இந்த ஒரு வாரமா என் பதிவுகள படிச்சு பின்னூட்டமிட்டு ஆதரவு தந்த
ரசிகன், வேதா, பேபி பவன், வித்யா கலைவாணி, நிலா, ஜி, குசும்பன், கோபிநாத், காயத்ரி, டுபுக்கு டிசைபிள், ட்ரீம்ஸ், மை ஃபிரண்ட், மங்களூர் சிவா, கோவை ரவி, மருதம், கிட்டு மாமா, சீனா, கடல்கணேசன், இம்சை, ஜி.ராகவன் அனைவருக்கும், பின்னூட்டம் போடாம் ஜி-டாக், மின்னஞ்சல் மூலமா ஆதரவு தந்த மற்ற நண்பர்களுக்கும், வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த வலைச்சர ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என்னை இப்படி பதிவு போடுங்க இந்த பதிவு போடுங்கன்னு ஐடியா குடுத்து ஊக்குவிச்ச
தங்கச்சிக்காக்கு ஸ்பெஷல் நன்றி. ஆனா அவ ஆசைப்பட்டு கேட்ட பதிவு நாங்க கமெண்ட்ல கும்மி அடிச்ச பதிவுகளுக்கான இடுகைகள். அதுவும் முக்கால்வாசி தங்கிலீஷ்லயே இருக்கும்ன்றதால அதுக்குன்னு ஒரு பதிவ போட்டா மறுபடி விதிய மீறினா மாதிரி ஆயிடும். அதனால அவளுக்காக ஒரே ஒரு கும்மிய மட்டும் இங்க ட்ரான்ஸ்லேட் பண்ணி இருக்கேன். என்சாய் :))
நான் ப்ளாக் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி
கே.கே ப்ளாக்ல டேட்டிங் பத்தி அவர் போட்ட பதிவுல அடிச்ச கும்மி இது :)
நான் : பெரியவங்க எல்லாம் சேர்ந்து ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கீங்க.. இங்க குழந்தைங்களுக்கெல்லாம் வேலை இல்லன்னு தெரியுது.. நான் போயிட்டு அடுத்த போஸ்டுக்கு வரேன்
ஷ்யாம் : ஆமா ஆமா குழ்ந்தைங்களுக்கெல்லாம் வேலை இல்ல. உங்கள மாதிரி பாட்டீஸ்க்கும் வேலை இல்ல
கில்ஸ் : @ஜி3, வி.வி.சி. ஐயோ பாவம்.. நான் ஒன்னும் சொல்லலபா..
@ஷ்யாம், தல.. ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீங்க போங்க. உங்களுக்கு புளியோதரை & தொண்டிவனம் பார்சல் கண்டிப்பா.. கைவசம் கேஷ் கம்மிங்கறதால ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்பி இருக்கேன்.. சமத்தா மிச்சம் வைக்காம சாப்ட்ரனும்
நான் : உங்கள மாதிரி கொள்ளு தாத்தாக்களுக்கு தான் இங்க வேலை ஜாஸ்தின்னு நல்லாவே தெரியுது
ஷ்யாம் : @ஜி3, இது தான் உங்க கமெண்டா இருக்கும்னு நான் நினைச்சேன். அது தான் வந்திருக்கு
நான் : என்ன பண்றது. துப்பறிபும் சாம்புக்கு எப்பவும் அதிர்ஷ்டம் ஜாஸ்தி. அவர் கெஸ் பண்றதெல்லாம் கரெக்டா வந்துடுது
கே.கே. : @ஜி3, குழந்தைங்களுக்கு வேலை இல்லன்னு சொல்லிட்டு நீங்க ஏன் கிளம்பிட்டீங்க? இப்படி எல்லாம் செஞ்சா உங்கள நாங்க குழந்தைகள் லிஸ்ட்ல சேர்த்துடுவோம்னு நினைச்சீங்களா? நடக்காது
கில்ஸ் : ஜி3 குழந்தை பாவம்.. டேடிங்னா என்னன்னு தெரியலையாம்.. அதுனால தான் சைலண்டா போயிட்டாங்களாம். நீங்களும் கன்யாவும் தான் இந்த டாபிக்ல தீஸிஸ் பண்ற அளவுக்கு பிரிச்சு மேஞ்சிட்டீங்கள்ள.. விளக்குங்க
நான் : @கே.கே. நீங்க ஒத்துக்கலைன்னா நாங்க அந்த லிஸ்ட்ல இல்லன்னு ஆயிடுமா? நோ சான்ஸ்
@கில்ஸ், உங்களுக்கும் தானே தெரியல.. அதை ஏன் சொல்லாம விட்டீங்க? உங்களுக்கு தெரிஞ்சிருந்தா சொல்ல வேண்டியது தானே? ஜப்பான்ல இருந்து ஜாக்கிசான் பேசறதா ஆபீஸுக்கு போன போட்டு ஓட்ட மட்டும் தான் தெரியும் உங்களுக்கு
கில்ஸ் : ஆபீஸ்ல அப்படியே பரம் சாது மாதிரி போன் பேசினீங்க.. இப்ப என்ன உதார்
நான் : அதெல்லாம் கண்டுக்ககூடாது. ஆபீஸ்ல நான் நிஜமாவே சாது தான்
கே.கே : @கில்ஸ், கேள்வி கேக்கறது ஈஸி.. பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?? அதனால பதில் கன்யா சொல்லிடுவாங்க
//ஆபீஸ்ல அப்படியே பரம் சாது மாதிரி போன் பேசினீங்க.. இப்ப என்ன உதார்//
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்
@ஜி3, வேணும்னா வோட் வெச்சு பாக்கலாமா? எத்தனை பேர் ஜி3ய குழந்தைன்னு ஒத்துக்கறாங்கன்னு???
நான் : "ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை".. எத்தனை பேர் ஜி3க்கு எதிரா கள்ள ஓட்டு போட்டாலும் ஜி3 - குழந்தை தான்
கே.கே : பளார்னு அடிச்ச ஃபீலிங் இருக்கு எனக்கு
ஷ்யாம் : //ஆதவன் மறைவதில்லை// நீங்க சன் டீ.வி. ஓனருக்கு சொந்தமா
நான் : வெள்ளை கொடிய அதுக்குள்ள இறக்கிட்டீங்களா? இது என்ன கதையா இருக்கு.. சன் டீ.வி ஓனரோட்ட சொந்தகாரங்க மட்டும் தான் சூரியன பத்தி பேசனுமா என்ன? டூ மச்..
[
அப்போ தான், என்னை ஒரு வாரத்துக்கு ஓட்ட மாட்டேன்னு அவர் ப்ளாக்ல வெள்ளை கொடி ஏத்தி இருந்தாரு ]
கே.கே : ஜி3 இப்போ கட்சி மாறி இருப்பாங்க. சொல்ல முடியாது தமிழ் புலமை இருக்கறதால DMKல சேர்ந்திருப்பாங்க தமிழ் குடிமகனுக்கு ரீப்ளேஸ்மண்டா
நான் : என் தமிழ் புலமை எல்லாம் நான் படிக்கற நாவல் வளர்த்து விட்டது தான் சாமி.. என்ன இப்படி அரசியல்ல எல்லாம் வம்புக்கிழுக்காதீங்க.. நமக்கு அந்த பக்கம் ஒன்னுமே தெரியாது
ஷ்யாம் : //வெள்ளை கொடிய அதுக்குள்ள இறக்கிட்டீங்களா?// இது வெள்ளைக்கொடி ஏத்துறதுக்கு முன்னாடி சொன்னது.. டைம் ஸ்டாம்ப் பாருங்க
நான் : அதானே நாட்டாமை சொன்ன சொல் தவற மாட்டாரே
ஷ்யாம் : அப்படியே கூட BGM போட்டு இருந்தா நல்லா இருக்கும்
கே.கே : ஜி3, ஷ்யாமுக்கு ஐஸ் போடுறீங்களா?
நான் : @கே.கே, அதிசயமா ஒருத்தர் வெள்ளை கொடி தூக்கி இருக்கார்.. அவர பாராட்டினா தானே திரும்ப இந்த பாலிஸிய வேற யாராவது ஃபாலோ பண்ணுவாங்க
@ஷ்யாம், அதெல்லாம் நீங்களே படிக்கும் போது சேத்துக்குவீங்கன்னு நினைச்சேன்
ஷ்யாம் : பின்ன வேற ........... ச்சே.. இந்த வெள்ளை கொடி வேற வந்து தடுக்குது
நான் : சரி சரி டென்ஷன் ஆவாதீங்க அடுத்த வாட்டில இருந்து கரெக்டா BGM போட்டுடறேன்
கே.கே : ஷ்யாம், அந்த டயலாக்க முழுசா சொல்லுங்க.. என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு.. (சிந்து பைரவி ஜனகராஜ் மாதிரி)
நான் : கே.கே.,மறுபடியும் 75-வது கமெண்ட். இன்னும் 50 பொற்காசுகள் (இந்த வாட்டி fedex எல்லாம் வேணாம். Western union money transfer பண்ணிடுங்க )
கே.கே : ஜி3, எனக்கு காது கேக்கலை.. சாரி.. கண்ணு தெரியலை
ஷ்யாம் : ஜி3, இவர் கிட்ட இருந்து ஒன்னும் கிடைக்காது. மீறி கேட்டா அக்கவுண்ட் வெச்சுக்க சொல்வார். அப்புறம் அந்த அக்கவுண்ட் நோட்ட.... உங்களுக்கே தெரியும் [
இதே மாதிரி ஒரு முறை காலேஜ் படிக்கற காலத்துல அக்கவுண்ட் எழுதி வெச்சுட்டு கடைசில அந்த நோட்ட கிணத்துல தூக்கி போட்டுட்டாரு ]
@கே.கே, //ஷ்யாம், அந்த டயலாக்க முழுசா சொல்லுங்க// இன்னும் ஒரு 4 நாள் வெயிட் பண்ணுங்க
நான் : //கண்ணு தெரியலை// யப்பா, சந்தோஷம்.. அப்போ இனிமே என் கமெண்ட படிச்சு பதில் போட மாட்டீங்க
@ஷ்யாம், //மீறி கேட்டா அக்கவுண்ட் வெச்சுக்க சொல்வார். அப்புறம் அந்த அக்கவுண்ட் நோட்ட// அவரே கேடி. அவருக்கு நீங்க எடுத்து வேற குடுக்கறீங்களாக்கும்?
//இன்னும் ஒரு 4 நாள் வெயிட் பண்ணுங்க// கே.கே. நல்ல புள்ள.. இன்னும் 2 நாள்ல இதைப்பத்தி மறந்துடுவாராம்
***************************************************
அப்புறம் என்னங்க.. அவர் அடுத்த பதிவ போட்டுட்டாரு.. அதுல கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டோம் :))