ஏணிகள்...
➦➠ by:
ப்ரியமுடன்...வசந்த்
சும்மா நாம எழுதி பதிவில போட்டுட்டாலும் யாராவது அதை வாசிக்கமாட்டாங்களா யாராவது இதைப்படிச்சு கருத்து சொல்லமாட்டாங்களான்னு இருக்கும்,புதுசா எழுத வர்றவங்களுக்கு.அந்த வகையில் அனைவருக்கும் பின்னூட்டங்கள் அளிக்கும் நானறிந்த வரைக்கும் பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்கள் அனைவரும் அறிந்தவர்களே இவர்கள்.இருப்பினும் இவர்களின் இந்த ஊக்கப்படுத்தலுக்காக பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்கள் அனைவர் சார்பாகவும் என் மனமார்ந்த நன்றிகள் எப்பொழுதும் உங்களுடைய இந்த ஊக்கம் கொடுத்தலை நிற்பாட்டிவிடாதீர்கள் அதனால் நல்ல பதிவர்களை இந்த பதிவுலகம் இழக்க கூடும் இன்றைக்கு ஊக்கம் கொடுப்பவர்களைப்பற்றி பார்ப்போம்...அவர்களின் விமர்சனங்களைப்பற்றியும் பார்ப்போமே..
திரு.இராகவன் நைஜீரியா
இவரின் பின்னூட்டம் இல்லாத வலைப்பூக்களே இல்லையென்ற அளவில் புதியவர்கள்,பழையவர்கள் என்றில்லாமல் அனைவரது இடுகைகளையும் ,அவர்கள் நன்றாக எழுதுகிறார்களோ இல்லையோ அவர்களை சின்ன வார்த்தையொன்றையாவது சொல்லி கருத்து இட்டு வருவது இவரது வழக்கம்,அதேசமயம் நகைச்சுவையான பின்னூட்டங்களும் போடுகிறார். கும்மி உலக ராசா என்று கூட சொல்லும் அளவிற்க்கு அசராமல் பின்னூட்டங்கள் போடுவதில் இவரை அடித்து கொள்ள ஆளில்லை,நானும் இவரால் ஊக்கப்படுத்தப்பட்டேன்..அதேபோல் இவரது இடுகைகளும் நகைச்சுவையாகவும் இருக்கும்..
இங்கு எல்லாம் இவரின் பின்னூட்டங்களை படித்து ரசித்து சிரித்துவரலாம்
இவரது இடுகையில்
இராகவன் அண்ணா நீங்க என்னைய மறந்தாலும் பரவாயில்லை அடுத்தவர்களை ஊக்கப்படுத்தலை மறந்துடாதீங்க ஆமா சொல்லிப்புட்டேன்...
*************************************************************************************
திரு.நட்புடன்...ஜமால்
வலையுலக பிரபலம் இவரது இனிய சிரிப்பான முகத்தைப்போலவே பழகவும் பேசவும் மிகவும் இனிமையானவர் இவர் வலையுலகம் வந்து இட்ட இடுகைகள் குறைவாக இருந்தாலும்? இவர் பெற்ற நண்பர்களின் எண்ணிக்கை கணக்கிடலங்கா இதற்க்கு காரணம் அனைவரிடமும் சகோதர பாசத்துடன் பழகும் பாங்கு ,பதிவுலக வரலாற்றிலே 10000 பின்னூட்டங்கள் வாங்கிய அதிசய மனிதர்..புதியதாக எழுதும் அனைவரையும் மனம் திறந்து பாராட்டுகிறார் நண்பர்களிடமும் அவர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறார் உங்களுக்கு தெரிந்த யாராவது நன்றாக எழுதுபவர்கள் இருக்கிறார்களா என்றும் கேட்பதிலிருந்து அவரின் படிக்கும் ஆர்வத்தை தெரிந்து கொள்ளலாம்.கற்போம் வாருங்கள் என்ற வலைப்பூவில் எழுதிவந்தார் பலரின் பொறாமையோ ஏனோ இவரின் வலைப்பூ காணமல் போய்விட்டது போலும் இப்பொழுது அதே பெயரில் புதிய வலைப்பூவில் எழுதி வருகிறார்..இவரின் தக்காளி கவிதைக்கு நான் அடிமை ஏனோ அதற்க்கான தொடுப்பு கொடுக்க இயலவில்லை ஆதலால் இதோ
நன்றி ஜமால் அண்ணா
*************************************************************************************
திரு.S.A.நவாஷுதீன்
மனவிலாசத்துக்கு சொந்தக்காரார்..மனதில் பட்டதை கூறுபவர்
பதிவுலகில் அனைவராலும் அறியப்பட்டவர் அனைத்து பிரபல பதிவர்களின் பதிவுகளிலும்,என்னைப்போன்ற வளரும் பதிவர்களின் பதிவுகளிலும் இவரின் கருத்துரைகளை காணலாம் கவிதைகளை தேடி தேடி வாசிப்பவர் சுவாசிப்பவர் ,இவரொரு கவிஞர் ஆனால் ஏனோ அதிகம் எழுதுவதில்லை நேரமிருந்தாலும். தான் பின் தொடரும் அனைவரையும் வாசித்து கருத்துகளை நியாயமாக கூறுகிறார்.கவிதைகளை நீயா நானா என்று கேட்டு பிரித்து மேய்கிறார் அதன் அர்த்தங்களை..வளர்க நின் வாசிப்புதிறன் நண்பா..நன்றி நவாஸ்
இவரது இடுகைகள்
************************************************************************************
வடலூரான் கலையரசன்
இவரோட அபவுட் மீ படிச்சாலே சிரிப்பு தானா வருமுங்க...
யப்பா சாமீய்ய் இவரு இருக்காரே கொஞ்ச நஞ்ச லொள்ளா பண்றாரு.அப்பா இவரோட இடுகைகளை வாசிச்சுட்டு சிரிக்காம வந்தா உங்களுக்கு ஏதோ ஒரு நோய் இருக்குன்னே சொல்லலாம் அவ்வளவு நகைச்சுவைக்கு சொந்தக்காரர்,இடுகை மட்டுமா ஒவ்வொரு பதிவரின் இடுகைகளிலும் இவர் இடும் பின்னூட்டங்கள் உம்மனா மூஞ்சியை கூட சிரிக்க வைத்துவிடும் அது மட்டுமல்ல தன் இடுகைகளில் பதில் பின்னூட்டம் போடும்போது கூட சிரிக்கவைக்கிறாருங்க அவருடைய அந்த பின்னூட்ட ஸ்டைலே தனி..ஏனோ குறைவாத்தான் எழுதுறார் ஏன்னுதான் தெரியல? அனைத்து பதிவர்களின் இடுகைகளிலும் இவரது பின்னூட்டத்தை ரசிக்க வைக்கிறார்..
வளர்க உன் நகைச்சுவைத்திறன் மாப்பி...
நகைச்சுவைகள்
************************************************************************************
திருமதி.சின்ன அம்மிணி
நான் இப்போதான் இவங்களோட பதிவுகளை வாசிக்கிறேன் நல்ல கதையாசிரியர் இவருக்கு பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்காங்க ரொம்ப நாளாவே இவங்களோட பின்னூட்டங்களை பிரபலங்களின் பதிவுகளில் வாசிச்சுருக்கேன் இவங்களும் குறைவா எழுதி நிறைய பின்னூட்டம் இடும் பதிவரே சின்னதா சிரிப்பு ஸ்மைலியோட அனைத்து பதிவுகளையும் வாசிச்சு கருத்து சொல்றாங்க.அதிகாலையில் அனைவருக்கும் இவரது பின்னூட்டமே முதலாவதாய் இருக்கும் ஆஸ்திரேலியாவிலதான் முதல்ல விடிஞ்சுடுமே அதான் நினைக்கிறேன்..நன்றி சின்ன அம்மிணி
இவரின் இடுகைகள்
*************************************************************************************
திரு.அ.மு செய்யது
மழைக்கு ஒதுங்கியவையில் எழுதிவருகிறார் சகோதரர்
பிரபல பதிவர்கள் இருப்பதுபோல் இவர் பிரபல பின்னூட்டகாரர்,கதை எழுதுவதிலும் கெட்டிக்காரர் பார்க்க என்னைப்போன்று சிறு வயதுபோல் தோன்றுகிறது இருப்பினும் இலக்கியம் நிறைய படித்திருப்பார்போலும் அட்டகாசமாய் அனைத்து நல்ல இடுகைகளையும் வாசித்து பிரிச்சு மேய்றாரு அதே இலக்கிய ரசனையோடு..யப்பா எப்பிடி சாமி இப்டில்லாம்,ம்ம் உங்களின் இந்த சிறந்தஇலக்கியத்திறனும், ஊக்குவிப்புத்திறன் பன் மடங்கு வளர்க.. நன்றி செய்யது
**********************************************************************************
திரு.அருண்(வால்பையன்)
வால் பெயரில் இருப்பதுபோலவே செயலிலும் பிரபலப்பதிவர்கள் புதியவர்களை ஏறெடுத்து பார்க்காத இந்த பதிவுலகத்தில் நேற்று வந்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் நினைக்காமல் அனைவருக்கும் பின்னூட்டங்கள் போட்டு அவர்களை ஊக்குவித்து ரியல் பிரபலம் என்று நிரூபிக்கிறார் இந்த தலைக்கணமில்லா நாயகன் இவரின் எழுத்து பற்றி கூற எனக்கு தகுதியில்ல..அவ்வளவு நன்றாக எழுதக்கூடியவர்..எதிர் கவுஜ நாயகன்,பதிவர் சந்திப்புக்களின் தலைவன்...
நன்றி தல
இவரின் இடுகைகளில் இதோ
இவங்கள் அனைவருக்கும் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ஏணியாகவே இருந்துவிடாதீர்கள் ஏற்றிவிட்டவரை எட்டி மிதிக்கும் உலகமிது கைகொடுத்து அரவணைப்பாய் வாருங்கள்...மீண்டும் உங்கள் அனைவருக்கும் பதிவுலகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்...
மீண்டும் நாளை சந்திக்கும் வரை விடை பெறுவது
ப்ரியமுடன்...வசந்த்


