07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 22, 2010

வானவில்



இன்று வலைச்சரத்தின் இறுதி... இல்லையில்லை இந்த வலைச்சர வார ஆரம்பத்தின் முடிவு நாள். இந்த முடிவு மீண்டும் ஆரம்பமாக மாறலாம். திங்கள் முதல் சனிவரை ஆறு நாட்கள் ஆனந்தமான நாட்கள். இன்று விடைபெறும் நாள்... சந்தோஷங்கள் நிறைந்த பிரிவாக இருந்தாலும் பிரிவு பிரிவுதானே. நாளை முதல் நானும் பின்னூட்டத்தில் உங்களுடன்.

அப்புறம் இன்னைக்கு வானவில்... வானவில் எவ்வளவு அழகானது என்பது எல்லோரும் அறிந்ததே. அதுவும் சின்ன வயதில் நான் படித்த நடுநிலைப்பள்ளியில் மழை வருவது போலிருந்தால் போதும், கிராமத்துப் பிள்ளைங்க எல்லாம் போகலாம் அறிவிப்பு வந்து விடும். புத்தகப்பையை தலைமை ஆசிரியரின் அறையில் வைத்து விட்டு சத்துணவுக்காக கொண்டு செல்லும் தட்டை மட்டும் தலையில் மழைக்காக கவிழ்த்துக் கொண்டு செல்லும் அந்த சந்தோஷ தருணத்தில் எங்கள் ஊர் கண்மாய்க்குள் அந்த பரந்த வெளியில் வானத்தில் தெரியும் வானவில் கண்கொள்ளாக் காட்சி... அந்த அழகை ரசித்த காட்சி இன்னும் மனசுக்குள் மங்காமல்.

வலைச்சரத்தில் எனது பதிவுகளை அறிமுகப்படுத்திய நண்பர்களை நினைவு கூர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னை அறிமுகப்படுத்திய நட்புகள் எத்தனை பேர் என்பதை நான் அறியேன். இருந்தாலும் நான் வாசித்தவரை எனது பதிவை வலைச்சரத்ததில் வாசிக்க வைத்த நட்புக்கள் இதோ...

காயத்ரி. R
அக்பர்
புலவன் புலிகேசி
ஸ்டார்ஜன்
டி.வி.ஆர்.
கே.ஆர்.பி.செந்தில்

இவர்கள் அனைவரும் எல்லாரும் அறிந்த பதிவர்களே. இவர்களின் அறிமுகத்தால்தான் வலைச்சர ஆசிரியனாய் இந்த ஒரு வாரம் வலம் வர சீனா ஐயா அழைத்தார்கள் என்றால் மிகையாகாது.

இனி, நான் விரும்பி வாசிக்கும் பதிவர்களில் சிலரின் வலைப்பூக்களின் அணிவகுப்பு வானவில்லாய்...

கவிதைக்கு

பனித்துளி சங்கர் கவிதைகள்.
மனவிழி
நிலரசிகன் பக்கங்கள்

சிறுகதைக்கு

Vanathy's
நிலாமதியின் பக்கங்கள்
சி@பாலாசி

விமர்சனத்துக்க

Butterfly Surya
பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்
Cable சங்கர்


சமூக அக்கறைக்கு

புலவன் புலிகேசி
கழுகு
எங்கே செல்லும் இந்த பாதை


சிந்தனை பதிவுக்கு

மாதவராஜ்
பாமரன் பக்கங்கள்


புத்தக விமர்சனத்துக்கு

செ.சரவணக்குமார் பக்கங்கள்

பாடம் படிக்க

வேலன்
பிலாக்கர் டிப்ஸ் / Blogger tips


நான் மேலே சொல்லியிருக்கும் நண்பர்கள் மட்டுமல்ல இன்னும் நிறைய முகங்கள்... என் வாசிப்பில். இவர்கள் எல்லாமே வலைப்பூவில் பிரபலமானவர்கள் மட்டும் அல்லர், அதையும் தாண்டி எல்லோருக்கும் பிடித்த எழுத்துக்கு சொந்தக்காரர்கள். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக லிங்க் கொடுப்பது என்பதைவிட இவர்களையும் மற்ற என் நண்பர்களையும் படிக்க...

படிக்க நீங்க...

படிக்க நீங்க வரவேண்டியது...

எங்கே தெரியுமா...?

சொல்லிடவா...

அப்புறம் அடிக்க வரக்கூடாது...

அது...

அட அதுதான்...

அப்புறம் என்ன சரியாத்தானே கண்டுபிடிச்சிருக்கீங்க...

நீங்க சொல்றீங்களா... நான் சொல்லட்டுமா...?

அய்யோ... எல்லோரும் இப்படி ஒரே நேரத்துல சொன்னா எப்படி... பயந்துடமாட்டாங்க நம்ம புள்ளைங்க...

சரி... இப்ப உங்க சார்பா நானே சொல்லிடுறேன்.

நம்ம சே.குமார் இருக்காருல்ல...

இருக்காரா (அட யாருப்பா இது மங்குனி அமைச்சரா... சரி... சரி... தனியா பேசிப்போம்.)

அவரு வலைப்பூவான மனசுக்கு போங்க... அங்க...

என்ன கள்ளாட்டம் பாருடா (இது யாரு... உழவனா... அதான் உங்களுக்காக விளைச்சல் போட்டோமுல்ல... வயக்காட்டுக்கு போய் உழுகாம இங்க உழுதுக்கிட்டு...)

அங்க அவரு பின் தொடர்றவங்க வரிசையை வரிசையா அழுத்தி...

அடங்கொப்புறானே... (சும்மா பேசும் போது குறுக்க வரக்கூடாது தமிழ்க்கவிதைகள் மோகனன்... அப்புறம் அண்ணிக்கிட்ட சொல்லிடுவேன்)

அவங்க வலைக்குப் போய் படித்து...

ஏன் நாங்க நேர போனா... (ஏன் இப்பூடி... நான் என்னத்தை சொல்லிப்புட்டேன்... அப்பாவி தங்கமணி)

அவங்களுக்கு பின்னூட்டமிட்டு அசத்துங்க. மறுபடியும் சொல்றேன்...

மறுபடியும் வேறயா...? (அடச்சுக்கப் போகுது தண்ணி குடிங்க கமலேஷ்)

மறக்காம சே.குமாரின் மனசுக்கு போங்க.

என்னத்தை சொல்ல என்னமா பிட்டைப் போடுறாங்க (கண்டுக்காதீங்க மீன் துள்ளியான்... உங்களுக்கு நெய்மீன் வாங்கித்தாரேன்)

ஹி...ஹி... எல்லாம் ஒரு விளம்பரம்தான்...

என்னடா விளம்பரம்... இந்த சினிமாக்காரங்கதான்... (வேண்டாம் நேசமித்ரன் அண்ணே... அப்புறம் நான் அழுதுறுவேன்...)

சரி விடுங்கப்பா... ஏதோ பயபுள்ள ஆசப்பட்டுட்டான்... (கதிர் அண்ணே... நீங்க ரொம்ப நல்லவரு... நமக்கு கதிர் அண்ணன் ஆதரவு எப்பவும் இருக்குப்பு... நம்மளை அசைக்க முடியாதுடி... ஆமா...)

இரு... நான் சொல்ல வந்தது என்னன்னா.... (அண்ணே... எனக்கு ஒண்ணும் கேக்கலை... மறுபடியும் கூப்பிடுங்க... வச்சிடவா)

என்ன உடன்பிறப்புக்களே நமக்கும் ஒரு விளம்பரம் வேணுமில்ல...

உங்களுக்கு நன்றிகள்:

என்னையும் நம்பி வலைச்சரத்தில் மாலை தொடுக்க அழைத்து நான் தொடுத்த சரங்களுக்கு பின்னூட்டம் இட்டதுடன் மட்டுமல்லாமல் எனது வலைக்கும் வந்து பதிவுகளை படித்து வாழ்த்திய சீனா ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..!

வலைச்சரக்குழுவில் இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!

என்னை ஊக்கப்படுத்தி பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்..!


இதுவரை வலைச்சர ஆசிரியர்களாய் இருந்தவர்களுக்கும் இனிமேல் இருக்கப் போகிறவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்க்ளும்..!

நான் இரவு நெடுநேரம் கணிப்பொறியில் உட்கார உவகையுன் அனுமதித்த அறை நண்பர்களுக்கு (அதிகாலையில் வேலைக்குச் செல்லும் நண்பர்கள் இருப்பதால் இரவு 11 மணிக்கு படுக்க வேண்டும் என்பது அறையின் எழுதப்படாத விதி... ) என் மனம் நிறைந்த நன்றிகள்..!

என்னைவிட சிறப்பாக வலைச்சர வாரத்தை நகர்த்த இருக்கும் நாளைய ஆசிரியரை மனதார வரவேற்பதுடன் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றிகள்.

இன்று விடை பெறுகிறேன்.. நாளை சந்திப்போம் என்ற நம்பிக்கையில்...

நட்புடன்
சே.குமார்

8 comments:

  1. நன்றிகள் உங்களுக்கும்.. அனைத்தும் நல்ல அறிமுகங்கள்.. நன்றி அண்ணே..

    ReplyDelete
  2. பலவித வண்ணங்களில் வானவில் அழகு

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள் நல்ல சுவாரஸ்யமான நடை வாழ்த்துக்கள் குமார்

    ReplyDelete
  4. அழகான வானவில் ...

    என் சார்பாகவும்.. எல்லோர் சார்பாகவும் வந்தனங்கள் ...

    ReplyDelete
  5. நான் இரவு நெடுநேரம் கணிப்பொறியில் உட்கார உவகையுன் அனுமதித்த அறை நண்பர்களுக்கு (அதிகாலையில் வேலைக்குச் செல்லும் நண்பர்கள் இருப்பதால் இரவு 11 மணிக்கு படுக்க வேண்டும் என்பது அறையின் எழுதப்படாத விதி... ) என் மனம் நிறைந்த நன்றிகள்..!

    இது தாங்க மனசை தொட்டுடுச்சு.அருமை.பாராட்டுக்கள் பல.

    ReplyDelete
  6. வண்ணங்கள் எல்லாமே அழகு, அதை வானவில்லாக வரிசைப்படுத்தியது, ஆரம்பகாலத்தில் ஊக்கமூட்டியவர்களுக்கு நன்றி என்ற நல்ல பண்புடன் ஆசிரியப்பணியை முடித்தது அனைத்திற்கும் வாழ்த்துக்கள்,- சம்பத்

    ReplyDelete
  7. நன்றி குமார்...சிறிப்பாக செயல் புரிந்தைமைக்கும் என்னை அறிமுகபடுத்தியமைக்கும்..

    ReplyDelete
  8. குமார், என்னையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. நிறைய வேலைகள் இருந்தமையால் வர முடியவில்லை. மீண்டும் நன்றிகள். நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற பதிவர்களையும் விரைவில் பார்க்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது