சுயச்சரம்
➦➠ by:
ஸாதிகா
வலையுலக நட்புக்கள் அனைவருக்கும் ஸாதிகாவின் இனிய காலை வணக்கங்கள்!
வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்கச் செய்து என் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கொடுத்த ஐயா சீனா அவர்களுக்கும்,என் எழுத்தில் நம்பிக்கை வைத்து எனக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி ஊக்கமும் ஆக்கமும் தந்து பரிந்துரை செய்த ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும்,மற்றும் வலைச்சர ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
வலைப்பூக்களின் வளர்ச்சிக்கு வலைச்சரம் பேருதவியாக இருக்கின்றது.வேறு எந்த பிரதிபலனும் எதிர் பாராமல் வலையுலக வளர்ச்சி ஒன்றினையே குறிகோளாகக் கொண்டு சீனா ஐயா மற்றும் வலைச்சர குழுவினர் அனைவரின் சேவையையும்,உழைப்பினையும் அறிந்து வியந்து போகின்றேன்.வலைச்சரம் மேன்மேலும் சிறப்படைய வலைச்சர குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை இச்சமயம் கூறிக்கொள்கிறேன்.
சீனா ஐயா வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்ததும் கணினி முன் அமர்ந்தவள் என் முக்கிய அலுவல்கள்,சாப்பிடும், தூங்கும் நேரம் தவிர எனக்கு மற்ற பொழுதுகள் கணினி முன்னேயே சுவாரஸ்யமாக கழிந்து கொண்டுள்ளது.ஒரு பரிட்சை எழுதும் மாணவியின் உணர்வுடன் இருக்கின்றேன்.
2009 ஆம் வருடத்தில் இருந்து எழுதுகின்றேன்.இந்த வலைப்பூ ஆரம்பித்ததால் நான் இன்று வரை 274 பாலோவர்களும்,455949 ஹிட்டுகளும்,பல நல் உள்ளங்களின் நட்புக்களும் பெற்று இருப்பது பற்றி மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன்.
என்னைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவினை பாருங்கள்.
வாழ்கையில் நகைச்சுவை என்பது இன்றியமையாதது.நாமும் சிரித்து பிறரையும் சிரிக்க வைக்கும் பொழுது மனித மனம் கொள்ளும் உவகை சொல்லில் அடங்காதது.அந்த வகையில் நகைச்சுவையான பதிவுகள் எனக்கு மிகவும் உகப்பானவை.
நான் கிண்டிய உப்புமாவை டேஸ்ட் செய்து பாருங்கள்.உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
அப்படியே டெய்லர் கிச்சாவை சந்தித்து விடுங்கள்.இப்படியும் ஒரு கில்லாடியா என்று சிரிப்பீர்கள்.
இட்லிக்கடை அன்னம்மா வாயைத்திறந்தாலே பழமொழி அருவியாக கொட்டும்.அன்னம்மாவின் பழமொழி அருவியில் சற்று நனையுங்கள்.
வாழ்வியல் என்ற லேபிளில் நான் பகிர்ந்த பதிவுகள் நிறைய பதிவர்களால் விரும்பி பார்க்கப்பட்ட பதிவுகள்.
என்தந்தையைப்பற்றிய இந்த பகிர்வும் இந்தக்கவிதையும் என் ஆத்ம திருப்திக்காக எழுதப்பட்டவை.
மீண்டும் நாளை மற்றொரு சரத்தில் சந்திப்போம்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
நன்றி!
அன்புடன்,
ஸாதிகா ஹாஜா
|
|
சுயச் சரம் மிக மிக எளிமையகவும்
ReplyDeleteவழக்கம்போல மிக மிக அருமையாகவும்.....
தங்கள் வ்லைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ஸாதிகா ஆரம்பமே ஆக்கப்பூர்வமாக அருமையாக தொகுத்து இருக்கீங்க.தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருக தோழி வருக
ReplyDeleteஉங்கள் பதிவு ஓவ்வொன்றும் சுவாரசியம்.சூப்பரான நச் பதிவுகளை தொகுத்து இருக்கீங்க
கலக்குங்க கலக்க்குங்க இது உங்கள் வாரம்
தங்கள் சிறந்த பதிவுகளின் தொகுப்புடன் அருமையான ஆரம்பம். தொடருங்கள் ஸாதிகா! வாழ்த்துகள்!
ReplyDeleteஅக்கா
ReplyDeleteரொம்ப அழகான அறிமுகம்
வாழ்த்துகள்
அட, நம்ம அக்காதான் டீச்சரா (ஆசிரியர்) இப்ப இங்க? வாழ்த்துகள்!! ரொம்ப மகிழ்ச்சியா இருக்குக்கா.
ReplyDeleteஅளவான சுய அறிமுகத்தில் தன்னடக்கம் மிளிர்கிறது!!
சுயச்சரம் அருமை.
ReplyDeleteவலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்ற தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
//என் எழுத்தில் நம்பிக்கை வைத்து எனக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி ஊக்கமும் ஆக்கமும் தந்து பரிந்துரை செய்த ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும்//
எல்லாப்புகழும் இறைவனுக்கே !
வாழ்த்துக்கள் சகோதரி கலக்குங்கள்
ReplyDeleteகாலையில் இங்கு கருத்திட்டேன் ஸாதிகா! இப்போ வந்து பார்க்கும் போது அதைக் காணோமே! ஒரு வேளை இனித் தான் வருமா?ஒரே ஒரு இடுகை இருந்தது. நான் இரண்டாவதாக இருந்தேன்.
ReplyDeleteசரி போகட்டும்.. உங்கள் சுய - சரம் நன்று. தந்தை பற்றியது பின்னர் வாசிப்பேன். அனைத்தும் நன்கு அமைய வாழ்த்துகள். ஆவலுடன்...எனது கணவர் பெயர் இலங்காதிலகம்.( வேதா திலகம் தவறுடா)
வேதா. இலங்காதிலகம்.
சுயச் சரம் மிக மிக எளிமையகவும்
ReplyDeleteவழக்கம்போல மிக மிக அருமையாகவும்.....
தங்கள் வ்லைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
சுயச்சரம் சிறப்பு , உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .
ReplyDeleteவலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்!! ஆரம்பமே அசத்தலா இருக்கு...
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ரமணி சார்.
ReplyDeleteகருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆசியா.
ReplyDeleteகலக்குங்க கலக்க்குங்க //
ReplyDeleteசொல்லி விட்டீர்கள் அல்லவா? செய்துவிடுவோம்.நன்றி ஜலி.
உற்சாக கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி
ReplyDeleteமிக்க நன்றி ஆமினா கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteஅட, நம்ம அக்காதான் டீச்சரா (ஆசிரியர்) இப்ப இங்க? //படித்துக்கொடுக்கும் வாத்தியாரம்மாவாக போவதற்கு ஆசைப்பட்டேன்.இப்பொழுது வலைச்சர ஆசிரியராக பணி கிடைத்துள்ளது.மிக்க நன்றி ஹுசைனம்மா.
ReplyDeleteசுயச்சரம் அருமை.
ReplyDeleteவலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்ற தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
//என் எழுத்தில் நம்பிக்கை வைத்து எனக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி ஊக்கமும் ஆக்கமும் தந்து பரிந்துரை செய்த ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும்//
எல்லாப்புகழும் இறைவனுக்கே //
வை கோபாலகிருஷ்ணன் ஐயா மிக்க நன்றி,மகிழ்ச்சி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ இஸ்மத்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ வேதா இலங்கா திலகம்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சசிகலா.
ReplyDeleteகருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மி அம்மா.
ReplyDeleteமிக்க நன்றி மேனகா.
ReplyDeleteசுயச்சரம் எளிமையாகவும், சுருக்கமாகவும் அருமையா தந்திருக்கீங்க....
ReplyDeleteஉங்கள் வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துகள்.
இங்கே உங்களை வலைச்சர ஆசிரியராக பார்ப்பது மிகவும் மகிழ்வாயிருக்கிறது ஸாதிகா! நிச்சயம் இந்தப்பணியை மிக அழகாக செய்து முடிப்பீர்கள். என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!!
ReplyDeleteசுயச்சரம் அருமை. நான் படிக்காத சிலதையும் பார்க்க முடிந்தது. தொடரும் இந்த சுவாரஸ்ய வாரத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுயச்சரம் அருமை.
ReplyDeletevaazhthtukal kalakkunkal
ReplyDeleteசுயச் சரம் அருமை.... இந்த வாரத்தின் மற்ற அறிமுகங்களுக்குக் காத்திருக்கிறேன்....
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸாதிகா. இனி தினமும் இங்கு வந்துட்டா போதும் நல்ல அருமையான சுவாரஸ்மயமான உங்களுக்க்கே உரிய நடையில் உள்ள உங்க தொடர்களை இங்கு காணமுடியும் என்ற சந்தோஷத்தில் நாளையும் வருகிறேன்.
ReplyDeleteவலைசரம் உண்மையிலேயே நல்ல ஒரு வலைப்பூ. நான் அப்ப வருவேன் இதில் வந்த பின் நான் நிறய்ய வலைபூக்களுக்கு சென்றிருக்கேன். நன்றி வலைசரம். தொடரட்டும் உங்க பணி ஸாதிகா.
ஆஆஆ ஸாதிகா அக்கா.. நான் தான் லேட்டாகிட்டேன் போல..
ReplyDeleteறீச்சர் ஸாதிகா அக்காவுக்கு வாழ்த்துக்கள்... வாங்கோ வாங்கோ.. உங்கட அழகிய எழுத்து நடையில், ஒருவாரம் வலைச்சரத்தைக் கலக்குங்கோ... நாங்களும் கலக்கிறோம்.
வாழ்த்துகள் ஸாதிகாக்கா.. வலைச்சர ஆசிரியராக ஜொலிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். தூள் கிளப்புங்க
ReplyDeleteஆவி 1:விஷம் குடிச்சி சாகப் போனேன்.விசத்துல கலப்படம்....அதனால சாகல....
ReplyDeleteஆவி 2: அடடா...அப்புறம்??
ஆவி 1: காப்பாத்த மருந்து கொடுத்தாங்க... மருந்துல கலப்படம்....அதுல செத்துட்டேன்..
ஆ...ஸாதிக்காக்கா வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்... -))
ReplyDeleteவாங்க வாங்க வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சரம் மேன்மேலும் சிறப்படைய வலைச்சர குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..
ReplyDeleteவாழ்த்துகள் ஸாதிகாக்கா..
ReplyDeleteநல்ல அறிமுகம்.., தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..!
ReplyDeleteகோவை 2 தில்லி கருத்துக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநிச்சயம் இந்தப்பணியை மிக அழகாக செய்து முடிப்பீர்கள். என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!!//
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மனோ அக்கா.
தொடரும் இந்த சுவாரஸ்ய வாரத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
ReplyDeleteமிக்க நன்றி கணேஷ்ண்ணா.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராஜபாட்டை ராஜா.
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி சேகர்
ReplyDeleteஊக்கமூட்டும் கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி வெங்கட் ராஜா
ReplyDeleteவிஜி ரொம்ப உற்சாகமா வந்து பின்னூட்டி இருக்கின்றீர்கள்.மிக்க நன்றி.
ReplyDeleteறீச்சர் ஸாதிகா அக்காவுக்கு வாழ்த்துக்கள்... வாங்கோ வாங்கோ.. உங்கட அழகிய எழுத்து நடையில், ஒருவாரம் வலைச்சரத்தைக் கலக்குங்கோ... நாங்களும் கலக்கிறோம்...//என்னை றீச்சர் ஆக்கிட்டீங்க.கருத்துக்கு மிக்க நன்றி அதீஸ்.
ReplyDeleteகருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteகருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்டார்ஜன்.
ReplyDeleteமிக்க நன்றி ஜெய்லானி.எதற்கு இப்ப இந்த ஆவி ஜோக்?உண்மையில் புரியவில்லை.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மதுமதி.
ReplyDeleteவரவுக்கு நன்றி ஸ்ரீனிவாசன் ராமகிருஷ்ணன்
ReplyDeleteமிக்க நன்றி அக்பர்.
ReplyDeleteவரலாற்று சுவடுகள் கருத்துக்கு மிக்க நன்றி!
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteசுயச்சரம் மிகவும் நன்றாக இருக்கிறது ஸாதிகா.
நன்றி கோமதி அரசு.
ReplyDelete