபாரதி. Show all posts
Showing posts with label யெஸ்.பாலபாரதி. Show all posts

Saturday, August 4, 2007

விடுபட்டவை! இதுவே கடைசி பதிவாகவும் இருக்கலாம்!!

எப்போதோ படித்த சுஜாதாவின் கதையை என்னால் இன்னும் மறக்க முடியாது. நண்பன் ஒருவனைத்தேடி அவன் வீட்டுக்கு வருவார் ஒருவர். திண்ணையில் அமர்ந்து வாசலில் விளையாடிக்கொடிருக்கும் நண்பனின் குழந்தையிடம் பேச்சுக்கொடுப்பார்.

"ஒம் பேர் ன்னா?"
"ச்சூல் போறியா?"
"எத்தனாப்பூ?"
"அப்பா இக்காரா?"
"உன்க்கு அப்பா பிக்குமா? அம்மா பிக்குமா?" என்று குழந்தைகளில் பேசுவது போலவே அதனோடு பேசிக்கொண்டிருப்பார். அந்த குழந்தையோ..

"ரம்யா"
"ஸ்கூல் போகிறேன்"
"தேர்ட் ஸ்டாண்டேர்டு படிக்கிறேன்"
"உள்ளே வேலையாக இருக்கிறார்"
"ரெண்டு பேரையும் பிடிக்கும்" என்று தெளிவான மொழியில் பதில் சொல்லிக்கொண்டிருக்கும். இவரோ குழந்தை போல அதனுடன் கதைத்துக்கொண்டு இருப்பார். "அப்பாவை பாக்க லாஜூ வந்திருக்கேன்னு சொல்லு.." என்று குழந்தையை வீட்டுனுள் அனுப்பி வைப்பார் அவர். உள்ளே வந்த குழந்தை அப்பாவிடம், "அப்பா, ராஜூன்னு உன்னோட ப்ரண்ட் வந்திருக்கார் உன்னை பார்க்க. திண்ணையில உட்கார்ந்திருக்கார். ஆமாப்பா.. அவரு ஏன் தம்பி பாப்பா மாதிரியே பேசுறார்? என்று ஒரு கேள்வியைக்கேட்பதுடன் கதை முடிந்து போகும்.

குழந்தைகள் உலகம் அலாதியானது. நம் எல்லோராலும் அவர்கள் உலகினுள் பிரவேசிக்க முடியாது. ஆனால் அவர்கள் அநாயசமாக நம் உலகினுள் நுழைந்துவிடுவார்கள். இதோ அஞ்சலி பாப்பாவின் குட்டிக்கதை. உலகினுள் நுழைய முயன்று பாருங்கள்!

☃☃☃☃☃☃☃☃☃

தான்யா எழுதிய இந்த பதிவு குறித்து பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். தொடர்ந்து இச்சமூகம் பெண்கள் மீது தொடுக்கும் தாகுதல் குறித்தும் மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால்.. வலி! இதை உணர்ந்தவர்களால் மட்டுமே சரியாக சொல்லமுடியும். தீயில் எரிபவனைப் பார்த்து. ச்சுகொட்டிக்கொண்டு.. அவன் வலியை உணர்ந்து விட்டேன் என்பதற்கும், எரிந்துகொண்டிருப்பவன் அந்த வலியை உணர்வதற்கும் பில்லியன் வித்தியாசங்கள் உண்டு!

☃☃☃☃☃☃☃☃☃

சிறுகதைகள் வாசிப்பதில் ஆர்வம் மிக்கவரா, புனைவுகள் ஒரே வட்டத்துக்குள் சுற்றிவருவதான புலம்புகின்றவரா.. அப்படியானால் நீங்கள் நிச்சயம் படிக்கவேண்டிய சிறுகதை இது. மொழியும் நடையும் வித்தியாசமானவை. பத்தி பிரிக்காமல் இருப்பது வாசிப்பதற்கான இடையூறு! :(

☃☃☃☃☃☃☃☃☃

எதுபற்றியும் ஆண்கள் மட்டும் பேசலாம். பெண்கள் எதைப்பேசினாலும் உடனே மண்ணை கீறி பூதங்கள் வெளியே வரத்தொடங்கி விடும். அவற்றைக்கண்டு பயப்படாமல் இருப்பவர்கள் குறைவு. பெண் உடலுக்குள் ஆண் குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்க. அதன் குரலை அதன் இயல்பில் பதிவாக்கி இருக்கிறார் கறுப்பி.

{தொடரலாம்.. தொடர முடியாமலும் போகலாம். அதலான இப்பவே சொல்லி விடுகிறேன்}

வலைச்சரத்தில் வாய்ப்பு வழங்கியவர்களுக்கு நன்றி!
மேலும் வாசிக்க...

Friday, August 3, 2007

சுட்டிகள் உங்களுக்காக!

மனிதனை இரண்டுகால் மிருகமென்றும் சொல்லி பல இடங்களில் பார்த்திருக்கிறேன். (சில,பல சமயங்களில் எனக்கும் அப்படித்தோன்றும்.. அது பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம்) இந்த இரண்டுகால் மிருகம் நான்கு கால் மிருகத்திடமிருந்து வேறுபடும் இடங்களில் நகைச்சுவையும் ஒன்று.

நக்கல், நையாண்டி இரண்டுக்கும் வேறுபாடு இருந்தாலும் இவ்விரண்டும் நகைச்சுவையின் முதுகில் ஏறித்தான் சவாரி செய்தாகவேண்டும்.

ஒரு பேச்சாளர் குட்டி ஒரு நகைச்சுவை கதையை சொல்லுகிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அந்த நகைச்சுவைக்கு பார்வையாளர்களின் ரசிப்பு வேறுபடும். அது எப்படி என்ற சந்தேகம் வரலாம்..!

அந்த நகைச்சுவைக்கதையை.. கார்ப்பரேட் மாதிரி அலுவலக மீட்டிங்கில் சொன்னால்.. பற்கள் கூட வெளித்தெரியாமல் சிரிப்பார்கள்.

அதே கதையை.. கொஞ்சம் போக்குவரத்துக்கழகம் மாதிரியான தொழிற்சங்க கூட்டத்தில் சொன்னால்.. கை தட்டல் காதை பிளக்கும்!

அதே கதையை.. உடல் உழைப்பை முன்னிருத்தி வாழும் மக்கள் கூட்டத்தில் சொன்னால்... விசில் சத்தம் விண்ணைத் தொடும்!

ஒரே கதை தான். சொல்லப்பட்ட விதமும் ஒரே மாதிரியாகத்தான். ஆனால்.. ரசிப்பு மட்டும் மாறுபடுகிறது. இது போல.. ஒரூ செய்தியை வெறும் செய்தியாக சொல்லுவதை விட, நகைச்சுவை கலந்து கொடுக்கும் போது.. அது மக்களிடம் எளிமையாகப் போய்ச்சேரும் என்பது கலைவாணர் போன்றவர்களின் நமக்கு உணர்த்திய உண்மை!

நகைச்சுவை மூலம் அழகாக குட்டு வைக்கலாம், உள்குத்தும் வைக்கலாம். அறிவுறை சொல்லலாம். கோபத்தையும் வெளிப்படுத்தலாம். இப்படி எத்தனையோ லாம்.

ஆண்களை விட, அதீத நகைச்சுவையுணர்வு மிக்கவர்கள் பெண்கள் என்பது என் அனுபவம். அதை வெளிப்படுத்திக்கொள்ள நம் சமூகம் தான் அவர்களுக்கு சரியான வாய்ப்புக்களை வழங்கவில்லை என்ற உண்மையைச் சொன்னால் என்னோடு பலர் சண்டைக்கு வரக்கூடும்.
அப்படி நான் ரசித்த ஒரு பதிவு இது. ஆதிரை இதன் மூலம் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்பதை நீங்களும் உணர்ந்துகொண்டால் எழுதியவருக்கு வெற்றி!

☀ ☀ ☀

இறை நம்பிக்கை இன்றைய காலகட்டத்தில் வெகுவாக குறைந்து வருகின்றன என்ற உண்மையை பலர் ஏற்க மாட்டார்கள். வெறும் புராண இதிகாச கதை பெருமைகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்த சன்யாசிகளின் பலர் இன்று, மனித உறவு குறித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

மனித உறவுகளை பேணுவது என்பது மிகுந்த சிரமமான காரியம் அல்ல. ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே பல குடும்பங்கள் பிரச்சனையின்றி இருக்கலாம்.

இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படுவது, காதுள்ள கல் தான். ஆனால் வினோதம் என்னவென்றால் காதுகளற்று வாய் உள்ள கல்லாக மட்டுமே பலர் இருக்கிறார்கள். தான் பேசுவதை மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதே சமயம்.. அடுத்தவர் பேச்சை கேட்கத்தயாராக இருப்பதில்லை.

குடும்ப உறவை மேம்படுத்த.. சில ஆலோசனைகளை அள்ளி விடுகிறார் மழைஸ்ரேயா! அம்மணி தைரியமாக கவுண்சிலிங் ஆரம்பித்து விடலாம். :)

☀ ☀ ☀

இன்று பெண்கள் கையில் திணிக்கப்பட்டு விட்ட சமையலில் கெட்டிக்காரர்களாக இருந்தது/இருப்பது ஆண் வர்க்கம் தான். பெண்கள் சரியான நிர்வாகத்திறன் கொண்டவர்கள். ஆனால் ஆண்சூழ்ச்சி அவர்களை அடுப்படிக்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டது. அதை உணராகவர்களாகவே இன்றும் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.

நளன், பீமன் , கிருஷ்ணன் போன்ற புராண இதிகாச பாத்திரங்களில் சமையலில் சிறந்தவர்களாக சித்தரிக்கப்படுபவர்கள் ஆண்வர்க்கம் தான். இதுபற்றி யோசிக்கும் போது எனக்கு பொன்ஸ் எழுதிய இந்த நூல் குறித்து மிகவும் பிடிக்கும். என்ன வழமை போல.. கரண்டியை கையில் கொடுத்தவர்கள் இந்த பதிவை அதிகம் பேர் பார்வையில் படம்.. ஓரம் கட்டி விட்டார்கள். :(

☀ ☀ ☀

அது போல தமிழ்பதிவுகள் உலகில் தொடர்ந்து சமையல் குறித்து எழுதிவரும் ஜெய்ஸ்ரீயின் பதிவுகள் அடிக்கடி படித்து வருகிறேன் என்றாலும், இந்த பதிவு என் சாய்ஸ்!



தொடர்வேன்..
மேலும் வாசிக்க...

Tuesday, July 31, 2007

நினைவுகளை கிளறியவை..!

நான் சின்ன வயதாக இருக்கும் போது.. டைப் கிளாஸ் போகும் என் பெரிய அக்காவை பார்க்க எனக்கு வியப்பாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களை மட்டும் டைப் அடித்து வராமல்.. சிவன், கிருஷ்ணர், மலை, இயற்கை காட்சிகள் போன்றவற்றை டைப் அடித்து வருவார்.

அந்த விதவிதமான டைப் ஓவியங்களை ஒரு பெரிய நோட்டில் ஒட்டியும் வைத்திருப்பார். கூடை பின்னுவது, கோலம் வரைவது மட்டுமின்றி, புனைவுகள் எழுதுவதிலும் ஆர்வமிக்கவர் அவர்.

பெரிய அக்கா கதை சொல்லும் அழகே தனி. குரலில் நல்ல ஏற்ற இறக்கம் இருக்கும். அதிகம் அவர் சொல்லுவது நகைச்சுவை கதைகளாக இருக்கும். வெறும் வார்த்தை ஜாலம் செய்ய்யும் மொழி விளையாட்டு கதைகள் அல்ல அவை. அத்தனையும் காட்சிப்படுத்தப்பட்ட கதை.

அந்த அக்காவுக்கு கல்யாணம் நடந்த போது என் வயது பதினைந்து. இன்று இரண்டு வயது வந்த குழந்தைகளின் தாய் அவர். அவரின் இளவயதில் இருந்த கதை சொல்லும் குணம் இன்று இல்லை. அவரின் கல்லூரிக்காலத்துடனே அவரின் துடுக்கதனம், கதை சொல்லுவது எல்லம் குறையத்தொடங்கி இருந்தது.. இன்று சுத்தமாக கதைஇ வாசிப்பு கூட இல்லாமல் இருக்கிறார்.

கடைசியாக அவரை இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்த போது.., "என்னக்கா.. இப்ப எல்லாம் ஒன்னோட குழந்தைகளுக்கு கூட கதை சொல்லுறதில்ல போலிருக்கே. டிவியில காமடி காட்சியில் கூட சிரிக்க மாட்டீங்கிறியேன்னு" கேட்டேன். அவர் விரக்தியாய் ஒரு சிரிப்பை உதிர்த்தார். அந்த சிரிப்புக்கு எனக்கு பொருள் புரியவில்லை. ஆனால்.. முரட்டு குணம் கொண்ட அத்தானுக்கு இது எல்லாம் பிடிக்காது என்று எனக்கும் தெரியும். என்ன செய்ய.. கற்பகமக்காவின் இந்த பதிவு ஏனோ.. எனக்கு சுயத்தை இழந்து வாழும் என் அக்காவை நினைவு படுத்தியது. :(

**

ஒரு காலகட்டத்தில் மடல் வழி தொடர்புகளான பேனா-நட்புகள் எனக்கு நிறைய இருந்தது. இன்றும் என் நண்பர்களில் பலர் இந்த பேனா- நட்பு மூலம் ஏற்பட்டவர்கள் தான். அப்படி ஏற்பட்ட ப்பல நட்புகளில் சிலது மட்டும் குடும்ப நட்பாக மாறி இருக்கிறது. இந்த பதினைந்து வருடங்களில் அப்படி ஏற்பட்ட நட்புகளில் பலரை குறிப்பிட்டு சொல்ல முடியும். இந்த பாலா இன்றும் உயிர்ப்போடு இயங்குவதுக்கு அந்த நட்புகளும் முக்கிய்ய காரணம். அது போல.. வலை உலகிலும் நட்புகள் சாத்தியம் என்பதை இந்த இரண்டு ஆண்டுகளில் உணர்ந்திருக்கிறேன். கிட்ட தட்ட ஒத்த கருத்துடையவர்களை, அல்லது தமிழ் நேசிப்பவர்களை தாயகம் விட்டு பிற இடங்களில் வாழும் போது நட்பு கொள்வது என்பதே சுவாரஸ்யமான விசயம். நிறைய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும். அப்படியான உணர்வை வாசிக்கும் போதே தந்தது துளசியம்மாவின் இந்த பதிவு.

**

மனித மனங்கள் பற்றி யோசிக்கையில் சில சந்தர்ப்பங்களில் வியப்பும், வேதனையும் எனக்கு தோற்றுவிக்கும். எல்லா வகையிலும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர் மேல் பாரத்தை சும்மத்தி விட்டு தப்பிக்கப் பார்க்கும். இப்படி பல விதங்களில் என்னை அலைக்கழிக்கும் இந்த மனிதர்கள் மேல் ஏனோ.. எப்போதும் என்னால் அதிக பட்சமாய் அரைமணி நேரத்திற்கு மேல் கோபமாய் இருக்க முடிவதில்லை. இதோ நிவேதா வின் இந்த எழுத்துக்கள் அப்படியான பல எண்ணங்களை எனக்குள் ஏற்படுத்தியது.

**

திதி செய்ய மனமில்லை
இன்னும் வாழ்கிறாள்
மனதில் அம்மா.

-என்று நான் குறுங்கவிதையாய் எழுதியதும் என் நெருங்கிய நண்பனின் அனுபவத்தைத் தான். அந்த வரிகளில் மூழ்கி.. என் தோள் தட்டாதவர்கள் குறைவு. அம்மா என்ற சொல்.. வெறும் சொல்லாக மட்டும் பார்க்கப்படுவதில்லை என்பதை திடமாக நம்புகின்ற நபர்களில் நானும் ஒருவன்.

அளவுக்கதிகமாய் நேசித்த கணவன் இறந்து போன.. அதே வீட்டில் தானும் இறக்கவேண்டும் என்ற அசட்டு வைராக்கியத்துடன் வாழும் கிழவிகளை நான் பார்த்திருக்கிறேன். பையன்களும், பிள்ளைகளும் சொந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு குடியேறியபின்னும், தனித்து.. தன் கடைசி நாட்களை அதே வீட்டில் எண்ணிக்கொண்டு வாழும் கிழவிகள் இங்கே நிறைய உண்டு.

ஆவி வந்த வீடு என்றெல்லாம் சொல்லபடுகின்ற வழக்கம் இன்றும் தென்மாவட்டங்களில் உண்டு.

சரி.. இது எல்லாம் சொந்த வீட்டுக்காரர்களுக்கு.., நீண்ட காலமாக வாடகை வீட்டில் வாழ்பவர்கள் நிலை..?! கிளைகள் முறிக்கப்பட்டு மொட்டையாய் நிற்கும் மரங்கள் மனக்கண்ணில் தோன்றி மறைகின்றன. வாடகை வீட்டினரை நினைக்கவே சங்கடமாக இருக்கிறது.

புலம் 'பெயர்க்கப்பட்டவர்'களின் நிலை... எழுத்துக்களினால் சொல்லிவிட முடியாத் துயரமது. நெஞ்சை அடைக்கும் அப்படியான பதிவு இது. மூஊஊஊஊஊத்த பதிவரான சந்திரமதியின்( அப்பாடா.. ம.க.ச-வை ஆரம்பிச்சாச்சு) எழுத்தின் வன்மையை இதில் உணரலாம்.

***

இன்னுமிருக்கு..
மேலும் வாசிக்க...

Monday, July 30, 2007

வந்துட்டோம்ல..!

வணக்கம் நண்பர்களே!

திட்டமிட்டபடி இந்த வாரத்தை ஒழுங்கமைவுடன் கொண்டு செல்லமுடியுமா.. என்பதும் சந்தேகமே! பட்டறைக்கான வேலைகள் கழுத்தை சுற்றி தோளில் கணக்கும் அனகொண்டா போல இறுக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த இடைவெளில் இப்படி அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்து விட்டுப் போகிறேன்.


நூறு பதிவுகளை தொட்டு விட்ட சமயம் பலரிடம் என் பதிவுகளில் பிடித்தவை(!) பற்றி கருத்து கேட்டிருந்தேன். பலர் பின்னாங்கால் பிடறியில் பட ஓடி விட்ட நிலையில்... சிலர் மட்டுமே துணிந்து பொய் சொல்ல வந்தார்கள். அவர்கள் சொன்ன கருத்து இங்கே!

அந்த சமயத்தில் விட்டுப் போய் தன் கருத்தை.. அவரசமாக பதிவு செய்தார் என் செல்ல மகள் ( நான் இவங்களுக்கு சித்தப்பு முறை)

கவிஞர்.தாஜ் இவரை பற்றிய தனி அறிமுகம் தேவை இருக்காது. பிரபலமானவர். ஆனந்த விகடன் நடத்திய ஒரு போட்டியில் சிறந்த கவிதைகளில் ஒன்றாக இவரது கவிதையும் தேர்வானது. காந்திvsபெரியார் என்ற இவரது பதிவு நல்ல பொக்கிசம். உண்மையை இணையத்தில் பதிவு செய்தமைக்கு இவரை பாராட்டலாம்.

கீற்று டாட் காம் தளத்தில் வந்து கொண்டிருக்கும் பெரியாரின் பேச்சுக்கள், தலையங்கம், கருத்துக்கள் இந்த பகுதியில் தான் சேமிக்கப்பட்டிருக்கிறது. பெரியாரின் எண்ணங்களை ஒருங்கு குறியில் பார்க்கவும், படிக்கவும் இந்த சுட்டி பயன்படலாம்.

என் பாசமிகு அண்ணன் ஆதவன் தீட்சன்யா-வின் படைப்புகளை ஒரே இடத்தில் காண இங்கு சொடுக்கவும். இவரைப் பற்றி நான் சொல்லுவதை விட இவரது படைப்புக்கள் சொல்லும் வாசித்துப் பாருங்க!

அடுத்த அண்ணான் அழகியபெரியவன் எழுத்துக்கள் தமிழகத்தில் தனித்த அடையாளம் கொண்டவை. அவற்றை இணையத்தில் சில வாசிக்க கிடைக்கிறது. அதன் தொகுப்பு இங்கே. இவறைப்பற்றியும் தனி அறிமுகம் தேவை இல்லை. படைப்புகள் பறைசாற்றும் இவரைப் பற்றி!

மீண்டும் அடுத்த பதிவில்..
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது