07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 27, 2012

கதம்பம் - 2 (வலைச்சரத்தில் இன்று)

இன்று எனக்குப் பிடித்த சில பதிவுகளை பட்டியலிடுகிறேன்.

எனக்குப் பிடித்த சில வலைப்பதிவுகள்:

1. இவர் அற்புதமான கவிஞர். நான் பதிவுலகில் கண்ட சிறந்த பதிவர்களில் இவரும் ஒருவர். வெறும் பொழுதுபோக்குக்காக காதல், கத்தரிக்காய் என்று எழுதாமல் ஆழமான கருப்பொருள் கொண்டு அழகான படிமம், குறியீடு உள்ளடக்கி அற்புதமாய் கவிதைகளைப் படைப்பவர். இன்றைய பதிவுலகக் கவிஞர்களில் இவர் தலைசிறந்தவர் எனலாம். மற்ற படைப்பாளிகள் இருக்கின்றனர். அநேகர் நல்ல கவிதைகளை தந்தாலும் பலரது கவிதைகளை படித்தவர்கள் தவிர பாமரர்கள் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் இவரது கவிதைகள் எளிமையின் மறுஉருவம். எளிமையாய் இருந்தாலும் அசத்தல் வார்த்தைகள். அலங்கார நடை. வானம் வரை எட்டும் உரைவீச்சு. இவா யார்? அவர்தான் ரமணி சார். இவரது கவிதைத் திறத்துக்கு ஓர் உதாரணமாக இந்த பரிணாமம் அல்லது யதார்த்தம் கவிதையை படித்துப் பாருங்கள். நீங்களே நான் சொல்வதனைத்தையும் ஒத்துக்கொள்வீர்கள். நல்ல தரமான பதிவர். தவறவிடாதீர்கள் இவரது கவிதைகளை.


2. அடுத்தது நம்ம முனைவர் இரா.குணசீலன். இவர் அற்புதமான படைப்பாளி. இந்த பரபரப்பான வாழ்க்கையில் இலக்கியங்களை நாம் மறந்துவிட்டோம். டென்சனாய் இருக்கும் நேரங்களில் இவரது படைப்புகளில் சற்று இலக்கியச் சாறு அருந்தினீர்களானால் நிச்சயம் உங்கள் இதயத்துக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். சந்தேகமில்லை. இவர் நம்மிடையே பதிவுலகில் இருப்பது நாம் செய்த பாக்கியமே. சாம்பிளுக்கு இந்த படைப்பை பாருங்கள்.

மனசை வாசித்தவள்

3. அடுத்து நாம் பார்க்க இருப்பது சகோதரி ஹேமா. இவர் அற்புதமான கவிஞராவார். கவிதை இவர் கரங்களில் துள்ளி விளையாடுகிறது. வார்த்தைகள் சரம் சரமாய் வந்து விழுகிறது. இவரது படைப்புகள் அனைத்துமே அருமையானவை. தவறவிடக் கூடாதவை. உதாரணத்துக்கு இந்த படைப்பைப் பாருங்கள்.

கனவு

4. அடுத்து நாம் பார்க்க இருக்கும் நபர் சகோதரர் மகேந்திரன் அவர்கள். வசந்தமண்டபம் மகேந்திரன் என்றால் பதிவுலகில் பிரசித்தம். எளிமையான வார்த்தைகளால் கவிதைச் சரம் தொடுக்கும் அற்புதப் படைப்பாளி. அழகழாய் கவிதை புனைகிறார். நாட்டுப்புற மெட்டில் சில நேரம் இவர் படைக்கும் பாடல்கள் அற்புதம். அழகு. உதாரணமாக இவரது கீழ்க்கண்ட படைப்பைப் பாருங்கள்.

நதிக்கரை தாகங்கள்


5. அடுத்து நாம் பார்க்க இருக்கும் நபர் சகோதரர் கணேஷ் அவர்கள். இவர் பயங்கர படிப்பாளி என்பது இவரது படைப்புகளைப் பார்த்தாலே புரியும். எழுத்துக்கள் அட்சர சுத்தம். கண்ணைப் பறிக்கும். நடைவண்டிகள் என்று ஒரு தொடர் எழுதுகிறார் பாருங்கள். அருமையிலும் அருமை. மற்றும் பல்சுவைப் பதிவுகளும் எழுதுகிறார். உதாரணத்துக்கு இவரது நடைவண்டிகள் தொடரின் 9-ம் பகுதியைப் பாருங்கள்.

நடைவண்டிகள் 9


6. அடுத்தது சகோதரி கீதா. கீதமஞ்சரி என்னும் வலைப்பூவினூடாக இவர் அற்புதமான படைப்புகளை படைத்து வருகிறார். இவர் உண்மையான கலைப் படைப்புகளை ஆழமாய் சுவாசிக்கும் குணமுடையவர். மேலோட்டமாக படிக்காமல் பதிவை நன்றாக உள்வாங்கி அழகாக பின்னூட்டமிடுவார். அதுவே அவரது ரசிப்புத்திறனையும், படைப்புத்திறனையும் வெளிப்படுத்துகிறது. படிப்பாளிதான் படைப்பாளி ஆக முடியும் என்பது அறிஞர்களுக்கே புரியும். அருமையான படைப்பாளி. எடுத்துக்காட்டாக இவரது ஓர் படைப்பு கீழே.

உயிரின் வலி

7. அடுத்து நாம் பார்க்கப் போகும் நபர் பதிவுலகிற்கு கிடைத்த சொத்து. இன்றைக்கு கவிதைகள் என்ற பெயரில் கவிதையின் அடிப்படைக் கூறுகளே தெரியாத கவிஞர்கள் என்ற பெயர் படைத்தவர்கள் பதிவுலகிலே பரவியிருக்கிற இந்த நேரத்திலே அற்புதமான மரபுக் கவிஞர் இவர். மரபுக் கவிதைகள் அநாயசமாய் அற்புதமாய் படைப்பவர். இவரைச் சொல்லாமல் இப்பதிவு நிறைவடையாது. இவரது திறமைக்கு ஓர் உதாரணம் கீழே.

மாற்றம் ஒன்றே நிலையாகும்


நேரமாகிவிட்டபடியாலும் பதிவு பெரிதாகிவிடக் கூடாதென்பதாலும் அடுத்த பதிவில் எனக்குப் பிடித்த மற்ற பதிவர்களைப் பற்றி சொல்கிறேன். இந்த பட்டியல் இதோடு முடிந்து விடவில்லை. அற்புதமான பதிவர்களுடன் நாளையும் நீளுகிறது...! காத்திருங்கள்!

46 comments:

  1. பெரிய பெரிய வலைப்பதிவர்களுடன் என் பெயரும். மிக்க நன்றி துரை. அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அனைவரும் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், அவர்கள் அனவரின் எழுத்துக்கும் நான் அடிமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பாராட்டு அனைவருக்கும் மகிழ்வளிக்கக் கூடியதே
    நம்மை விட உயர்ந்தவர் நம் நிஜ உயரத்தை விட
    கொஞ்சம் அதிகம் கூட்டிக் காண்பிக்கையில்
    நிச்சயம் இரட்டிப்பு மகிழ்ச்சியே
    இரட்டிப்பு மகிழ்ச்சியளித்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. எல்லா கவிதைகளும் சுமார் தான்.

    ReplyDelete
  6. சிறப்பானதொரு பதிவு , பெரிய பதிவர்களை அறிமுகப்படுத்திய விதம் அருமை .

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள்...

    ReplyDelete
  8. பெரிய பெரிய திறமைசாலிகளுக்கிடையில் என் வலைப்பூவும் இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்வையும் கூடுதல் பொறுப்புணர்வையும் தருகிறது. தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி. இன்று அறிமுகமாயுள்ள அத்தனைப் பதிவர்களின் பதிவுகளையும் விரும்பிப் படிப்பவள் என்னும் வகையில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். மணக்கும் கதம்பம் கட்டித்தரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டும்.

    ReplyDelete
  9. பின்னூட்டம் போடவேண்டுமென்று போடாமல ஆழமான கருத்துச் சொல்லி,புரியாத கவிதைகளைக்கூடக் கேள்வியாய்க் கேட்டு வைக்கும் உங்களிடமிருந்து கிடைத்த பாராட்டு மனதைக் குளிர வைக்கிறது டானியல்.இன்னும் எழுதவைக்கும் ஒரு உற்சாக பானமும் கூட.தமிழுக்குக் கிடைத்த சந்தோஷம்.நன்றி.எல்லோருமே நான் உலவும் வலைத்தளங்கள்தான்.வாழ்த்துகள் !

    ReplyDelete
  10. அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வலைச்சர ஆசிரியருக்கும்
    அறிமுகமான சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. என் பதிவையும் அறிமுகம் செய்த தங்கள் அன்புள்ளத்தை எண்ணி நெகிழ்ந்தேன் அன்பரே..
    நன்றி.

    ReplyDelete
  14. வலைச்சரம் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. நல்ல அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    தங்களிற்கும் வாழ்த்துகள்.மீண்டும்.சந்திப்போம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. வணக்கம் நண்பரே,
    ஒரு வார காலமாக என்னால் வலைப்பக்கம்
    வர முடியவில்லை.
    நீங்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதில்
    மிக்க மகிழ்ச்சி.
    அழகிய பூக்களால் மணமிக்க சரங்கள்
    தொடுத்திட வாழ்த்துக்கள்.

    என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகளும்
    மற்றவர்களுக்கு வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  17. நல்ல அறிமுகங்கள்....

    வாழ்த்துகள் நண்பரே....

    ஹேமா அவர்களின் வலைப்பூ இதுவரை படித்ததில்லை. படிக்கிறேன்...

    ReplyDelete
  18. சிறப்பான அறிமுகங்கள்..

    ReplyDelete
  19. பலரும் அறிந்தவர்களே. ஒரு சிலர் புதியோர். வாசிக்கிறேன் நன்றி

    ReplyDelete
  20. அறிமுகங்களுக்கு நன்றி

    ReplyDelete
  21. தம்பி!
    என்னையும் அறிமுகப்படுத்தி
    என்கவிதை தன்னையும் அறிமுகப்படுத்தி பெருமை சேர்துள்ளீர்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. அருமையான தொகுப்பு எல்லோரும் தனித்துவம் மிக்க பதிவாளர்கள் தான் ரமனி ஐயா ,மகேந்திரன்,ஹேமா,கணேஸ் ,புலவர்,கீதா நானும் அவர்களைபடிக்கும் ஒரு வாசகன்!

    ReplyDelete
  23. சிறப்பான அறிமுகங்கள்..
    வாழ்த்துகள்

    ReplyDelete
  24. @ கணேஷ்

    - உடன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  25. @ காந்தி பனங்கூர்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  26. @ Lakshmi

    - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  27. @ Ramani

    - இல்லை ரமணி சார். உண்மையில் என்னைவிட நீங்கள்தான் சிறந்தவர். இதை பதிவுலகமே ஒத்துக் கொள்ளும். என்ன அழகாய் எழுதுகிறீர்கள். வருகைக்கும் அழகான விரிவான அற்புதமான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி சார்.

    ReplyDelete
  28. @ சமுத்ரா

    - அப்படியா? எல்லாம் சுமார்தானா? ஓ.கே. நல்ல வேளை. மோசம் என்று சொல்லாமல் விட்டீர்களே. அதுவரை சந்தோஷம். வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோ.

    ReplyDelete
  29. @ சசிகலா

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  30. @ கவிதைவீதி சௌந்தர்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  31. @ கீதமஞ்சரி

    - தாங்களும் திறமைசாலிதான். சந்தேகமில்லை. உண்மையான திறமைசாலிகளை நான் பாராட்டத் தவறுவதில்லை. நன்றி.

    ReplyDelete
  32. @ ஹேமா

    - அப்படியா? ஓ.கே. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  33. @ ஹைதர் அலி

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  34. @ கோவை 2 தில்லி

    - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  35. @ Guna Thamizh

    - தங்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா? தமிழ்தேனீ அல்லவா நீர்? வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி முனைவரே!

    ReplyDelete
  36. @ கோகுல்

    - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  37. @ Kovaikkavi

    - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  38. @ மகேந்திரன்

    - அப்படியா? என்னாலும் சில நேரங்களில் நீண்ட நாட்களுக்கு வலைப்பக்கம் வரமுடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் வரத்தான் செய்திருக்கின்றன. அதனால் என்ன? தங்களின் அன்பு இருந்தால் போதும். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  39. @ வெங்கட் நாகராஜ்

    - அப்படியா? சரி சார். ஹேமாவின் தளத்தை அவசியம் படியுங்கள். அருமையான வலைப்பூவாம் அது. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட் சார்.

    ReplyDelete
  40. @ Riyas

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  41. @ மோகன்குமார்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  42. @ ராஜபாட்டை ராஜா

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராஜா.

    ReplyDelete
  43. @ புலவர் இராமாநுசம்

    - அய்யா! தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தாமல் இருக்க முடியுமா? சிறந்த வலைப்பதிவுகள் பட்டியலில் சிறப்பான இடம் உங்களுக்கு நிச்சயம் உண்டு. ஆகையால்தான் தங்களைக் குறிப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  44. @ தனிமரம்

    - வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  45. @ Lakshmi

    - வருகைக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது