அறுசுவைச்சரம்
➦➠ by:
ஸாதிகா
ஆரோக்கியமாய் வாழவேண்டும் என்றுதான் அனைத்து மனிதர்களும் விரும்புவோம்.அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.மனிதன் நோய்வாய்ப் படும்போதுதான் ஆரோக்கியத்தைப் பற்றிய அக்கறையும், கவலையும்,அச்சமும் தோன்றுகின்றது. நோயின் தாக்கம் குறைந்தவுடன் இந்த கவலையும், அக்கறையும்,பயமும் தானாகவே மறைந்துவிடுகின்றன.இதுதான் உண்மை.
உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையான உடல் நலக்கேடுகள் முறையற்ற உணவினாலும்,ஆரோக்கியம் இல்லாத உணவினாலும் ,அளவுக்கதிகமான உணவினாலும் தோன்றுகின்றன.
நோயுற்ற பின்னரே உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டு அதனை சீர்படுத்த முற்படுகிறோம்.வரும்முன் காப்போம் என்ற வைராக்கியம் மனதில் உருவாக வேண்டும். சீரான உணவு, சத்தான உணவு,சுத்தமான உணவு ,ஆரோக்கியமான உணவு,நார்சத்து அதிகமுள்ள உணவு,அளவான உணவு இவற்றின் மூலம் தேக ஆரோக்கியத்தை எப்போதும் சிறப்பான முறையில் வைத்துக் கொள்ளவேண்டும்.
அறுசுவைகளின் குணநலன்கள்
இனிப்புச் சுவை உடலுக்கு பலத்தை அளிக்கும். எலும்புருக்கி நோய்க்கு நல்லது. உடலை குண்டாக்க கூடியது.மனதிற்கும்,உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையாகும்.
புளிப்புச் சுவை பசியைத் தூண்டும்.நரம்புகளுக்கு வலு கொடுக்க வல்லது. இருதயத்திற்கு நல்லது. ருசியை உண்டாக்கும். உஷ்ணவீரியம் உடையது. பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற உபாதைகள் தோன்றும். உடல் அசதி ஏற்படும்.
உவர்ப்பு பசியைத் தூண்டும். உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும். வேர்வையை உண்டாக்கும். அதிகமாக உப்பை சேர்த்தால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும்.சிறுநீர்கபாதிப்புகளை உருவாக்கும். அதிகமாக உட்கொண்டால் தோல் தள்ர்ச்சி ஏற்பற்பட்டு சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதியும் ஏற்படும்.
பிடிக்காத சுவையாக இருப்பினும் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது.கசப்புச் சுவை கொழுப்பை குறைக்கும். மலம், சிறுநீரை குறைக்கும். எளிதில் ஜீரணமாகும். குளிர்ச்சியானது, தொண்டையை சுத்தம் செய்யும்.
காரம் தோல்தடிப்பு, வீக்கம், தொண்டை நோய் ஆகியவற்றைப் போக்கும். கொழுப்பை குறைக்க உதவும். இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.
துவர்ப்பு வாதத்தை அதிகரிக்கும். பித்த கபங்களைக் குறைக்கும்.வியர்வையை குறைக்க உதவுகின்றது.எளிதில் ஜீரணமாகாது. ரத்தத்தை சுத்தம் செய்யும். கொழுப்பைக் குறைக்கும்.பேசும் திறனை பாதிக்கும்.
இவ்வாறாக ஒவ்வொரு சுவைகளும் மனித உடல் நலத்திற்கு நன்மைகளும் தருகின்றது.தீமைகளையும் தருகின்றது.
எதனையும் அளவோடு உட்கொண்டால் சாலச்சிறந்தது என்பதினையே “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு”என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்லிச்சென்றார்கள்.
பெண்கள் தினமான இன்று சமைப்பதில் வல்லவர்களான சமையல் திலகங்களான ,பதிவுலக நட்புக்களின் விதவிதமான சமையல் திறமைகளையும்,சிலர் ருசித்த உணவகங்களின் அனுபவத்தினையும் பார்ப்போம்.
அனைவருக்கும் பெண்கள் தின
வாழ்த்துக்கள்.
1.சமைத்துஅசத்தலாம் தலைப்பினைபோல அசத்தலாக சமைத்து நேர்த்தியான குறிப்புகளுடன் வித விதமான சமையல் குறிப்புகளை தந்து அசத்தியவர் இப்பொழுது வீடியோ சமையல் மூலம் பிரியாணி செய்து காட்டி மேலும் அசத்தி விட்டார் ஆசியா.
2.விருந்து என்றால் அசைவப்பிரியர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது பிரியாணி.அநேக அசைவ விரும்பிகளுக்கு பெயரைக்கேட்டாலே நாவில் எச்சில் ஊறும் வகை வகையான பிரியாணியைப்பற்றி சமையலில் அட்டகாசம் செய்துவரும் ஆல் இன் ஆல் ஜலீலா சொல்வதைப்பாருங்கள்.
3.ஓட்ஸை வைத்தே கலக்கி வருபவர்.ஓட்ஸில் விதம் விதமாக ரெஸிப்பி சொல்வதில் கில்லாடி மேனகா.
4.பூந்திலட்டு பேசன் லட்டு ரவா லட்டு,திருப்பதி லட்டு,மா லட்டு என்று கேள்விப்பட்டுள்ளோம்.பார்லி லட்டை கேள்விபட்டுள்ளீர்களா?கீதா ஆச்சல் பார்லியில் லட்டு செய்து இருக்கின்றார்.
5.இருபதே நிமிடத்தில் மைக்ரோவேவில் சுலபமாக மைசூர்பாக் செய்து காட்டி இருக்கின்றார் காஞ்சனா ராதாகிருஷ்ணன்.
6.மிருதுவான சுவையான இட்லி தயாரிப்பின் சகல நுணுக்கங்களையும் பிங்கர் டிப்ஸில் வைத்திருக்கும் இட்லி ஸ்பெஷலிஸ்ட் மகி பக்கம் கொஞ்சம் போய் பாருங்களேன்.
7.சென்னையில் நல்ல ரெஸ்டாரெண்ட் போவதென்றால் இவரது வலைப்பூ சென்று பார்த்து விட்டு செல்லலாம்.விதம் விதமான ரெஸ்டாரெண்டுகளுக்கு சென்று அனுபவத்தினை அழகிய படங்களுடன் பகிர்ந்து இருக்கின்றார் வித்யா.
8.கடையில்தான் ரஸ்க் வாங்கி சாப்பிடுவோம்.வீட்டிலேயே ரஸ்க் செய்து சாப்பிட கற்றுத்தந்து இருப்பவர் யாஸ்மின்
9.அப்சராவின் பருப்பு கடைசல் ரசத்தையும் சூடாக டேஸ்ட் செய்து பாருங்கள்.
10எனக்கே எனக்காக ஆமினா அவசரம் அவசரமாக செய்து காட்டிய அருமையான பெப்பர்சிக்கன்.
11.ரவாவில் உப்புமா கிச்சடி கேசரி லட்டு,பாயசம் என்றுதான் ரெஸிப்பி இருக்கும்.புவனேஸ்வரி ராமனாதன் ரவாவில் பொங்கல் செய்து காட்டி இருக்கின்றார்.
12.மின்மினி தயாரித்த தக்காளி ரசத்தையும் கூடவே ரசத்தில் சேர்த்திருக்கும் பொருட்களின் மருத்துவ குணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
13.திண்டுக்கல் பிரியாணி,ஹைதராபாத் பிரியாணி,ஆம்பூர் பிரியாணி,வாணியம்பாடி பிரியாணி பாகிஸ்தானி பிரியாணி ரேஞ்சில் அலிகார்பிரியாணி செய்து அசத்திவிட்டார் அன்னு.
14.இறைச்சியில் அவியல் செய்து நாவூறச்செய்து விட்டார் நிஹாசா.
15.தக்கடி..பெயரை பார்த்தால் பகீர் என்றுள்ளதா?வேறொன்றுமில்லைங்க.சுருக்கமாக சொல்லப்போனால் கறிகுழம்பில் போட்ட கொழுக்கட்டைதான் தக்கடி.இஸ்லாமிய சமையலில் முன்னனியில் நிற்கும் அருமையான பதார்த்ததை நாஸியா செய்து காட்டி இருக்காங்க.
16.பருத்தியில் பஞ்சு எடுத்து அதில் இருந்து ஆடை தயாரிக்கலால்.ராதாஸ் கிச்சனில் பருத்தியில் சுவையான பருத்திப்பால் காய்ச்சி இருகின்றார்.மிகவும் சத்தானது.டிரடிஷனலானது.
17.இலங்கையில் சம்பல் வகைகள் பிரபலம்.அதில் இடிச்ச சம்பலை தூயா செய்து அசத்தி இருக்கின்றார்.
18.வெளிநாட்டு வரவான பாஸ்தவை ரொம்ப சிம்பிளாக செய்து காட்டி இருக்கின்றார் அமுதா.சுலபமான முறையைப்பார்த்தால் உடனே சமைக்கத்தோன்றும்.
19.பெயரைப்பார்த்தாலே கலகலப்பாக உள்ளது அல்லவா?என்ன ஒரு அம்சமாக கலகலாசுருள் செய்து அதனை அழகாக அடுக்கியும் வைத்தும் பந்தி வைத்து விட்டார் பாசமலர்
20.பேக்கரியில் கிடைப்பது போலவே சாக்லேட் சிப் குக்கீஸ் செய்து காட்டி இருக்கின்றார் என் சமையல்.இதை தயாரிக்க சற்று மெனக்கெட்டாலும் சுவை சூப்பராக இருக்கும் என்று படத்தைப்பார்த்தாலே தெரிகின்றதே.
21.தனியாக வறுத்து அரைத்த பொடியைப்போட்டு பொடி போட்ட வத்தக்குழம்பு செய்து காட்டி இருக்கின்றார் பிரியா ராம் .
22.அரிசி முறுக்கு பயத்தம் முறுக்கு,கடலைமா முறுக்கு மைதா முறுக்கு முள்ளு முறுக்கு என்று கேள்விப்பட்டுள்ளோம்.ராகி முறுக்கு கேள்விப்பட்டுள்ளீர்களா?ராகி முறுக்கு செய்து புதுமை செய்து விட்டார் அன்புடன் ஆனந்தி.அதுவும் கலரை பார்த்து பயப்பட வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன்.
23.மிஞ்சிய இட்லிகளை வைத்து விழித்துக்கொண்டு இருகின்றீர்களா?டோண்ட் வர்ரி. ஹாஷினி சொல்லிய இட்லி மஞ்சூரியனை பார்த்தால் இட்லியை கொஞ்சம் அதிகமாகவே பண்ணுவீர்கள் இனிமேல்.
24.படத்தில் இருப்பது மஞ்சள் வர்ண ரோஜாப்பூவா என்று கேட்டு விடாதீர்கள்.உருளைக்கிழங்கு சிப்ஸைத்தான் இத்தனை கலை நயத்தோடு செய்து பார்ப்பவரை வாவ் போட வைத்து விட்டார் வசந்தமுல்லை.எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா!
25.கலர் ஃபுல்லான மெத்தென்ற ஓட்ஸ் டோக்ளா செய்து காட்டியவர் அடுப்பங்கரை கமலா
26.தான் ருசித்த உணவகங்களை படங்களுடன் பகிர்ந்திருப்பவர் விக்னேஷ்வரி.
27.சாருஸ்ரீராஜ் முதல் குறிப்பே சுவையான அசோகா அல்வா.
28.பலாபழத்தில் கலர்ஃபுல் அல்வா செய்து அசத்தி இருப்பவர் தெய்வசுகந்தி.
29.சிம்பிளா ஃபிரை.அவசரத்துக்கு உதவும் ஒரு டிஷ்ஷை செய்து காட்டி இருக்கின்றார் சித்ரா கிருஷ்ணன்
|
|
ம்....ம்...அறுசுவை!..நாவூறுகிறது...சுவையோ! சுவை!...இங்கு நேரம்21.21இரவு 7-8-12. சடுதியாக வலைச்சரப் பக்கம் திருப்பினேன் .புது இடுகை! அத்தனை அறுசுவை அறிமுகங்களிற்கும் ஆசிரியர் ஸாதிகாவிற்கும் நிறைந்த வாழ்த்துகள். நாளை (வெள்ளி) என்ன எனும் ஆவல் பொங்குகிறது. இனிய பயணம் தொடரட்டும்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
ஐ.. நன் 2வது...ஸாதிகா அக்கா... தூக்கமும் போச்சா? அவ்வ்வ்வ்:))..
ReplyDeleteஅறுசுவையில் எந்தாப்பெரீஈஈஈஈஈய லிஸ்ட்..... கலக்கல் அத்தனையும் சூப்பர், அசத்தல் சமையல் ராணிகள்...
ஊ.கு:
வான்ஸ்க்கும், எனக்கும்கூட சமைக்கத் தெரியுமாக்கும்..க்கும்..க்கும்..:))
kovaikkavi said...
ReplyDeleteம்....ம்...அறுசுவை!..நாவூறுகிறது...சுவையோ! சுவை!...இங்கு நேரம்21.21இரவு 7-8-12.////
இது எந்த நாட்டுக் கலண்டர்?:)))).
பதிவை அறிமுகப்படுத்த உங்களுக்கு வலைச்சரத்தில் வாய்ய்ப்பு கொடுத்தால் நீங்கள் பசியை தூண்டும் பதிவை போட்டு பசியை தூண்டிவிட்டிங்க. இது உங்களுக்கே நல்லா இருக்கா அதுமட்டுமல்லாமல் நாளை இந்த பதிவை படிக்கும் ஆண்கள் இதில் உள்ள மாதிரி சமைக்க சொல்லி தன் வீட்டு பெண்கள் கூட சண்டை பிடிக்க போறார்கள் இப்படி பல குடும்பங்களில் சண்டை வர இந்த பதிவு காரணமாகவுள்ளது என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் தான் எல்லோறையும் காப்பாற்ற வேண்டும்
வாழ்த்துக்கள் ஸாதிக்கா மேடம்
வாழ்த்துகள் ஸாதிகா அக்கா.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteஅறுசுவை குறித்த பதிவும்
ReplyDeleteஅறுசுவை ராணிகளின் அறிமுகமும் அருமை
அவர்கள் படங்களுடன் பதிவினை
மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளீர்கள்
தங்லபணி பிரமிப்பூட்டுகிறது.வாழ்த்துக்கள்
அருமையான அசத்தலான அட்டகாசமான அறுசுவை விருந்திற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
அறுசுவை விருந்து.... அமர்க்களமான விருந்து....
ReplyDelete”கல்யாண சமையல் சாதம்” பாடத்தோன்றுகிறது...
அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்.
அனைத்து மகளிருக்கும், உலக மகளிர் தின வாழ்த்துகள்...
ஆஹா... ஒரே இடத்தில் இத்தனை ரெஸிப்பிக்களைப் படிக்கையில் மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. நல் ரசனைக்கு விருந்தளித்த அரிய தொகுப்பு!
ReplyDeleteஸாதிகா அறுசுவையைப் பற்றிய குறிப்போடு நல்ல நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteஎன்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் ஸாதிகா.
உங்களுடைய அடுத்த நாள் வலைச்சரம் என்னவாக இருக்கும் என்று அனைவரும் ஆவலோடு எதிர் பார்க்கும் வண்ணமாய் உங்கள் உழைப்பு.மிக்க நன்றி.
மகளிர் தினம் அன்று சரியாக மகளிர் பதிவுகள் பற்றி வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteஅடடா,... அக்கா...
ReplyDeleteஅழகாய் அறுசுவைபத்தி விளக்கம் கொடுத்துருக்கீங்க!
என்னை அறிமுகப்படுத்தியதற்கு (அதுவும் உங்களுக்கே உங்களுக்காக செய்த பெப்பர் சிக்கன்னை நியாபகம் வைத்து )மிக்க நன்றீ அக்கா
உங்கள் உழைப்பு உங்கள் கட்டுரையின் மூலமும் படங்கள் மூலமும் நன்றாக தெரிகிறது
வாழ்த்துகள் அக்கா
இன்றைக்கு வலைசரத்தில் ஒரே அசத்தலா இருக்கு, அருமையான எல்லா வலைபூக்களும் சுவைப்பதற்க்கு மிக மிக சூப்பர்.
ReplyDeleteஅப்படியே உங்க சமையலில் உங்களுக்கு பிடித்த சமைத்து சுவைத்தையும் சொல்லுங்கோ.
அடுத்த வலைசரம் என்ன டைட்டில்ஸோட வரும் என்று வெயிட்டிங். வாழ்த்துக்கள்.
ஸாதிகா அக்கா ,கலக்கல் ஸதிகா அக்கா
ReplyDeleteஅதுவும் மகளீர் தினத்துக்கு ஏற்றார் போல இத்தனை சுவையரசிகளை ரொம்ப நேர்தியாக சொல்லி அறிமுக படுத்தி இருக்கீங்க
அனைத்து பெண்களுக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.
ஆஹா... ஒரே இடத்தில் இத்தனை ரெஸிப்பிக்களைப் படிக்கையில் மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. நல் ரசனைக்கு விருந்தளித்த அரிய தொகுப்பு! வாழ்த்துகள் அறிமுகப்படுத்தியவர்களுக்க்கு
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியதற்குமிக்க நன்றீ.
ReplyDeleteஅனைத்து பெண்களுக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.
அறுசுவையின் குணநலன்களை சொல்லி அசத்திட்டீங்க.என்னையும் அறிமுகபடுத்தியதற்க்கு மிக்க நன்றி அக்கா..மற்றவர்களையும் அறிமுகபடுத்தியதற்கு வாழ்த்துக்கள்.மகளிர் தின வாழ்த்துக்கள்!!
ReplyDeleteசுவையின்
ReplyDeleteகுணநல பதிப்பு
சிறப்பு
சமையல்
கலை சொல்லும்
வலைப்பூ அறிமுகங்கள்
புதுச் சுவை
இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்
அறுசுவைகளின் அருமையை அறிவுறுத்தியிருப்பது அபாரம்!!
ReplyDeleteநிறைய இதுவரைப் பார்க்காத நல்ல ரெஸிப்பிகள் இருக்குது. பார்த்துச் செஞ்சுடவேண்டியதுதான்!! (நோ, அப்படிப் பாக்காதீங்க!!) :-))))
எல்லோருக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துகள். ஆதிரா இது டென்மார்க் நேரம். வின்ரர், சம்மர் என்று 4 மணி அல்லது 5 மணி தள்ளிப் பார்க்க வேண்டும். இப்படித் தானே கனடா கூட.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
Saadiqa akkaa... romba thanks.. enake naan ezhuthinadhu marandhu pochu... :)) innaiku thakkadi thaan seyyalamnu iruken
ReplyDeleteஅறுஞ்சுவை மிக்க அழகிய ருசியான பதிவு. பாராட்டுக்கள்.
ReplyDeleteஅறிமுகம் ஆகியுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.
அனைத்துப் பெண்களுக்கும் ”சர்வதேச மகளிர் தினம்” இனிய நல் வாழ்த்துகள்.
நன்றி.
சுவைக்(க, பசிக்க வைக்)கும் பதிவுகள்.
ReplyDelete@KOVAIKKAVI
ReplyDelete(அதிரா: 7/8/12 இது எந்த நாட்டு கலண்டர்?) 7 என்பதும் 8 என்பதும் எதைக் குறிக்கின்றன?
என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அக்கா.அறுசுவைகளின் அருமையை என்ன அழகாக சொல்லியிருக்கிறேர்கள் அருமை அருமை அருமை..... உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றி.அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.அனைத்து பெண்களுக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறுசுவைகளை அழகாக தொடுத்துள்ளீர்கள் ஸாதிகா..ஒவ்வொரு சுவையின் குணங்களை தொகுத்து குறிப்பாக கொடுத்தது மிகவும் அருமை !வலைசரத்தில் என்னை அறிமுகம் செய்த உங்களுக்கு மிக்க நன்றி!இன்றைய வலைசரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி அக்கா... கொஞ்ச காலம் பிளாக் பக்கமே வரமுடியலை..உங்க பட்டியல் சூப்பர்
ReplyDeleteநன்றி ஸாதிகாக்கா! தெரியாத பலரைத் தெரிந்துகொண்டேன். தினமும் புதுப்பொலிவுடன் சரம் தொடுக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete@NIZAMUDEEN ....OH! very sorry 7-3-12 For3 I pressed 8.... I think...sorry....
ReplyDeleteVetha.Elangathilakam.
அறுசுவையில் எல்லாச்சுவையுமே ருசியாயிருக்கு..
ReplyDeleteஅறுசுவைச்சரம் தடபுடலா ஜோரா இருந்தது.
ReplyDeleteஅன்பு சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும் .
ReplyDeleteதங்களது எல்லா வலைச்சரத்தினையும் படித்து மகிழ்ந்தேன் ஆனால் வலைச்சரத்தில் முதல் நாள் சுயச்சரம்
படிக்க முடியவில்லை. தயவு செய்து அனுப்பி வையுங்கள் .
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சரித்திரமுண்டு .அதில் நாம் அறித்துக்கொள்ளக் கூடியது ஏராளம் .அதைப் பற்றி நான் ஒரு தொடர் ஆரம்பம் செய்ய நெடுநாள் ஆசை அதனை நீங்கள் அனுப்பி வைத்தால் எனது ( நமது) வலைப்பூவில் வெளியிடலாம் இது எனது அன்பு வேண்டுகோள்.இன்ஷாஅல்லாஹ் பிரபலங்கள் வரிசையில் நடந்த நிகழ்வுகள் வரும்.
ஸாதிகா அக்கா ரொம்ப ரொம்ப நன்றி என்னை உங்க வலை சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு. லேட்டா தான் உங்க பின்னூட்டம் பார்த்தேன். என்ன சொல்லுறதுன்னே தெரியல. ரொம்ப சந்தோஷமா இருக்கு
ReplyDelete"அறுசுவை" சரமாக தொகுத்து வழங்கிய உங்களுக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறுசுவை பதிவர்களுக்கு வழ்த்துக்கள் ..!! :-)
ReplyDeleteகருத்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!
ReplyDeleteஅன்புள்ள ஸாதிகா,
ReplyDeleteஇவ்ளோ லேட்-ஆ பதில் போடுவதற்கு மன்னிக்கவும்.. இப்போ தான் உங்க கமெண்ட் பார்க்க முடிந்தது. எனக்கு இந்த, புது மாடரேஷன்-ல ஒரே குழப்பம். எனது பதிவையும் அறிமுகப் படுத்தியதில், ரொம்ப சந்தோசம். மிக்க நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். :)
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
ReplyDeleteஅனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com