வீசிய வலையில் சிக்கிய கல்வெட்டுக்கள்
➦➠ by:
அன்புடன் மலிக்கா
வலையில் சிக்கிய கல்வெட்டுக்கள் என்னது கல்வெட்டுகள் சிக்கிகிச்சா, ஆமாங்கோ அதுவும் பூக்கள் செதுக்கிய கல்வெட்டுகள். பூப்பதும் காய்ப்பதும். உதிர்வது. மீண்டும் பூப்பதும். சிலவேலை கருகுவதும். என்றிருந்த பூக்கள் இன்று.
தன்னைலையில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்து பூத்து உதிர்வதற்குமுன். தன் எண்ணைங்கள் மறு உருவமாக்கி தன்னுணர்வுகளால் செதுக்கிய கல்வெட்டுகள்தான் கவிதைகளாய் மாறி உதிராத பூக்களாய் இவ்வுலகே அறிவதுபோல் உலாவரத் துடிக்கிறது உலா வரவும் செய்கிறது.
வண்டுகள் வடிக்கும் கவிதைக்கு [நிக]மேலா[ரா]க. பூக்களும் தன் உணர்வுகளையும், உணர்சிகளையும் மிக தத்ரூபமாக செதுக்குவதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுகிறது.
பூக்களெல்லாம் பூப்பதுமட்டுமல்ல, பூரிப்பதும், பூகம்பமாவதும்.
புல்லாங்குல் வாசிப்பதும். புழுங்கி கரைவதும் புண்பட்டு போவதும்.புயலாக வீசுவதும்.என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அனைத்துமாக
மாறி, மாறி தன் மன எண்ணங்களின் வெளிப்பாடுகளை மடை திறந்த வெள்ளம்போல் கொட்டுகிறார்கள்.
கவிதைகளென்னும் கல்வெட்டுகளாக செதுக்குகிறார்கள்!
நாங்கள் எதிலும் சலைத்தவர்கள் இல்லை என்று[காலர் இல்லை, இருந்தாலும் தூக்கிவிட்டுகிட்டோமுல்ல]
சலைக்காமல் சமையல், குடும்பம். நிர்வாகம்,
மற்ற பணிகளியும் செய்துகொண்டு மனதில் ஓடும் எண்ணங்களை மிக அழகாய் அருமையாய் வெளியிடுகிறார்கள்.
இங்கேயிருப்பது கொஞ்சந்தாங்கோ. வலையில் எண்ணிக்கையிலா கல்வெட்டுகள் செதுக்கிக்கிடக்கின்றன. அவைகள் நம்ம வலையில் சிக்கியபோதும் அம்பூட்டையும் இங்கே போடுவதென்றால் ஊஹூம் வலைபோதாது அதேன் இங்கே கொஞ்சூண்டு கொண்டு வந்திருக்கேன்.
இதில் உங்களுக்கு தெரிந்த கல்வெட்டுகளுமிருக்கலாம் . சிக்கிய கல்வெட்டுகள் செதுக்கிய உணர்வுகளை, சின்னதாய் ஒரு கிளிக் செய்து போய்பாருங்கள். நில்லுங்க போறதுக்குமுன்னாடியும் போய்விட்டுவந்தும்,
இங்கிருப்பதில் உங்கள் உணர்வுகளை கல்வெட்டாக்குங்கள். நாளை இந்த கல்வெட்டையும் உலகம் காணுமல்லவா!
ஹா ஹா எப்படியெல்லாம் சொல்லி கருதுக்கள் வாங்கவேண்டியிருக்குப்பா:{{{{{{ ஸ்ஸ்ஸ் அப்பாடா......
கனவுகள் பூக்கும் தோட்டத்தை
கண்களுக்கு தேக்கி வைத்து
வெள்ளையருவியாய் விழிவழியே
வெளியேற்றும் வித்தைகளறிந்து
சிந்தனைகள் சிறகை விறிக்க
சில்வண்டாய் ஸ்ரிங்காரமிட்டுசிலு சிலுக்கும் காற்றைக்கூட
சினேகம்கொள்ளும் மலர்களாகி
மனகிடங்கில் கிடப்பெதெல்லாம்
மடைதிறந்த வெள்ளமாக்கிஉள்வெளிக்குள் சிக்கியதை
உலகவெளியில் உலவ விட்டு
பூவுக்குள் நிகழ்வதெல்லாம்
புள்வெளிக்குள் வெளிப்படுத்திபுன்னகைக்கும் புது அர்த்தம் தந்து
புதுமை செய்யும் பதுமையாகி
எழுதுகோலின் வழியே
எண்ணிலடங்கா ஏக்கம் சொல்லிசொல்லில் வடிக்கயிலா சுக துக்கங்களை
சூசகமாகமாய் தன் சொல்லில் வடித்து
மனதிலுள்ள சுமைகளனைத்தும்
மயிலிறகால் வருடிவிட்டுமனக்கதவை திறந்துவிட்டு
மகத்துமிக்க மதிகளாகிதன்னெழுத்துக்களால் தரணியையே
தன்னை நோக்கவைக்கும் தார்மிக தமக்கைகளை
தளராமல் செழித்தோங்க
நல் விதைகளாக்கி விதைத்து
இந்நானிலமே போற்றி போற்ற
இனிதே உயர்ந்து வளரவேண்டுகிறேன்.
இன்று சிக்கியவைகள் இம்புட்டுதான்
இனி நாளை என்ன சிக்குதுன்னு பார்ப்போம்..



























































