07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 6, 2010

வெயிலும் வாழ்வும் - வலைச்சர வெள்ளி..

இயற்கை என்பது வாழ்தலின் ஆதார ஸ்ருதி. அதனை அழிப்பதற்கு நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால் எந்தக் கவலையுமின்றி முழுமூச்சாக அதை அழித்துக் கொண்டு இருக்கிறோம்.

ஒவ்வொரு கிராமத்திலும் 5 எக்கர் அளவிற்கு குறிப்பிட்ட மரங்கள் நடுவதின் மூலம் நல்ல மழையும், நீர் பிடிப்பும், சிறந்த மண் வளமும் கிடைக்கப் பெறலாம் என்பது இயற்கை விவசாய ஆர்வலர் திரு, நாராயணன் அவர்களின் கருத்து. தேவையான மழைப் பொழிவு என்பது பல்லுயிர் பெருக்கத்துக்கு மிகவும் அவசியம். அரசாங்கம் மனது வைத்தால் போதும். மழை நீர் சேகரிப்பு போன்று இதையும் கட்டாயமாக்கி கண்காணித்தால் தண்ணீருக்காக யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. வெறுமே கன்றுகள் நட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து செய்திகளில் வலம் வருவதை விடுத்து ஏதாச்சும் செய்தால் வருங்காலம் பிழைக்கும்.

வீட்டிலிலொரு சிறு தோட்டம் என்பது நகர்புரங்களில் சாத்தியமாக வேண்டிய கட்டாயம் வெகு விரைவில் வரும் என்றே தோன்றுகிறது. காய்கறி உணவுகளில் ரசாயண விஷங்கள் கலப்பு என்பது சர்வ சாதாரணமாய் நடக்கிறது. காய்கறிகள் விளையும் இடங்கள் தொலைவாய் போய்விட்டதும் ஒரு காரணம். விளை நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாய் ஆவதும் ஒரு காரணம்.

இயற்கை காதலர்கள் பற்றியே இந்த இடுகை. இவர்கள் ஏற்கனவே அறிமுகப் படுத்தப் பட்டவர்களாக இருக்கலாம். ஆனாலும் எல்லாரும் இவர்களைப் படிக்கவேண்டும், உள்ளுக்குள் விழிப்புணர்வும், இயற்கை பற்றிய சிந்தனையும் ஊறவேண்டும் என்பதே நோக்கம்.




மண். மரம், மழை, மனிதன் என்ற வலைப்பூவில் எழுதும் திரு.வின்செண்ட் இயற்கை மேல் தீராத பற்று கொண்டவர். மாடியில் கீரை வளர்ப்பு பற்றிய இந்த இடுகைகள் ஆர்வமிருந்தால், முயற்சி இருந்தால் எதுவும் சாத்தியம் என்பது நமக்கு உணர்த்துபவை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதே போன்று மூலிகைகள் பற்றி தொடர்ந்து பல அறிய தகவல்களை படங்களுடன் எழுதிவரும் திரு.கே.பி.குப்புசாமி அவர்களின் மூலிகைவளம் தளமும் மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மின்சாரம் தயாரிப்பு / உபயோகம் என்பது சூரிய சக்தி மூலமாக கிடைக்கப்பெறின் மக்களுக்கும் அரசுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனோ இதை ஒரு பொருட்டாகவே அரசாங்கம் மதிக்கவில்லை என்பது வேதனை தரும் செய்தி. சூரியஒளியில் மின்சாரம் தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப இடுகை Fuel cell எரிமக் கலன் என்ற பெயரில் திரு எஸ்.ராமனாதன் அவர்களால் இந்த இடுகையில் எழுதப்பட்டுள்ளது. வாசித்து சூரிய ஒளி பயன்பாடு பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கார்பன் சுவடுகள் பிரகாஷ் என்கிற சாமக்கோடங்கியின் ஒரு அருமையான தொடர். நம்மை அறியாமலே நாம் தின வாழ்வின் செயல்கள் எந்த அளவிற்கு இந்த பூமியை சேதப்படுத்துகிறது என்பதை சிறப்பாகச் சொல்லி இருப்பார். இயற்கை மீது தீராத காதல் கொண்ட இந்த இளைஞரின் பக்கத்தில் சமூக அக்கறைப் பதிவுகளும் நிறையவே காணக் கிடைக்கும்.

மீண்டும் சந்திப்போம்.

நன்றி நண்பர்களே.

அன்புடன்
ஷங்கர்..


குறிப்பு:-

என் தந்தையின் உடல் நலக் குறைவு காரணமாக அவருடன் இருக்கவேண்டியுள்ளதாலேயே இடுகைகள் தாமதமாகின்றன. போதாததற்கு இணைய இணைப்பும் படுத்துகிறது. ஆடி மாத அம்மன் உலாவிற்காக ஊர் விழாக்கோலம் பூணத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆகவே மின்சாரத் தடை. எண்ணியபடி இடுகைகள் கோர்க்க முடியவில்லை. ஆயினும் என்னால் முடிந்த அளவு பகிருகிறேன். குறைகள் இருப்பின் பொறுத்தருள்க நண்பர்களே.


தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி!

:))



.

22 comments:

  1. let me say thanks before reading. pl. see my previous commentfor thrusday posting

    ReplyDelete
  2. குறைவான அறிமுகங்கள் தான் என்றாலும், நிறைவான அறிமுகங்கள்.

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள் ஷங்கர்ஜீ. take care of your father...

    ReplyDelete
  4. அறிமுகத்துக்கு நன்றி...
    பயனுள்ள அறிமுகம்...

    ReplyDelete
  5. சிறந்த விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் நண்பரே உங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக அமைவதற்கு .

    ReplyDelete
  6. வெயிலும் வாழ்வும்.. பிரமாதமான தலைப்பு..
    அறிமுகம் செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. அப்பாவுக்கு சுகம் வந்திடும் ஷங்கர்.சங்கடமான சமயத்திலும் உங்கள் பணி பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  8. விழிப்புணர்வு பதிவு...

    ReplyDelete
  9. அப்பாவ பார்த்துக்குங்க...

    ReplyDelete
  10. உங்கள் பணி தொடர்வதுக்கு வாழ்த்துக்கள் அறிமுகங்களுக்கும்.
    அப்பாவைப் பாத்துக்கொள்ளுங்க
    நாங்களும் உங்களுடன்

    ReplyDelete
  11. அப்பாவை கவனிங்க தல. இதெல்லாம் அப்புறம்.

    ReplyDelete
  12. சங்கடமான சமயத்திலும் உங்கள் பணி பாராட்டுக்குரியது. நல்ல அறிமுகங்கள் ஷங்கர்.

    ReplyDelete
  13. ஷங்கர் அப்பாவை கவனிக்க மொதல்ல.

    இதுவரை எவரும் அறிமுகப்படுத்தாத தளங்கள்.

    ReplyDelete
  14. அன்பின் ஷங்கர்

    அருமை அருமை - தேர்ந்தெடுத்த கருத்து - தலைப்பு - சிந்தனை அனைத்துமே அருமை. இன்றையத் தேவையான "இயற்கையைப் பாதுகாப்போம்" என்ற கருத்தினை வலியுறுத்தும் அறிமுகங்கள் - அனைத்துமே அருமை.

    நல்வாழ்த்துகள் ஷங்கர்
    நட்புடன்சீனா

    பி.கு : அருமைத் தந்தையின் உடல் நலனைப் கவனியுங்கள் - பார்த்துக் கொள்ளுங்கள் - ஆண்டவனின் கருணை அருகிலே இருக்க நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  15. எவரும் யோசிக்காத அவசியமன பதிவுகள்

    அருமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணே :)

    ReplyDelete
  16. ந‌ல்ல‌ அறிமுக‌ங்க‌ள் ஷ‌ங்க‌ர்ஜி... அப்பாவை முத‌ல்ல‌ க‌வ‌னிங்க‌..

    ReplyDelete
  17. //காய்கறி உணவுகளில் ரசாயண விஷங்கள் கலப்பு என்பது சர்வ சாதாரணமாய் நடக்கிறது. காய்கறிகள் விளையும் இடங்கள் தொலைவாய் போய்விட்டதும் ஒரு காரணம்.///

    மேய்ச்சல், தருசு நிலங்களையெல்லாம், பட்டா போட்டு அமுக்கிட்டதுனால, ஆடு, மாடுக வளக்குறது குறைஞ்சி போய் தோட்டத்துல எரு போடுரதே நின்னுபோச்சிண்ணே, இப்ப பயிரக்காப்பாத்த வேர வழியில்லாம ரசாயாண உரத்தையும், மருந்துகளையும் அடிச்சி, வெளையிர உணவுப் பொருளெல்லாம், விஷமாத்தான் கிடைக்குது... கொஞ்ச நாள்ல விவசாயமே அழிஞ்சி போய் இதுவும் கிடைக்காது போலிருக்கு....

    அப்பா முக்கியம் அப்புறம்தா இந்த வலைப்பக்கமெல்லா, முடிஞ்சா வேர யார்கிட்டயாவது ஆசிரியர் பொறுப்ப மாத்திக்குடுத்துட்டு போய் முதல்ல அப்பாவ கவனிங்க.

    ReplyDelete
  18. 5 ஏக்கர் விஷயம் நிச்சயம் அரசாங்கத்தால் செய்யக்கூடியது தான்.

    தங்களின் தந்தையர் பூரண நலமடைய பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  19. உங்கள் தந்தை குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்...

    பல்வேறு பெரிய மனிதர்கள் சமூகப் பணிகள் புரியும் தருணத்தில் இந்த சிறியேனையும் மதித்து அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.. தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒன்று கூடி செயல்படுவோம்..

    நன்றி..
    பிரகாஷ் (எ)சாமக்கோடங்கி

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் நண்பா

    தந்தையார் உடல்நலமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்

    அகசூலை மறந்துவிட்டீர்களோ ?

    விஜய்

    ReplyDelete
  21. அப்பாவைப் பாருங்க பாஸ். அறிமுகங்கள் அருமை.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது