07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 26, 2012

சுய அறிமுகம் செய்து கொள்கிறேன் (வலைச்சரம்)

இன்று (26.03.2012) துவங்கும் வலைச்சர வாரத்தில் அன்பின் சீனா சார் மற்றும் பிரகாஷ் சார் ஆகியோரின் அன்பு கட்டளைக்கிணங்க ஆசிரியர் பொறுப்பை ஏற்க (தகுதியிருக்கா அப்படின்னு தெரியலை) இசைவு தெரிவித்தேன்.

என்னுடைய வலைப்பூவின் பெயரும் துரைடேனியல் தான். படித்து ஆதரவு தாருங்கள்.


முதலில் என்னுடையதில் சிறந்த பதிவுகளை பட்டியலிட சீனா சார் கேட்டுக்கொண்டார். இது கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம்தான். அடுத்தவங்க பதிவுன்னா பாய்ஞ்சு பாய்ஞ்சு எழுதிடலாம். நல்லதா பார்த்து பொறுக்கிடலாம். எனக்கேன்னா? சீரியஸ் மேட்டர்தான். என்னுடைய பதிவுகள் சிறந்தவையா இல்லையா என்பதை வாசகப் பதிவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

என்னுடையதுன்னா தயங்க வேண்டியிருக்கு. காரணம் இங்கே நீதிபதிகள் நான் இல்லை. நீங்கள்தான். இருந்தாலும் அடியேன் துணிகிறேன். முதலில் என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். சீனா சார் என்னை ஏற்கனவே நேற்றே அறிமுகப்படுத்திட்டாரு. ஆனாலும் நானும் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விழைகிறேன். கொஞ்சம் பொறுமையா படிங்க.

நான் வலைப்பூ தொடங்கியது ஒரு விபத்துத்தான். கணினி கிடைச்சா போதும் நேரம் போவது தெரியாம விளையாடிட்டும், வெப்சைட் பார்த்துட்டும் இருப்பேன். கூகுளில் ஒரு நாள் அப்படித்தான் என்னென்ன இருக்குன்னு நோண்டிப் பார்த்துகிட்டு இருந்தப்பதான் இந்த BLOG பத்தி பார்த்தேன். GOOGLE காட்டின வழிமுறையின் படி Step by Step ஆ முயற்சி செய்தப்போ பிளாக் ஓப்பன் ஆயிடுச்சி.

ரொம்ப நாளு எதுவுமே செய்யாம அப்படியே விட்டுட்டேன். ரொம்ப நாள் கழிச்சி ஒருநாள் தமிழ்மணம் என் கண்ணுல பட்டுச்சு. அப்பத்தான் தெரிஞ்சது. அடடா இப்படி ஒரு உலகம் இருக்குதான்னு. அப்புறம் என்னோட வலைப்பூவை நானே கூகுளின் வழிகாட்டுதலின் படியும் தமிழ்மணம் மூலமா அறிமுகமான தொழில்நுட்ப வலைத்தளங்கள் மூலமாகவும் வலைப்பூவை வடிவமைச்சேன் (ஆமா இவரு பெரிய வெப் டிசைனரு, போய்யா....!) அப்படின்னு நீங்க சொல்றது சரிதான். எல்லாம் இந்த கூகுளின் கைங்கர்யம்தான்.

இப்படித்தான் நான் இந்த வலையுலகிற்கு வந்தேன். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா நான் வலைப்பூ எழுத ஆரம்பித்து ஐந்து மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள்ள இந்த வலைச்சர ஆசிரியப் பணி. ஆனாலும் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை தந்த சீனா சாருக்கும், பிரகாஷ் சாருக்கும் நன்றிகள் பல.

சரி. போதும் சுயபுராணம். இனி என் பதிவுகளைப் பற்றி பேசுவோம். இரத்தினச் சுருக்கமாத்தான் பேசப் போறேன்.


நான் அடிப்படையில் ஒரு கவிஞன். (அப்படித்தான் நான் நெனைச்சிகிட்டு இருக்கேன்.) ஆகவே நான் எதைச் சொன்னாலும், செய்தாலும் அதில் ஒரு கவிதைத்தனம் இருக்கும். அது என் பழக்கமாகி விட்டது. என் பதிவுகளில் நிறைய கவிதைகள் தான் இருக்கும்.

அப்புறம் சின்னச் சின்னச் சிந்தனைகள் என்ற பெயரில் சில சிந்தனைப் பதிவுகளை இட்டு வருகிறேன். மருத்துவக் குறிப்புகளும் அவ்வப்போது எழுதி வருகிறேன். இவைதான் பிரதானம்.

மற்றவை பொன்மொழிகள், இதர கட்டுரைகள். ஆனாலும் பிரதானமாக கவிதைகளும், சின்னச் சின்ன சிந்தனைகளுமே எனக்குப் பிடித்தவை. இன்னும் சொல்லப் போனால் அவைதான் என் சொந்த படைப்புகள். மற்றவை நான் படித்து ரசித்து உள்வாங்கிய விஷயங்களையே படைப்புகளாக மாற்றி தருகிறேன். ஆனால் கவிதைகள் என்னுடைய சொந்த படைப்புகளாகும். ஆகவே கவிதை எழுதும்போது மட்டும் ஒரு தாயின் சந்தோஷம் எனக்குக் கிடைக்கும். சந்தேகமில்லை.

என்னுடைய கவிதைகள்

எனக்குப் பிடித்த என்னுடைய கவிதைகளில் இரண்டை மட்டும் தருகிறேன். மற்றவற்றை நீங்களே படித்துக் கொள்ளுங்கள் (விருப்பமிருந்தால்)

சாம்பிளுக்கு இரண்டு.

1. இன்றைய சினிமாவும் பத்திரிக்கையும் எவ்வளவு தரம் கெட்டுப் போயிருக்கின்றன. அதனால் சமுதாயத்தில் எவ்வளவு சீரழிவு என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த கவிதையை எழுதினேன். லிங்க் கீழே.

வாழ்க்கை நடத்தின காம பாடம்

2. நான் பிறந்த ஊரில் ஓடும் ஒரு நதியின் அழுகையாக, கால மாற்றத்தினால் மனிதர்களால் அது எவ்வளவு சீரழிந்திருக்கிறது என்பதை ஒரு கவிதையாக வடித்தேன். அதன் லிங்க் கீழே.

ஒரு நதியின் அழுகை


சின்னச் சின்ன சிந்தனைகள் என்ற தலைப்பில் சில சிந்தனைத்துளிகளை வடித்து வருகிறேன். அவற்றின் சாம்பிளுக்கு இரண்டு மட்டும் கீழே:-

1. பிள்ளைகளை கண்டித்தால் மட்டும் போதாது. நாமும் அவர்களுக்கு முன்னுதாரணமாய் நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு சிந்தனைத்துளியின் லிங்க் கீழே:-

பார்த்தலும் கேட்டலும்

2. நம்முடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஒரு எளிய முறையை ஒரு சிந்தனைத்துளியாக வடித்தேன். அதன் லிங்க் கீழே:-

பிரச்சினைகளுக்குத் தீர்வு சிந்தனை அழிப்பான் (Thoughts Eraser)


எஞ்சியிருக்கும் கவிதை மற்றும் சின்னச் சின்ன சிந்தனைகளை என்னுடைய பதிவில் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்.

அவ்வப்போது மருத்துவக் குறிப்புகளையும், விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதுகிறேன். அவைதான் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அவற்றில சாம்பிளுக்கு சிலவற்றின் இணைப்பைத் தருகிறேன்.


1. சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது குறித்து நான் எழுதிய பதிவின் லிங்க் கீழே:-

சிகரெட் சில உண்மைகள்

2. வாழை இலையில் சாப்பிடுவது குறித்த ஒரு மருத்துவப் பதிவின் லிங்க் கீழே:-

வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?


விஞ்ஞானப் பதிவுகளும் அவ்வப்போது இடுகிறேன். அதில் சாம்பிளுக்கு ஒன்று மட்டும். மீதமுள்ளவற்றை வியப்பூட்டும் உண்மைகள் என்ற லேபளில் சென்று படித்துக் கொள்ளுங்கள்.

1. நாம் விண்வெளியில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்து கொண்டே இருக்கிறோம். தெரியுமா உங்களுக்கு?

போதும் என்று நினைக்கிறேன். என்னுடைய பதிவுகளைப் பற்றிய ஒரு புரிதல் உங்களுக்கு வந்திருக்கும். என்னுடைய எல்லாப் பதிவுகளுமே பிரயோஜனமானவைதான். சினிமாப் பதிவுகளும், மொக்கைப் பதிவுகளும் நான் இடுவதில்லை. ஒவ்வொரு பதிவுமே ஏதாவது ஒரு வகையில் மனிதர்களுக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்பதே என் அவா.

மற்ற என் பதிவுகள் அனைத்தையும் நீங்கள் என்னுடைய வலைப்பதிவில் போய் படித்து கருத்துரை இட்டு ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாளை மறுபடியும் பார்க்கலாம். என்னைக் கவர்ந்த பழைய மற்றும் புதிய பதிவர்களின் அறிமுகங்களோடு தொடர்வோம். நன்றி!

31 comments:

  1. பல அரிய கருத்துக்கள் எண்ணங்கள் உள்ளடங்கிய பதிவாக உள்ளது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கவிஞரே!

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். சிகரெட் சில உண்மைகள் பதிவு அருமை. இதைப்படித்தாவது குடிப்பவர்கள் விட வேண்டும். பகிர்விற்கு நன்றி.

    அன்புடன்,
    சித்திரவீதிக்காரன்.

    ReplyDelete
  3. Congrats for Valaicharam star. You always give useful posts. Hope you will do well this week

    ReplyDelete
  4. நல்ல அறிமுகம் நண்பரே... வாழ்த்துகள்... வாரம் முழுவதும் அசத்துங்கள்....

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் வெற்றிகரமாக செயல் பட என் வாழ்த்துக்கள்....

    அறிமுக பதிவு அற்புதம்..

    தொடருங்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சார் ..!

    ReplyDelete
  7. வாழ்த்துகள். புதிய ஆசிரியர் பொறுப்புக்கு

    ReplyDelete
  8. எளிமையான இனிமையான அறிமுகம். இனிய நல்வாழ்த்துகள் உங்கள் வாரம் வெற்றியுடன் அமையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. வருக துரை டேனியல்1தருக ஒரு சிறப்பான வாரம்.!உங்கள் அறிமுக அமுதுக்குக் காத்திருக்கிறோம் பருக!

    ReplyDelete
  10. தங்கள் வலைப்பதிவுகளை விரும்பிப் படிப்பவள் நான். தங்கள் பதிவுகளில் உள்ள பல நல்ல கருத்துகள் என்னைக் கவர்ந்தவை. இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றத் தங்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்..கலக்குங்கள்....

    ReplyDelete
  12. வாழ்த்துகள் சார். தங்கள் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சிறப்பாக பணி தொடர நாங்களும் காத்திருக்கிறோம் .

    ReplyDelete
  14. @ J.P. Josephine Baba

    - தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரம். வெற்றிகரமாக வலைச்சரப் பணியை முடித்த உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் அருளட்டும்.

    ReplyDelete
  15. @ சித்திவீதிக்காரன்

    - தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  16. @ மோகன் குமார்

    - தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  17. @ வெங்கட் நாகராஜ்

    - தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  18. @ கவிதை வீதி சௌந்தர்

    - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் தொடரும் ஆதரவிற்கும் நன்றி சார்.

    ReplyDelete
  19. @ வரலாற்றுச் சுவடுகள்

    - தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  20. @ Lakshmi

    - தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  21. @ Kovaikkavi

    - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரம்.

    ReplyDelete
  22. @ சென்னைப்பித்தன்

    - தங்கள் வருகைக்கும அருமையான வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  23. @ கீதமஞ்சரி சொன்னது -

    //தங்கள் வலைப்பதிவுகளை விரும்பிப் படிப்பவள் நான். தங்கள் பதிவுகளில் உள்ள பல நல்ல கருத்துகள் என்னைக் கவர்ந்தவை. இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றத் தங்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.//

    - தங்களது வருகைக்கும் அழகான விரிவான கருத்துரைக்கும் அருமையான வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரம்.

    ReplyDelete
  24. @ NKS ஹாஜா மைதீன்

    - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  25. @ கோவை 2 தில்லி

    - தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரம்.

    ReplyDelete
  26. @ சசிகலா

    - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி சகோதரம்.

    ReplyDelete
  27. வெற்றிகரமாக ஏற்ற பணி முடிக்க
    வாழ்த்துக்கள்!
    இரண்டு நாட்களாக தங்கள் வலையும் இன்னும் சிலவும் திறக்க
    மறுக்கிறது! காரணம் தெரியவில்லை!



    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. @ புலவர் ராமாநுசம் சொன்னது

    //வெற்றிகரமாக ஏற்ற பணி முடிக்க
    வாழ்த்துக்கள்!
    இரண்டு நாட்களாக தங்கள் வலையும் இன்னும் சிலவும் திறக்க
    மறுக்கிறது! காரணம் தெரியவில்லை!//

    - அப்படியா காரணம் தெரியவில்லையே. அதனால என்ன அய்யா. உங்க அன்புதான் எனக்கு வேணும். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  29. நல்வரவு.

    சுய 'அரி'முகம் சூப்பர்:-))))))

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  30. வாழ்த்துகள், அந்த குழாம் உங்களுக்கு ஓட்டுப் போடுவதில்லையா ? ஒப்பந்தம் எதுவும் போடவில்லையா ?
    :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது