07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 18, 2008

சரி, நான் பொயித்து வர்ட்டா...!!

உண்மையிலேயே எப்படி எடுத்து எப்படி முடிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தொட்டில் பழக்கம் இடுகாடு வரைக்குமின்னு சொன்னது மாதிரியே கடைசி நேரத்தில் டென்ஷன் எகிற, எகிற பரீட்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்பும் முதல் நாளும் அடிக்கும் மக் அப் மாதிரியே இந்த வலைச் சரமும் அமைந்திருச்சு.

ஆனால் இதிலொரு வித்தியாசம் இருக்குது. அது என்னான்னா, எப்போயோ படித்தவர்கள் எல்லாம் மனசில பசக்கின்னு ஒட்டிக்கிட்டவங்க என்னுள் ரொம்ப ஈசியா வந்து வெளியில் விழுந்தாங்க, பரீட்சை அறையில் கையில் எழுது காகிதத்தை வாங்கினவுடன் பொங்கி பொங்கி வரும் நன்கு அறிந்த கேள்விகளுக்குப் பதில்கள் போலவே சில பேரின் பதிவுகள் வந்து விழுந்தது.

அப்படியாக அமைவதுதான் உண்மையான வலைச்சரமென்றும் கருதுகிறேன். நண்பர்களின் தளங்கலை முற்றிலுமாக தவிர்க்கவே நினைத்தேன் அப்படியும் ஒரு சிலரை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி இதிலிருந்து ஒதுங்லாக இருந்தவர்கள் அனைவரது பதிவினையும் நான் வாசிக்கவில்லை என்று பொருள் கிடையாது, மாறாக அவர்கள் பரவலாக எல்லோராலும் இங்கு அறியப் பட்டவர்கள் என்பதாலே அவ்வாறு நான் எனக்குக் கிடைத்த வாய்ப்பை இப்படி பயன் படுத்திக் கொண்டேன்.

அய்யய்யோ நான் எப்படி இந்த வாரத்தை கொடுக்கப் போகிறேன் என்று எப்பொழுதும் புலப்பியது போலவே புலம்பும் பொழுது சிலர் ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டினார்கள், ஆனால், கடைசியில் என் "ஈகோ" அதனை விட நீளமாகி அவ்வாறு கொடுக்கப்பட்ட தொடுப்புகள் வாரமல் பார்த்துக் கொண்டது :). எனவே, அவர்களுக்கும் இத் தருணத்தில் ஒரு சிறப்பு நன்றி. எல்லாவற்றுக்கும் மேலே வலைச்சர நிர்வாகிகளுக்கும் இங்கு வந்து கை நனைத்து விட்டுப் போன படிப்பாளிகளுக்கும் எனது நன்றியோ நன்றிகள்! நான் இப்ப பொயித்து வாரேன்...

10 comments:

  1. பின்னிட்டீங்க தெ.கா.

    ReplyDelete
  2. தெகா,

    நாட்டுப்புறப்பாட்டு போல அசத்திட்டிங்க!

    //நன்றிகள்! நான் இப்ப பொயித்து வாரேன்...//

    அப்போ அடுத்த ஒரு வலைச்சர தொகுப்புக்கு இப்போவே அச்சாரம் போடுறிங்க :-))

    ReplyDelete
  3. இதுக்கு பேர் தான் பின்னி பெடலெடுக்குறதா? ஒரு வாரத்துக்கு அப்புறம் இப்போ தான் நேரம் கிடைத்தது தமிழ்மணம் வர. அதுக்குள்ள போய்வாரேன்னு சொல்லிட்டீங்களே. :-)

    ReplyDelete
  4. பொயித்து வரவா அப்படின்னா.. பொய் இத்து வரவான்னு அர்த்தமா? ;-)

    ReplyDelete
  5. வலைப்பூக்களில் பொதுவாக எல்லா வலைப்பூக்களையும் படித்துப் பின்னூட்டமிடுவது எனது பழக்கம். ஆனால் இதுவரை ஏனோ தங்களின் வலைப்பூவிற்கு வரவில்லை. வலைச்சரம் தொகுத்தபோது கொஞ்சம் பணிச்சுமை காரணமாக வரவில்லை. படிக்கிறேன்.

    ReplyDelete
  6. அழகா..தெளிவா வலைச்சரம் தொடுத்தீங்க.!

    பாத்து...பத்திரமா பொயித்து வாங்கப்பு !

    ReplyDelete
  7. உங்களின் ஆழமான அகலமான வாசிப்பு உங்கள் இந்த வாரப் பதிவுகளில் தெரிகிறது. ஒரு வாரம் - நன்றாகப் போனது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வித்தியாசமான சில பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தெகா.

    ReplyDelete
  9. துள்சிங்க,

    நன்றி தங்களின் பாரட்டுதல்களுக்கு... உங்க வாரத்தை நீங்க பெடல் எடுங்க, ஏன்னா, நான் தான் முதல்லேயே பின்னிடென்லே :D (அப்படின்னு நீங்கதான் சொன்னீங்க).

    வவ்ஸ்,

    //நாட்டுப்புறப்பாட்டு போல அசத்திட்டிங்க!//

    அவ்வளவு பொருள் பதிஞ்சா இருந்தது என்னோட தொகுப்புகள் :). ஆச்சர்யம்தான் போங்க...

    என்னாது, அடுத்த வலைச்சரமா அது சரி...

    ReplyDelete
  10. இதுக்கு பேர் தான் பின்னி பெடலெடுக்குறதா?//

    ஆறு,

    ஒரு வாரத்திற்கும் ஆளைக் காணலே இப்ப வந்து பெடல், ஸ்போக்ஸ்ன்னு பேசிக்கிட்டு, விடுவீகளா :)).

    //பொயித்து வரவா அப்படின்னா.. பொய் இத்து வரவான்னு அர்த்தமா? ;-)//

    அட அட தமிழ் இலக்கியவாதியே புல்லரிக்க வைக்கிற பொய்+இத்து = பொயித்து... சொல் பொருள் கொடுத்தீங்க நன்றி, நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது