07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 15, 2010

இளங்கன்று - வலைச்சரம் - 7வது நாள்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


இன்று, பதிவுலகத்திற்கு புதிதாக எழுத வந்துள்ள சில நண்பர்களைப் பற்றி பார்ப்போம்.

கார்பன் கூட்டாளி என்ற வலைத்தளத்தில் எழுதும் இவர், முதுகலை உயிரியல் பட்டதாரி. இவர் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் ”பரிணாமம்” பற்றியத் தொடர் பல புதிய தகவல்களை வெளிப்படுத்துகிறது.
தமிழ் தலைமகன் என்ற வலைத்தளத்தில் தன் கடல் அனுபவங்களை, பயணக்கட்டுரை வடிவில் பகிர்ந்துகொள்கிறார் வில்சன்.


காதலன் காதலி என்ற வலைத்தளத்தில் கவிதை மழையால் நம்மை நனைக்கிறார் தமிழன் - கோபி. ஒவ்வொரு கவிதையையும் அழகான புகைப்படத்துடன் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.


விட்டம் பார்த்தல் என்ற கவிதை, ஒரு பானை சோற்றுக்கு என்ற பழமொழிக்கு கட்டியம் கூறுகிறது. வருணனின் கவிதைகள் என்ற வலைத்தளம், கடந்த மே மாதம் முதல் இயங்கிவருகிறது.


நண்பர்களே ! கடந்த ஒரு வாரமாக வலைச்சரத்தினைத் தொகுத்து வழங்கியதற்காக பெருமைப் படுகின்றேன். மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்த சீனா அய்யாவிற்கும், தினமும் பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்த வலைதளத்தில் இதுவரை சுமார் 1500 பதிவுகள் இடப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு பதிவில் 5 என்ற விகிதத்தில், சுமார் 7500 பதிவுகள் இதில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கிறது. கூடுமானவரை, ஏற்கனவே பகிரப்பட்ட வலைத்தளங்களை குறிப்பிடாமல் கவனமாக இருந்தேன். அதனையும் மீறி சில வலைத்தளங்களை நான் குறிப்பிட்டிருக்கலாம்.

வரலாறு, அகழ்வாராய்ச்சி மற்றும் அறிவியல் - இந்த மூன்றும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஆதாலால், இத்துறையைச் சார்ந்த பதிவுகளை நான் அதிகம் இங்கே வழங்கியிருக்கிறேன். சிலருக்கு இவைகள் சலிப்பூட்டியிருக்கலாம். அடுத்து வரும் ஆசிரியர், வித்தியாசமான வலைத்தளங்களை இங்கு பகிர்ந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்.

சந்திப்போம் நண்பர்களே !!!

11 comments:

 1. மிகவும் சிறப்பாக தொகுத்தமைக்கு பாராட்டுக்கள் ...

  ReplyDelete
 2. அழகான தொகுப்பு... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. கார்பன் கூட்டாளி, தமிழ் தலைமகன் தளங்களை, மற்றும் தமிழன் கோபி தளத்தை விருப்ப லிஸ்ட்டில் சேர்த்து விட்டேன்... நன்றி பின்னோக்கி.

  //"வரலாறு, அகழ்வாராய்ச்சி மற்றும் அறிவியல் - இந்த மூன்றும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்"//

  எனக்கும்.

  ReplyDelete
 4. நன்றிகள்

  @கே.ஆர்.பி.செந்தில்

  @சிநேகிதி

  @ஸ்ரீராம்

  ReplyDelete
 5. Arumaiyaana thoguppugal nanba... vazhththukkal.

  ReplyDelete
 6. அருமை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வரலாறு நம்முடைய வாழப் போகும் வாழ்க்கையை வாழ்ந்த வாழ்க்கையை உணர வைக்கும்.

  அகழ்வராய்ச்சி என்பது எனக்கு அதிகம் படிக்காதது. நிறைய பொறுமை வேண்டும்.

  அறிவியல் விசயங்களை சுகமாய் படிக்க தருபவர்கள் மிகக் குறைவு.

  சிறப்பான உங்கள் பணிக்கு வாழ்த்துகள் ராம் குமார்.

  ReplyDelete
 8. நன்றிகள்

  @சே.குமார்

  @asiya omar

  @ஜோதிஜி

  ReplyDelete
 9. என்னையும் மதிச்சு நாலு பேரு பின்னூட்டம் விட காரணமாய் இருந்த பின்னோக்கி அவர்களுக்கு நன்றி....
  வலைசரம் பதிவில் இப்படி ஒரு பதிவு வந்திருப்பதை தெரியபடுத்திய ஸ்ரீ ராம் அவர்களுக்கும் நன்றிகள்...

  ReplyDelete
 10. சிறப்பான தொகுப்பு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. நன்றி திரு பின்னோக்கி, புதிய வலை பதிவுகளை தெரிந்துகொண்டேன். பல பதிவுகளை பார்வையிட இந்த தளம் உதவியாக உள்ளது. தொடருங்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது