வலைப்பதிவுகள் வலைப்பதிவர்கள்....
➦➠ by:
ஜெ.பி ஜோசபின் பாபா
வலைப்பதிவுகள் 2009 ல் என் பாடப்பகுதியாக அறிமுகம் ஆனது. முதல் முதலில் தேர்வுக்கு மதிப்பெண் வாங்க எழுதி பதிந்து வெளியான என் முதல் பதிவை இணையத்தின் வாயிலாக கண்ட போது கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஜெ.பி ஜோசபின் பாபா பின்பு வாரப்பத்திரிக்கை மாதபத்திரிக்கை வாசிப்பு தளம் வலைப்பதிவுகளாக மாறியது. செய்தியை, தகவல்களை பகுந்தாய்வு செய்து சுதந்திரமாக யாருடைய அச்சுறுத்தலும் அற்று கிடைப்பது வாசிப்பது மகிழ்ச்சியாகவே இருந்தது.
பின்பு வலைப்பதிவுகள் மேல் கொண்ட ஆற்வத்தால் என் ஆராய்சியையும் ஆய்வு ஈழ வலைப்பதிவுfகள் சார்ந்து மேற் கொண்டேன். என் ஆராய்ச்சியில் ஈழ தமிழர்கள் தங்கள் அடையாளத்தை நிலைநாட்ட மற்றும் போர் சூழலில் பல உலக நாடுகளில் தஞ்சம் அடைந்த நிலையில் தங்கள் மறுக்கப்பட்ட உரிமைகள், தங்கள் சோகங்கள், உணர்வுகளை பகிர்ந்து கொள்ள, தங்கள் கலாச்சாரத்தை பாதுகாக்க என வலைப்பதிவுகளை காத்திரமாக பயன்படுத்தினர். சிறப்பாக வலைப்பதிவுகளை ஒரு மாற்று ஊடகமாக பயன்படுத்தினர் என்றால் மிகையல்ல!
வலைப்பதிவுகள் ஆராய்ச்சியின் இருந்த போது தெரிந்து கொண்டது வலைப்பதிவுகள் என்பது; சிறப்பாக அறிவு சார்ந்த எழுத்து என்பதை விட இதயத்திலிருந்து வரும் தனி மனித கருத்துரையாடல்கள் என்பதாகும். என்னுடன் வகுப்பறையில் கற்ற 14 பேரில் நாங்கள் இரு மாணாக்கள் மட்டுமே தொடர்ந்து வலைப்பதிவர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றோம்
வலைப்பதிவு வழியாக பல அரிய நட்பு கிடைத்தது. தந்தையை போல் நேசிக்கும் ரத்தின வேல் ஐயா அறிமுகம் பெரிய வரபிரசாதம் ஆகும். இன்றும் எனக்கென சிறந்த புத்தகங்களை வாசிக்க அனுப்பி தருகின்றார்.அதே போல் என் எழுத்தை ஊக்கப்படுத்தும் பேராசிரியர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள், இலங்கையை சேர்ந்த மருத்துவர் முருகானந்தம் அவர்கள் என எண்ணிலடங்காத நல் உள்ளங்கள் என் எழுத்தின் பின் உண்டு. சமீபத்தில் நான் சந்தித்த போது வலைப்பதிவை பற்றி வகுப்புகள் எடுத்த பேராசிரியர் ரவீந்தரின் அவர்களும் நிறைய எழுத வேண்டும் என ஊக்கப்படுத்தினது மறக்க முடியாதவை. குமரகுரு, பத்மன் போன்ற அருமையான அண்ணாக்கள் நட்பு வலைப்பதிவு வழியாக கிடைத்தது. அதே போல் நெல்லையை சேர்ந்த பல வலைப்பதிவர்களுடன் நட்பு பேண இயன்றது. கவுசல்யா, சித்திரா போன்ற சிறந்த பதிவர்கள் தோழிகளாக பெற்றேன் செல்ல நாய்க்குட்டி. எழுத்து வழியாக கண்டவர்களை பதிவர் சங்கமத்தில் நேரில் சந்தித்தது இன்னும் ஆச்சரியமான அனுபவமாக இருந்தது. http://rajasheik.blogspot.in/, ஜோதிஜி திருப்பூர், .http://www.panithulishankar.com/,
அரசு அதிகாரிகளான வலைப்பதிவர்களின் பதிவுகள் இன்னும் பல தகவல்களை பெற்று தந்தது.http://imsaiarasan-babu.blogspot.in/2011/12/blog-post.html இளைஞர் பதிவர்களின் வழியாக இளமையான பல கவிதைகள் ஆக்கங்கள் வாசிக்க வாய்ப்பு கிடைத்து. வெறும் பய. வலைப்பதிவில் பல அறிய கருத்துக்களை மிகவும் நகைச்சுவையாக எழுதும் செல்வாவின் இப்பதிவுகள் மிகவும் கலைதன்மை கொண்டது.http://www.koomaali.blogspot.in/. மொக்கை பதிவுகள் சினிமா பதிவுகள் என்று விமர்சர்கள் புரட்டி எடுத்தாலும் தன் நுட்பமான கேலி கிண்டலில் பதிவு எழுதுவதில் தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துள்ள நண்பர் சென்னிமலை செந்தில் பதிவுகளும் சுவாரசியமானவை.சென்னி மலை செந்தில்.
இப்படி தமிழக தமிழ் பதிவுகள் வேக நடை போட்டாலும் பதிவுகளுக்கு என்றுள்ள சிறப்பம்சம், தனி தன்மையுடன் எழுதும் பதிவுகள் இன்னும் வர வேண்டும் என்பதே என் ஆவல். ஈழ பதிவர்கள் போல் போர், பிரிவு போன்ற துயர், சுதந்திரம் என்ற வேட்கை எழும் சூழல் இல்லை என்பதால் என்னவோ ஈழ பதிவுகள் போல் காத்திரமாக தமிழக வலைப்பதிவுகளை சமூக மாற்றத்திற்க்கு பாவிக்கின்றோமா என்றால் இல்லை என்றே எனக்கு தோன்றுகின்றது.
ஊடகத்தில் காணும் அதிகாரம் ஆணவம் அற்று அனைவரும் தங்கள் கருத்துக்களை பகிர தகுந்த மக்கள் ஊடகமே வலைப்பதிவுகள் என்றாலும் சில பதிவர்களின் அச்சுறுத்தல் இங்கு உண்டு என்றால் கோபப்படகூடாது. சில சிறந்த பதிவர்கள் என்று தங்களை நினைத்து கொள்பவர்கள் புதிதாய் வருபவர்களை எழுத்து பிழை, அப்படி இப்படி என்று கேலிக்குரியவர்களாக மாற்றுவது உண்டு. அதுவும் போக சில ஊடக எழுத்தாளர்கள் என்று மார் தட்டி கொள்பவர்கள் வலைப்பதிவர்களை பற்றி ஒரு மோசமான கருத்தாக்கத்தை பரப்பவும் தயங்குவதில்லை. மேலும் சின்ன சின்ன பிரச்சனைக்கும் வேட்டியை வரிந்து கட்டி சண்டை இடுவதையும் வலைப்பதிவர்கள் மத்தியில் காண்கின்றோம். அவரவர் கருத்து அவரவருடையது. இதில் நான் சிரியவர் பெரியவர் சிறந்தவர் மோசமானவர் என்ற கருத்துக்கே இடம் இல்லை என்றே என் கருத்து.
10 க்கு மேற்ப்பட்ட நாடுகளில் வசிக்கும் ஈழ வலைப்பதிவர்கள் கருத்துக்களால் வேற்பட்டிருந்தாலும் நட்பு என்ற வட்டத்தில் சிறந்து விளங்குகின்றனர். நம்மில் நெல்லை பதிவர், சேலம் பதிவர், சென்னை பதிவர் என்ற பெரிய சுவர்களை எழுப்பி வைத்துள்ளனர். ஒருவர் கருத்தை இன்னொருவர் ஏற்று கொள்ள விரும்பாவிடிலும் குழு சேர்ந்து ஆழுமை செய்வதை தவிர்க்கலாம்.
மேலும் பதிவை வாசிக்காது பின்னூட்டங்கள் என்ற பெயரில் "வடை போச்சு" .....என்று விளையாட்டாக பதிந்து செல்வதால் வலைப்பதிவின் சமூக பங்களிப்பான கருத்துரையாடல்கள் நடைபெறுவதில்லை. இங்கு உறவினர்கள் வீட்டு விசேடத்திற்க்கு முறை செய்வது போல் தங்களுக்குள்ளே பின்னூட்டம் கருத்துக்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
தமிழ் சசிவலைப்பதிவு என்பது உண்மையான செய்தி தகவல்களை சுத்த இதயத்தோடு தைரியமாகவும் உண்மையாகவும் கதைப்பவையாக இருக்க வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூடு நடந்த சமயம் நான் பத்திரிக்கை செய்தியை நம்பாது பரமக்குடி வலைப்பதிவர் என்ன எழுதி உள்ளார் என்றே தேடினேன். ஆனால் பல பதிவுகள் பத்திரிக்கை செய்தியை மறு பிரதி செய்பவையும் அரசியல் பேசுபவையாகவே இருந்தது. சமூகத்தின் மனசாட்சியாக நிலவ வேண்டிய ஊடகம் தவறும் போது வலைப்பதிவர்கள் பங்களிப்பு பெரிதாக உள்ளது. கிழக்கு நாடுகளில் தேசிய புரட்சிக்கு வித்திட்டதே சமூக தளங்களான வலைப்பதிவுகள் முகநூல்கள் போன்றவை என்று நாம் அறிந்ததே. ஆனால் நம்மூரில் வலைப்பதிவர்களுக்குள் பெரிய அரசியல் உள்ளது என்றால் அதுவே உண்மை!http://stop-the-vanni-genocide.blogspot.in/2009/06/blog-post.html
என் பிறந்த ஊர் வண்டிப்பெரியார் என்பதால் முல்லைப்பெரியார் பிரச்சனை நேரங்களில் செய்தி ஊடகம் தமிழர்களை எவ்வாறு முட்டாளாக்கியது என்று செய்தி கண்டு; நான் கண்ட மிகவும் அருகில் உணர்ந்த செய்தியை இட்ட போது சில கேடுகெட்ட எண்ணம் கொண்டவர்கள் பின்னூட்டம் என்ற பெயரில் தேவையற்ற அருவருக்க தகுந்த தளங்களை அனுப்பினார். இந்த செயலால் ஆக்கபூர்வமான சுதந்திரமான செய்தி மரிமாற்றம் தடை படும். முள்ளி வாய்க்கலில் நடந்ததை இன்று பத்திரிக்கைகள் செய்தியாக விற்க்கின்றனர், ஈழவலைப்பதிவர்கள் வழியாக 2009 மே-ஆகஸ்து அன்றே அறிந்த செய்திகளே இவை அனைத்தும்.ஈழ வலைப்பதிவுகள்
http://www.eelavayal.com/2012/03/blog-post_24.htmlசிலோனில் இருந்து கொண்டே ராஜபக்சேவை கேலி செய்து எழுதும் ஊக்கம் ஈழ வலைப்பதிவுகளுக்கு உண்டு. அதனால் அந்த வலைப்பதிவர் தண்டிக்கப்பட்ட போது ஈழ வலைப்பதிவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வலைப்பதிவருக்கு பக்கபலமாக இருந்தனர்,. தமிழகத்தில் அப்படி ஒரு நிலை உருவாகினால் வலைப்பதிவர்கள் என்ன செய்வார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் தமிழக வலைப்பதிவுகள் இன்னும் அதன் உண்மையான பணி, நோக்கம் அறிந்து செயல் ஆற்ற வேண்டியுள்ளது என்பதே என் எளிய கருத்து. வெறும் தொடர்பாடல் பொழுது போக்கு என்றிருந்தால் ஊடகம் போன்றே இதும் வெறும் கருவியாக மாறி விடும்.
|
|
நான் வலைப்பதிவுக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன. வலைப்பதிவில் இவ்வளவு விசயங்களா... அதுவும் அரசியல் கலந்தும், உண்மை நிலையை உணர்த்தவும் எனப் பல கோணங்களில் உள்ளனவா!! என ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன.
ReplyDeletearimukamana anaivarukkum vazthukal.
ReplyDeleteவெறும் தொடர்பாடல் பொழுது போக்கு என்றிருந்தால் ஊடகம் போன்றே இதும் வெறும் கருவியாக மாறி விடும்.
ReplyDeleteசிறப்பான சிந்திக்கவைக்கும் பகிர்வுகள்..
முற்றிலும் உண்மை .
ReplyDeleteஎங்கிருந்து சொன்னாலும்
எந்த வழியாக சொன்னாலும்
எந்த விஷயத்தை சொன்னாலும்
அதில் ஒரு சமூக பார்வை தேவை.
இல்லையெனில்
வலைத்தளமும்
வெறும் பொழுதுபோக்கு
மடமாகி விடும்.
வலைத்தளம் நடத்துபவர்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை மிக அருமையாகவும் அழகாகவும் சொல்லி இருக்கிறீர்கள். இளைஞியாக நீங்கள் இருந்தாலும் எழுத்தில் நல்ல முதிர்ச்சியும் சிந்தனையில் நல்ல தெளிவும் கொண்டுள்ளீரகள். வாழ்த்துக்கள் தோழி ஜோஸபின் பாபா...வாழ்க வளமுடன்
ReplyDeletethelivaana paarvai!
ReplyDeletearumaiyaana -
nermaiyaana manakumural!
naan ithil ethu-
ena thernthedukka muyarcikkiren!
vaazhthukkal'!
தங்கள் அனைவரின் புன்னூட்டங்களும் என் கருத்துக்களுக்கு பலம் சேர்க்கின்றன. நன்றி மகிழ்ச்சிகள்!
ReplyDeletethelivaana paarvai!
ReplyDeletearumaiyaana -
nermaiyaana manakumural!
naan ithil ethu-
ena thernthedukka muyarcikkiren!
vaazhthukkal'! ///// நன்றி ஐயா!