07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 1, 2012

எது இல்லையென்று ஆராய்ச்சி செய்கிறது பைங்கிளி

படைப்புகள் ஒவ்வொன்றும்  பெருமைப்பட்டுக் கொள்கின்றன
இங்கே படைப்பாளியால் படைக்கப் பெற்றோமென்று.    

ஈழத்தின்  நிலைமையை இவரது தூரிகைத்  துயரமாய்க் காட்டுகின்றது 
ஓவியனாய்ப் படைப்பாளியைப் பெருமைப்பட வைக்கிறது. 
                                              
அகநானூற்றுத் தலைவியைப் பற்றிபடித்திருப்போம்.
இங்கே அவளது ஓவியம் வலைப்பூவை அலங்கரிக்கிறது. 
கோபத்தைக்  கூட இனிப்பாய்ச் சொல்ல இந்தக் கவிஞனால் 
தான் முடிகிறது.

வந்து மிதி வரட்டும் மழை என்று தன் கவிதை மூலம் காதலியைப் பெருமைப்படுத்துகிறார்   
கற்றுக்கொள்ளுங்கள் ஆண்களே.
கலைத்துறைக்கு நிர்வாணம் தேவையா என்பதைத்  தனது கட்டுரை மூலம் 
தெளிவுபடுத்துகிறார் சிறந்த படைப்பாக.
கதையாசிரியராய்க்  கதையும் சொல்கிறார் கேளுங்கள்.
பவர் கட் இப்போ தமிழ் நாட்டுக்கு ஏற்ற கதை .
வாசற் கோலம் இங்கே வாழ்க்கைக் கோலம் என்று 
இவரது புகைப்படம்  சொல்கிறது.

உலக சினிமாவை உயர்த்தி பிடித்தவர்கள் என்று தொடர் ஒன்று வெளிவந்து கொண்டிருகிறது .
அணு உலையினை கேலி சித்திரமாய் சித்தரிதிருகிறார் வலையில் .
இப்படி இவரது வலைபூ அனைத்தையும் வழங்குகிறது நமக்கு .
சிறப்பான சில வலைப்பூக்கள் இங்கே நறுமணம் வீசிக்கொண்டே இருகின்றன. 
அந்த நறுமணங்களை நாமும் சுவாசிப்போம் வாருங்கள்.

வேதாவின் வலை  நிர்வாணத்திற்கு என்ன அர்த்தமென்று சொல்கிறது அதையும் பார்த்துவிட்டேன் .நீங்களும் பாருங்கள்.

மனிதனாகப் பிறந்து அகதியாய் வாழ்வதை மனிதம் இங்கே மனிதர்களுக்குச் சொல்கிறது.

நினைத்துப்  பார்கிறார் இங்கொருவர் எனக்குப் பிடித்த கதைகள் என்று..
இதைப் படிக்கும்போது நாம் ஏன் கதை எழுதக் கூடாதென்று சிந்திக்க வைக்கிறது .

வலைப்பூவின் வரலாறு கோகுல் மனதில் இருந்து நம்மை வியக்க வைக்கிறது . 

இயற்கைகளை ரசிக்கத் தெரிந்த நமக்கு பறவையினங்களையும் ரசிக்க
அழகுப் புறாக்களை  நம் கண்களுக்கு தங்கம் பழனி விருந்துவைக்கிறார். 
புதிய பதிவர்களின் வருகை நேரமிது வரவேற்போம் வாருங்கள்.

ஐயோ என்ன மாமா சொல்றீங்க என்று குழந்தை அலறுவதை 
தமிழனாகிய நான் கேட்டுக்  குமுறுகிறேன் என்கிறார் இங்கொருவர் . 

ஜல் ஜல் என கொஞ்சும் சலங்கைகளை கல்யாண வீட்டில் நோட்டமிட்டதில் 

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று மூத்தவராய்  இருந்து நமக்கெல்லாம் அறிவுரை வழங்குகிறார் 
திண்டுக்கல் தனபாலன்.
தெய்வக் கிளிகள் என்று கிளிகளைப் பெருமைப் படுத்தியதில் 
மணிராஜுக்கும் பெருமைதான் கிளியின் பெயரை வைத்ததால் 
எனக்கும் பெருமைதான்.
 தாமிரபரணி ஆறு இங்கே இருவருக்கு மட்டுமே ஓடுகிறது யாருக்கென்று பார்க்கலாம் வாருங்கள்.
இதே போல் நாளையும் கண்ணீருக்கு மட்டுமே சொந்தமான வலைப்பூ ஒன்றுக்கும், மூத்த பதிவர்களின் வலைதளங்களுக்கும் அழைத்துச் செல்வாள் பைங்கிளி..

24 comments:

  1. //தெய்வக் கிளிகள் என்று கிளிகளைப் பெருமைப் படுத்தியதில்
    மணிராஜுக்கும் பெருமைதான் கிளியின் பெயரை வைத்ததால்
    எனக்கும் பெருமைதான்.//

    மிகவும் அருமையான அறிமுகங்கள்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நல்ல அறிமுகங்கள். பல புதிய விஷயங்கள் அறிய முடிந்தது மிக்க நனறி. (நிர்வாணத்திற்கு பொருள் சொன்ன வலைத்தளம் வேதாவுடையது தேவா என்று குறிபபிட்டுள்ளீர்கள். திருத்தினால் நல்லது) தொடரட்டும் உங்கள் நல்லறிமுகங்கள். உங்களுக்கு வாழ்த்துக்களும், அறிமுகமானவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும்.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான அறிமுகங்கள்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. உண்மையில் மனதை துயரபடுத்தும் ஓவியம் படைப்பாளியுடையது...! ஒரு ஓவியம் ஈழத்தின் நிலையை விளக்கியுள்ளது பைங்கிளிக்கு பாராட்டுகள்! நன்றிகள்!

    ReplyDelete
  5. தெய்வக் கிளிகள் என்று கிளிகளைப் பெருமைப் படுத்தியதில்
    மணிராஜுக்கும் பெருமைதான் கிளியின் பெயரை வைத்ததால்
    எனக்கும் பெருமைதான்.

    அருமையாய் எம் தளத்தைப்
    பெருமைப் படுத்திய பைங்கிளிக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    ReplyDelete
  6. தங்கள் பெயருக்காகவே தங்கள் தளத்திற்கு வருகை தந்தேன்.. நிறைவாய் அருமையான படைப்புகளால் மனம் கவர்ந்து இனிமை சேர்த்தது..

    பைங்கிளியை யாருக்கும் பிடித்துப் போகுமே!!!!

    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் என்னை தோரணமாய் தொடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது பைங்கிளி..மற்ற பதிவர்களுக்கும் எனது வாழ்த்துகள்..

    www.padaipali.com

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அனைவருக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. நல்ல அறிமுகங்களுக்கு நன்றி. அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  11. அனைவருக்கும் வாழ்த்துகக்ள்

    ReplyDelete
  12. அடக் கடவுளே! வழக்கமாக காலையில் வலைச்சரம் பார்த்து கருத்து எழுதி விட்டே செல்வேன். இன்று எனக்கு என்ன வந்தது. தென்காசிப் பைங்கிளியும் என்னை அறிமுகப் படுத்தியுள்ளது. இது கூட எனக்குத் தெரியாமல் இருந்துள்ளேன். இது என் ராசி.
    (அதிகாலை ஒரு தொலைபேசி வந்து எல்லாம் குளம்பி விட்டது. முழு நாளுமே)
    புதிய புதிய அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களிற்கும் நன்றி.
    இதில் அகதி நிலை கூறும் பழனிவேல் எழுதிய மழை எனும் கவிதை , முத்தம் எனும் கவிதைகள் மிகச் சிறப்பானது. (எனக்கு மிகப் பிடித்தமானது . அதை வாசித்து உடனே நானும் மழைக் கவிதை எழுதினேன். அப்படி ஒரு தூண்டுதலான கவிதையாக நான் உணர்ந்தேன்.)
    இனி என் வலையை அறிமுகப் படுத்தியதற்கு மிக மிக நன்றி. ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. எனது முக நூல் சுவரில் இகை படமாக்கிப் போடுகிறேன். வலையில் முகநூல் பட்ஜ் உள்ளது.
    மீண்டும் நன்றி. நன்றி. தொடரட்டும் பணி. நாளை சந்திப்போம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. அழகாய் வலைச்சரத்தை தொடுத்து அனைவரிடமும் பாராட்டுப் பெறுவது என்பதே ஒரு தனிக் கலை. அதை செவ்வனே செய்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள் பல.

    அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்..!!

    நன்றி..!

    ReplyDelete
  14. வாழ்த்திய நெஞ்சங்களுக்குத் தமிழ்ப் பைங்கிளியின் நன்றிகள்.

    ReplyDelete
  15. வலைச்சரத்தில் எனது பதிவையும் இணைத்து, அறிமுகப்படுத்தியதற்கு நன்றி திருமதி தென்காசித் தமிழ்ப் பைங்கிளி அவர்களே!

    ReplyDelete
  16. ஒவ்வொருவரும் தனது கனவுக்கும், கருத்துக்கும் முகவரி தேடித்தேடி முடிந்துவிடுகின்றனர்.
    அந்த வகையில், எங்களுக்கு முகவரியை அறிமுகம் செய்தது மிக்க நன்றி.

    ReplyDelete
  17. எனது பதிவையும் இணைத்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி திருமதி தென்காசித் தமிழ்ப் பைங்கிளி அவர்களே! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  18. அதெப்படி மூழ்கி முத்தெடுக்க முயற்சித்த எங்களையும் முத்துகளாய் மாற்றிவிட்டீர்கள்!!!! மிக்க நன்றி....

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. அறிமுகம் வித்தியாசமாய் அருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வாழ்த்திய நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  22. வாழ்த்திய நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  23. ஹையா! சலங்கைக்கும் இடமிருக்கா?!!! ரெம்ப நன்றிங்க...!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது