அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பலா பட்டறை ஷங்கர், தான் ஏற்ற பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் கடந்த 7 நாட்களில் 7 இடுகைகள் இட்டு ஏறத்தாழ 240 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவர் அறிமுகப் படுத்திய பதிவர்களோ பல்வேறு தலைப்புகளில் அருமையான இடுகைகள் அளிப்பவர்கள். ஏறத்தாழ 35 இடுகைகள் அறிமுகப் படுத்தி இருக்கிறார். அததனையும் முத்தான இடுகைகள் - தேடிப் பிடித்துப் போடப்பட்ட இடுகைகள்.
வாரத்தின் இறுதி நாட்களில், இவரது தந்தையார் உடல் நலம் குன்றியது சற்றே இவரது பணியினை முடக்கியது. இருப்பினும் அயராது கடமையைச் செவ்வனே நிறைவேற்றி விடை பெறுகிறார். இவரது தந்தை பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அருமை நண்பர் பலா பட்டறை ஷங்கர் அவர்களை வாழத்தி வழி அனுப்புவதில் மிகப் பெருமை அடைகிறோம்
நல்வாழ்த்துகள் ஷங்கர்
அடுத்து நாளி துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் பின்னோக்கி. இவர் திருச்சிக்கு அருகில் உள்ள கரூரில் பிறந்தவர். 35 வயதான இளைஞர். தந்தையின் அரசுப் பணியின் இட மாற்றங்களீனால் - பல்வேறு ஊர்களில் படித்தவர். கணினிப் பொறியியலாளர். தற்சமயம் சென்னையில் பணி புரிகிறார். மணமாகி ஆறு வயதில் உள்ள ஒரு மகனுக்குத் தந்தை. 122 பதிவர்கள் பின் தொடர 112 இடுகைகள் இட்டிருக்கிறார். பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்திருக்கிறார்.
நண்பர் பின்னோக்கியினை வருக ! வருக ! இடுகைகளை அறிமுகப் படுத்துக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் பின்னோக்கி
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...
ஆதரவிற்கும், அன்பிற்கும் மிக்க நன்றி நண்பர்களே. வலைச்சரம் என்பது ஒரு மதிப்பு மிக்க இடம். என்னைப் போல் நிறைய பதிவர்கள் மோதிர விரல்களால் குட்டுப்பட்ட இடம். நம்மையும் ஒருவர் கவனித்து, படித்து இதுபோன்ற ஒரு தளத்தில் அறிமுகப் படுத்துவது என்பது புதியதாய் எழுத வருபவர்களுக்கு மிகவும் உற்சாகம் தரும்.
என்னுடைய நிறைய யோசிப்புகள் மற்றும் புதிய வலைப்பூக்கள் அறிமுகம் என எல்லாமே என் தந்தையின் திடீர் சுகவீனத்தால் பாதிக்கப் பட்டது. புரிந்துகொண்ட சீனா அய்யாவிற்கும் நண்பர்களாகிய உங்களுக்கும் நன்றி.
என்னுடைய வலைச்சர இடுகைகளுக்கான பின்னூட்டம் அனைத்திற்கும் தனித் தனியே நன்றி சொல்ல விரும்பினேன். நேரமில்லை. நண்பர்கள் மன்னிக்கவும். பின்னூட்டமிட்டு, படித்து, ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மேலும் அறிமுகப் படுத்திய பதிவர்களின் பக்கங்கள் சென்று படித்து அவர்களுக்கும் ஆதரவுதருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அடுத்து வரும் ஆசிரியர் வழக்கம் போலவே சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு வாழ்த்து கூறி இப்பொழுதைக்கு வலைச்சரத்திலிருந்து விடை பெறுகிறேன்.
நன்றி.
வணக்கம்.
அன்புடன்
ஷங்கர்..
:-)
.
மேலும் வாசிக்க...
இயற்கை என்பது வாழ்தலின் ஆதார ஸ்ருதி. அதனை அழிப்பதற்கு நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால் எந்தக் கவலையுமின்றி முழுமூச்சாக அதை அழித்துக் கொண்டு இருக்கிறோம்.
ஒவ்வொரு கிராமத்திலும் 5 எக்கர் அளவிற்கு குறிப்பிட்ட மரங்கள் நடுவதின் மூலம் நல்ல மழையும், நீர் பிடிப்பும், சிறந்த மண் வளமும் கிடைக்கப் பெறலாம் என்பது இயற்கை விவசாய ஆர்வலர் திரு, நாராயணன் அவர்களின் கருத்து. தேவையான மழைப் பொழிவு என்பது பல்லுயிர் பெருக்கத்துக்கு மிகவும் அவசியம். அரசாங்கம் மனது வைத்தால் போதும். மழை நீர் சேகரிப்பு போன்று இதையும் கட்டாயமாக்கி கண்காணித்தால் தண்ணீருக்காக யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. வெறுமே கன்றுகள் நட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து செய்திகளில் வலம் வருவதை விடுத்து ஏதாச்சும் செய்தால் வருங்காலம் பிழைக்கும்.
வீட்டிலிலொரு சிறு தோட்டம் என்பது நகர்புரங்களில் சாத்தியமாக வேண்டிய கட்டாயம் வெகு விரைவில் வரும் என்றே தோன்றுகிறது. காய்கறி உணவுகளில் ரசாயண விஷங்கள் கலப்பு என்பது சர்வ சாதாரணமாய் நடக்கிறது. காய்கறிகள் விளையும் இடங்கள் தொலைவாய் போய்விட்டதும் ஒரு காரணம். விளை நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாய் ஆவதும் ஒரு காரணம்.
இயற்கை காதலர்கள் பற்றியே இந்த இடுகை. இவர்கள் ஏற்கனவே அறிமுகப் படுத்தப் பட்டவர்களாக இருக்கலாம். ஆனாலும் எல்லாரும் இவர்களைப் படிக்கவேண்டும், உள்ளுக்குள் விழிப்புணர்வும், இயற்கை பற்றிய சிந்தனையும் ஊறவேண்டும் என்பதே நோக்கம்.
மண். மரம், மழை, மனிதன் என்ற வலைப்பூவில் எழுதும்
திரு.வின்செண்ட் இயற்கை மேல் தீராத பற்று கொண்டவர். மாடியில் கீரை வளர்ப்பு பற்றிய இந்த
இடுகைகள் ஆர்வமிருந்தால், முயற்சி இருந்தால் எதுவும் சாத்தியம் என்பது நமக்கு உணர்த்துபவை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதே போன்று மூலிகைகள் பற்றி தொடர்ந்து பல அறிய தகவல்களை படங்களுடன் எழுதிவரும்
திரு.கே.பி.குப்புசாமி அவர்களின்
மூலிகைவளம் தளமும் மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மின்சாரம் தயாரிப்பு / உபயோகம் என்பது சூரிய சக்தி மூலமாக கிடைக்கப்பெறின் மக்களுக்கும் அரசுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனோ இதை ஒரு பொருட்டாகவே அரசாங்கம் மதிக்கவில்லை என்பது வேதனை தரும் செய்தி. சூரியஒளியில் மின்சாரம் தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப இடுகை
Fuel cell எரிமக் கலன் என்ற பெயரில்
திரு எஸ்.ராமனாதன் அவர்களால்
இந்த இடுகையில் எழுதப்பட்டுள்ளது. வாசித்து சூரிய ஒளி பயன்பாடு பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கார்பன் சுவடுகள் பிரகாஷ் என்கிற சாமக்கோடங்கியின் ஒரு அருமையான தொடர். நம்மை அறியாமலே நாம் தின வாழ்வின் செயல்கள் எந்த அளவிற்கு இந்த பூமியை சேதப்படுத்துகிறது என்பதை சிறப்பாகச் சொல்லி இருப்பார். இயற்கை மீது தீராத காதல் கொண்ட இந்த இளைஞரின் பக்கத்தில் சமூக அக்கறைப் பதிவுகளும் நிறையவே காணக் கிடைக்கும்.
மீண்டும் சந்திப்போம்.
நன்றி நண்பர்களே.
அன்புடன்
ஷங்கர்..
குறிப்பு:-
என் தந்தையின் உடல் நலக் குறைவு காரணமாக அவருடன் இருக்கவேண்டியுள்ளதாலேயே இடுகைகள் தாமதமாகின்றன. போதாததற்கு இணைய இணைப்பும் படுத்துகிறது. ஆடி மாத அம்மன் உலாவிற்காக ஊர் விழாக்கோலம் பூணத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆகவே மின்சாரத் தடை. எண்ணியபடி இடுகைகள் கோர்க்க முடியவில்லை. ஆயினும் என்னால் முடிந்த அளவு பகிருகிறேன். குறைகள் இருப்பின் பொறுத்தருள்க நண்பர்களே.
தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி!
:))
.
மேலும் வாசிக்க...
ஆதிகாலத்தில் ஒரு தீயை உருவாக்க எத்தனை எத்தனை சிரமங்கள்?,
விலங்குகளிலிருந்தும்,
இருளிலிருந்தும்,
உணவுக்காகவும் அதனை அணையாமல் பாதுகாத்து என!! சரக்கென்று தீக்குச்சி கொண்டு உரசி தீ உருவாக்கும்போது சிக்கிமுக்கிக் கல் நினைவுக்கு வருமா என்ன?
ஆனாலும் கொஞ்சம் நின்று, நிதானித்து நம்மைப் பார்ப்பது என்பது மிகவும் ரசனையான ஒன்று என்பதை அறிவீர்களா? இரவு வானில் மெல்ல நட்சத்திரங்களூடே ஒரு பொழுது கழித்து எத்துனை நாட்களாயிற்று?
ஒரு குவளைத் தண்ணீர் என்றாவது மெதுவாய் ருசித்து அருந்தி இருக்கிறீர்களா? எல்லாமும் அவசரம், தொலைக்காட்சி கண்டவாரே உணவு, சாப்பிடும்போதே வேறொன்றின் நினைவு, புற ஒலிகளில் தொடர்சியாய் என அலை பாயும் மனதும் அது நகர்த்தும் நாமும் என வாழ்வு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் சில நேரம் நம்மையும் அறியாது சூழலில் ஒன்றிணையும் தருணம் என்பது ரசிக்கக் கூடியதாய் உள்ளது.
அப்படி ரசித்தவர்களில் சிலர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மழை பற்றிய மோகத்தை கதையாகச் சொல்லிய மீனாட்சி நாச்சியாரின் மழை தெய்வம். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெட்டிக்காடு என்ற பெயர் கொண்ட வலைப்பூவில் எழுதும் திரு.ரவிச்சந்திரன் அவர்களின் தேடுகிறேன் என்ற இந்த இடுகையில் தனது கிராம வாழ்வின் ஏக்கத்தை / மாறுதலை படம் பிடிக்கிறார்.
அடுத்து மைத்துளிகள் என்ற வலைப்பூவில் எழுதும் மாதங்கி அவருடைய சமீபத்திய இடுகை ரப்பர் பந்து. இவர் ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதுகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அடுத்து
ஆதி மனிதன் அவர்களின்
Economy Class = மாட்டுவண்டி தன் முதல் விமானப் பயணத்தை சுவைபட எழுதி இருக்கிறார்..:)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆரண்ய நிவாஸ் ஆர்.ராம மூர்த்தி அவர்களின் மலரும் நினைவுகள் படியுங்கள் சுவாரஸ்யமான ஒரு கேரக்டர் இடுகை.:)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சில பணிகள் காரணமாக காலை பதிவேற்ற முடியவில்லை. மன்னியுங்கள் மக்களே.
மேலும் பல சுவாரஸ்யங்களோடு மீண்டும் சந்திக்கிறேன்,
அன்புடன் ,ஷங்கர். :).
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே,
எத்துனையோ விடைகிடைக்காத கேள்விகள் இருக்கின்றன இப்பூவுலகில் கிடைத்த விடையை தவறவிட்டு கேள்வியுடன் தேடி அலையும் நாம் ஆறறிவு
என்ற பட்டம் சுமப்பது என்பது என்ன ஒரு விந்தை? நாகரீகம், அறிவியல், வியாபாரம் என கடந்து வந்த பாதையை மறந்த / மறக்க அவசரப்படும்
ஒரே உயிரினம் நாமாகத்தான் இருக்க முடியும்.
அதில் முழு மூச்சாக இப்பொழுது நடந்துகொண்டிருப்பது விவசாய புறக்கணிப்பு அல்லது விளை நிலங்கள் அழிப்பு. அரிசியில் கிட்டத்தட்ட ஆயிரம் வகைகள் இங்கே இருந்திருக்கிறது. பாரம்பரிய விவசாயமுறைகள் அழித்து ரசாயண விஷங்கள் கொட்டி தாய்ப்பால் வரை கலந்த அரசியல்/விஞ்ஞானம்/ விவசாயிகளின் அறியாமை என நாம் இழந்த முக்கியமான ஒன்றின் சிறு துளி இது.
விதைகளே இல்லாத மலட்டு விவசாயத்திற்கான அரசியல் அழுத்தங்கள் மிக வேகமாகவே பரவிக்கொண்டிருக்கிறது. நிமிண்ட நிமிண்ட புழுவும் சீறுமே! இயற்கை விவசாயம் எனும் பாரம்பர்ய முறை இப்பொழுது களை கட்டுகிறது. பஞ்சகவ்யா, வேப்பம்புண்ணாக்கு, மண்புழு உரம், வேளாண்காடுகள், இயற்கை காக்கும் மரங்கள், ரசாயணம் புறக்கணித்து இயற்கை முறையில் அமோக விளைச்சல் என தொலைத்த விஷமில்லா விவசாயத்தினை தேடிக்கண்டுபிடித்து சிலாகித்துக் கொண்டிருக்கிறான் விவசாயி.
ஒரு நாளேனும் நாம் சாப்பிடும் சாப்பாடானது கடைகளில், இயந்திரங்களில் தயாரிக்கப்படுவதில்லை அது ஒரு விவசாயி என்றழைக்கப்படும் சக மனிதனால் இரவு பகல் பாராது கண்விழித்து பாதுகாத்து பிரசவிக்கப்படுகிறது என்று நாம் உணர்ந்தால் உணவென்பது நமக்கு நிச்சயம் இறைவனாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாழை இலையே பேப்பரில் வந்துவிட்டது ஒரு கொடுமைதான். போகட்டும் உணவிடும் விவசாயிக்கு நன்றி சொல்லி தலை வாழை இலை போட்டு எப்படி சாப்பிடவேண்டும் என்பதைத் தாமரை(ச்) செல்வன் சொல்லி இருப்பதை கொஞ்சம் இங்க பார்த்துடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அப்படியே விழியும் செவியும் ~ பிரபாவின் ‘அது போல வருமா?’ என்ற இடுகையும் கூடவே ஊடகங்களில் ’விலங்குகள்’ என்ற இடுகையில் மனித சுய நலத்தையும் கேள்விகேட்கிறார். கல் தடுக்கி விட்டது, டேபிள் இடித்து விட்டது என்று சொல்பவர்கள் படிக்கவேண்டிய இடுகை. :-)) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருநெல்வேலி மாநகராட்சியில் உணவு ஆய்வாளராகப் பணிபுரியும் திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்களின் வலைப்பூ உணவு உலகம் என்ற தலைப்பில் இருக்கிறது. இவரின் சமீபத்திய இடுகை கலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர் ஹாலிவுட்பாலாவின் ~ அக்கரைச் சீமையில் - Food, Inc என்ற இடுகைகள் படித்தால் மக்களின் உணவு மோகம் அல்லது பசியை பணமாக்க விரும்பும் மனித விலங்கின் தந்திரங்கள் உங்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம்!
சாப்பிடும் உணவில் விழிப்புடன் இருப்போம். இயற்கை சார்ந்தவைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம்.
விவசாயியை நிம்மதியாய் பயிரட வைக்கவில்லையெனில் ஜகம் அழியும்!!
மீண்டும் சந்திப்போம்!!
அன்புடன்,ஷங்கர்..
மேலும் வாசிக்க...