07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 12, 2012

நான் எண்ணும்பொழுது....


நண்பர்களுக்கு வணக்கம்.

(வலைச்சரத்தில் நானும் ஒரு வாரத்துக்கு ஆசிரியர் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவுறும் வேளையில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை, கீதமஞ்சரியின் முதல் பிறந்தநாள் பரிசெனக் கொண்டு, மனங்கொள்ளாப் பூரிப்பும் புளகாங்கிதமும் அடைகிறேன். அதே நேரத்தில், இந்த இனிய தருணம், என் எழுத்தின்பால் எனக்கிருக்கும் பொறுப்புணர்வையும் நினைவில் நிறுத்தி எச்சரிக்கிறது. இந்த அரிய வாய்ப்பை நல்கிய சீனா ஐயாவுக்கும் என்மீது நம்பிக்கை வைத்து, என்னைப் பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நெகிழ்வோடு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

வலைச்சரத்தில் இதற்குமுன் என் வலைப்பூ அறிமுகம் வந்த நாட்களில் எனக்குள் ஊற்றெடுத்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். என்னை அறிமுகப்படுத்திய அன்புக்கும் மதிப்புக்குரிய நட்புள்ளங்கள் கவிதை வீதி சௌந்தர், குட்டி சுவர்க்கம் ஆமினா, மகிழம்பூச்சரம் சாகம்பரி அவர்கள், ஆச்சி ஆச்சி திருமதி பி.எஸ்.ஶ்ரீதர், மின்மினிப்பூச்சிகள் ஷக்திபிரபா, தம்பி கூர்மதியன், தூரிகையின் தூறல் மதுமதி, அலையல்ல சுனாமி விச்சு, தமிழ் பேரண்ட்ஸ் சம்பத் குமார், தென்காசித் தமிழ்ப்பைங்கிளி, எல்லாப் புகழும் இறைவனுக்கே ஸாதிகா அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

வலைப்பூ துவங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே இந்த வாரப் பதிவர் என்று என்னை முதலில் தன் வலைப்பூவில் அடையாளங்காட்டிய பாகீரதி எல்.கே அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றி. 

என்னை இவ்வலையுலகத்தில் ஒரு அங்கத்தினராய் அங்கீகாரம் அளிக்கும் விதமாய் அறிமுகப்படுத்திய நண்பர்களுக்கு சில பூக்கள் நன்றியின் அடையாளமாய்!


 வலைப்பூ உலகில் காலடி வைத்த நாளிலிருந்தே என்னை வாழ்த்தியும் பாராட்டியும் ஊக்குவித்த நல்நெஞ்சங்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன். அவர்களுடைய வலைப்பூக்கள் மூலம் ஒத்த ரசனையுள்ள மேலும் பல வலைப்பூக்களைக் கண்டுகொண்டேன். அவர்களுக்கு என் அன்பின் பரிசாய் இந்தப் பொம்மைகள்! 

2008 முதல் பதிவுகள், நிலாச்சாரல், தமிழ்மன்றம் போன்ற பல இணையதளங்களில் எழுதிவந்தாலும் வலைப்பூ பற்றி யோசிக்கவில்லை. வலைப்பூ துவங்குவதென்பது மிகவும் கடினமான விஷயம் என்னும் எண்ணம் உள்ளுக்குள் வேரூன்றி இருந்ததே காரணம். முயன்றுதான் பார்ப்போமே என்று ஒருநாள் தோன்ற, அதே நாளில் உருவானது கீதமஞ்சரி.

என்னைப்பற்றி சொல்ல பெரிதாய் ஏதுமில்லை என்றாலும் என் எண்ணத்திறவுகோலாகிய எழுத்துக்கள்  பற்றிச் சொல்ல ஏராளமான கதைகள் உண்டு என்னிடம்.

என்னை பிரமிக்கவைத்தவை, மனம் கவர்ந்தவை, என் ரசனைக்குரியவை, பலனளிக்கக் கூடியவை என்று பல தரப்பட்ட வலைப்பூக்களை பின்வரும் நாட்களில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். இந்த அறிமுகங்களானது, புதியவர்களுக்குப் பழகியவர்களையும், பழகியவர்களுக்குப் புதியவர்களையும் அறிமுகப்படுத்தும் வகையில் நட்புப் பாலமாக இருக்கும்.

நட்பின் பெருமை கூடியிருப்பதில்தானே உள்ளது? தனித்துவிடப்பட்டநட்பின் புலம்பலைக்  கேட்டிருக்கிறீர்களா? இங்கே கேளுங்கள் 

தனித்துவிடப்பட்ட உறவு பற்றி? ஒற்றை மனுஷியாய் இருந்தும் உறவுகளைக் கட்டிக்காத்த ஓட்டாத்தாவின் இறுதிக்காலம் இப்படியா இருக்கவேண்டும்?

என் எல்லாக் கதைகளுக்குமான விதைகளும் ஏதேனும் ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன. அப்படிக் கிடைத்தவற்றில் என்னை இன்னும் நெகிழ்த்துவது சிவப்பியின் வாழ்க்கை.

பள்ளிக்காலங்களிலிருந்து என் கவிதைகளைப் படித்தும் திருத்தியும் என்னை ஊக்குவித்த முதல் வாசகி என் அம்மாதான். அம்மா என்றாலே அன்புதானே! தலைமுறை தலைமுறையாய்க் கடத்தப்படும் தாய்மையின் தவிப்பை என்னால் இயன்றவரை எழுத்துக்குள் கடத்த முயன்றதன் பலன் இக்கவிதை.

எந்த மரமானாலும் இலையும் பூவும் பிஞ்சும் கனியும் உதிர்தல் இயற்கை என்றாலும் அந்த உதிர்ப்பில் இருக்கும் உயிர்ப்பை எனக்கு உணர்த்தியவை மரங்களே.    நான் கவிதை வளர்க்கும் என் விநோதப் பூங்காவுக்கும் வருகை தந்தமைக்காய் அழகிய பூங்கொத்து உங்களுக்கே உங்களுக்கு. பெற்றுக் கொள்ளுங்கள்.



இனிவரும் நாட்களில் இந்த வண்ணத்துப்பூச்சிகளைப் போல் பல்சுவைத் தேனூறும் வலைப்பூக்களை வட்டமிட்டு வலம் வருவோமா?





 

58 comments:

  1. வருக... வருக.....

    அசத்தலை தொடர்க.....

    வாழ்த்துக்கள் இவ்வார ஆசிரியருக்கு.

    ReplyDelete
  2. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. இனிய வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. நல்வரவு.

    இந்த வாரம் இனிதாக அமைய வாழ்த்துகின்றேன்

    ReplyDelete
  5. இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள்.

    தங்கள் பணி மிகச்சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  6. //என்மீது நம்பிக்கை வைத்து, என்னைப் பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நெகிழ்வோடு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

    மிகப்பொருத்தமான அனைத்துத் தகுதிகளையும் ஒருங்கே பெற்றுள்ள தங்களை நான் பரிந்துரை செய்ததில் எனக்குத் தான் ஒரே மகிழ்ச்சியாக உள்ளது.

    மேலும் நம் பரிந்துரையை அப்படியே ஏற்றுக்கொண்டு,தங்களுக்கு உடனடியாக வாய்ப்பு அளிக்க முன் வந்த, நம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அன்பின் சீனாஐயா அவர்களுக்கும், வலைச்சரக் குழுவினருக்கும் தான்,இந்த நன்றிகள் தெரிவிக்கப்பட வேண்டும்.

    இதன் மூலம் நானும் அவர்களுக்கு
    என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். vgk

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  8. கவிநடையில் உங்கள் பகிர்வுகள் சூப்பர்.தொடர்ந்து அசத்துங்க.

    ReplyDelete
  9. தங்களின் சுய அறிமுகம் சிறப்பாக உள்ளது.

    // என் அன்பின் பரிசாய் இந்தப் பொம்மைகள்! //

    அருமையோ அருமை!

    நன்றியோ நன்றி!!

    ReplyDelete
  10. வலைச்சரப்பணியை சிறப்புடன் தொடர வாழத்துகள் சகோ!

    ReplyDelete
  11. வாழ்த்துகள் கீதா.

    ReplyDelete
  12. வருக வருக சகோதரி,
    சுய அறிமுகம் வெகு அருமை...

    அழகிய பூக்களால் இனிய
    சரம் தொடுத்திட
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. கீதம் ஒலிக்க, நாதம் சுரக்க
    அறிமுகக் கச்சேரி தொடரட்டும்!
    வாழ்த்துக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  14. வந்தனம்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. எனக்குத் தெரியாது நீங்கள் தான் இவ்வார வலைச்சர ஆசிரியர் என்று. தங்கள் இடுகைப் பக்கம் சென்று கருத்திட்டேன். பின் சிறிது நேரம் கழித்துத் தான் அறிந்தேன் தாங்கள் தான் பணியேற்றது என்று. என்னே ஒரு காத்திராத நிகழ்வு! தங்கள் பணி சிறக்கட்டும் சகோதரி. அறிமுகம் நன்று. அதுவும் முக்கியமானது எங்களிற்கு. மனமார்ந்த வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. ஆரம்பமே அருமையாக அமைந்திருக்கிறது தோழி. எங்களுக்கு பரிசாக நீங்கள் அளித்த டெடிபியர்கள் மிகமிக அழகு. தொடரும் உங்களின் நல்லறிமுகங்களுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. சிறப்பான அறிமுகத்தோடு வந்தாச்சு கலக்குங்க இந்த வாரம் பின் தொடர்கின்றேன்.

    ReplyDelete
  19. அகமுகம்
    நல் அறிமுகம்

    வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  20. புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  21. இந்த வார ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் கீதா!!

    ReplyDelete
  22. வாழ்த்துகள் கலக்குங்கள்

    ReplyDelete
  23. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. வணக்கம். வகுப்பை ஆரம்பிச்சாச்சு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. @ தமிழ்வாசி பிரகாஷ்

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  26. @ தியாவின் பேனா

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  27. @ ராமலக்ஷ்மி

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  28. @ Vijiskitchencreations

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  29. @ வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் அன்பான பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சார்.

    ReplyDelete
  30. @ திண்டுக்கல் தனபாலன்,

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  31. @ Asiya Omar

    தங்கள் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  32. @ வை.கோபாலகிருஷ்ணன்,

    அன்பின் பரிசாய் பொம்மைகளைப் பெற்றுக்கொண்டதற்கு மிகவும் நன்றி சார்.

    ReplyDelete
  33. உங்களை இங்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.உங்கள் பணி சிறப்பு பெற வாழ்த்துகள்,பரிசுகளை எடுத்துக்கொண்டோம்.

    ReplyDelete
  34. @ வீடு K.S.சுரேஸ்குமார்

    தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  35. வாழ்த்துக்கு நன்றி ஹூஸைனம்மா.

    அன்பான வரவேற்பிற்கு நன்றி மகேந்திரன்.

    வாழ்த்துக்களுக்கு நன்றி வெங்கட்.

    தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  36. @ மனசாட்சி

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி


    @ வேதா. இலங்காதிலகம்

    தங்கள் அன்புக்கும் ஆசிக்கும் மனமார்ந்த நன்றி.

    @ Lakshmi

    தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி லக்ஷ்மி அம்மா.

    @ கணேஷ்

    அன்பான வாழ்த்துக்கும் டெடிபேரை ரசித்ததற்கும் நன்றி கணேஷ்.

    ReplyDelete
  37. @ தனிமரம்,

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி.


    @ செய்தாலி

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி.


    @ வரலாற்று சுவடுகள்

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி.


    @ மனோ சாமிநாதன்

    தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி மேடம்.

    ReplyDelete
  38. @ "என் ராஜபாட்டை"- ராஜா

    தங்கள் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி.


    @ சத்ரியன்

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி சத்ரியன்.

    ReplyDelete
  39. குடும்பம் என்னும் சமூகத்தின் அடித்தளத்தையே நிர்வகிக்கும் நிர்வாகிக்கு இந்த பொறுப்பு சிறியதுதான்
    சிறப்பாக நடத்துங்கள் கீதா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. வழக்கம்போல அசத்துங்க... எங்களுடைய மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. இவ்வாரம் சிறப்பான வாரமாக அமைய
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. இந்த வாரம் அருமையான வாரமாக அமையப்போகிறது.வாழ்த்துகள் கீதா !

    ReplyDelete
  43. வாழ்த்துகள். தங்கள் பணி சிறப்பாய் அமையட்டும்.

    ReplyDelete
  44. அருமை அருமைப்பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  45. இந்த வாரம் ஆசிரியர் பொறுப் பேற்றிருக்கும் கீதாவை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
    கலக்கல் துவங்கட்டும்!

    ReplyDelete
  46. இந்த வாரம் ஆசிரியர் பொறுப் பேற்றிருக்கும் கீதாவை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
    கலக்கல் துவங்கட்டும்!

    ReplyDelete
  47. வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்

    ReplyDelete
  48. வண்ணத்துப்பூச்சிகளை காண ஆவலோடு காத்திருக்கிறோம் . அருமையான அறிமுகம் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  49. வாழ்த்துகள்.

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.

    ReplyDelete
  52. @ thirumathi bs sridhar said...

    \\உங்களை இங்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.உங்கள் பணி சிறப்பு பெற வாழ்த்துகள்,பரிசுகளை எடுத்துக்கொண்டோம்.\\

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஆச்சி.

    ReplyDelete
  53. @ கோவை மு.சரளா

    உங்கள் ஊக்கமிகு வாழ்த்துக்கு மிகவும் நன்றி சரளா.

    @ விச்சு

    தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

    @ ரமணி சார்,

    தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி சார்.


    @ ஹேமா

    எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்கிறேன் ஹேமா.

    ReplyDelete
  54. @ Seeni

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

    @ கோவை2தில்லி

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஆதி.

    @ Sekar

    வாழ்த்துக்கு நன்றி சேகர்.


    @ கலையரசி

    தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  55. @ Jaleela Kamal

    வாழ்த்துக்கு நன்றி ஜலீலா.

    @ சசிகலா

    வாழ்த்துக்கு நன்றி சசிகலா.

    @எல்.கே

    வாழ்த்துக்கு நன்றி எல்.கே சார்

    @ விமலன்

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி

    @ கோமதி அரசு

    தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது