வலைப்பதிவுகளில் அடிக்கடி அண்டார்டிகா ஆவி, அமிஞ்சக்கரை ஆவி , பட்டிக்காட்டு ஆவி, படிச்ச ஆவி என கும்மி பின்னூட்டங்களைப் பாத்திருப்பீங்க..அந்த ஆவி அனானிங்க எல்லாம் ஒரு க்ருப்பாதான் திரியிறாங்க
அதுங்களுக்கு(அவங்களுக்கு?!!!)
தலைவர் --- >
ஆவி அண்ணாச்சிபொது செயலாளர் --->
ஆவி அம்மணி உண்மையில் பேய், அமனூஷ்ய விசயங்கள் இருக்கிறதா என்பதைப் பற்றி தமிழச்சி விரிவாகவே இரு பதிவுகள் இட்டு உள்ளார்.
பாகம் 1 பாகம் 2 பாரா-நார்மல் விசயங்களைப் பற்றிய ஒரு
ஆங்கில வலைப்பதிவு
மேலும் வாசிக்க...
இந்த வாரம் வலைச்சரம் அமைக்க வாய்ப்பளித்த பொறுப்பாசிரியருக்கு நன்றிகள்.
வலைச்சரத்தில் முதல் பதிவாக, சில சுவாரசியமான பதிவுகளின் சுட்டிகளின் தொகுப்பு இதோ
தமிழ்வலையுலகுக்கு புதியவரான
பூர்ணிமாவின் வலைப்பதிவினில் உலவிக் கொண்டிருக்கும்பொழுது அவரின்
இசைப்பதிவுகளில் அவரின் குரலில் பாடல்கள் சிலவற்றை பதிந்துள்ளார். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த
மாயாவி படத்திலிருந்து
"கடவுள் தந்த அழகிய வாழ்வு, உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடி வாழ்த்துப் பாடு" என்ற பாடல் இதோநண்பர்களிடையே ஏற்படும் இட ஒதுக்கீடு பற்றிய வாதப் பிரதிவாதங்களின் போதும், என் நண்பர்களுக்குப் நான் பரிந்துரைக்கும் ஓசை செல்லாவின்
இட ஒதுக்கீடு பற்றிய ஆங்கில வலைத்தளம்.
நான் வலைப்பதிந்த ஆரம்பக் காலங்களில், படித்துவிட்டு என்ன ஒரு அருமையான கதை என்று வியந்த சிறுகதை
ஆயிரத்தி முன்னூறு ரூபாய் ஒரு சிறுகதைக்கான இலக்கணத்தை இக்கதையில் பார்க்கலாம். இந்தக் கதையை எழுதிய நண்பரும் சக வலைப்பதிவருமான முத்து(தமிழினி) பிற்பாடு கதைகள் ஏதும் அதிகம் எழுதுவதில்லை. முத்து(தமிழினி) யிடம் இந்த வலைச்சரத்தின் வாயிலாக ஒரு விண்ணப்பம், கதைப் பக்கம் மீண்டு(ம்) வாங்க.
என் பேய்க்கதைகளுக்கு மிகப்பெரும் இன்ஷ்பிரேஷன் நாமக்கல் சிபியின் இந்த
அமானுஷ்ய வாசகி தொடர்கதை இதைப்படித்த பிறகுதான் எனது பயங்களின் வடிகாலாக பேய்கதைகளை எழுத ஆரம்பித்தேன்.
எப்படித்தான் பணிச்சூழலிலும் நேரம் கிடைக்கிறதோ என்று நான் அடிக்கடி வியப்பவர்கள், மா.சிவக்குமாரும், டி.பி.ஆர் ஜோசஃப் சாரும். மா.சிவக்குமாரின் பொருளாதரக் கட்டுரைகளின் தொகுப்பு
இங்கே சிவா வின் மற்ற துறை சார்ந்த பதிவுகளும் போற்றுதலுக்குரியவையே
டி.பி.ஆர் ஜோசஃபின்
திரும்பிப்பார்க்கிறேன் ஒரு அருமையான அனுபவத்தொடர்கட்டுரை புத்தகமாக வெளிவரும்போது நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயம் இல்லை.
தொடரும்.
மேலும் வாசிக்க...
இந்த இரண்டு வருடத்தில் வலைப்பதிவில் நான் நாற்பது கதைகளுக்கு மேல் எழுதியிருந்தாலும் வலைச்சரத்தில் கட்டுவதற்கு சில கதைகள் மட்டுமே தேறுகிறது.
காதல் கதைகள், அமானுஷ்ய கதைகள் எழுதிக் கொண்டிருந்தக் காலத்தில், பொழுதுபோக்கு அம்சம் மட்டும் இருப்பது கதை இல்லை, அதை தாண்டி ஏதாவது ஒரு கருத்து இருக்கவேண்டும் என்று நண்பர்கள் கடிந்து கொண்ட பிறகு எழுதிய கதை
நானும் கடவுள்களும் நண்பர்களால் ஓரளவுக்குப் பாராட்டைப் பெற்றக் கதை இது என்று சொல்லலாம்.
அங்கீகாரம், இது மட்டும் இல்லை என்றால் மனிதன் எந்த புது முயற்சியும் எடுக்காமல் அப்படியே ஆதி மனிதனாகவே இருந்திருப்பான். இணைய இதழான பூங்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிகப்பட்ட கதை
ஒரு ஞாயிற்றுக்கிழமை சிக்ஸ்த் சென்ஸ் பாதிப்பில் அமைந்துள்ளது என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் பலக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் பாராட்டப்பட்டது.
தேன்கூடு போட்டியில் வாசகர் வாக்குகளில் இரண்டாமிடம் பெற்ற
மரணம் மாபெரும் விடுதலை என்றக் கதை.
பரிசு கிடைக்காவிட்டாலும் கூட அதிக பேரினால் பார்வையிடப்பட்ட என்னுடைய கதை இதுதான்.
Agnostic மனப்பான்மையில் எழுதப்பட்ட
வெங்கடாஜலபதிக் கோவில் என்ற இந்தக் கதை நான் எழுதியவைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதனுடைய sequel ஆக எழுதப்பட்டக்கதை
கோவில் பிரசாதம் தொடரும்
மேலும் வாசிக்க...