07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 24, 2008

முதியோர் கல்வி.

வலைப்பூக்கள் படிக்கிறது ச்சும்மா டைம் பாஸ் இல்லைன்னு ஆகிப்போச்சுங்க.வலைகளின் வீச்சு ரொம்ப தூரம் போகிறது பார்த்தீங்களா? வாழ்க்கை முழுசும் ஏதாவது வகையில் என்னத்தையாவது கத்துக்கிட்டுத்தானே இருக்கோம்.....


புகைப்படக்கலை வகுப்புகளுக்குக் கூட்டம் எப்படி அம்முது பாருங்க. 'கல்விக் கரையில கற்பவர் நாள் சில'( பழமொழி சரியா?) கண்ணுலே படும் காட்சிகளைக் கிளிக் பண்ணிக்கிட்டு இருந்த என்னை மாதிரி ஆளுகள்கூட கொஞ்சம் கவனமெடுத்துக் கிளிக் பண்ண ஆரம்பிச்சது இந்தப் பதிவுகளைப் படிச்சுட்டுத்தான். மாசாமாசம் புகைப்படப் போட்டின்னு வச்சு நம்ம திறமையை வளர்க்கும் இந்த வகுப்புகளை நடத்தும் நம்ம மக்கள்ஸ்க்கு வலைச்சரத்தின் சார்பில் ஒரு நன்றியும் சொல்லிக்கலாமா? இந்தப் போட்டிகளில் கலந்துக்கறதுக்காகவே புதுப்புது ஜனங்க வலை பதியக் கிளம்பிருக்காங்க. எப்பவுமே படமாவேக் காட்டுவாங்களா என்ன? அப்படியே கொஞ்சம் எழுதவும் செய்வாங்கதானே?

கோணம் கூட இப்படி ஆரம்பிச்சதுலே ஒண்ணுதான். அப்பாடா............எத்தனை கோணம் எத்தனை பார்வை!!!!


மலாய் மொழிச் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்த செக்குவைக் காணோம்?
ஆறுமாசம் லீவு விட்ட செக்கு, எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
ஒரு பக்கம் மொழி கத்துக்கொடுத்துக்கிட்டு, இன்னொரு பக்கம் ஜில்லுன்னு (ஒரு)மலேசியான்னு கூட ரெண்டு ஆளுங்களை சேர்த்துக்கிட்டு ச்சும்மாக் கலக்குக் கலக்கிக்கிட்டு இருக்காங்க. மலேசிய மாரியாத்தா , விக்னேஷ்(வரா) எல்லாரையும் காப்பாத்துன்னு வேண்டிக்க வேண்டியதுதான் பாக்கி. தைப்பூசம் படங்கள் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது

மருத்துவம் சம்பந்தப்பட்டப் பதிவுகள் ஒரு விழிப்புணர்ச்சியைத் தருது.
எல்லா விவரமும் இப்ப வலையிலே கிடைக்குதுன்னு சொன்னாலும், நம்ம தமிழில் படிக்கும்போது இன்னும் ஒரு அண்மை உணர்வு வருதுங்க.நாமே ஊர் சுத்த அலையறோம். நம்மளைப்போல ஊர்சுற்றிகள் எழுதும் பயணக்குறிப்பு சுவையா இருக்குமேன்னு தேடிப்போனப்பக் காலிலே அகப்பட்ட மூலிகைகள் ஏராளம். ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல? யாத்திரீகன் எல்லோராவை எப்படி எழுதி இருக்காருன்னு நீங்களே பாருங்க.

தினேஷ் குமார் ஜன்னலின் வெளியே எட்டிப்பார்த்தே அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்காருங்க.
வல்லி சிம்ஹன், நானானி,நிர்மலா, செல்வராஜ், சிவிஆர், கைப்புள்ளெ, மோகன்தாஸ்,கானா பிரபான்னு சொல்லிக்கிட்டே போகலாம். அப்புறம் வலைச்சரத்தின் ஆயிரத்தாவது பதிவுவரை பட்டியல் நீண்டு போகும் அபாயம் இருப்பதால் இதோடு நிறுத்திக்கலாம். பெயர் குறிப்பிடாமல் விட்டவுங்க எல்லாரும் என் மனசுலே பெயர் பொறிச்சு வச்சுட்டுப் போயிருக்கீங்க.
தெரியாத விவரங்களைத் தெரிஞ்சுக்கவும், சரித்திர சம்பவங்கள் நடந்த இடங்களை இப்படியாவது பார்த்துக்கவும் முடியுதேன்ற மகிழ்ச்சியை இந்தப் பயணக்குறிப்புகள் தருதுன்னு நான் சொன்னா நீங்க மறுக்கவா போறீங்க?


இப்படி எல்லா விஷயத்திலும் எங்கேயாவது எதையாவது வாழ்க்கை முழுதும் கற்றுக்கொடுக்கும் (முதியோர்) கல்விக்கூடம் வலைப்பூக்கள்னு சொல்லவா?


முதியோர்ன்னு சொன்னா கிழவன் கிழவின்னு இல்லீங்க. அறிவில் முதிர்ந்த முதியோர் என்று கொள்க:-)))))

11 comments:

 1. மைக் நல்லாவே வேலை செய்யுதுங்க துளசி - கேக்க்குது - சக்ஸஸ் - பதிவின் சுட்டிகள் நல்லாவே இருக்கு

  ReplyDelete
 2. //முதியோர்ன்னு சொன்னா கிழவன் கிழவின்னு இல்லீங்க. அறிவில் முதிர்ந்த முதியோர் என்று கொள்க:-)))))//

  ஒத்துக்கறேன் டீச்சர்.. அதுலேயும் உங்களைப் பார்த்தும்கூட இதை ஒத்துக்கலைன்னா எப்படி..? வாழ்க டீச்சரம்மா..

  அப்படியே தம்பி மோகன்தாஸ் கங்கை கொண்ட சோழபுரத்தை பத்தி படம் புடிச்சு எழுதியிருந்தார். அதையும் எடுத்துப் போடுங்க டீச்சர்..

  ReplyDelete
 3. துள்சி!
  டீச்சரானால் மைக்குக்கும் பரீட்சை வைக்கணுமா? வேறு ஏதாவது தகவல் சொல்லியிருக்கலாம்.
  கல்விக்கு வயதேது துள்சி?
  நாற்பத்தைந்து வயதில் வீட்டுக்கு வெளியே வந்து computer basic course, iterior designing course-ம் படிக்கப்போனவள் நான். அட! அடுத்த பதிவுக்கு ஐடியா கிடைச்சாச்சு!!!

  ReplyDelete
 4. oru unmaiyana asiriyar kaattiya vazhithanai thodarnthu "yathrikan" sendru oru arputhamalai valaipoo paarthen, rasithen, soodikonden. sarithira asiriyarukku nanri solvathaa, sirpathin kalai nunukkangalai padam pidithu kaattiya antha drawing master athavathu orviya asiriyakku nanri solvatha ena puriyavillai. neengal vazhi nadathi ennai senru kaatiyathu saatharana palli alla.athu oru palkalai kazhakam. ungallukku enna parisu koduppathu enru theriyavillai. Ungallukku yanai pudikkum. anaal, inru oru poonaiyai parisa tharukiren.
  http://llerrah.com/kittenfromheaven.htm
  subbu rathinam.
  thanjai.
  PS: my unicode characters refuse to cooperate today. Hence my response in English.
  2. There is a function arranged in honour of the blogger who gets the Golden Crown this week.
  http://arthamullaValaipathivugal.blogspot.com

  ReplyDelete
 5. வாங்க சீனா.

  நல்லாக் கேக்குதுன்னு தெரிஞ்சு ரொம்ப மகிழ்ச்சிதான்:--))))

  ReplyDelete
 6. வாங்க உண்மைத்தமிழன்.

  அதான் எதை எடுப்பது எதை விடுவதுன்னு தடுமாற்றம். கொட்டிக்கிடக்குது பயணங்களும்,சரித்திரங்களும்.

  தம்பி மோகன்தாஸ் பெயரையும் பதிவில் குறிச்சுவச்சுருக்கேன் பார்க்கலையா?

  ReplyDelete
 7. வாங்க நானானி.

  இதெல்லாம் வாழ்க்கை முழுசும் கல்விதானே?

  சீக்கிரம் பதிவுகளைப் போடுங்க.

  ரெடி.ஸ்டார்ட்:-)

  ReplyDelete
 8. வாங்க சுப்பு ரத்தினம்.

  நம்ம வீட்டில் கோபால கிருஷ்ணனின் ஆட்சிதான். அவனுக்கு ரெண்டு அடிமைகள் மனித ரூபத்தில்:-))))

  பூனையும் ரொம்பப் பிடிச்சிருக்கு.

  என் வேலையைச் சுளுவாக்கிட்டீங்க.

  நன்றியோ நன்றி.

  யானைக்கும் பூனைக்கும் என்ன வித்தியாசம்?

  ஒரே ஒரு எழுத்து?:-)))))

  ReplyDelete
 9. :-) நன்றி டீச்சர் .. பயணக்குறிப்புகள் யார் கண்ணிலேயும் படாம போயடுமொனு நினைச்சிட்டு இருந்தேன் ..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது