முக்கியமான பதிவுகள் - வலைச்சரம் - முதல் நாள்
➦➠ by:
பின்னோக்கி
வலைச்சர ஆசிரியர் பொறுப்பை நம்பிக்கையோடு அளித்த சீனா அய்யாவிற்கு என் நன்றிகள். இதற்கு முன்பாக ஆசிரியர் பொறுப்பு ஏற்று, மிக அதிக அளவில் பதிவுகளை அறிமுகப்படுத்தி, நல்ல முறையில் பணியாற்றி, என் பணியினைக் கடுமையாக்கிய அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
ஏசுநாதர் பிறந்து, சுமார் இரண்டு ஆயிரத்து ஒன்பது வருடங்கள் ஆன ஒரு நாளில், என் பையனுக்கு இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி தமிழில் கட்டுரை எழுதித் தரவேண்டும் என்று ஸ்கூலில் சொன்னார்கள். U.K.G படிக்கும் அவனுக்கு எதற்கு சுதந்திரம் பற்றித் தெரியவேண்டும்?. இருந்தாலும் விக்கிப்போய் (wiki), சில கட்டுரைகளை பிரிண்ட் எடுத்துக் கொடுத்த பிறகு ஒரு யோசனை; தமிழில் டைப்படிக்கத் தெரிந்தால் நாமே கட்டுரை எழுதிடலாமே ?. NHM துணையோடு எழுதத் தொடங்கினேன் கூடவே ஒரு ப்ளாக்கும்.
நான் எழுதியதில் பலருக்கும் பிடித்த சில பதிவுகளை இங்கு பகிர்ந்துகொள்வதற்கு பதிலாக, கொஞ்சம் வித்தியாசமாக, நான் மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டு, பல கட்டுரைகளைப் படித்து விட்டு எழுதிய பதிவுகளை இங்கு தருகிறேன். படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்களேன்.
வரலாறு
பின்னோக்கி என்ற பெயர் வைத்துவிட்டு பழங்கால வரலாற்றைப் பற்றி எழுதவில்லை என்றால் சாமி கண்ணைக்குத்தும் என்ற பயத்தினால், மிக பிரபலமான, மகாபலிபுரத்தைப் பற்றி ஒரு சின்னக் கதை எழுதினேன். காலப்பயணம் (Time Machine) பாணியில், நரசிம்ம வர்ம பல்லவன், கடற்கரைக் கோவில்களைக் கட்டவில்லை என்றால் இன்று அந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை. இதற்காக நரசிம்ம வர்மன் கட்டிய கோவில்கள் என்னென்ன மற்றும் மகேந்திரவர்மன் கட்டியவை என்ன என்று படித்துவிட்டு எழுதினேன். நீங்கள் படித்துவிட்டு சொல்லுங்களேன்.
சமூக விழிப்புணர்வு
இந்த தலைப்பில் நான் எழுதிய ஒரே ஒரு பதிவு என்ற வகையில் இங்கு இடம் பிடிக்கிறது. பல குழந்தைகளை பாதிக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி, சின்ன கதை பாணியில் எழுதினேன்.
க்ரைம்
2000-ஆம் ஆண்டு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான மெடிக்கல் டிடெக்டிவ்ஸ் என்ற ஒரு நிகழ்ச்சியின், எழுத்து வடிவத்தினை “துப்பறியலாம் வாங்க” என்ற பெயரில் தொடராக எழுதினேன். நான் எழுதிய பதிவுகளிலேயே, மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டது (3 நாட்கள்) இந்தப் பதிவு.
பொழுது போக்கு
வானவியல் ஒரு உபயோகமான பொழுதுபோக்கு. அதைப் பற்றி எழுதியிருந்த இந்தப் பதிவினால், சிலர் வானவியலில் ஆர்வம் கொண்டால் பெரிதும் மகிழ்வேன்.
நாளை முதல், பிரபல, புதிய பதிவர்கள் என்ற எல்லைகளைத் தாண்டி, நான் படித்து மிகவும் ரசித்த பதிவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் நான் விரும்பிய பதிவுகள் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...
நன்றி. நாளையும் வருக.
|
|
நல்ல சுய அறிமுகம். தொடந்து கலக்குங்க :)
ReplyDeleteஅன்பின் பின்னோக்கி
ReplyDeleteசுய அறிமுகம் அருமை - தொடர்க மற்ற அறிமுகங்களை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சுய அறிமுகம் அருமை
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே. :))
ReplyDeleteசுய அறிமுகம் அருமை - தொடர்க
ReplyDeleteவாழ்த்துக்கள் பின்னோக்கி.
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteபோன வருடம் கூகுளில் சர்ச் பண்னப்ப உங்களோட அந்த கிரைம் பதிவு ஒன்றை பார்த்து அந்த எல்லா கிரைம் பதிவுகளையும் ரொம்ப ரசிச்சு படிச்சேன். அப்புறம் பிளாகை தொடர முடியலை.
ReplyDeleteஇப்ப திரும்பவும் ஆரம்பித்துள்ளேன்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் நண்பரே......
ReplyDeleteவாழ்த்துகள் பின்னோக்கி
ReplyDeleteவாழ்த்துக்கள் பின்னோக்கி; அசத்துங்க
ReplyDeleteவாருங்கள் நண்பரே.
ReplyDeletevaazhthukkal pinnokki
ReplyDeleteAll the best
ReplyDeleteவாழ்த்துகள்.... கலக்குங்க!!
ReplyDeleteநல்ல சுய அறிமுகம். தொடந்து கலக்குங்க.
ReplyDelete/*நாளை முதல், பிரபல, புதிய பதிவர்கள் என்ற எல்லைகளைத் தாண்டி, நான் படித்து மிகவும் ரசித்த பதிவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் நான் விரும்பிய பதிவுகள் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...*/
ReplyDeleteவலைச்சரத்தின் நோக்கத்தை அழகாகக் கூறி அதன் படியே பகிரப் போகும் பதிவுகளுக்காக நன்றி. வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல சுய அறிமுகம். தொடந்து கலக்குங்க.
ReplyDeleteகலக்கர் பின்னோக்கி அந்த கி.பி.643 பதிவுதான் உங்கள் வலைப்பதிவில் நான் முதலில் படித்த பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள் பின்னோக்கி அங்கிள்..:))
அருமையான ஆரம்பம்...
ReplyDeleteநண்பர் ஜோதிகணேசன் நட்பு கிடைத்தவுடன் இந்த வலைதளத்தை பார்வையிட ஆரம்பித்தேன். தற்போது பெரியவர் (என்னை விட கண்டிப்பாக வயதில் பெரியவர் எனவே அவ்வாறு சொல்லலாம்) சீனா அவர்களின் நட்பும் கிடைத்தது மகிழ்ச்சி. மற்றவர்களின் வலைதளங்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் மிகச்சிறப்பு. சுய அறிமுகத்துடன் நல்ல துவக்கம் - தொடருவோம் உங்களை - சம்பத்-
ReplyDeleteகலக்குங்க :)
ReplyDeleteநண்பா
ReplyDeleteரொம்ப தாமதம வந்துட்டேன்.
பதிவுகளைப் போலவே தனி முத்திரை பதிக்க வேண்டும்.
பின் தொடர்கின்றேன் ராம்குமார்.
வாழ்த்துக்கள் சார் சுய அறிமுகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வானவியல் தொடர்பான இடுகை அதற்கடுத்து எழுதவே இல்லியே சார் ஏன்?
ReplyDeleteநன்றிகள் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
ReplyDelete@இராமசாமி கண்ணண்
@கலாநேசன்
@ஷங்கர்
@முகிலன்
@சே.குமார்
@மோகன்
@எஸ்.கே - தொடர்ந்து படிப்பதற்கு நன்றிகள்
@கே.ஆர்.பி.செந்தில்
@வானம்பாடிகள்
@மோகன் குமார்
@தமிழ் உதயம்
@டி.வி.ராதாகிருஷ்ணன்
@காயத்ரி
@ஈஸ்வரி
@ஜெட்லி
@சே.குமார்
@அமுதா
@அருண் பிரசாத்
@வெறும்பய
@நாஞ்சில் பிரதாப்
@ஸ்ரீராம்
@சம்பத்
@ஜோதிஜி
@ப்ரியமுடன் வசந்த் - விரைவில் எழுதிடுவோம் வசந்த் :)
வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தல!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDelete