07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 19, 2012

நான் விரும்பும் சில பதிவுகள், நீங்கள் விரும்பக் கூடியவையும்!

நான்விரும்பும் பதிவுகள் என குறிப்பிட்டு சொல்ல தயங்குகின்றேன். எழுதப்படும் நபரை பொறுத்து ஒவ்வொரு பதிவுக்கும்ஒரு தன்மை, சிறப்பு, ஆளுமை, உண்டு. சிலர் சம்பவங்களை மிகவும்கண்டிப்புடன் காணும் பொழுது சிலரோ விளையாட்டாகவும் நகைச்சுவையாகவும் நோக்கி பார்க்கின்றனர்.சிலர் பல அரிய புத்தகங்களை தேடி வாசித்து பதிவாக வெளியிடும் போது சில தங்கள் வாழ்க்கையில்காணும் சம்வங்களை மிகவும் நுணுக்கமாகவும் அருமையாகவும் கோர்த்து எழுதுகின்றனர்.

தகவல் பரிமாற்றம் குறிப்பிட்ட நபர்களின் கைகளில் மட்டும் தேங்காது; விரும்பும் அனைவரின் கைகளிலும் வலைப்பதிவு என்ற ஊடகம் வழியாக தவிழ்கின்றது என்பதே இதன்சிறப்பு. இதனால் ஊடகம் என்பது சில நிறுவனங்கள் குறிப்பிட்ட நபர்களை தாண்டி சமூகத்தில்எல்லா நிலைகளிலும் உள்ள தனி நபர்களால் எடுத்து செல்லப்படுகின்றது என்றால் அதற்க்கு மிகவும்சரியான எடுத்து காட்டு வலைப்பதிவுகளே. பெரியபெரிய பத்திரிக்கை தொலைகாட்சிகள் சொல்ல தயங்கும் விடயங்களை தனி நபர் வலைப்பதிவுகள்கையாளுகின்றது எழுதுகின்றது என்பதே இதன் மிகப்பெரிய சிறப்பு. பல வலைப்பதிவுகள் என் வாசிப்பு தளங்களைமுழுமையாக ஆக்கிரமிக்கின்றது என்றால் அதுவே உண்மை. அவ்வகையில் என் நினைவில் வந்த சிலபதிவுகளை மட்டும் பதிகின்றேன்.

முதன்முதலாக வலைப்பதிவு என்றால் எப்படியிருக்கும், எப்படி இருக்க வேண்டும் என கற்று கொடுத்தஎன் பேராசிரியரின் வலைப்பதிவே http://blogs.widescreenjournal.org/?p=2261 எனக்கு பிடித்தமானது. கொஞ்சம் நேரம் எடுத்து வாசிக்கவேண்டும் என்றிருந்தாலும் அறிவு களஞ்சியமான இப்பதிவு நான் என்றும் விரும்பி படிக்கும் பதிவாகும்.

ஒரு சிறந்த வலைப்பதிவின் தன்மை கொண்டதும், பத்திரிக்கையாளரும் உலகம் முழுதும் சுற்றுபயணம் செய்யும் டேவிட்என்பவரின் ‘பனியன்மான்’http://banyanman.blogspot.in/ என்ற வலைப்பதிவு எனக்கு மிகவும் பிடித்தமானது.

ஜெயமோகனால்எழுதப்படும் வலைப்பதிவை http://www.jeyamohan.in/நான் விரும்பி வாசிப்பது உண்டு. சில கருத்துக்கள் முரண்பட்டிருந்தாலும் சமூகத்தை எழுத்தால் ஆளுமை செய்யும் கருவியாக எடுத்து செல்லும் ஜெயமோகன் வலைப்பதிவுகள் என்றும்சிறந்ததே. எழுத்தை வெறும் பொழுது போக்காக மட்டுமே பார்க்காது காத்திரமான சமூக அக்கறையுடன் எடுத்து செல்கின்றார்.

விரும்பி படிக்கும் பதிவுகளில் ஒன்றாகும் ஈழ சகோதரி தமிழ் நதியுடைய வலைப்பதிவுகள் http://tamilnathy.blogspot.in/. பெண்களால் தைரியமாகவும் உணர்வு பூர்வமாகவும் எழுத இயலும் என்று நிரூபித்தவரே தமிழ் நதி அவர்கள். ஈழம் சம்பந்தமாக தன் கருத்துக்களை ஆணித்தரமாகஎழுதி வருபவர். தன் துயரைவிட தன் மக்கள் துயரை உள் கொண்டு ஈழ நாடு என்ற கருத்தாக்கத்தில்பல பதிவுகள் கானடாவில் இருந்து எழுதி வருகின்றார். எழுத்து என்ற ஆயுதத்துடன் உரிமைக்காக போராடும் கருவியாகவும் மாற்றி எழுதி வருபவர்.கவிதை, கதை, அரசியல் - அலசல் என இவருடைய பதிவுகளுக்கு ஒரு தனி இடம் உண்டு.

ஏனோ தானோ என்று வலைப்பதிவை பயன்படுத்துபவர்கள் மத்தியில், கானாபிரபாவுடைய வலைப்பதிவு கருத்து பரிமாற்றத்திற்க்கும் வலைப்பதிவை ஒரு மாற்று ஊடகமாகவும் பாவித்து எழுதி வருபவர். திரைப்படவிமர்சனம், தங்கள் நாட்டு செய்தி, ஈழ தமிழர்களின் அரசியல் வாழ்வியல் காலச்சார செய்திஎன விளாவாரியாக எழுதி வருகின்றவர். தன் கருத்தை திடமாக நிலைநாட்டும் இவருடைய வலைப்பதிவு http://kanapraba.blogspot.com/வாசிக்க சுவாரசியமானதாகும்.

'அவர்கள்உண்மைகள்' http://avargal-unmaigal.blogspot.in/2012/03/never-give-up.html என்ற வலைப்பதிவு வழியாக தான் சார்ந்த தான் காணும் சிறு சம்பவங்களையும் விருவிருப்பாகஎழுதி பதிவிடுவதில் கில்லாடியானவரே இப்பதிவர். அமெரிக்காவில் வாழும் தமிழர் என்றாலும்அமெரிக்காவில் நம் இந்தியர்கள் தமிழர்கள் செய்யும் தில்லாலங்கடி செயல்களையும் உரிப்பதுமட்டுமல்லாது தான் சந்திக்கும் நிகழ்வுகளை அக்மார்க்கு தங்கம் போல் பதிபவரே இவர். அவருடையவலைப்பதிவை அலுப்பு தட்டாது வாசிக்க இயலும்.

எனக்கு பிடித்த வலைப்பதிவுகளில் ஒன்றாகும் கோமதி சங்கர் என்ற நண்பர் போகனுடைய வலைப்பதிவுகள் http://ezhuththuppizhai.blogspot.in/2011/01/3.html. உளவியல் தளங்களை அலசி ஆராயும், பிரத்தியேக யுக்தியுடன் நுணுக்கமாகஎழுதும் இப்பதிவு விருவிருப்பானதே. கற்பனையும் உண்மையும் ஒன்றை ஒன்று சந்திக்கும் இவருடையபல பதிவுகள் நம்மை திகிலுக்கு கொண்டு செல்கின்றது.

நாஞ்ஜில் நாட்டு நண்பர்மனோவின் வலைப்பதிவும் http://nanjilmano.blogspot.in/2012/03/blog-post_18.htmlவிரும்பி வாசிப்பது உண்டு. தனி நபரால் தான் வாழும் சூழலை சமூகத்தைதளமாக கொண்டு விருவிருப்பாக உண்மையாக எழுதலாம் என்றால் இப்பதிவையும் எடுத்து கொள்ளலாம். நையாண்டியாக கதை சொல்லும் பாங்கு இவர் பதிவுகளில் காணலாம்.

தான்தருசிக்கும் ஆலயங்கள், சமூகத்திற்க்கு பயனுள்ள தகவல்கள் தரவேண்டும் என்ற பிரஞ்யில்எழுதும் ரத்தின வேல் ஐயாவில் வலைப்பதிகளையும் http://rathnavel-natarajan.blogspot.in/2011/10/blog-post_20.htmlவிரும்பி படிப்பது உண்டு. அடுத்தவர்கள் பதிவையும்ஆர்வமாக வாசிக்க தூண்டுவது ஐயாவின் சிறந்த பணியாகும்.

அடுத்தாகஸ்ரீலங்காவை சேர்ந்த மருத்துவர் முருகானந்தன் அவர்களுடைய பதிவு ஆகும்.http://hainallama.blogspot.in/2012/03/blog-post.html மனித உடல் நலம் மருத்தவம் பற்றி அலசிஆராயும் சிறந்த வலைப்பதிவாகும். சிறந்த வலைப்பதிவர் என விருது பெற்றவர் ஆவார் டொக்டர் சாப்!

'சாமியின் மனஅலைகள்' என எழுதி வரும் ஓய்வு பெற்ற டாக்டர் பழனி கந்தசாமி அவர்களின் பதிவுகள் ஒரு தனி தன்மையுடன்விளங்குகின்றது. பல அரிய தகவல்களை நமக்கு அள்ளி வழங்குகின்றது.http://swamysmusings.blogspot.in/

மதுரைசெய்திகள் நோக்க வேண்டும் என்றால் தம்பி தமிழ் வாசியின் வலைப்பதிவுக்கு http://www.tamilvaasi.com/2012/03/atube-catcher.htmlசெல்வது போல்இலங்கை ஈழ தமிழர்களின் உண்மையான செய்தி அறிய நண்பர் அம்பலத்தார் http://ampalatharpakkam.blogspot.in/2012/03/blog-post_13.html?spref=fbபக்கம் செல்கின்றேன். இவரின் ஈழ தமிழ் எழுத்து நடை சுவாரசியமானது!

அதேபோல் நாட்டு மன்னர்களின், அரசியல்வாதிகள், சமூகத்தளத்தில் விளங்கியவர்களின் வரலாற்றை வாசித்துவந்த நமக்கு சமூகத்தில் சாதராணமானவனின் சரித்திரத்தையும் உண்மையாக எழுத இயலும் எனதைரியமாக நிரூபித்து வரும் நோர்வை ஈழ தமிழரான என் அண்ணன் விசரன் என்ற சஞ்சயன் பதிவுகள்http://visaran.blogspot.in/2012/03/blog-post_18.html சிறந்தவை!

சுவிஸ்ஈழ சகோதரான ஸ்ரீ அண்ணாவின் வலைப்பதிவுகள் பக்தியை கையாளுவது போலவே வாழ்வியலையும் கையாளுகின்றது.அவருக்கு என ஒரு தனி பாணியை வைத்து கொண்டு நிலைக்கண்ணாடிhttp://srikandarajahgangai.blogspot.in/2012/03/blog-post_14.html என்ற பெயரில் எழுதி வருகின்றார்.

குழந்தைகளுக்குஎன கதை சொல்லும் அருட் தந்தை சேவியர் அவர்களின் வலைப்பதிவும் http://xavierantonyskidsstories.blogspot.in/2012/01/blog-post_5931.htmlஒரு சிறந்த இடத்தை தக்க வைக்கின்றது.

பெண் பத்திரிக்கையாளர் தமிழ் மலரின் http://tamilmalarnews.blogspot.in/2012/02/blog-post_24.html வலைப்பதிவும் கேரளா- தமிழக அரசியல் செய்திகள் கொண்ட சிறந்த வலைப்பதிவு ஆகும்.

இதைபதிந்து முடிக்கும் போது இன்னும் சிறந்த பதிவுகள் நினைவுக்கு வரலாம். சற்று மன்னியுங்கள்.விடுபட்டவையை அடுத்த பதிவில் பகிர்வேன். அன்புடன்….ஜெ.பி ஜோஸபின் பாபா

23 comments:

  1. vaazhthukkal!
    ungalukkum-
    ungalaal arimukapaduththa
    pattavarkalukkum!

    ReplyDelete
  2. மிகச் சிறப்பான பதிவுகளின் அரிய தொகுப்பு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. நல்ல பல அறிமுகங்கள்.
    மிக்க மகிழ்ச்சி.

    அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பல புதிய தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி. விரைவில் அங்கு செல்வேன். அறிமுகப்படுத்தப்பட்டப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்ல அறிமுகங்கள் . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கேள்விப்படாத பல புதிய அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  7. என்னுடைய பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    வலைச்சரத்தில் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. வாழ்த்துகள் அனைவருக்கும். குட் ஓப்பனிங்க்:)

    ReplyDelete
  9. நன்றி மகிழ்ச்சிகள் நண்பர்களே!

    ReplyDelete
  10. பல புதிய அறிமுகங்கள்.... படிக்கின்றேன் ஒவ்வொன்றாய்.....

    ReplyDelete
  11. அனைத்து சிறந்த பதிவர்களையும் தொகுத்து வழங்கியுள்ளீர்கள் சகோ! நன்றிகள்!

    ReplyDelete
  12. உங்களின் எழுத்துக்கு முன்னால் நான் எழுதுவது எல்லாம் குப்பைகளே...... இருந்தபோதிலும் இந்த குப்பையை கோபுரத்தில் கொண்டு வந்து வலைச்சரத்தில் என்னுடைய பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி சகோதரி ஜோஸபின்.

    ReplyDelete
  13. அருமையான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. பலரையும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்.. மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  15. சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. மிக நல்ல அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. சிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  18. மிக மிகத் திறமைசாலிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் தோழி !

    ReplyDelete
  19. நாஞ்சில் மனோ, தமிழ்வாசி பிரகாஷ், அவர்கள் உண்மைகள் உள்ளிட்ட சிலரைத் தவிர பல புது அறிமுகங்கள்! இயலும்போது படித்து்ப் பார்க்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. ஒவ்வோருவர் வாசிப்புச் சுவையும் வித்தியாசமானது. இதில் உங்கள் தன்மையை அறிகிறோம் . பதிவர்களிற்கு வாழ்த்துகள் உங்களிற்கும் வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  22. நான் அனைத்துப் பதிவுகளையும் படிப்பதில்லை [நேரமில்லை!?]. என் போன்றவர்களுக்கு இது போன்ற பதிவுகள் மிக மிகப் பயனுடையவை.
    மிக்க்க்க்க்க.....நன்றிம்மா.

    ReplyDelete
  23. ஹம்......... அருமையான தொகுப்பு......... அன்பரே.......

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது