07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 10, 2010

அனுபவம் பலவிதம் - வலைச்சரம் - 2ஆம் நாள்

ஒரு பதிவு எழுதும் முன், இதே செய்தியை வேறு எவராவது எழுதியிருக்கிறார்களா ? என்று இணையத்தில் தேடிப்பார்த்து, யாரும் எழுதவில்லை என்று உறுதியானதும் எழுதுவோம். ஆனால், நம் அனுபவங்களைப் பகிரும் பதிவுகளை எழுதும் போது, இந்தத் தேடல் அவசியமற்றது. நம் அனுபவங்களை வேறொருவர் கண்டிருக்கக் கூடுமா என்ன ?. பதிவு எழுதும் ஒவ்வொருவரும், ஒரு காலகட்டத்தில் தன் இளம்பிராய அனுபவங்களை எழுதாமல் இருக்க முடியாது. இன்று வலைச்சரத்தில், தன் அனுபவங்களை வித்தியாசமான முறையில், பலரும் ரசித்துப் படிக்கும் வகையில் எழுதப்பட்ட சில பதிவுகளைப் படிப்போம் வாருங்கள்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும்போது கவலை கொள்வது பெற்றோர்கள் மட்டுமே. காய்ச்சல், சிறுவர்களுக்கு ஓரிரு நாட்கள் பள்ளி விடுமுறையைக் கொடுக்கும்; அந்த நாட்களில் படிக்க வேண்டாம்; ராஜ உபசாரம் கிடைக்கும்; முக்கியமாக திட்டு/அடி விழாது. பெய்யென பெய்யும் மழை பிரதீப் அவர்களுக்கு காய்ச்சல் வந்த ஒரு நாளைப் பற்றி எழுதியுள்ள இந்த அனுபவத்தை படியுங்கள். அந்த மதிய நேரத்து காய்ச்சலை அவர் வர்ணித்துள்ள விதம் – அற்புதம்.



உபரித்தகவல்: நான் தமிழில் படித்த முதல் ப்ளாக் இவருடையது தான்.

8ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பையன், வாரமிருமுறை, தன் அப்பாவின் வற்புறுத்தலுக்காக, வங்கிக்குச் செல்ல நேரிட்டது. அந்தப் பையனின் விழிவழியே வங்கியின் ஒரு நாள் நிகழ்வை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள். பலமுறை படித்து ரசித்தது.



இன்னும் சில வருடங்களில், அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பொருட்களில் கோலி குண்டு, கில்லி-தாண்டல் மற்றும் பம்பரமும் இடம் பெற்றிருக்கும். இந்தக் கால சிறுவர்களிடம் பம்பரம் என்று சொன்னால், என்ன அது ? என்று கேட்பார்கள். இவர், சிறுவயதில், பம்பரம் வாங்கி விளையாடிய கதையை எவ்வளவு நுணுக்கமாக விவரிக்கிறார் பாருங்கள்.

சுண்டு விரல் நீளத்திலிருக்கும் செல்போனில், பேசலாம், கேட்கலாம், படம் எடுக்கலாம், இன்னும் நிறைய விஷயங்களைச் செய்யலாம். ஆனால் சற்றே ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன், ரேடியோ என்பது எப்படி இருந்தது. இவர் வளரும் போது, தன்னுடன் வளர்ந்த ரேடியோவின் கதையையும் விவரிக்கிறார் இந்தப் பதிவில்.

நாளை சந்திப்போம் நண்பர்களே !!!

20 comments:

  1. அன்பின் பின்னோக்கி

    அறிமுகங்கள் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அறிமுகங்கள் அருமை

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்...

    ReplyDelete
  4. இவர்கள் எல்லாரும் எனக்கு புதிதே படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  5. இவர்கள் எல்லாரும் எனக்கும் புதிது ...
    படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  6. உங்கள் முதல் பின்னூட்டத்தை இன்று பின்னோக்கி நகர்ந்து படிக்க வைத்தமைக்கு நன்றி.

    பிரதீப் இப்போதெல்லாம் அதிகம் வலைதளத்தில் வருவது இல்லை. என்னை முன்னோக்கி நகர்த்தியதில் அவருக்கும் பங்குண்டு.

    தொடருங்கள்.
    தொடர்கின்றேன்.

    ReplyDelete
  7. அறிமுகத்துக்கு நன்றி பின்னோக்கி எதையுமே படித்ததில்லை... படிக்கிறேன்.

    ReplyDelete
  8. பம்பரம், கோலிகுண்டு, ரேடியோ..
    வருங்காலத்தில் தொலையப்போகும் பொருட்கள்..
    இது கவலைக்கு இடமளிக்கும் பதிவு தான்..
    அறிமுகங்களும் அருமை..
    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நல்ல செலக்‌ஷன்.:)

    ReplyDelete
  10. ப்ளாக்கில் ஒரு சிறு வட்டத்திற்குள் தான் நான் இருக்கிறேன்,வலைச்சரத்தை படிப்பதன் மூலம் நிறைய ப்ளாக்கர்களை தெரிந்து கொள்ளவும்,அதன் மூலம் எத்தனை விஷயங்கள்.மிக்க நன்றி.

    ReplyDelete
  11. நன்றிகள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

    @கலாநேசன்
    @ஸ்ரீராம்
    @LK
    @சே.குமார்

    படிக்காத பதிவுகளை இங்கே குறிப்பிட்டதற்கு மகிழ்ச்சி.

    @ஜோதிஜி - மிக நுண்ட்பமாக படிக்கிறீர்கள், பின்னூட்டத்தையும்.

    @நாஞ்சில்

    @இந்திரா

    @வானம்பாடிகள் சார்

    @asiya omar - நீங்கள் படிப்பதற்கு நன்றி

    ReplyDelete
  12. வலைச்சரத்தை மெருகூட்டி இருக்கிறீர்கள் ... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  13. அறிமுகங்கள் ரொம்ப நல்லாருக்கு..

    ReplyDelete
  14. நான்கையும் வாசித்தாயிற்று. மூன்று புதிய பதிவர்கள் அறிமுகம் கிடைத்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. //அந்த மதிய நேரத்து காய்ச்சலை //
    காய்ச்சல்கள் பலவிதம்

    அது தரும் அனுபவங்கள் ஆயிரம் விதம்

    ReplyDelete
  16. இப்பதான் படிச்சேன்... வாழ்த்துக்கள்...கலக்குங்க பின்னோக்கி...உங்க அனுபவங்களுக்கு நான் ரசிகன்...

    ReplyDelete
  17. Nice introductions. Thanks. Most of them are new to me.

    ReplyDelete
  18. நல்ல அறிமுகம் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அறிமுகங்கள் அருமை . அனுபவங்கள் எப்பொழுதும் புதுமைதான் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  20. ஆகா, பின்னோக்கி! புல்லரிக்கிறது...தங்கள்ல் அறிமுகத்திற்கும், படித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! இனிமேல் அடிக்கடி எழுத முயற்ச்சிக்கிறேன்!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது