விடைபெறுகிறேன்: வணக்கம்!
➦➠ by:
ரஞ்ஜனி நாராயணன்
இன்றுடன் 7 நாட்கள் முடிவடைந்து விட்டன. இப்போது நினைத்துப்
பார்த்தால் வேகமாகப் போய்விட்டது போலத் தோன்றுகிறது.
அறிமுகம் என்று சொல்வதைவிட இந்த 7 நாட்களும் நான்
வலைச்சரத்திற்காக தேடித்தேடி (பி)படித்ததை உங்களுடன் பகிர்ந்து
கொண்டேன் என்பதே சரியாக இருக்கும். தெரிந்த முகங்களுடன், தெரிந்து
கொண்டதை பகிர்ந்து கொண்டேன்.
********************************************************************************************
வலைபதிவுலகத்தில் மற்ற இணையதளங்களை அறிமுகம் செய்ய
என்றே ஒருவர் இருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்தவர்தான் திரு
சைபர்சிம்மன். 'இணைய உலகிற்கான உங்கள் சாளரம் எனது
வலைத்தளம்' என்கிறார் திரு சிம்மன்.
‘எமக்கு தொழில் கவிதை' என்னும் பாரதியின் வாக்கை போல நான்
எழுத்தையும் வலைபதிவையும் கருதி வருகிறேன். இணைய உலகில்
கண்டு வியக்கும், ரசிக்கும் விஷயங்களையும் மற்றவர்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும் என கருதும் இணையதளங்களையும் இன்னும்
பிற இணைய போக்குகள் குறித்தும் எழுதி வருகிறேன்.’ என்று சொல்லும்
இவரது தளத்தை வேறு ஒரு இணையதளம் அறிமுகப் படுத்திப்
இருக்கிறது!
திருநெல்வேலிக்கே அல்வா! திருப்பதிக்கே லட்டு!
********************************************************************************************
தன்னைப் பற்றி சாக்பீஸ் வலைத்தளம் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறது.
போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கும், மாணவர்களுக்கும்
பயன்படக்கூடிய நிறைய விஷயங்கள் இதில் கிடைக்கின்றன.
********************************************************************************************
நம் எல்லோருக்குமே நம் மாணவப் பருவம் என்பது பசுமையான
நினைவுகளைத் தரும். அப்போதிருந்த பசுமை இப்போது இருக்கிறதா?
‘நினைத்து பாருங்கள்...நாம் சிறுவயதில் பஸ்சில் செல்லும்போது
கூடவே
ஓடி வரும் மரங்களை. பஸ் பயணத்தில் நமக்கு வெயில்
தெரியா வண்ணம் காற்று வருவதற்கு அந்த மரங்கள் காரணம்’ என்கிறார்
திரு சுரேஷ்குமார்.
நெடுஞ்சாலையோர புளிய
மரம்...! பற்றி இவர் சொல்வதைப் படியுங்கள்:
‘மரங்களில் புளியங்காய் அடித்து தின்னும் சிறுவர்கள்
எல்லாம் இன்று
ஹோட்டல்களில் டேபிள் துடைக்க சென்று விட்டனர். ஆயா
மரத்தினடியில் சுட்ட வடைகள் எல்லாம் இன்று மரமே இல்லாததால்
காகம் கொத்த வழியில்லாமல் போய் விட்டது, சிட்டு குருவிகள் எல்லாம்
இன்று லேகிய டப்பாக்களில் மட்டுமே பறக்கின்றன...’
.முக்கியமாய் என் மகனோடு காரில் செல்கையில் எந்த மரமும் கூட ஓடி
வருவதில்லை. அவனும் ஏன் மரங்கள் பின்னோக்கி ஓடுகின்றன என்று
கேட்பதுமில்லை ?!!?’
ஒரு கூடுதல் செய்தி: இவரும் எங்களூரில் கிடைக்கும் தோசை பற்றி
எழுதியிருக்கிறார் படியுங்கள்! இந்த தோசை எங்கே கிடைக்கும் என்று
வீதி வரைபடத்துடன் விலை என்ன என்றும் எழுதி இருக்கிறார்.
(வலைச்சர வாரத்தை தோசையில் ஆரம்பித்து, தோசையில் முடித்த
பெருமை என்னையே சேரும்!)
********************************************************************************************
விடியாத இரவுகள், தொலைந்து போன கனவுகள் என்று எல்லாக்
கவிதைகளும் கிடைக்காததைப் பற்றிப் பேசுகின்றனவே, எத்தனையோ
இரவுகள் விடிந்திருக்கின்றனவே, நாம் காணாத பல கனவுகள்
பலித்திருக்கின்றனவே அவை பற்றி ஏன் யாரும் கவிதை
எழுதுவதில்லை என்று இந்த ஒரு வாரமாக என்னுள் ஒரு கேள்வி
எழுந்து கொண்டே இருக்கிறது. கவிதைக்கு அழகு சோகமோ?
கவிதை சோகமாக இருந்தால் ரசித்துவிட்டு மறந்தும் போகலாம்.
ஆனால் வாழ்க்கையை வாழ வேண்டிய வயதில் சோகமே
வாழ்க்கையானால்?
‘எனது 9-ஆம் வயதில் இந்நோயின் பாதிப்பு
என்னை கொஞ்சம்,கொஞ்சமாக
ஆக்கிரமித்து கடந்த 10 வருடங்களுக்கு மேல் என்னை வீட்டிலேயே
முடக்கி போட்டு வைத்திருக்கிறது.' என்கிறார் மாற்றுத் திறனாளி.
‘இவ்வலைப்பூவில் நான் என் வாழ்வில் கண்ட நிகழ்வுகளையும், உணர்ந்த
வலிகளையும் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.ரொம்ப சோகமா இருக்கும்னு
பயப்படாதீங்க. அவ்வப்போது நகைச்சுவை பதிவுகளும், தொழில்நுட்ப
பதிவுகளும் இடம் பெறும் (பேசிக்கலி ஐ எம் எ காமெடி பெர்சன்) :)’
என்கிறார் இவர்.
நாட்டின் 5 முட்டாள்கள் முகநூலில் படித்த இந்த விஷயத்தை பகிர்ந்து
கொள்வதன் மூலம் தான் நகைச்சுவை உணர்வு உள்ளவன் என்று
நிரூபித்து இருக்கிறார் இவர்.
********************************************************************************************
இவரைப் பற்றிப் படித்த பின் மனிதனின் உண்மையான
ஊனம் எது? என்று
நமது பின்னூட்டப் புயல் எழுதியதன் உண்மையான பொருள் புரிகிறது.
இவரைப் பற்றி தெரியாதவர்கள் வலைபதிவுலகில் இல்லவே இல்லை
என்று அடித்துச் சொல்லலாம். அத்தனை வலைபதிவர்களும்
சரியாச் சொன்னீங்க! என்பார்கள்.
வலைப்பதிவுலகில் இவரது எழுத்துக்கள், பின்னூட்டங்கள் மட்டுமல்ல
இவரது மீசையும் கூட பிரபலம்!
திருமதி மஞ்சு பாஷிணியின் இவரைப்பற்றிய அறிமுகத்திற்கு திரு
அப்பாதுரை எழுதிய பின்னூட்டம் காண்க!
‘தனபாலனுடைய இன்னொரு முக்கியமான feature ஐச் சொல்லாம
விட்டீங்களே? என்னமா மீசை வளர்த்திருக்கிறார்! . இதைவிட
நேர்த்தியான மீசையை நான் பார்த்ததே இல்லை. அவரை நேரில்
சந்திக்கும் பொழுது அசல் தானா என்று மென்மையாக இழுத்துப்
பார்த்துவிட வேண்டும் என்று தோன்றவில்லை? பதிவுலகில் இப்படி
யாராவது மீசை வைத்திருக்கிறார்களா?’
மிகவும் அருமையான மனிதர். இவரை குறிப்பிடாவிட்டால் இந்த வார
வலைச்சரம் முழுமை பெறாது.
********************************************************************************************
அருமையான மனிதரைப் பற்றிப் பேசியவுடன் அருமையான தன்பாட்டியைப் பற்றி பேச வருகிறார் திருமதி கீதமஞ்சரி
‘என் அம்மாச்சியை நினைத்தாலே நெஞ்சம் நிறைவது, வெற்றிலைச்
சிவப்பேறிய பற்கள் தெரிய வாய் விட்டும் மனம் விட்டும் அவர் சிரிக்கும்
சிரிப்புதான். இப்படியும் ஒரு பெண்மணியா என வியக்க வைக்கும்
அவரது வாழ்க்கை. பிள்ளைகள் தலையெடுக்கு முன்னேயே,
கணவனையிழந்து கைம்பெண்ணாய் நின்றபோதும், மன உறுதியை
இழக்காது போராடி தன் மக்களைத் தடம் மாறாமல் வளர்த்து, தரணியில்
தலை நிமிர்ந்து வாழச் செய்தவர் அவர்.
உங்கள் கட்டுரை எனக்கு என் பாட்டியை நினைவு
படுத்தியது.
********************************************************************************************
-என்னவனுக்கு என்கிறார் திருமதி பத்மா.
‘இளமையான பின் காலைப் பொழுதில் நமக்கு மிகப்பிடித்த வயலின்
இசை பின்னணியில் முழங்க நமக்கு நாம் தேர்ந்தெடுத்த சிறு உணவு
உண்போம்.’
‘பொடிநடை நடந்து நம் வயல் ஒட்டிய ஆற்றினூடே பாடிக்கொண்டே
நீரில் திளைப்போம்.’
‘பின் நீ காய் நறுக்க நான் சோறு வைக்க அன்பை கலந்து அங்கே
சமைக்கும் நேரம் கொஞ்சம் கவிதையும் வாசித்து பார்ப்போம்.’
என்று கவிதையில் கடிதம் வடிக்கிறார் திருமதி பத்மா.
********************************************************************************************
மேலே இருப்பது. ஆனால் கீழே இருக்கும் கடிதம் நிஜத்தைச்
சொல்லுகிறது.
ஆசையில் ஓர்
கடிதம்...,
'ஹோம் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ, நீ என் பென்சிலை
பிடிச்சுக்கிட்டு “ங்கா”ன்னு சொன்னே. அது எனக்கு ”அக்கா”ன்னு கேட்டுச்சு.
அப்போதாண்டா செல்லம் உன்மேல் எனக்கு பாசம் வர ஆரம்பிச்சது.
‘என்னதான் நாம சண்டை போட்டு வீட்டை அதகளம் பண்ணி.., அடி
வாங்குனாலும் அடுத்த பிறவியிலயும் நீயே எனக்கு தங்கச்சியா
பொறக்கனும். உன் இம்சைகளை நான் தாங்கனும்ன்னு சாமிக்கிட்ட
வேண்டிக்குறேன்.’
‘ஆனா, உன் இம்சைலாம் நான் எப்படி அக்காவா தாங்குறேன்னு ஒரே ஒரு
பிறவியில் நீ எனக்கு அக்காவா பிறந்து என் இம்சைகளை நீ தாங்கனும்.’
இப்படிக்கு தூயா
********************************************************************************************
ஒருவாரமாக பலரின் பதிவுகளை படித்துக் கொண்டு வருகிறேன். ஒரு
பதிவரின் மன நிலை எப்படி இருக்கும் என்று காட்டுகிறார் திருமதி
ஸ்ரவாணி
‘கருத்தை ஆவலாய் எதிர்நோக்கையில்
முதலில் முந்திக் கொண்டு வந்த
உங்கள் சொந்த அனுபவமா
என்ற கத்திரிக் கேள்வி
நம் நொந்த அனுபவமானது’
எல்லாப் பெண்களுக்கும் இந்த ‘நொந்த’ அனுபவம் உண்டு!
********************************************************************************************
கொண்டார்.
இந்த முறை பெங்களூரில் மழை ரொம்பவும் கம்மி என்பது
வருத்தப்பட
வேண்டிய நிஜம். என்ன செய்வது?
‘மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்
என்று மழைக் கடவுளை வேண்டிக்கொண்டு
மறுபடியும் வா என்று மழையையே கேட்டுக்
கொள்ள வேண்டியதுதான்'
என்கிறார் பாலச்சந்தர். இவரது
மழை கவிதை இதோ:
சொட்ட சொட்ட பெய்தாலும்
சரம் சரமாய் பெய்தாலும்
சின்ன சின்ன உயிருக்கும்
உலகாளும் உயிருக்கும்
உயிர் துளி நீ தானே
.......................................
......................................
மழையே மனம் குளிர
மறுபடி ஒரு முறை வருவாயா!
இவரது இன்னொரு கவிதை:
இந்நாளில் பாரதி
........................................
.........................................
சுதந்திர இந்தியாவை
வளம் பெற்ற இந்தியாவை
காணவந்த கருவிழியில்
ஊழல் பிசாசையும்
ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளையும்
ஒற்றுமை இல்லா மக்களையும்
காண்கையில், விழி இருந்தும் பயனில்லை பாரத மாதா!
இன்றைய இந்தியாவின் அவலத்தை பாரதியின் பார்வையில் தனது
கவிதையில் வடிக்கிறார் இவர்.
********************************************************************************************
விடை பெறும் நேரம் என்பது எப்போதுமே கொஞ்சம் வேதனையான


