சிந்தும் சில துளிகள் - வலைச்சரத்தில் நான்
➦➠ by:
ஈரோடு கதிர்
எழுத்தின் மீதான வேட்கை பள்ளி முடிக்கும் பருவம் முதலே மனதின் ஏதோ ஒரு மூலையில் குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. ரகசியமாய் பழைய நோட்டுகளில் கிறுக்கி பதுக்குவதும், கல்வியாண்டின் இறுதிகளின் ஆட்டோகிராப் புத்தகங்களில் வித்தியாசமாய் எதையாவது எழுதுவதையும் வடிகாலாய் பயன்படுத்தி தாகம் தணித்துக் கொண்டிருந்த நிலையில் எழுத்தையும் பேச்சையும் அடிப்படையாகக் கொண்டு ஆட்கொண்டது ஜேஸிஸ் மற்றும் அரிமா சங்கங்கள். ஜேஸிஸ் இயக்கத்தின் பயிற்சி வகுப்புகளும் சில வருடங்கள் ஆக்கிரமித்துக்கொண்டது. அதன் மூலம் காவல் துறை உட்பட்ட பல துறைகளைச் சார்ந்தவர்களிடம் பயிற்சிகளை நடத்த இயல்பிலேயே இருந்த எழுத்து ஆர்வம் பெரிதும் துணை நின்றது.
மாற்றம் நிலையானது என்பதற்கிணங்க, தேடலின் ஒரு ஆச்சரியமாய் 2008ஆம் ஆண்டின் இறுதிப் பருவத்தில் தமிழில் தட்டச்ச முடியும், கூடவே நம் மனதில் இருப்பதை வலைப்பூக்களில் பதிய முடியும் என்பதுவும் தெரியவந்தது.
தட்டுத்தடுமாறி வலைப்பூவை உருவாக்கி முதல் இடுகையாய் கண்தானம் குறித்து சின்னதாய் எழுதிய போது, எதையோ சாதித்த திருப்தி மனதை நிறைத்தது. அதே வேகத்தில் ஒரு சில இடுகைகள் வந்த போதும், அடுத்த சில நாட்களில் ஒரு வெற்றிடம் கனமாய் எழுத்தைக் கவ்விப் பிடிக்க, அடர்த்தியாய் எனக்கும் எழுத்துக்கும் இடையே ஒரு மௌனம் கிடந்தது.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள், ஒன்றும் எழுத முடியாமல் அந்த வெற்றிடம் ஆட்கொண்ட நிலையில், வெறும் வாசிப்பு மட்டுமே தொடர்ந்து என்னை வலைப்பூக்களோடு சுவாசிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு கட்டத்தில் என்னை எழுத்து துரத்த கொஞ்சம் கொஞ்சமாய் என்னைச் சுற்றியுள்ள விடயங்களை பகிர ஆரம்பித்தேன்.
அதற்குப் பின்னர் தான் திரட்டிகள் என்று ஒன்று இருக்கிறதென்பதைக் கண்டுபிடித்து, அதில் இணைக்க பல நாட்கள் வேர்த்து விறுவிறுக்க போராடி, அடுத்து வாக்கு என்றிருப்பதை பாலாசியும் நானும் கண்டுபிடித்த கதையை ஒரு தொடராகவே எழுதும் அளவிற்கு சுவாரசியமானது.
நாட்கள் நகர நகர திரட்டிகள் மற்றும் சக பதிவர்களின் உதவியோடு எழுத்து பரவலாக பலரைச் சென்றடைந்த நேரத்தில், சக பதிவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாக ஈரோட்டில் நடத்திய பதிவர் சங்கமம் எதிர்பாராத வெற்றியை ஈட்டித் தந்தது. அதே நிகழ்வில் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களை ஒன்றிணைக்க ஈரோடு தமிழ் வலைப் பதிவர்கள் குழுமத்தை துவக்கினோம். அருமையான பதிவுலக நண்பர்களை கொண்டுள்ள ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில் நானும் இருக்கின்றேன் என்பது பெருமிதமான ஒன்றாகவே தோன்றுகிறது.
அடுத்து, தமிழ்மணம் திரட்டி நட்சத்திரமாக அங்கீகரித்து ஒரு வாரம் இடுகையிட அளித்த வாய்ப்பு இன்னும் பல நண்பர்களிடம் என் எழுத்தைக் கொண்டு சேர்த்தது. வலைப்பக்கத்தில் எனக்கு அது ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும்.
விவசாயம் சார்ந்த வாழ்க்கையை கால் நூற்றாண்டுகாலம் சுவாசித்த எனக்கு, வளரும் பொருளாதார மாற்றங்களும், அறிவியல் மாயையும், தொழில் வளர்ச்சியும் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தை கபளீகரம் செய்வதை பொறுக்க முடியாமல் எழுதிய
மற்றும்
சினிமாவைக் கொண்டாடும் சமூகமும், அரசும் உயிர்வாழ, தன்னை இழந்து உணவு கொடுக்கும் விவசாயி குறித்து இல்லையே என்று ஆதங்கப்பட்ட
வர்ணம் பூசி கண்கள் வழியே மூளையை கவர்ந்திழுத்து விற்கப்படும் கோழிக்குஞ்சுகளைப் போல் நாம் வளர்க்கும் நம் குழந்தைகள் குறித்து எழுதிய
மற்றும்
இடுகைகள் இன்று வாசிக்கும் போதும் என் அடுத்த தலைமுறைக்கு நாம் விடுத்துச் செல்லும் உலகத்தைப் பற்றிய பயத்தை சற்றேனும் கூட்டுவதாகத்தான் இருக்கின்றது.
நம்மைச் சுற்றி நடக்கும் நல்ல விசயங்களை எடுத்துச் செல்லும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் தங்கள் வாழ்க்கையை அர்பணித்து, சுற்றுச் சூழல் காக்க எந்த வொரு சுயநலமும் இன்றி பல்லாயிரக்கனக்கான மரங்களை நட்டு வளர்த்தெடுத்த வாழும் கடவுள்களான திரு. நாகராஜன், திரு அய்யாசாமி குறித்து எழுதிய
ஒரு கிராமத்திற்கு கண் தானம் பெற சென்ற போது நடந்த விசயங்களை சுவாரசியமாக பகிர்ந்த
இடுகைக்கு கிடைத்த வரவேற்பு வலையுலக வாசகர்கள் மேல் மிகுந்த மரியாதையைக் கொண்டு வந்தது.
காதலும், சமூகம் சரி விகிதமாய் கலந்து எழுதிய நிறைய கவிதைகளில்...
இன்றும் வலியாய் கிடக்கும் கனமான கவிதையான
இன்னும் மனதுக்குள் வாசனையாய் வீசும்
ஆகியவை நான் என்னிடம் ரசித்தவைகள்
முதல் நாளில் என்னைப்பற்றிய பகிர்வை….
மேகக் கூடலில் பிறந்த மழைத்துளிபோல்
தொப்புள் கொடி அறுந்த நாள் முதல்
வாழ்க்கையில் வளைந்துநெளிந்து ஓடுகிறேன்
நானும் ஒரு மனிதத் துளியாய்....
தொண்டைக்குழிக்குச் சற்றுக்கீழே தொங்கும்
துலாக்கோல் இடவலமாய் ஊசலாடுகிறது
ஒருபக்கம் நல்லதும் மறுபக்கம் கெட்டதும்
துகள்களாகப் தொடர்ந்து படிகிறது....
அன்பு, கோபம், கனிவு, குரோதம், காதல்,
செருக்கு, பணிவு, காமம், கர்வம், துரோகம்
என ஏதேதோ இயல்பாய் திணிக்கப்படுகிறது
இன்னும் சில தேடித் தேடிப் பற்றுகிறேன்
விதவிதமாய் வர்ணங்களைப் பூசுகிறேன்...
நித்தமும் மாற்றி மாற்றி வேடம் பூணுகிறேன்
மிகக் கவனமாக முடிந்தவரை நல்லவனாக
ஆனாலும் மிதக்கிறது நல்லவன் தட்டு மேற்பக்கமாய்
என்று என்னைப் பிரதிபலிக்கும் என் கவிதையோடு அறிமுகத்தை நிறைவு செய்யும் நேரத்தில் வலைச்சரத்தில் இந்த வாரம் பணியாற்ற வாய்ப்பளித்த அருமை நண்பர் பதிவர் சீனா மற்றும் வலைச்சரம் குழுவிற்கு நன்றிகளை சமர்பித்து மகிழ்கின்றேன்.
நன்றி
பிரியங்களுடன்
- ஈரோடு கதிர்
|
|
உங்களின் எழுத்தினூடே பயணித்த பாக்யவான்களில் நானுமொருவன்.. இங்கே பார்வைக்கு கொடுத்துள்ள இடுகைகள் யாவும் படிக்க திகட்டாதவை...
ReplyDeleteஇந்த வாரம் இந்த வலைச்சரம் மிளிரட்டும். வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் கதிர். சுட்டியவை அனைத்தும் மணிகள்.
ReplyDeleteவாழ்த்துகள் கதிர்...
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteவாரே வா ....ஆரம்பமே அமர்க்களமாக...வாழ்த்துக்கள்
ReplyDeleteசிந்திச் சிதறும் வார்த்தை சங்கமங்களுக்கிடையே, ஒவ்வொரு வாக்கியத்தின் பின்னும் மவுனம் கொள்ளச் செய்யும் உங்கள் பதிவுகள் அனைத்துமே போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை...
ReplyDeleteஉங்கள் உடனிருப்பது கூட எனக்கு பெருமைதான்... :)
வாழ்த்துக்கள் அண்ணா...
அந்தப்பக்கம் ஒருத்தர் விண்மீன்;
ReplyDeleteமறுபக்கம் மற்றவர் ஆசிரியர்!!
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!!
வாழ்த்துக்கள்!
ReplyDeleteவெங்கட்
ஈரோட்டின் வருங்கால மேயருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete/
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
முதல் நாள் வாழ்த்துகள்/
உங்களுக்கு என்ன அண்ணே தினமும் வந்து வாழ்த்து சொல்ல நேரம் இருக்கு...எங்களால அப்படி எல்லாம் வர முடியாது....அதனால மொத்தமா வாழ்த்து சொல்லிக்கிறேன்:)
\\ ஈரோட்டின் வருங்கால மேயருக்கு வாழ்த்துக்கள்! \\
ReplyDeleteஅட இது நல்லா இருக்கே....
வாழ்த்துகள் கதிர்...
வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவாழ்த்துகள் கதிர்
ReplyDeleteமாப்புக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்.,
ReplyDeleteஇங்கும் உங்கள் பணி மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் உற்சாகம் அடைகிறேன்..
தொடருங்கள்..
வாழ்த்துகள் கதிர், கலக்குங்க
ReplyDeleteவலையுலகில் எனது ஆசானுக்கு நமஸ்காரங்கள்....
ReplyDeleteஉங்களின் எழுத்துக்களை காதலித்து எழுத வந்தவர்களில் நானும் ஒருவன் கதிர்... எனது எண்ணத்தை கருத்தாக்கவேண்டுமானால் நான் தனி பதிவெழுத வேண்டியது வரும்...
கதிரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது எப்படி எழுதுவது என்று மட்டுமல்ல...எவ்வளவு நல்ல மனிதராய் வாழ்வது என்றும் தான்....
தொடர்கிறேன்... கதிர்..... நீங்கள் எங்கு சென்றாலும்!
வாழ்த்துக்கள் அண்ணே .. தேர்ந்தெடுத்து தந்த சுட்டிகளும் அருமை .. .
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்
ReplyDeleteஉங்களின் புதிய அறிமுகங்களை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
கலக்குங்க அண்ணே!
ReplyDeleteவாழ்த்துக்கள்..
முதல் நாள் வாழ்த்துகள்...!
ReplyDeleteவாழ்த்துகள் கதிர்.இனிமையான அறிவான பிரயோசனமான வாராமாக இருக்கும்.தொடருங்கள்.
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள்...!
ReplyDeleteவாழ்த்துகள் கதிர். ஏற்கனவே படித்தவை என்றாலும் நீங்கள் சுட்டியவற்றை அலுவலகத்துக்கு நேரமாவது கூட தெரியாமல் படித்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteஉங்களின் எழுத்தை வலைச்சரத்தின் மூலம் அறிய வைத்ததுக்கு நன்றிகள்! நெஞ்சை தொட செய்கிறது உங்களின் எழுத்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
கதிர்,
ReplyDeleteஅந்த பக்கம் பாலாண்ணா. இந்த பக்கம் நீங்களா? ஆக, கலக்கலான வாரம்!
வாழ்த்துகள் கதிர்!
வாழ்த்துகள் கதிர் அண்ணா. கொடுத்திருந்த சுட்டிகள் அனைத்திற்கும் சென்றேன். அத்தனையும் முத்துக்கள்.
ReplyDelete//அந்த பக்கம் பாலாண்ணா. இந்த பக்கம் நீங்களா? ஆக, கலக்கலான வாரம்!//
ReplyDeleteஆஹா.. அந்தப் பக்கம் நம்ம தல பாலா சாரா? ரொம்ப சந்தோஷம். இன்னும் தமிழ்மணம் பார்க்கல. போய் மொதல்ல ஒரு வாழ்த்தச் சொல்லிருவோம்.
வாழ்த்துக்கள் கதிர் அண்ணா... எப்போ மேயர் பதவியேற்பு விழா?
ReplyDeleteகண் தானமும் கோடியில் இருவரும் என்னைக் கவர்ந்தவை..
ReplyDeleteசிறப்பாக செய்யுங்கள் கதிர் .வாழ்த்துக்கள்
அருமை...... வலைச்சரத்தில், முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா.
ReplyDeleteவணக்கம் வாத்தியாரே.
ReplyDeleteநல்ல சுய பதிவுகள் அறிமுகம், வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் உங்கள் முன்னுரையில் இருப்பது போல் திரட்டி, உலவு,தமிழ்மணம் போன்றவற்றில் சேர்ப்பது தொடர்பான விபரங்கள் இன்னும் புரிபடாமல் மற்ற வலைப்பூக்களில் உள்ள இது போன்ற இணைப்பு ஐகான்களை பார்த்து வியந்து கொண்டு இருப்பதால் உங்களின் ஆரம்பகால உணர்வுகளை வெளிப்படுத்திய அறிமுகம் சுவையாக இருந்தது, தொடர்கிறேன், வாழ்த்துக்கள்
சிறப்பான முன்னுரையுடன் உங்களின் சிறந்த பதிவுகள் அறிமுகம். தொடரும் நாட்களில் பல நல்ல பதிவர்களை காணும் ஆர்வத்துடன் தொடர்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் கதிர் அண்ணா....
ReplyDeletecongrats kadir
ReplyDelete//என்னைப் பிரதிபலிக்கும் என் கவிதையோடு//
ReplyDeleteசுட்டியிருக்கும் பதிவுகளுடன் இதுவும் மிக அருமை. வாழ்த்துக்கள்.
அமர்களமான ஆரம்பம்....வாழ்த்துக்கள்
ReplyDeleteபூங்கொத்து கதிர்.!
ReplyDeleteஅன்பின் கதிர்
ReplyDeleteஅருமையான அறிமுகம் - சுய அறிமுகம்.
அனைத்துச் சுட்டிகளுமே அருமை
நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
வாழ்த்துக்கள் கதிர்
ReplyDeleteவிஜய்
வலைச்சர வாழ்த்துக்கள் கதிர்..
ReplyDeleteவாழ்த்துக்கள் கதிர்.ஆரம்பம் அருமை.தொடர்ந்து படிக்க ஆவல்.
ReplyDeleteவாழ்த்துகள் கதிர்
ReplyDeleteவலைச்சரத்தில் இன்னும் ஒரு வாரத்துக்கு ’கதிர்’ ஒளி வீசட்டும்! :-)
ReplyDeleteவாழ்த்துகளைத் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
ReplyDeleteதங்களைப் பற்றி முழுதாக அறிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பளித்ததற்கு நன்றி கதிர். உங்களுடைய இடுகைகளையல்லாம் படித்துவிட்டு மற்றவைகளைப் பற்றி பேசலாம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteahaa . piriyankaludan mahibanin paatti
ReplyDelete