எங்கள் சரவெடி 1
வலைச்சரத்தில் சரம் தொடுக்க, சாரம் கொடுக்க, எங்களுக்கு அழைப்பு விடுத்த 'அன்பின் சீனா' அவர்களுக்கு முதற்கண் எங்கள் நன்றி. அவரிடம் மின்னஞ்சலிலும், மெயிலிலும், அலைபேசியிலும் எங்கள் ஐயங்களைக் கூறினோம்; எங்கள் நிலை பற்றி எடுத்துக் கூறினோம். ஒன்றே ஒன்று கூற சுத்தமாக மறந்துவிட்டோம். அது, நாங்கள் யாரும் முறைப்படி தமிழ் கற்றவர்கள் இல்லை என்பது. எங்கள் தமிழை, அவரும், வலைச்சர வாசகர் பெருமக்களும் மன்னித்தருள வேண்டிக் கொள்கின்றோம்.
எங்கள் ப்ளாக் வலைப்பதிவை, வலைச்சரத்தில் அறிமுகம் செய்த முந்தைய ஆசிரியர்கள்( சிவஹரி, ம ஞ்சுபாஷினி, அப்பாதுரை, ராமலக் ஷ்மி, மிடில்கிளாஸ் மாதவி, ஆர் வி எஸ்,மோகன்ஜி, இராஜராஜேஸ்வரி, ஜல ீலாகமால், அப்பாவி தங்கமணி, மாதவன்,வானம்பாடிகள், மற்றும் பலருக்கு - யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் எங்களுக்குச் சொல்லுங்க. இதில் யாராவது எங்களை அறிமுகப்படுத்தாதவர்கள் என்றால், வாய்ப்புக் கிடைக்கும்போது அறிமுகப்படுத்திடுங்க!) அனைவருக்கும் எங்கள் நன்றி.
எங்கள் ப்ளாக் ஆரம்பிக்கப்பட்டது, இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு, ஜூன் மாதம் இருபத்தெட்டாம் தேதி.
'புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது போல' என்று சொல்லுவார்கள். நாங்க இட்லி(வடை)யைப் பார்த்து வெள்ளாவி பிடித்துக் கொண்டோம் என்று சொல்லலாம்.
கூட்டுறவே நாட்டுயர்வு என்று நாம் எல்லோரும் கேள்விப் பட்டிருக்கின்றோம். கிராஸ் ஃபங்க்ஸனல் டீம் (தமிழில் குறுக்குவேலைக் குழு?), டீம் வொர்க் (குழுப் பணி) பற்றியும் பல கார்பொரேட் அலுவலகங்களில் போதனை வகுப்புகள் நடத்துவார்கள். எங்கள் ப்ளாக் அந்த வகையில் டீம் வொர்க் முயற்சி. பதிவு எழுதுபவர் ஒருவர், படம் இணைப்பவர் ஒருவர், மெருகு ஏற்றுபவர் மற்றவர் - பதிவை வெளியிடுபவர் ஒருவர் என்று சில சமயங்களில் எங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொண்டது உண்டு.
எங்கள் ஆசிரியர்கள் எல்லோருமே பதின்ம வயதில் கையெழுத்துப் பத்திரிகை, துண்டுப் பிரசுரங்கள் எழுதி (அல்லது சில காகித கைவேலைகள் / மெழுகு பொம்மைகள் செய்து) அவைகளை தெருப்பையன்கள் வீட்டில் கொடுத்து, அவர்கள் சந்தோசப்படுவதைக் கண்டு ஆனந்தித்தவர்கள். எல்லாமே இலவச சேவைகள். அதே மனப்பான்மை இப்பொழுதும் தொடர்கின்றது.
எங்கள் ப்ளாக் மூலமாக, பதிவு படிக்கின்ற வாசகர்களுக்கு, சில பயனுள்ள சில விவரங்களை(யாவது!) அளிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசிரியர்களின் குறிக்கோள்.
படைப்பாற்றல் பற்றிய எங்கள் பதிவுகள் சிறந்த உதாரணங்கள். அவைகளை இனிப்பு தடவிய மருந்தாக கொடுக்க முயற்சி செய்து வருகின்றோம்.
சுவாரஸ்யம்தான் நாங்கள் தடவுகின்ற இனிப்பு. சில (பல?) பாப் கார்ன் பதிவுகளும் அவ்வப்போது வெளியாகும்.
பதிவுலகில் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள்தாம் அதிக பட்ச தட்டல்கள் பெறுகின்றன என்பது, பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. நாங்களும் சினிமா சம்பந்தப்பட்ட விவரங்களை அவ்வப்போது ஊறுகாயாக பதிவிடுவது உண்டு. ஆனால் ஊறுகாயையே உணவாகப் படைப்பதில்லை.
எங்கள் ப்ளாக் வலைப்பதிவில் நாங்கள் அரசியலும் பதிவதில்லை. சில கிண்டல்கள் (ஒரு வரி / இரண்டு வரிகள்) அரசியல் தலைகளைப் பற்றி எப்பொழுதாவது இடம் பெறுவது உண்டு. அதில் ஒருதலைப் பட்சமாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் யாரையாவது தாக்கியோ எழுத மாட்டோம்.
ஒருவாரத்தில் மூன்று முதல் ஆறு பதிவுகள் வரை இடம் பெறுமாறு பார்த்துக் கொள்வோம்.
எங்கள் ப்ளாக் பதிவுகள் நேற்று வரை : 1101.
எங்கள் பதிவுகளில் அதிகம் பேர் பார்த்து, படித்து ரசித்த ஐந்து பதிவுகள், இங்கே:
அதிகம் கருத்துரைகள் பெற்ற பதிவுகளில் சில :
வலைப்பூக்கள் படிக்கின்ற பல வாசகர்களுக்கு, பலப்பல சிந்தனைகள், யோசனைகள் தோன்றக்கூடும். அவற்றை எல்லாம் கொட்ட வழி தெரியாமல், அல்லது வலைப்பூ தொடங்க தெரியாமல், அல்லது அதிக பட்ச வாசகர்களிடம் அதை கொண்டு செல்லத் தெரியாமல் தவிக்கக் கூடும். எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு, இந்தக் குறை இல்லாமல் இருப்பதற்காக, நாங்கள் தொடங்கியது, 'நம்ம ஏரியா !' வலைப்பூ.
எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் இரண்டு (கௌதமன்) பேர்கள் அவர்கள் பெயரிலேயே ஒரு வலைப்பூ (காசு சோபனா) (இது ஆங்கில வலைப்பூ) வைத்திருக்கின்றார்கள். அவைகளை, அவர்களே மறந்துவிட்டார்கள். நாம் இங்கே நினைவுறுத்த வேண்டுமா !!
வலைச்சரம் பக்கங்களை நெடுநாட்களாக ரசித்து வருகிறோம். எங்களையும் பலர் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் பலரை நாங்களும் தொடர்ந்து வாசிக்கிறோம்.
நாங்கள் அறிமுகப்படுத்த இனியும் யாரும் இல்லை என்று நினைக்கிறோம். அறிமுகப்படுத்துகிறோம் என்று சொல்வதை விட நாங்கள் வாசிப்பவர்களை, ரசிப்பவைகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
நிறைய பக்கங்களைச் சொல்லும்போது அவற்றை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டு செல்பவர்களே அதிகம். அவர்கள் இதுவரை பார்க்காத, தெரியாத பக்கங்கள் இருந்தால் ஒருவேளை பார்க்கலாம். அதற்கும் 25% வாய்ப்பே என்றும் தோன்றுகிறது.
நாம் ரசித்தவற்றை மற்றவர்களும் ரசித்திருக்கிறார்களா என்பதும், நம் பக்கம் சொல்லப்பட்டு இருக்கிறதா என்பதுமே இங்கு கவனிக்கப் படுபவை என்பதைப் பார்த்திருக்கிறோம்.
நாங்கள் ரசித்த, ருசித்த படிக்கும் பதிவுகளின் விவரம் இனிவரும் நாட்களில் பகிர்ந்துகொள்கிறோம்!
மீண்டும் நாளை சந்திப்போம்.



