07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 25, 2010

சகலகலா வல்லவர்கள்

இருக்கும் விரல்களுக்கு ஒரு வித்தையாய் கற்றுத் தேர்ந்து கலக்கி வரும் நட்புகளைப் பார்க்கும் போது, எப்படி இவர்களால் மட்டும் இப்படிச் செயல்பட முடிகிறது என்ற ஆச்சரிய விதை மனதிற்குள் விழுந்து கொண்டே இருக்கின்றது.

எழுத்தை ரசிப்பதற்கு இணையாக படங்களை ரசிக்கும் மனதிற்கு…

இதோ..






எது கேட்டாலும் அதிகம் பேசாத கருவாயன் (எ) சுரேஷ்பாவுவின் படங்களைப் பார்க்கும் போது மனது குழைந்து, மீள முடியாமல் நிலைத்துப்போவதுண்டு.




புகைப்படக் கலையில் சிறிதும் சமரசம் இல்லாமல் தெளிவோடு இவர் எழுதும் பாடங்களும், சக புகைப்பட ஆர்வலர்களோடு, படத்தின் தரத்திற்காக இவர் காட்டும் கண்டிப்பும் காணும் போது மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும்

தமிழில் புகைப்படங்கள் குறித்து அறிய தமிழில் புகைப்படக் கலை வலைப்பூ மிகச் சிறந்த ஒன்று.
தமிழில் புகைப்படக் கலை வலைப்பூவில் இவருடைய பங்கு மிகப்பெரியது

கருவாயனின் படங்களை ஃபிளிக்கரில் பார்த்து ரசிக்க இந்த சுட்டியை சுட்டுங்கள்.

*******


கவிதை, வித்தியாசமான சிந்தனைகள், போட்டிகள் என தன் எண்ணங்கள் இனியவை என்ற தளத்தில் மிக நேர்த்தியாக எழுதி வரும் ஜீவ்ஸ் ஒரு சுவாரசியமான பதிவர்.



யதார்த்தத்தை, கொஞ்சம் கூடுதல் கனமாய் இருக்கும் வார்த்தைகளில் பதிவது இருவருடைய சிறப்பு. அவருடைய ரௌத்திரம் பழகு கவிதை மிகவும் யோசிக்க வைத்த ஒன்று. புகைப்படக்கலையில் ஒரு தீவிரவாதி என்றே இவர் குறித்து அறியப்பட்டிருக்கிறேன்.

ஜீவ்ஸ் அவர்களின் படங்களை ஃபிளிக்கரில் பார்த்து ரசிக்க இந்த சுட்டியை சுட்டுங்கள்.


********



கவிதைகளிலும், சிறுகதைகளிலும், புகைப்படங்களிலும் யதார்த்தத்தை மிக நேர்த்தியாக தன்னுடைய முத்துச்சரத்தில் கோர்த்து வருபவர் பதிவர் ராமலட்சுமி.



பெருமைக்குரிய விடயம், இவருடை வலைப்பூவில் பதியும் படைப்புகள், அதற்கு முன்பே ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் இவர் எழுதிய படைப்பாகவே இருக்கும்.


வாழ்வியலை யதார்த்தமான வார்த்தைகள் உள்ளடக்கிய ஒரு நதியின் பயணம் கவிதை மனதில் பதிந்த ஒன்று


ராமலட்சுமி அவர்களின் படங்களை ஃபிளிக்கரில் பார்த்து ரசிக்க இந்த சுட்டியை சுட்டுங்கள்.

25 comments:

  1. ஆஹா. படங்கள் அறிமுகம். நன்றி கதிர்.

    ReplyDelete
  2. படங்கள் அருமை.... பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  3. பகிர்விற்கு நன்றி கதிர்.

    பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தொடருங்கள்...

    - சங்ககிரி கதிர்

    ReplyDelete
  5. முதன்முறையாக ஃப்ளிக்கர் தளங்களின் சுட்டிகள் அறிமுகப்படுத்தப் படுவதைக் காண்கிறேன்! மகிழ்ச்சி. PiT, கருவாயன், ஜீவ்ஸ்.. வரிசையில் நானுமா:)? நன்றி கதிர்.

    ReplyDelete
  6. நன்றி கதிர் அண்ணே :) கருவாயன் போட்டோ முத தடவையா இப்ப தான் பாக்கிறேன். அதுக்கும் ஒரு நன்றி

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அறி"முகங்களுக்கு" நன்றி கதிர்.

    ReplyDelete
  9. அன்பின் கதிர்

    புதுமையாக - வித்தியாசமாக - படங்கள் அறிமுகம் - நன்று - அத்தன்பையும் திறமையினை வெளிப்படுத்தும் படங்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    நல்வாழ்த்துகள் கதிர்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  10. நன்றிங்க மாப்பு!

    ReplyDelete
  11. அருமையான அறிமுகங்கள்.

    ReplyDelete
  12. அறிமுக பகிர்விற்க்கு நன்றி கதிர்...

    ReplyDelete
  13. Congratulations To All the Guys,and Especially Ramalakshmi.

    ReplyDelete
  14. தேர்ந்தெடுத்த சிறப்பான அறிமுகங்கள்.

    ReplyDelete
  15. மிகவும் அழகான அறிமுகங்கள்...நன்றி

    ReplyDelete
  16. ஜீவ்ஸ் இபபொழுதான் அறிகிறேன். நன்றி...

    ReplyDelete
  17. நல்ல அறிமுகங்கள். படங்கள், அருமை நன்றிங்க கதிர்.

    ReplyDelete
  18. மிக அருமையான பகிர்வுகள், கதிர்!

    ReplyDelete
  19. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  20. படமோ படம் போங்க..

    ReplyDelete
  21. அறிமுகங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் அறிமுகப்படுத்தியவருக்கும்....

    ReplyDelete
  22. அன்பையும், கருத்துக்களையும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது