முதன் முதலாய்...
➦➠ by:
.:: மை ஃபிரண்ட் ::.
வந்துட்டோம்ல..
வணக்கம்.. வந்தனம்...
எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். கொஞ்சம் லேட்தான்.. இருந்தாலும் பரவாயில்லை.
அடுத்து போன வார வலைச்சர ஆசிரியர் கவிதாயினிக்கு ஒரு பலத்த கைத்தட்டுக்கள் கொடுப்போம். அசத்திட்டாங்க. வரிகள் எல்லாம் என்னமா இருந்துச்சு. தமிழ் M.A தமிழ் M.Aதான்.. சரிதானே?
இனி, நம்ம கதைக்கு போகலாம்.. வாங்க..
சிறுவயதிலிருந்தே இந்த பேனாவை (பென்சில் என்று கூட நீங்க படிக்கலாம்) புடிச்சு, மூளையை கசக்கி, கை வலிக்க வலிக்க எழுதுறது என்றாலே ஒரு மலையை கட்டி இழுக்கிற அளவுக்கு கஷ்டமான வேலை எனக்கு. தமிழ், மலாய், ஆங்கிலம்.. எந்த மொழியிலும் இதே பிரச்சனைதான் எனக்கு! :-( எப்போதுமே நான் எழுதும் கட்டுரைகள் கொடுத்த தலைப்புக்கு அற்பாற்பட்டே இருக்கும். "You are out of topic. திரும்ப செய்"ன்னு திருப்பி கொடுத்துடுவாங்க.. இப்படி திரும்ப திரும்ப ஒரே பாடத்தையே எத்தனை தடவைதான் எழுதுறது? எத்தனை நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? அதனாலேயே, சில சமயம் ஆசிரியர் வகுப்புக்கு வர்றதுக்குள்ள வகுப்பை விட்டு ஓடிடுவேன் நான்.. பல சமயங்கள் மாட்டிக்குவேன். :-(
இப்படி ஓடி ஓடியே பழக்கப்பட்ட எனக்கு, வலை மட்டும் எப்படி பிடித்து போனது? ஏன் வலைப்பூக்களை மட்டும் பார்த்தவுடன் ஓடவில்லை? நானே விரும்பி விரும்பி படிப்பதற்கு என்ன காரணம்? என்னையும் வலைசரம் தொடுக்க அழைத்திருக்கிறார்களே? நான் காண்பது கனவா? இல்லை நிஜமா?
இவைகளுக்கெல்லாம் இந்த வாரம் பதில் சொல்லிவிடுவேன் என்ற நம்பிக்கையிலும் உங்கள் ஆசியுடனும் என் முதல் பதிவை இன்று தொடங்குகிறேன். :-)
நான் இணையமே கதின்னு கிடந்திருந்தாலும் தமிழ் வலைப்பூக்கள் இருப்பது 2006 அக்டோபர் மாதம்தான் அறிந்தேன். கஜினி - மொமெண்டோ படங்களின் வித்தியாசத்தை கூகளில் தேடிக்கொண்டிருந்தபோதுதான் இந்த பதிவு என் கண்களுக்கு அகப்பட்டது. இவருடைய எழுத்துதான் என்னுடைய முதல் இன்ஸ்பிரேஷன். அவர் அந்த இரண்டு படங்களையும் போட்டு அதுக்கு கொடுத்திருந்த ஒற்றுமை வேற்றுமை என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் அவர் எழுதியிருந்தது அத்தனையும் தமிழில். தமிழில் மட்டுமே! உடனே அவருடைய பழைய இடுகைகளை நோண்ட ஆரம்பித்தேன்.
அவருடைய மின்னஞ்சல் முகவரியும் அங்கே இருந்ததால் அவரிடம் எப்படி தமிழில் தட்டச்சு செய்தார் என்று கேட்டேன். அவர் எப்படி என்று விளக்கியதுமில்லாமல் அந்த மென்பொருளையும் கூடவே இணைத்து அனுப்பினார். நானும் அதை கொஞ்சம் ட்ரை பண்ணிவிட்டு ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். விட்டாரா அவர்! "மை ஃபிரண்ட், நீங்க இன்னும் தமிழில் எழுத தொடங்கவில்லையா? வேறேதாவது உதவி வேண்டுமா?" என்று அவர் திரும்ப அனுப்பிய மடல்தான் இப்போது என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
10 வருடமாக தமிழே எழுதாமல் படிக்காமல் இருந்த எனக்கு திடீர்ன்னு தமிழில் எழுதணும் என்றதும் தலை கால் புரியவில்லை. ஓவர் பந்தா என்று நினைக்காதீர்கள். தலை கால் புரியாததற்கு காரணம் என்ன எழுதுறது என்றே தெரியாது வணக்கம் என்பதையே "வனக்கம்" என்று எழுதுமளவு என் தமிழ் மொழி அறிவு குறைந்திருந்தது. கார்த்தியின் எழுத்துக்களை படித்து படித்துதான் அ'னா, ஆவனா எழுத கற்றுக்கொண்டேன். இவர் இவரோட இடுகைகளுக்கு வைக்கும் தலைப்பை பார்த்தாலே கண்டிப்பாக படிக்கவேண்டும் என்று ஆவலை உண்டு பண்ணும். இவரின் எழுத்துக்களில் நீங்கள் மறவாமல் படிக்க வேண்டியது:
ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டணத்து வாழ்க்கை
ஒரு பிச்சைக்காரன் என் நண்பன் ஆகிறான்
சைக்கிள் பயணங்கள்
சாராயம் காய்ச்சுவதை கற்றுக்கொண்ட கதை
டீக்கடை சம்பவமும் பரோட்டாவுக்காக பஸ்ஸை கடத்திய செய்தியும்
நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில்
சூடமாய் கரையும் நினைவுகள்
இவரோட "ஊரே சேர்ந்து என்னை அமேரிக்காவுக்கு அனுப்பி வைத்த கதை"யும் மறவாமல் படிங்க. அதன் சுட்டியை கண்டுபிடிக்கமுடியவில்லை.
என்னுடைய ஆரம்பக்காலத்தில் என் ஆர்வத்துக்கு இன்னொரு தூண்டுகோலாக இருந்தவர் கடல் கணேசன். கடற்கரையில் இருந்து நடுகடலில் பயணம் செய்யும் கப்பல்களை எத்தனையோ தடவை ரசித்து பார்த்திருப்போம். ஆனால், அந்த கடல் வாழ்க்கையில் இருக்கும் நல்லது கெட்டது மற்றும் அவர் வாழ்க்கையில் நடந்த, பார்த்த நிகழ்ச்சிகளை 50 தொடர்களாக தொடுத்து வழங்கியது என்னை பொறுத்த வரை ஒரு பெரிய சாதனை. ஒரு கதை எழுதவே திணறும் எனக்கு, இடைவிடாது 50 தொடர்களையும் விறுவிறுப்பு குறையாமல் எழுதி எல்லாரையும் மூக்கு மேல விரல் வைக்க செய்தவர் இவர்.
அவர் எழுதியதிலேயே என்னை மனம் நெகிழ வைத்த சில எழுத்துக்கள்:
மொழி தெரியாத ஊரில் கடைசி நேரத்தில் கப்பலுக்கு செல்லாம முடியாமல் திண்டாடும்போது ஒரு தென்கொரிய நண்பரும் அவரது மனைவியும் எப்படி உதவினார்கள் என்று படிக்க..
கடல் கொள்ளையர்களால் கேத்தரின்க்கும் வில்லியம்ஸ்க்கும் நடந்த கோரமான முடிவை படிக்க..
இன்னும் தீர்க்கப்படாத மர்மமாய் இருக்கும் ஆனந்தன் காணாமல் போன சம்பவத்தை படிக்க..
விஷ்வமோஹினி கப்பலில் நடந்த பயங்கரமான சம்பவத்தை படிக்க..
நாளைக்கும் வருவோம்ல.. :-)))
மேலும் வாசிக்க...