07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 15, 2012

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு…



நவீன்என்னைப் படுத்தாதேடாஒழுங்கா இந்த மாத்திரையை முழுங்கிட்டுப்போ… (நவீன் ஓடிக்கொண்டே இருக்கிறான்)

ஏங்கநீங்க வந்து குடுங்க. இவனோடு போராட என்னால் முடியலகண்ட தண்ணியையும் குடிக்கவேண்டியது, அப்புறம் உடம்புக்கு வந்து படுத்துக்க வேண்டியது, நாம டாக்டர்கிட்ட கூட்டிட்டுதான் போகமுடியும். மருந்து அவன்தானே சாப்பிடணும். இப்பிடிப் பிடிவாதம் பிடிச்சா என்ன பண்றது?

இவ்வளவு பெரிய மாத்திரையைக் குடுத்தா அவனால் எப்படி முழுங்கமுடியும்? உடைச்சி ரெண்டாக் குடு.

மாத்திரையைஉடைக்காமதான் கொடுக்கணுமாமேஉடைச்சா நல்லதில்லையாம் ஹாய் நலமாவில் டாக்டர் எம்.கே.முருகானந்தன் சொல்லியிருக்கார்.

இது வேறயா? அப்ப கஷ்டம்தான். தன்வந்திரி பகவான்தான் காப்பாத்தணும்.

தன்வந்திரி பகவானா?

கேள்விப்பட்டதில்ல? மணிராஜ்இராஜராஜேஸ்வரி மேடம் அழகழகா படங்களோடு தன்வந்திரி பகவான்  பத்திப் பதிவிட்டிருக்காங்க போய்ப்பாரு.  

! தாய்லாந்துப் பயணத்தில் அரண்மனையில் முதலில் வரவேற்கிறது தாய் தன்வந்திரின்னு  சொல்லி அவரோட சிலையையும் பிரமாண்ட அம்மிக்கல்லையும் குழவியையும் படம்பிடிச்சிப் போட்டிருந்தாங்க துளசி மேடம். இவர்தானா அவர்?

அம்மிக்கல்லும் குழவியும் நமக்கு மட்டும்தான் சொந்தம்னு நினைச்சிருந்தேன். தாய்லாந்து வரைக்கும் அதன்புகழ் பரவிடுச்சா?

நம்ம வீட்டுக்கும் ஒரு அம்மிக்கல்லும் குழவியும் வாங்கணுங்க. கரண்ட் அடிக்கடி போறதால் அவசரத்துக்கு தேவைப்படுது. 

யார் அரைப்பா? உனக்கு அதில் அரைச்சுப் பழக்கம் இருக்காதே

பழகிக்கவேண்டியதுதான். வேறென்ன பண்றது? வசதி, தொழில்நுட்பம் எல்லாம் பெருகினாலும் மின்சாரமென்னும் அத்தியாவசியம் இல்லாமல்  பின்னோக்கி நகரும் நாட்களை    பெட்டகம் பாசமலர் அழகா சொல்லிட்டாங்க. போதாக்குறைக்கு வேலைக்காரப் பொண்ணு ராசாத்தியும் நாலு நாளா வரல. கரண்ட் பண்ற கூத்துல மெஷின்ல போடவும் முடியல. இனி  கையாலதான் துவைக்கணும். 

கோவை2தில்லி சொல்லியிருக்கிற மாதிரி என்னை நினைச்சுகிட்டே துவைச்சால் துணி துவைக்கிற கஷ்டமே தெரியாது 

ஏங்க, அந்த இந்திக்காரம்மாவோட நடனத்துக்கு காரணம்ஒருவேளை அவங்க சமையல் அட்டகாசங்கள் ஜலீலா கமலோட இந்தப்பதிவை   படிச்சிருப்பாங்களோ?

இருக்கும்இருக்கும். ம்அடுப்பில ஏதோ கொதிக்கிற வாசம் மூக்கைத் துளைக்குதேஎன்ன செய்றே?

பூரி சாகு.

என்னது? பூரி சாகுவா? ஏன்டி, பூரிச்சுப் போய்த்தான் சாகணுமா? சும்மாவே சாகக்கூடாதா?

விளையாடாதீங்க. நான் சொன்னது பூரியும் சாகுவும். மிராவின் கிச்சனில் காஞ்சனா ராதாகிருஷ்ணன் சொல்லிக்குடுத்தபடி செஞ்சிருக்கேன். அதான் வாசம் மூக்கைத் துளைக்குது.

ஹூம்.. படிச்சிப் பார்த்து செய்றேஎப்படி இருக்குமோ?  

பயப்படாம சாப்பிடுங்க.. நான் ஒண்ணும் பீகார்க்காரி இல்ல. 

ஏன், பீகார்க்காரங்களுக்கு இந்தப் பலகாரத்தை ஒழுங்காப் பண்ணத் தெரியாதா?

அதில்லங்க,  பீகார் பெண்கள் சமைக்கிற முறையைப் பத்தி  ஆச்சி ஆச்சி திருமதி பி.எஸ்.ஶ்ரீதர் எழுதியிருக்கிறதைப் படிச்சால் இப்படி கேட்க மாட்டீங்க. நாங்களும் அப்படிச் செஞ்சா …. அவ்வளவுதான் தஞ்சை கவிதை கிருஷ்ணப்ரியா எழுதினமாதிரிதான் நடக்கும். 

ஆனாலும் எவ்வளவு ஆசைன்னு பாட்டி சொல்றதைப் பாத்தியா? என்ன இருந்தாலும் நான் உம்மேல வச்சிருக்கிற ஆசை மாதிரி யாரும் யார்மேலயும் வச்சிருக்க மாட்டாங்க.

ரொம்ப ஆசைதான். ஆசையிருந்தா கூடவே அக்கறையும் இருக்கணும். தேன்சிட்டு திவ்யா@தேன்மொழி சொல்றதில் இருக்கிற ஆதங்கம் ஆண்களுக்குப் புரியுமா? தனியா கஷ்டப்படுறேனேஇன்னைக்கு உங்களுக்கு லீவுதானேகொஞ்சம் ஒத்தாசை பண்ணினா என்ன? மகாராஜா மாதிரி உக்காந்த இடத்தை விட்டு எழுந்திரிக்கிறதில்ல.

மகாராணி, தங்கள்மேல் யாம் வைத்திருக்கும் அன்பை, துணி துவைத்துதான் காட்டவேண்டுமென்றால் யாம் அதற்கும் துணிகிறோம்.  

இதுக்கொண்ணும் குறைச்சலில்ல. எப்போன்னு சொல்லுங்க. 

ஆபிஸ் வேலை கொஞ்சமே கொஞ்சம் இருக்கு. முடிச்சிட்டு வந்துடறேனே….. 

உங்களை நம்பமுடியாது. பாட்டி சொல்லும் கதையில் வரமாதிரி தன் கையே தனக்குதவின்னு வாழறதுதான் புத்திசாலித்தனம்போல. குட்டி சுவர்க்கம் ஆமீனா வேலைக்காரியைத் தேடி ஒரு பயணமே போனாங்களாம். வை. கோபாலகிருஷ்ணன் சார்  கதையில் வர முனியம்மா   மாதிரி வேலைக்காரி கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்!

…. அவளும் அது மாதிரி நினைப்பாளே..நமக்கு நல்ல எசமானியம்மா வேணும்னு.

ஏன் நான் நல்ல எசமானியா இல்லையா?

அதிலென்ன சந்தேகம்? நீ என்னை விரட்டுற விரட்டைப் பார்த்தாலே அது புரிஞ்சிடுமே.

கிண்டலா பண்றீங்க? பண்ணுங்கபண்ணுங்க. மனைவியின் அருமை எப்போ தெரியும்னு அன்னைத்தமிழ் தமிழ்விரும்பி ஆலாசியம் சொல்லியிருக்கார். உங்களுக்கும் அப்போதான்….

ஏய்மலர்சின்ன விஷயத்துக்கெல்லாம் ஏன் பெரிய பேச்சு பேசறே?

இது சின்ன விஷயமா? கல்யாணத்துக்குமுன்னும் பின்னும் ரங்கமணிகள் பத்தி அப்பாவி தங்கமணி அப்பவே ஆய்வு செஞ்சி சொன்னாங்களேஅவங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அவங்க ஏதோ நகைச்சுவைக்கு எழுதினா அதையேப் பிடிச்சிக்கிறீயே எழுத்தோசை தமிழரசி ஏங்கி நிற்கிற மாதிரி நானும்தான் ஏங்கி நிக்கிறேன். நீ கண்டுக்கவே மாட்டேங்கறியேஅதுக்கென்ன பண்ண? 

நல்ல ரசனைதான்பெண்களின் மன உணர்வுகளோடு ஆண்களின் உணர்வுகளை ஒப்பிடாதீங்க. நாங்க எங்க எல்லா சொந்தங்களையும் ஒரு நாளிலேயே மறந்து உங்களையே அடைக்கலம்னு நம்பி வரோம். ஊஞ்சல் கலையரசியின் புதியவேர்கள் கதையைப் படிச்சால் பெண்களின் மனநிலை தெரியும். அப்படியே ரேவாவின் எதிர்பார்ப்புகள் நிறைந்த வீட்டைப் போய்ப்பாருங்க 

வீடா? எங்க கட்டியிருக்காங்க?

ம்? கவிதையில்தான். நம்பிக்கையோடு முதலடி எடுத்துவைக்கிறேன்னு சொல்லும்போது அந்த நம்பிக்கை பொய்த்துவிடக்கூடாதேன்னு மனம் பதைக்குது. அந்த அளவுக்குத் திருமணம் சில பெண்களை சுயமிழக்கவச்சிடுது.  ரிஷபன் சாரின் நுகத்தடி மாடுகள் கதையைப் படிச்சிருக்கீங்கதானே? பல பெண்கள் வாழ்க்கை அப்படித்தான் இருக்கு. நாஞ்சில் நாடன் கதைகளில் சைவமும் சாரப்பாம்பும் படிச்சிப்பாருங்க. அது மாதிரி எத்தனைப் பெண்கள் மெல்லவும் முடியாம துப்பவும் முடியாம கஷ்டப்படுறாங்க தெரியுமா?

மனோவியல் கட்டுரைகளின் பெட்டகமான மகிழம்பூச்சரம் சாகம்பரி மேடம் என்ன சொல்றாங்க பாரு. ஒரு திருமணம் உண்மையாக மறுதலிக்கப்படுவது பெண் நினைத்தால் மட்டுமேங்கிறாங்க. அதுக்கு அவங்க சொல்ற முதல் காரணத்தையே பாருஉன்னால் மறுக்கமுடியுமா  இன்றையப் பெண்களின் வாழ்க்கைமுறையில் உண்டாகியிருப்பது வளர்ச்சியா வீக்கமான்னு புதிய வசந்தம் ஆயிஷா அபூல் அலசியிருக்கிறது இன்னொரு சான்று. 

பெத்தவங்க பிள்ளைகளை ஒழுங்கான பாதையில் வளர்க்கத்தான் நினைக்கிறாங்க. ஆனா பல நேரங்களில் இது எதிர்விளைவையும் தந்திடுமோன்னு பயப்படுறாங்க. பதின்பருவப்பிள்ளைகளின் அம்மாவாயிருப்பது சும்மாயில்லன்னு தேனம்மை லெக்ஷ்மணன் மேடம் சொல்லியிருக்காங்களே 

பதின்பருவக் குழந்தைகள் பற்றியக் கவலை ஒருபக்கம்னாபால்மணம் மாறாக் குழந்தைகள் மறுபக்கம். பல பெற்றோர் படுத்துறபாட்டை நாமும்தான் பார்க்கிறோமே…  விடியல் நிவாஸ் எழுதியிருக்கிற காகிதம்  கவிதை படித்துமுடித்தபோது, பால்யம் தொலைத்தக் குழந்தைகள்தான் நினைவுக்கு வந்துபோனாங்க. 

பிள்ளைகளை வளர்க்கிறதில் படிப்பை விடவும் ஒழுக்கத்துக்கும் மனிதாபிமானத்துக்கும்தான் முதலிடம் தர கற்றுத் தரணும். பள்ளி மாணவர்கள் நாலுபேர் மட்டும் ஒரு விபத்துச் சூழலை வெகு நேர்த்தியாய்க் கையாண்ட அனுபவத்தை மெச்சி அந்தத் தெய்வங்களுக்கு சொல்லித்தந்தவன் நான்   என்று மனம் நெகிழ்கிறாரே இரா.எட்வின்.

அதுதான் இயற்கை. ஒரு உயிர் துடிப்பதைக் கண்டு நம்மையறியாமலேயே நாமும் துடிக்கணும். அப்படியில்லாமல் கண்டும் காணாமல் போகமுயல்வது என்னைக்கும் மனம் உறுத்திக்கிட்டு, வடிகால் கிருத்திகாவின் முகமூடிக் கவிதைக்குள்ளிருக்கும் வேதனை வெளிப்பாடாய்த்தான் அமையும்.
இதயம் துளைத்துப் புக
சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம்னு தன்னைப் பாதிக்காதவரையிலும் எந்தக் கொடுமைகளைப் பற்றியும் கவலைப்படாத மனங்களைக் காட்டமாக சுட்டிச் சொல்லியிருக்காங்க சிறுமுயற்சி முத்துலட்சுமி 

ப்ச்! பலரும் அப்படித்தானே இருக்காங்க. மனவனத்துக்குள் மறைந்து வாழும் விநோதப் பிராணியின்  விபரீதத் தன்மையை அக்ஷ்ய பாத்ரம் மணிமேகலா அற்புதமா சொல்லியிருக்காங்க.. எல்லா மனவனங்களுக்குள்ளும் நிச்சயமா ஒரு விநோதப் பிராணி உலவிக்கிட்டேதான் இருக்கும்போல.

எவ்வளவு பெரிய பிராணியா இருந்தாலும் பாசத்தைக் காட்டினால் பிள்ளை மாதிரி ஆயிடாதா? இட்லி விரும்பித் தின்ன நெல்லையப்பர் கோயில் குட்டியானை நயினார்  பத்தி வேணுவனம் சுகா எழுதினதைப் படிச்சதும் கலங்கிட்டேன்.

தன்னோட பட்டத்து யானைக்கு சுளுக்கு விழுந்து ராஜாவே கலங்கிப் போனது தெரியுமா உனக்கு?

யானைக்கே சுளுக்கா? ஐயோ பாவமே

அந்த யானைக்குச் சுளுக்கெடுத்தக் கதையை   ஆடுமாடு கிராமிய நடையில் என்னமா எழுதியிருக்கார் பாருங்க. இவருடைய எழுத்தில் முழுக்க முழுக்க மண்வாசம் என்னமா மணக்குது.  

மண்வாசனை இன்னும் சில மனங்களில் விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டு இருப்பதால்தான் கிராமங்கள், இன்னும் உயிர்ப்போடு இயங்கிட்டிருக்கின்றன. கரை சேரா அலை அரசனின் காமிரா பதிவாக்கிய அவரது கிராமத்தின் அழகைப் பார்த்தாலே ஆசையா இருக்கில்லேபாசிக்குளத்தில் கல்லெறிபட்டுக் கிளம்பும் நீர்ச்சிதறல் ரொம்ப அழகா இருக்கு.  பயன்படாத குளத்தில்தான் பாசி வளரும். நம்ம மூளையும் இப்படிதான். உபயோகப்படுத்தலைன்னா பாசிபடிஞ்ச குளமாகிடும். அப்புறம் சொல்லெறிஞ்சிதான் கலைக்கணும்.  

சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா? யாராலயும் எந்த சிந்தனையும் இல்லாம சும்மா இருக்கவே முடியாது.

ஏன் இருக்கமுடியாது? முயற்சி செஞ்சி பாருங்களேன். 

இன்று சும்மா இருக்கலாமெனத் திட்டம்   போட்டுத் தோற்றுப்போனதை அன்புடன் அருணா சொல்லிட்டாங்களேஅப்புறம் நான் வேற தனியா முயற்சி செய்யணுமா?

இப்ப மட்டும் என்னவாம்? சும்மாதானே உக்காந்திருக்கீங்க. 

நான் எங்க சும்மா இருக்கேன்? உன்கிட்ட வாதாடிகிட்டு இருக்கேனே….  

விதண்டாவாதம் பண்ணிட்டிருக்கீங்க.

சீச்சீசம்வாதம்!

அதென்ன சம்வாதம், சமாதானவாதம்னுட்டு? எனக்குத் தெரிஞ்சதெல்லாம் விதண்டாவாதம் மட்டும்தான்.

இலக்கியச்சாரல் சொ.ஞானசம்பந்தன் ஐயா எழுதினதை இன்னும் படிக்கலையா? வாதத்திலேயே நாலுவகை   இருக்காம்.  தெரிஞ்சிக்கோ….

இந்தவகையில் பிடிவாதம் அடங்காதோ?

பிடிவாதமாச்சே…. எப்படி அடங்கும்? ஒரு பிரச்சனைன்னா இரு தரப்பிலும்  ஃபிஃப்டி ஃபிஃப்டி  விட்டுக்கொடுத்துப் போனால்தான் வாழ்க்கை இனிப்பும் உப்புமா வாழ்க்கை ருசிக்கும்னு மிடில்கிளாஸ் மாதவி தன் அனுபவத்தோடு சொல்லியிருக்காங்க பார். அதையெல்லாம் படிச்சுத் தெரிஞ்சுக்க.  

நல்லாப் பேசுங்கஇந்த சாமர்த்தியத்தை நவீனை மாத்திரை முழுங்கவைக்கிறதில் காட்டுங்க பார்ப்போம்.

ஹூம். முயற்சி பண்றேன்.

மன்னா, தங்கள் முயற்சிக்கு வாழ்த்து.  வெற்றிவாகை சூடிவாருங்கள்.

கொழுப்புடி உனக்கு. சரி, அதென்ன எல்லாரும் வாகை சூடி வாருங்கள்னு சொல்றாங்க. என்ன அர்த்தம் அதுக்கு?


இதுதான் வாகைப்பூவாம். இந்தப்பூ வெற்றியின் அடையாளம். வெற்றி பெற்ற மன்னர் தன் கழுத்தில் வாகைப்பூ மாலை அணிந்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வருவாராம். கபிலர் சொன்ன 99 மலர்களில் இதுவும் ஒண்ணு. மத்தப் பூக்களையும் பார்க்க விரும்பினா கற்க நிற்க என்னும் இந்தத் தளத்துக்குப் போய்ப் பாத்திட்டிருங்க.  நான் போய் வேலையை முடிக்கிறேன்.


52 comments:

  1. சுவையான அறிமுகங்கள்....

    அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. தன்வந்திரி பகவானா?

    கேள்விப்பட்டதில்ல? மணிராஜ்ல இராஜராஜேஸ்வரி மேடம் அழகழகா படங்களோடு தன்வந்திரி பகவான் பத்திப் பதிவிட்டிருக்காங்க போய்ப்பாரு.


    அறிமுகம் செய்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  3. மிகவும் சுவாரஸ்யமாக சுவையாகவும் தொகுத்தளித்த ரசனையான பகிர்வுகள்..

    மீண்டும் போய் படிக்கவேன்டும்.. ஏற்கென்வே படித்திருந்தாலும்..

    நன்றி. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. மீண்டும் பல பயனுள்ள வலைத்தளஙகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
    அருமை

    ReplyDelete
  5. மிகவும் அருமை சகோதரியாரே!

    ஆழ்கடலில் முத்துக் குளித்து
    அள்ளிவந்த முத்தெல்லாம்
    அழகாய்த் தொடுத்து
    அற்புத மாலையாக
    சொற்பதங்களுடன் பதிவிட்ட
    தங்களின் முயற்சிக்கு நன்றியும்
    பாராட்டும்.

    ///சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா? யாராலயும் எந்த சிந்தனையும் இல்லாம சும்மா இருக்கவே முடியாது.////
    உண்மை தான் அப்படி இருந்தவரெல்லாம் ஞாநியானார்களே அப்படிஎன்றால்
    சும்மா இருப்பது எவ்வளவு சிரமம்.

    திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற அருணகிரி நாதரை தடுத்தாண்ட ஸ்ரீ முருக பெருமானார். "சொல்லற சும்மா இரு" என்று அருளிச் சென்றாராம்.

    தங்களின் பதிவில் எனது கவிதையையும் காண்பித்து என்னைப் பாராட்டிய தங்களுக்கு எனது இனிய நன்றிகள் சகோதரியாரே!

    ReplyDelete
  6. அடேயப்பா..எவ்வளவு அறிமுகங்கள்.. அத்தனையையும் கோர்த்த விதமும் அற்புதம் கீத மஞ்சரி வாழ்த்துக்கள். என் இடுகையையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.:)

    ReplyDelete
  7. விரும்பிச் சுவைக்க வைத்து விட்டீர்கள்!!

    அழகான அறிமுகங்களின் தொகுப்பில் என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  8. புதுமையான முறையில் பதிவர்களின் பதிவுகளை அறிமுகபடுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    சில வற்றைதான் படித்து இருக்கிறேன்.
    நிறைய படிக்க வேண்டியவை இருக்கிறது.

    நன்றி.

    ReplyDelete
  9. நல்ல
    அறிமுகங்கள்

    ReplyDelete
  10. சுவையான அறிமுகங்கள்....

    அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. நீங்கள் அறிமுகப்படுத்தும் விதம் மிக அழகு
    அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்களும்
    உங்களுக்கு நன்றிகளும்...

    ReplyDelete
  12. எத்தனை அறிமுகங்கள்?அத்தனையும் முத்துக்கள்.மிக வித்தியாசமான பாணி!

    ReplyDelete
  13. சுவையான கலவையான அறிமுகங்கள்.. மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  14. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி கீதா

    ReplyDelete
  15. மிக்க நன்றி கீதமஞ்சரி...மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  16. ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு....

    என்ற அழகான பாடலின் பல்லவியையே இன்றைய தலைப்பாக வைத்துள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  17. ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு....

    என்ற அழகான பாடலின் பல்லவியையே இன்றைய தலைப்பாக வைத்துள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  18. //வை. கோபாலகிருஷ்ணன் சார் கதையில் வர முனியம்மா மாதிரி வேலைக்காரி கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்! //

    என் சிறுகதை ஒன்றினையும் இன்று அடையாளம் காட்டி அனைவர் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதற்கு, என் ”முனியம்மா” சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி, நன்றி, நன்றி!

    ReplyDelete
  19. இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்து பதிவுகளும் அருமை.

    அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  20. அழகாகக் கதைக் கூறி,கரம்பிடித்து சுற்றிக் காமிச்சிருக்கீங்க..! விடுவோமா..! நன்றி தோழி..:)

    ReplyDelete
  21. அழகான அறிமுகங்களின் தொகுப்பில் என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி!!

    புதுமையான முறையில் பதிவர்களின் பதிவுகளை தொகுத்தளித்த விதமும் அற்புதம் !

    ReplyDelete
  22. பெரிய அறிமுகங்கள்..

    ரசி்க்கும்படிஇருந்தது..

    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. அருமையான அறிமுகங்கள். Hard work. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  24. என் பதிவை அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி :) ஏனைய பதிவர்களின் பதிவும் அருமை..உங்கள் முயற்சி பாரட்டதக்கது.வாழ்த்துக்கள் கீதமஞ்சரி :)

    ReplyDelete
  25. பல பயனுள்ள வலைத்தளஙகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்..அத்தனையையும் கோர்த்த விதமும் அற்புதம்..வாழ்த்துக்களும்
    உங்களுக்கு நன்றிகளும்...
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  26. arimuka nanparkaliukku-
    vaazhthukkal!

    ReplyDelete
  27. மிகமிக ரசிக்கத் தக்க பாணியில் நல்ல நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  28. சிறப்பான அறிமுகங்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  29. இன்றும் நேற்றைய உணர்வுகளே!! பிரமிப்பு!!

    மாத்திரைகளை உடைத்துச் சாப்பிடக்கூடாது என்று போன வாரம்தான் ஒரு மாத்திரையின் பாக்கெட்டில் எழுதியிருபதைப் பார்த்தேன். உடைத்து மட்டுமல்ல, பொடித்தும் சாப்பிடக்கூடாதாம்!!

    இது தெரியாமல், நாம் சிறுவர்களுக்குப் பொடித்துத்தானே கொடுப்போம் என்று நினைத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  30. கொஞ்சம் மாறுபட்ட அறிமுகங்கள்..
    என்னையும் அங்கீகரித்த உங்களுக்கு என் நன்றிகள் ...

    ReplyDelete
  31. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க.

    அழகான அறிமுகங்களை தந்த உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. @ வெங்கட் நாகராஜ்,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.

    @ இராஜராஜேஸ்வரி,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

    @ டாக்டர் எம்.கே.முருகானந்தன்,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி டாக்டர்.

    @ தமிழ் விரும்பி ஆலாசியம்
    தங்கள் வருகைக்கும் அழகான நெடியப் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  33. @ தேனம்மை லெக்ஷ்மணன்,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி..

    @ மிடில் கிளாஸ் மாதவி,
    தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி.

    @ கோமதி அரசு
    தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

    @ செய்தாலி,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  34. @ லக்ஷ்மி,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி லக்ஷ்மி அம்மா.

    @ மகேந்திரன்,
    தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி மகேந்திரன்

    @ சென்னை பித்தன்
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    @ அமைதிச்சாரல்,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  35. @ பாசமலர்
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாசமலர்.

    @ வை. கோபாலகிருஷ்ணன்,
    தலைப்பில் இருக்கும் பாடலையும் ரசித்து சிலாகித்த தங்கள் ரசனை என்னை மகிழவைக்கிறது வை.கோ.சார்.
    முனியம்மா சார்பிலும் நன்றி தெரிவிக்கும் தங்கள் பாங்கினைக் கண்டு வியக்கிறேன். தங்கள் வருகைக்கும் அன்பான பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி சார்.

    @ திவ்யா @ தேன்மொழி
    வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி திவ்யா.

    @ ரிஷபன்,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரிஷபன் சார்.

    ReplyDelete
  36. @ கவிதை வீதி சௌந்தர்
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சௌந்தர்

    @ கே.பி. ஜனா,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

    @ ரேவா,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ரேவா.

    @ கோவைக்கவி,
    தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  37. @ சீனி,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

    @ கணேஷ்,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி கணேஷ்.

    @ சசிகலா,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசிகலா.

    ReplyDelete
  38. @ ஹூஸைனம்மா,
    நீங்கள் சொல்வது சரிதான். இந்தக் குறிப்பிட்டப் பதிவிலேயே டாக்டரும் அதைக் குறிப்பிடுகிறார். நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.

    @ அரசன் சே,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்.

    @ கோவை2தில்லி
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி.

    ReplyDelete
  39. நிறைய பதிவர்களை உரையாடல் மூலம் தொகுத்தளித்த விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  40. எவ்வளவு அறிமுகங்கள்.. அத்தனையையும்அற்புதம்.வாழ்த்துகள். என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  41. சுவாரஷ்யமான நடையில் அட்டகாசமா கோர்த்து குடுத்து இருக்கீங்க. இதில் நெறைய பேர் நானும் வாசிக்கிறேன். என்னையும் இந்த அழகான சரத்தில் இணைத்ததற்கு ரெம்ப நன்றிங்க கீதமஞ்சரி...

    ReplyDelete
  42. பூரிச்சுப்போய்தான் சாகனுமா' செம காமெடியா யோசிச்சிருக்கீங்க. ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க இவ்வளவும் ஐடியா பண்ணி எழுத.உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. அறிமுகம் செய்ததற்கு நன்றி. மற்ற அறிமுகப்பதிவுகளும் எனக்கு பிடித்தமானவைதான். நன்றி கீதா.

    ReplyDelete
  44. மிகவும் கலக்கலான அறிமுகங்கள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. என்னை என் அறிமுகபடுத்தி இருக்கீங்க.

    நான் எழுதிய பெண்கள் டிப்ஸ் பகுதியை அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  46. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.புதுமையான அறிமுகம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. பகிர்வுகள் அனைத்தும் அருமை.!

    ReplyDelete
  48. @ ஹாலிவுட் ரசிகன்,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    @ காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

    @ அப்பாவி தங்கமணி,
    வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி புவனா.. க.மு vs க.பி. இரண்டாம் பாகம் போட்டுட்டீங்க போல. இன்னும் படிக்கல. விரைவில் வருவேன்.

    ReplyDelete
  49. @ விச்சு,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விச்சு. பதிவுகளைத் தேர்ந்தெடுத்து வச்சிட்டேன். அவற்றையெல்லாம் தொகுக்கிறதுக்குதான் கொஞ்சம் சிரமப்பட்டேன். இத்தனைப் பேரின் பின்னூட்டங்களையும் பார்த்ததில் பட்ட சிரமமெல்லாம் மறந்தே போய்விட்டது. நன்றி விச்சு.

    @ அன்புடன் அருணா,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா.

    @ சாகம்பரி,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  50. @ ஜலீலா கமல்,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜலீலா. எல்லோருக்கும் உங்க சமையல் பத்தி நிறையத் தெரியும் என்பதால் பெண்கள் டிப்ஸ் எடுத்துகிட்டேன். நல்ல விஷயம் நிறைய பேருக்குத் தெரிந்தால் நல்லதல்லவா?

    @ ருக்மணி சேஷசாயி,

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அம்மா.

    @ ஆஸியா உமர்,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆஸியா.

    ReplyDelete
  51. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது