07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 24, 2012

பெண்கள் உரிமைகள்!

பெண்கள் பாதுகாப்பில் அச்சுறுத்தல் கொண்ட நாடுகள்வரிசையில் 4 வது இடைத்தை பெண்கள் நிலைவரம் பிடித்துள்ளது இந்தியா. ஒரு புறம் பெண்களை கடவுளாக பூஜிக்கின்றோம் என்று பண்டைய காலம் தொட்டுசொல்லி கொண்டிருந்தாலும் பெண்கள் நிலை சங்ககாலம் முதல் இன்று வரை கவலைக் கிடமான நிலையில்தான் உள்ளது. கொத்தடிமைகள், தொழுத்தைமார், போர் அடிமைகள், வீட்டு அடிமைகள், தேவரடியார்,பொட்டு கட்டுதல் என்ற பல பெயர்களில்; மதம், பஞ்சம்,போர் போன்ற பல காரணங்களால் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.


தஞ்சைமராட்டிய மன்னர் படை எடுப்பு வேளைகளில் சொல்லி மாழாத துன்பத்தில் வீழ்ந்து கிடந்தனர்பெண்கள். தென் தமிழகத்தில் ஆகட்டும் திருவிதாம் கூர் மன்னர்களால் மேல் சட்டை அணிய மறுக்கப்பட்டவர்கள் பெண்கள். என்றும் பெண்கள் துன்பம் மதம், ஜாதி,நிலைகள் கடந்து பொதுவானதாக தான் உள்ளது. வயல்வெளியில்வேலை செய்த பெண்கள் துவங்கி அரச பரம்பரயில் வாழ்ந்த பெண்கள் வரை பல வித துன்பத்திற்க்குஉள்ளாகினர். அரச குடும்ப பெண்கள் 1843ல் அடிமை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு அடிமை சங்கலிமுறிக்கப்பட்டாலும் சுதந்திரம் கிடைத்த பின்பு குடும்ப நலச்சட்டம் என பல சட்டங்களால் பெண் உரிமை பாதுகாப்பு பேணப்படுவதாகசொல்லி கொண்டாலும் இன்றும் பெண்கள் அடிமைகளாக வேலை வாங்கப்படுவதும் பெண்களை பல காரணங்களுக்காக பொருள் போன்று வாங்கப்படுவதும் விற்கப்படுவதும் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றது. பெண் உரிமை

http://solvanam.com/?p=17369 சில பெண்களை பொறுத்த வரை எந்த சட்டங்களால் பெண்கள்வாழ்மை வழமையாக்கலாம் என்று நினைத்தார்களோ அந்த சட்டங்களை பெண்கள் வாழ்க்கையை அழிக்கும் சுறுக்கு கயிறாகவும் மாறியது. கால் முளம் வரை சேலை அணியவும் மார்பு சட்டை அணியவும் போராடியபெண்கள் இன்றைய நிலையில் தங்களுக்கு பிடித்த உடை என்ற போற்வையில் அரைகுறை உடை அணியவும் அணியாதும் இருப்பதை சுதந்திரம் என்று எண்ணும் நிலைக்கு எட்டியுள்ளனர்.

பல பெண்கள் தங்களுக்குகிடைத்த பதவி, அதிகாரங்களில் அடிமைப்பட்டு கொண்டு மற்றவர்களிடம் ஒட்டாது வெட்டி நிற்கவும் காரணமாகின்றதுஎன்றால் அதுவும் உண்மையே. இதுவும் ஒரு அடிமை நிலை தான்! இன்று அரசு அலுவலங்கள் ஆகட்டும் சேவைத் துறையிலாகட்டும்கையூட்டு பெறுவது பதவி துஷ்பிரோயகம் செய்வதில் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல ஆண்களுக்குநிகர் என்றே நிரூபித்து வருக்கின்றனர். பல படித்த பெண்கள் சமூகத்தில் தப்பான உதாரங்களாக மாறுகின்றனர். http://www.jeyamohan.in/?p=199
படித்த பெண்கள்மத்தியிலும் கல்லூரி- பல்கலைகழக நிகழ்ச்சிக்கும்பட்டு சேலை நகை அணிந்து வருவதே அந்தஸ்து மதிப்பு என்ற கருத்தாக்கத்தில் மூழ்கி கிடக்கின்றனர். சமீபத்தில் நான் பங்கு கொண்ட ஒரு கல்வி சார்ந்தநிகழ்ச்சியில், ஆடம்பரம் அற்ற உடையணிந்த தேவைக்கு அதிகமாக நகை அணியாத பெண்ணை, மற்று பெண்கள் மறித்து "இப்படி இருந்தா உங்களை மதிக்கமாட்டாங்க நீங்க இன்னும் கொஞ்சம் பொலிவாக வர வேண்டும் என்று தங்கள் சாயம் பூசிய உதடுகளால்உபதேசித்து கொண்டிருந்தனர்". அப்பெண்ணும் சலிக்காதுஎன் ஆளுமை, நான் அணியும் உடை நகையை சாந்தது அல்ல என் செயல் எண்ணங்கள் சார்ந்ததே. என்புறப்பொலிவை பார்த்துள்ள கிடைக்கும் மதிப்பு எனக்கு தேவை இல்லைஎன்று விளக்கிய போதும் இளக்காரமான சிரிப்புடன் நகர்ந்து சென்றனர்.http://abdullasir.blogspot.in/2011/12/blog-post_21.html

90 களில் பிரபஞ்ச, அழகி உலக அழகிகளை இந்தியா கொடுத்ததுமுதல் பெண்கள் அணிகலன்கள் சார்ந்த வியாபார சந்தைக்கு மதிப்பு கூடி விட்டது. தெருக்கு தெரு டாஸ்மார்க்கடை போன்றே ,அழகு நிலையங்களும் காட்சி தருகின்றன. கண் புருவ அலங்கராம் 30 – 50 ரூபாய் சிகை அலங்காரம்50-300 ரூபாய், தலை வெள்ளை முடியை கறுப்பாகமாற்ற 300 ரூபாய் முகம் சுத்தம் செய்ய 300 ரூபாய் பொலிவான முக அலங்காரத்திற்க்கு 500 ரூபாய், கை அலங்காரம் 300 ரூபாய் என அழகுநிலையங்கள் சக்கை போடு போடுகின்றது.

http://www.vinavu.com/2010/04/29/kuspu-i-today/ கொள்கை- உரிமை என்று போராடிய பெண்கள் இன்று, ஆண்கள்செய்தால் நாங்கள் ஏன் செய்யக்கூடாது நாங்களும் எல்லா விதத்திலும் சமமானவர்கள் என்று தங்கள் நிலையை மறந்துபோராட ஆரம்பித்து விட்டனர். பெண்களுக்காக போராடுபவர்களாககுஷ்பு குஷ்புபோன்றவர்கள் என்ற முரண்களும் உண்மையான பெண்கள் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் இளம் பெண்களும் தங்கள் அறிவு ஆற்றலுக்கு கொடுக்கும் இடத்தை விட உடல் அழகு அலங்காரத்திற்க்கு கொடுத்து எப்போதும் சலசலப்பாக பேசிகொண்டே இருப்பவர்களாக மாறி வருகின்றனர்.http://kiliyanur.net/index.php?option=com_content&view=article&id=407:women-missed-everday&catid=60:ladies&Itemid=176

ஆணும் பெண்ணும் சமம் என்று மாயயை திணித்து பெண்கள்உடல் நிலைகளுக்கு ஒவ்வாத சுமடு தூக்கும் பணிக்கு வரை உட்படுத்தி விட்டனர். இன்று பட்டணங்களில் கடை இரும்பு கதவுகளை திறப்பதுமுதல் கடை அடைக்கும் மட்டும் 12-14 மணி நேரம் வேலை செய்ய தள்ளப்பட்டனர். ஆனால் ஆண்களுக்குநிகரான ஊதியமா என்றால் அங்கும் பெண்கள் சுரண்டப்படுகின்றனர். http://www.yarl.com/forum3/index.php?showtopic=90800இப்படியாக ஒரு புறம் பெண்கள்அடிமைப்படுத்தும் போது கேள்வி கேட்க இயலாத சூழலிலும் மறுபுறம் சுதந்திரமான வாழ்க்கை நாங்கள்அடிமை அல்ல என்று பல பெண்கள் தங்கள் பதவியிலும் ஆணவத்திலும் அடிமைப்பட்டு கிடைக்கின்றனர்.http://seeni-kavithaigal.blogspot.in/2012/03/blog-post_09.html?showComment=1332490866258#c4390523296229320968

12 comments:

  1. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அம்மா நன்றி வணக்கங்கள்!உங்கள் பதிவை மிகவும் ஆசையுடன் வாசிக்கும் வாசகி நான்.

    ReplyDelete
  3. அழகான அறிமுகங்கள். பாராட்டுக்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஜோசப்ளின்!

    அழகான எழுத்துக்கள்-
    கருத்துக்கள்!

    மலைகளுக்கிடுளியே-
    கடுகு என்னையவும்-
    சேர்த்து விட்டீர்கள்!

    உங்களுக்கு எனது-
    மனம் கனிந்த நன்றிகள்!

    ReplyDelete
  5. காலம் எப்போது மாறுமோ?

    ReplyDelete
  6. பெண்கள் உரிமைகள் பார்த்தேன் அறிமுகவாளர்களிற்கும், தங்களிற்கும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. பெண்கள் உரிமைகள் பார்த்தேன் அறிமுகவாளர்களிற்கும், தங்களிற்கும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. பதிவுகள் அறிமுகத்துக்கு நன்றி. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நல்ல வலைப் பதிவு அறிமுகங்கள் சிறப்பு.........

    ReplyDelete
  10. பதிவுகள் அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது