07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 13, 2008

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - II

தருமி...! இவரை முதன் முதலில் எப்படி சந்திக்க வாய்ப்புகிட்டியது என்று சற்றே பின் சாய்ந்து அமர்ந்து பொறுமையாக யோசிக்க வேண்டியிருந்தது. அந்த சந்திப்பு எனது ஆங்கில வலைப்பூ பக்கத்தின் மூலமாகத்தான் அமைந்திருந்தது என்று நினைக்கிறேன். அங்கே அவரின் பாணியிலேயே ஒரு கேள்வி why we should be different? என்று கேட்டு ஒரு பதிவிட்டிருந்தற்கு இவர் கொடுத்த லிங்கில் சென்று பார்த்த பொழுதுதான், அங்கே ஒரு கடலளவிற்கு பொக்கிசங்களாக நிறைய பதிவுகள் மின்னிக் கொண்டிருந்தன.

அவைகளில் என்னை மீண்டும் சிந்திக்க தூண்டிய பதிவுகளாக அமைந்தது 49. நான் ஏன் மதம் மாறினேன்...? என்ற அவரின் தொடர்ப் பதிவுகள்தான். எல்லா வளர்ச்சி நிலைகளிலுமுள்ளவர்கள் அவசியம் படித்துப் பார்த்து தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் படி மிக நேர்த்தியாக அமைத்திருப்பார் அந்தப் பதிவுகளை. அதற்காக அவர் எவ்வளவு படித்திருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுதே அவர் பொருட்டு இருக்கும் மரியாதை பல மடங்கு எகிறுகிறது. அதன் பிறகு அவரின் எல்லா பழைய பதிவுகளையும் தோண்டிப் படித்து பல பதிவுகளுக்கும் உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமெழுதியது இன்னமும் நினைவிருக்கிறது.

பிரிதொரு சமயம் இளவஞ்சி எனக்கு, என் காட்டான் பக்கத்தில் பின்னூட்ட அரசியலை சாடி எழுதியிருந்த பொழுது அங்கே வந்து எனக்கு அறிவுருத்தும் படியாக எழுதிய பின்னூட்டத்தின் மூலமாக அவரின் பதிவுகள் பக்கம் செல்ல நேர்ந்தது. இவரின் எழுத்து நடைக்கு நிகர் இவரே! அவரின் பல பதிவுகளை ரசித்துப் படித்து சிரித்து, சிந்திச்சிருக்கிறேன்.` அண்மையில் தோண்டி எடுத்துப் படித்து சிரித்து, சிந்தித்தது காலச்சுழிப்பில் தொலைந்(த்)தவைகள்.. . அதே தளத்தில் நிறைய புகைப்படங்களையும் சுட்டுத் தள்ளி நமக்கு வழங்கி வருகிறார்.

...இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்
கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!...

செல்வநாயகி, இவரைப் பற்றி நான் என்ன சொல்லவிருக்கிறது. நிறங்கள் என்ற தலைப்பில் பளுப்பில் இருக்கும் இவரின் வலைத்தளமே வாழ்வின் முரண்களை அதனிலிருந்தே சுட்டிக் காட்டுவதனைப் போல அமைத்து விளாசி வருகிறார் பல விசயங்களை. இங்கு அவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க அனேக வாய்ப்புகளுண்டு. இவர் எழுத எடுத்துக் கொள்ளும் விசயங்கள், அதன் பொருட்டு அவரின் எண்ணங்கள் அதனை வெளிக்கொணர பயன் படுத்தும் மொழியின் ஆளுமை இவைகள் எல்லாமே இவர் வலைப் பக்கத்தின்பால் எனை இழுத்து வைத்திருக்கிறது.

கைராப்ட்ரான் (Chiroptera) அதாங்க நம்ம வவ்வாலு தலைகீழாக தொங்கிட்டே காத்துப் புக முடியாத இடத்திக்குள்ளரக் கூட நிஜ வவ்வாலுங்க அல்ட்ராசோனிக் சப்தத்தை அனுப்பி போகும் வழியில் உள்ள விசயங்களை அறிந்து கொள்வது மாதிரி, இவரின் தளத்தில் ஒரு சிறு நூலகத்திற்கு இணையான எல்லா படைப்புகளும் எளிமையான முறையில் திரட்டி தகவல்களாக தந்திருக்கிறார். ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி!! இப்படி ஒரு விவசாய முறை இருப்பதே அந்தப் பதிவின் மூலமாகத்தான் எனக்கு தெரிய வந்தது. இது போல ஆச்சர்ய மூட்டக் கூடிய பல பதிவுகள் அங்குண்டு.

2 comments:

  1. தெகா,

    நீங்க சொல்லி இருக்க எல்லாப்பதிவும் என்னோட grazing ல இருக்கிறது தான், சிந்தனைக்கு தீனிப்போடுபவர்கள்.

    நான் பொட்டல் காடாக என் பதிவை வைத்திருக்கேன்னு நினைத்தால் நீங்கள் அதை மேய்ச்சல் நிலமாக நினைத்து இருக்கிங்களே, பாலையிலும் சோலை இருக்குனு சொல்றிங்க, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், ஆனால் இதுக்கு நான் நன்றினு சொல்ல மாட்டேன் :-))( வலைச்சர சட்டம் நன்றி சொல்லக்கூடாதுனு சொல்லுது)

    எனவே அப்போ அடிக்கடி மேய்ச்சல் நிலத்துக்கு வாங்கனு மட்டும் சொல்லிக்கிறேன் :-))

    ReplyDelete
  2. வவ்ஸ்,

    பாலையில் ஓர் "ஓயசிஸ்" சற்றே அமர்ந்து இளைப்பார...

    நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது