07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 4, 2012

பைங்கிளியிடம் இருந்து ஸாதிகா பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே

அனைவருக்கும் வணக்கம்

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற தென்காசித் தமிழ்ப் பைங்கிளி - தான் ஏற்ற பொறுப்பினை வித்தியாசமான முறையில் - மன நிறைவுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் தினந்தினம் ஒரு பதிவரினைத் தேர்ந்தெடுத்து அவரின் பதிவுகளில் பலவற்றை அறிமுகப்படுத்தியபின், ஐந்து பதிவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பதிவுகளையும், புதிய பதிவர்களில் ஐந்து பேருடைய ஐந்து பதிவுகளையும் அறிமுகப்படுத்தி ஆக தினந்தினம் 11 பதிவர்களின் இருபது பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

தன்னுடைய சுய அறிமுகத்தினில் - தன்னுடைய சிறந்த 18 பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

இவரது பதிவுகள் : 7
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்கள் : 67
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகள் : 138
பெற்ற மறுமொழிகள் : 145

பைங்கிளியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நன்றி பைங்கிளி ; சென்று வருக பைங்கிளி

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் வருகிறார் சகோதரி ஸாதிகா ஹாஜா .

இவர் "எல்லாப் புகழும் இறைவனுக்கே " என்ற தளத்தில் எழுதி வருகிறார்.1980 களில் பதின்பருவத்தில் இருந்தே பத்திரிகைகளுக்கு எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டி வந்த இவருக்கு,கதை,கட்டுரை,கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். திருமணம்,குழந்தைவளர்ப்பு என்று இவருக்கும் ,பத்திரிக்கைக்குமான தொடர்பு சிறிதுகாலம் விட்டுப்போய் இருந்தாலும், மீண்டும் 2009 இல் இருந்து எழுத ஆரம்பித்து விட்டார்..தமிழ்நாட்டில் தென்கோடியில் பிறந்த இவர் இப்பொழுது குழந்தைகள் படிப்பு நிமித்தமாக புலம்பெயர்ந்து வசிப்பது சென்னையில்.

சகோதரி ஸாதிகா ஹாஜாவினை வருக வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் தென்காசித் தமிழ்ப் பைங்கிளீ

நல்வாழ்த்துகள் ஸாதிகா ஹாஜா

நட்புடன் சீனா



மேலும் வாசிக்க...

ஆச்சரியப்படுகிறது பைங்கிளி


   சிலருக்கு மட்டுமே   மனதில் ஏதாவது ஒன்றைப்பற்றி பலவிதமான சிந்தனைகள் எழுவதுண்டு.அது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும்  சிந்திக்க வைக்கும் .
                                    இந்த வலைப்பதிவர் எண்ணங்கள் எழும் மனதையே 
கோகுல் மனதில் என்று தனது வலைப்பூவிற்குப்   பெயர் சூட்டியிருக்கிறார். 
                                    மனிதனும் கடவுளாகலாம் என்கிறார் எப்படி ?
                          துரோணர்கள் தொலைந்து விட்டார்களாம் உண்மைதானே..
                                            
                            
                                     வேகத் தடையைப் பற்றி என்றாவது ஒருநாள் நாம் சிந்தித்ததுண்டா? பயணத் தடையா நம்மிடம் கேள்வியும் கேட்கிறார்.   


                                
                    வண்ணமிட்டும் விழி திறக்கா ஓவியம் படங்களுடன் கவிதை 
யாரை நொந்து கொள்வது .
                                    முத்துக் குளிக்கத்தான் வாரியளான்னு தான்னு கேப்போம் 
இவரு முத்தமிட வாரியளான்னு கேட்கிறார் போய்ப் பாருங்க..யாருக்குன்னு தெரியும்.
                                              சந்தோசத் தீபாவளி என்றால் யாரை  நினைக்க வேண்டும் என்கிறார் இவர் ..நாம் யோசித்திருப்போமா என்றாவது ஒருநாள்?
                                                மனதை கனக்கச் செய்யும்   வாச்சாத்தி வன்மத்தின் உச்சம் வலியின் எச்சம்..கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.. 
                                               
                                                           இசையும் இவர் விட்டு வைக்கவில்லை 
இசை கேட்டால் என்னவாகும்..கேட்போமே நாமும்..
                                            சிலருக்கு சாப்பிடத் தெரியுமே தவிர தொப்பயக் குறைக்கத் தெரியாது..இவர் வழிமுறைகள் சொல்றார் கேளுங்க..உங்களுக்குத் தொப்பை இருந்தா!
                                                        தானே புயல் உணர்த்தியது இதைத்தானோ என்று நம்மையும் சிந்திக்க வைக்கிறார்.
                                                  இப்படி சிந்தனையின் சிகரமாகவும் நகைசுவை நாயகனாகவும் நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறார்.
    சாப்பாட்டை  வெறுப்பவர்கள் யாராச்சும் உண்டா..உழைக்றதே சாபிடுவதற்குத் தானே 
                             2 இன் 1 பொங்கலாம் சாப்பிட நான் ரெடி நீங்க ரெடியா 
மகி சமையலறைக்குப்  போகலாம் வாங்க.
                                       உடைந்த தட்டைத்  தூக்கிப் போட  மனசில்லாம 
மியாவ் வவ் ..பாருங்கப்பா இவங்க கைவண்ணத்த ..
                                           கொண்டைகடலை  சமையலாம் அருமைதான் ஆரோக்கியத்திற்கு .
                                                 கே.பி,ஜனா காதோடு ஏதோ சொல்கிறார் கேளுங்கள் .
                                                   பூண்டு ஊறுகாய் உடலுக்கு நல்லது சாப்பிட வாங்க என்கிறார் இங்கொருவர்.
                                                  
புதிய பதிவர்கள்தான் இவர்களும்  
                                          பசிச்சாதான் சோத்துப்பானைய திறந்து பார்ப்போம் 
இங்க பாட்டு கேக்கணும்னா    
அடுக்குப் பானையத் திறந்து பார்க்கணும் போல இருக்கு.. 
                                         குயில்களின் கீதங்கள் இங்கே கேட்கலாம் 

                                          புஞ்சை உண்டு நஞ்சை உண்டு ...ரசித்த பாடலாம் கேக்கலாமா கொஞ்சம்.. 
                                       கரடி பொம்மை செய்யக் கற்றுக் கொடுக்கும்  இந்த ஆச்சியிடம் நல்லா தொழில் கத்துக்கலாம்.
                                         தொலை பேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் சுரனிடம் சென்று. 


நன்றி நவில்கிறேன் 
                                      இந்தப் பதிவோடு என் பணி நிறைவடைகிறது .
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.வாய்ப்பளித்த வலைசரக் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்.
                                       தென்காசித்  தமிழ்ப் பைங்கிளி அனைவரிடமும் இருந்து விடை பெறுகிறது நன்றி வணக்கம் .
                                                      


                                              
                                            


                                         
                                 
                                                                 
            



மேலும் வாசிக்க...

Saturday, March 3, 2012

தமிழுக்குத் தலை வணங்குகிறது பைங்கிளி

                           தமிழை நாம் மறந்து போய்க் கொண்டிருக்கும் வேளையில் இங்கொருவர் வேர்களைத்தேடி அலைகிறார். 
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என்கிறார் .
                                             "வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா 
                                              யாக்கை பொறுத்த நிலம் " 
ஏமாந்த நிலமென்று விளக்கம் சொல்கிறார் கேளுங்கள். 
                                                  
                                          தமிழ் மொழி மேல் இவர் அன்பு கொண்டிருந்தாலும் எல்லோருக்கும் பிடித்த ஒரே மொழி என்று கூறுகிறார் உண்மைதான். 
                                          சிந்திக்கவும் சிரிக்கவும் கூட வைக்கிறார் இவர் கவிதைகளினால். 
அகப்பொருள் என்றாலே அகம் குளிர்ந்து  தான் போகிறோம் யாருக்கும் தெரியாமல் .
"வெட்கப் பட்ட ஆறு" இங்கே தலைவி அருவியிடம் பேசுவது சிரிக்கவைக்கத்தான் செய்கிறது. 
                                        
                                              தங்கத்தை விட மதிப்பு மிக்கது என்று எதைச் சொல்கிறார் பாருங்கள்.
 தங்கத்திற்கு உயிரில்லை 
உணர்வில்லை
அறிவில்லை 
மக்களை மாக்களை  மதிப்போம் என்கிறார் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம்.
                                      உயிரோடு செத்தவர்கள் யாரென்று இவரிடம்தான் கேட்க வேண்டும்.
                                                                      இங்கு முல்லை மலர் யாரைப்   பார்த்து சிரிக்கிறது யாருடன் பேசுகிறது. 
அதே சிரிப்பூ...என்று எதைச் சொல்கிறார்   பாருங்கள் .  


                                         தாம் எழுதிய பாடல்கள் மூலமே பெயர் பெற்ற புலவர்களையும்   இங்கே பெருமைப் புடுத்தியுள்ளார் 
தும்பிசேர்கீரனார்         
கல்பொரு சிறு நுரையார் 
                      இப்படி தமிழுலகமாகவே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் வேர்களைத் தேடி வலைபதிவர். 
                   தமிழுக்காக வலைபூக்கள் தோன்றவேண்டும்.இவரைப் போன்ற வலைப்பதிவர்களை   ஆதரிப்போம் வலைச்சரம் போன்ற இணயங்கள் மூலமாக.


           ஈழச் சிந்தனைகளை நம்முள் விதைக்கும் பதிவர்கள் 
           வெள்ளை மனமும் சிவப்புச் சிந்தனையுமாக  இவர் ஈழத்தில் சிவப்புப் பூக்கள் என்று எதைச் சொல்கிறார் பாருங்கள் 
                                               அகதி என்ற சொல் எவ்வளவு வலியைத் தருகிறதென்று முல்லை மண்ணின் மீள் குடியேற்றம் மீண்டும் அகதியாய் கவிதைவரிகள் நம்மையெல்லாம் வருந்தச் செய்கிறது.   
                          தாய் மண்ணுக்காகவும் உலக மானுடத்திற்காகவும் இந்த செஞ்ச்சோலைத் தமிழவன்
சே குவேராவின் வரலாற்றை தெரியாதவர்களுக்கு எடுத்துரைக்கிறது.
ஈழத்தைப் பாடாய்ப் படுத்துகிறது என்று இந்தியாவைச் சாடுகிறார் இங்கே. 

                            ஊர் தோறும் எமது அவலம் உரைத்திடுவோம் என்று இங்கொரு வலைபூ எழுதுகிறது. 


                                         வெற்றிநடை போடும் புதிய பதிவர்கள் 
வேப்பந்தோப்பு  மழைக் காலத்தைப் பற்றிச்  சொல்கிறது இங்கே தன் அனுபவமாய் .
                                           வேலிகள் தொலைத்த  ஒரு படலையின்கதையில்  இந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது படைப்பு படிப்பவர்களைச்    சிந்திக்க வைக்கிறது. 
                வருத் தலைவிளான் எழுதிய ஈரம் கவிதையைப்படிக்கும்பொழுது 
கண்களில் ஈரம் கசிகிறது.
                      இணையத்தில் இறக்கை விரிக்கிறது  ஈழ வயல் .
                                            ஏதோ சொல்றேங்க என்று இந்தக் காட்டான் உண்மையைச் சொல்கிறார். 

                                                            இதேபோல்  நாளையும் இறுதி நாளாக எண்ணங்களுக்கெல்லாம் சொந்தக் காரன் இவன்தானோ என்று எண்ணத் தோன்றும் வலைப்பதிவருடன்   புதிய பதிவர்களையும் பார்க்க அழைத்துச் செல்வாள் பைங்கிளி.
                                                            

மேலும் வாசிக்க...

Friday, March 2, 2012

கண்ணீர் சிந்தும் உறவுகளுக்காக பைங்கிளி

                                                         தட்டிக் கேட்க  யாருமில்லாத நிலை கண்டு  பேனா  ஒன்று உண்மைகளை கண்ணீராய் வலைப் பதிவில்  எழுதி  நியாயத்திற்காகப் போராடுகிறது.ஈழத்தை மீட்போம் வாருங்கள் .
                             ஈழப் பக்கங்களைப் படிக்கும்போதே மனம் கனத்து கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. 

அப்பட்டமாய் கண்முன் தெரிகிறது.
                                       

                                           சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுக் கோப்பையில் தசைப் பிண்டங்கள் விழுந்த அவலத்தை வட்டக்கச்சி வயல் வெளியில் புதைக்கப்பட்ட உறவுகளின் ரத்தம் இங்கே விவரித்திருக்கிறது.
                                                         இந்தியாவின் தெளிவற்ற ராஜ தந்திரம் ஆபத்தானது தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் மக்களே.
                                                        வீடுகளிலும் வீதிகளிலும் பிணங்கள் ஒரு கிராமமே படுகொலை செய்யப்பட்ட பதிவு.
                                                ரத்தத்தில் உறைந்த கிராமம் கற்பழிக்கப் பட்ட ஈழத்து தேவதைகள் படியுங்கள்  உங்கள் ரத்தம் உறைந்து  போகும். 
                                                 படு கொலைகளுடன் இவர்களது தீபாவளிப் பண்டிகையைப் பாருங்கள் .
                                              
                                            இந்தக் குற்றங்களிலிருந்து இலங்கை எப்படி தப்பிக்கப் போகிறது தப்பிக்க விடலாமா தீர்வு  சொல்லுங்கள்.
                                  மனித உரிமை மீறல்களுக்குத்  தகுந்த நீதி கிடைக்கட்டும்              
                                   இப்படிப்பட்ட வலைப் பூவினையும்  படித்து பகிர்ந்து போராடி  ஈழத்தின் கண்ணீரை துடைத்தெடுப்போம்  தமிழர்களே. 

மூத்த பதிவர்களைப்  பெருமைப்படுத்தும் நேரமிது:
                                             அட இது நம்ம ஆளுங்க என்று வை. கோபால கிருஷ்ணன் யாரைப் பெருமைப் படுத்துகிறார் பாருங்கள்.   
                                                 வானம் வெளுத்த வலைப்பூவில் இலங்கைத்தமிழில் சுனாமியும் ஒரு பெண்ணும் கவிதை கலங்கச் செய்கிறது படிப்பவர்களை .
                                      காதலியின் கடிதத்தைப் பற்றி எண்ணிய முடிதல் வேண்டும் வலைப்பூவின் கவிதை வரிகள் மனதை நெகிழச் செய்கிறது.
                                   கனாக் கால நாட்களைப் பற்றி காணமல் போன கனவு கவிதை எழுதுகிறது இங்கே.
                                  அன்றும் இன்றும் நாடும் வீடும்  எப்படி இருக்கிறதென்று படத்துடன் விளக்கத்தைக் கொடுத்து எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிறார் இவர். 

        புதுப் பதிவர்களுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கலாம் வாருங்கள் 
                                                          அகோரத்தின் அங்கீகாரத்தினைப்  படம் பிடித்துக் காட்டுகிறது கீத மஞ்சரியின் கவிதை .
                                           கடுகு அவர்களின் கமலாவும் கத்தரிகாய் கூட்டும் கதையினை மின்னல் வரிகளாய் நமக்குச் சொல்லிவிட்டுப்  போகிறார் கணேஷ் அவர்கள்.
                                                        நம் காதல் ஆத்மக் காதல் என்று கிராமத்துக் கருவாச்சி அழகாகக் கூறுகிறார்  படித்துப் பாருங்கள். 
                                              அவர் வாழ்வு கனவுகளோ என்று தென்றலின் கவிதை வரிகள் மனதை கனகச் செய்கிறது. 
                                                காதலர் தினத்தில் கவிதைத் தூரலை வலைத்தளத்தில் தூரியிருக்கிறது  தூரிகை ஒன்று 
நாமும் சென்று நனைந்து  வருவோம் வாருங்கள் .
                                              
                                                        சங்கத் தமிழ் வளர்த்தப்  புலவர்கள் இன்று இருந்திருந்தால் இவரைப் பார்த்துப்  பெருமைப்பட்டிருப்பார்கள் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் வளர்க்கும் தமிழன் ஒருவனுடன் மூத்த பதிவர்கள் சிலரின் வலைதளங்களுக்கும் கூட்டிப்போவாள் பைங்கிளி

                                                      


 



  
மேலும் வாசிக்க...

Thursday, March 1, 2012

எது இல்லையென்று ஆராய்ச்சி செய்கிறது பைங்கிளி

படைப்புகள் ஒவ்வொன்றும்  பெருமைப்பட்டுக் கொள்கின்றன
இங்கே படைப்பாளியால் படைக்கப் பெற்றோமென்று.    

ஈழத்தின்  நிலைமையை இவரது தூரிகைத்  துயரமாய்க் காட்டுகின்றது 
ஓவியனாய்ப் படைப்பாளியைப் பெருமைப்பட வைக்கிறது. 
                                              
அகநானூற்றுத் தலைவியைப் பற்றிபடித்திருப்போம்.
இங்கே அவளது ஓவியம் வலைப்பூவை அலங்கரிக்கிறது. 
கோபத்தைக்  கூட இனிப்பாய்ச் சொல்ல இந்தக் கவிஞனால் 
தான் முடிகிறது.

வந்து மிதி வரட்டும் மழை என்று தன் கவிதை மூலம் காதலியைப் பெருமைப்படுத்துகிறார்   
கற்றுக்கொள்ளுங்கள் ஆண்களே.
கலைத்துறைக்கு நிர்வாணம் தேவையா என்பதைத்  தனது கட்டுரை மூலம் 
தெளிவுபடுத்துகிறார் சிறந்த படைப்பாக.
கதையாசிரியராய்க்  கதையும் சொல்கிறார் கேளுங்கள்.
பவர் கட் இப்போ தமிழ் நாட்டுக்கு ஏற்ற கதை .
வாசற் கோலம் இங்கே வாழ்க்கைக் கோலம் என்று 
இவரது புகைப்படம்  சொல்கிறது.

உலக சினிமாவை உயர்த்தி பிடித்தவர்கள் என்று தொடர் ஒன்று வெளிவந்து கொண்டிருகிறது .
அணு உலையினை கேலி சித்திரமாய் சித்தரிதிருகிறார் வலையில் .
இப்படி இவரது வலைபூ அனைத்தையும் வழங்குகிறது நமக்கு .
சிறப்பான சில வலைப்பூக்கள் இங்கே நறுமணம் வீசிக்கொண்டே இருகின்றன. 
அந்த நறுமணங்களை நாமும் சுவாசிப்போம் வாருங்கள்.

வேதாவின் வலை  நிர்வாணத்திற்கு என்ன அர்த்தமென்று சொல்கிறது அதையும் பார்த்துவிட்டேன் .நீங்களும் பாருங்கள்.

மனிதனாகப் பிறந்து அகதியாய் வாழ்வதை மனிதம் இங்கே மனிதர்களுக்குச் சொல்கிறது.

நினைத்துப்  பார்கிறார் இங்கொருவர் எனக்குப் பிடித்த கதைகள் என்று..
இதைப் படிக்கும்போது நாம் ஏன் கதை எழுதக் கூடாதென்று சிந்திக்க வைக்கிறது .

வலைப்பூவின் வரலாறு கோகுல் மனதில் இருந்து நம்மை வியக்க வைக்கிறது . 

இயற்கைகளை ரசிக்கத் தெரிந்த நமக்கு பறவையினங்களையும் ரசிக்க
அழகுப் புறாக்களை  நம் கண்களுக்கு தங்கம் பழனி விருந்துவைக்கிறார். 
புதிய பதிவர்களின் வருகை நேரமிது வரவேற்போம் வாருங்கள்.

ஐயோ என்ன மாமா சொல்றீங்க என்று குழந்தை அலறுவதை 
தமிழனாகிய நான் கேட்டுக்  குமுறுகிறேன் என்கிறார் இங்கொருவர் . 

ஜல் ஜல் என கொஞ்சும் சலங்கைகளை கல்யாண வீட்டில் நோட்டமிட்டதில் 

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று மூத்தவராய்  இருந்து நமக்கெல்லாம் அறிவுரை வழங்குகிறார் 
திண்டுக்கல் தனபாலன்.
தெய்வக் கிளிகள் என்று கிளிகளைப் பெருமைப் படுத்தியதில் 
மணிராஜுக்கும் பெருமைதான் கிளியின் பெயரை வைத்ததால் 
எனக்கும் பெருமைதான்.
 தாமிரபரணி ஆறு இங்கே இருவருக்கு மட்டுமே ஓடுகிறது யாருக்கென்று பார்க்கலாம் வாருங்கள்.
இதே போல் நாளையும் கண்ணீருக்கு மட்டுமே சொந்தமான வலைப்பூ ஒன்றுக்கும், மூத்த பதிவர்களின் வலைதளங்களுக்கும் அழைத்துச் செல்வாள் பைங்கிளி..
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது