07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 18, 2008

வலை வீசம்மா வலை வீசு. வணக்கம் சொல்லி வலை வீசு

அறிமுகமுன்னு ஒண்ணு தனியாக் கொடுக்கப்போறதில்லை. பொறுப்பாசிரியர் சொன்னதே போதும்.


வலைகளில் நடமாடிக்கிட்டு இருக்கும் தமிழ்ப்பதிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டணுமாம். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணம்தான் ஒரே காரணம்.


நான் மாத்திரம் படிச்சுட்டு, மத்தவங்களுக்கு இதைப் பத்தித் தெரியாமப் போச்சுன்னா?


கண்ணுக்குத்தெரியாத ச்சின்ன மீனுன்னா ஒரு லென்ஸ் வச்சுக் காட்டிப்பிடலாம். தமிழ்வலைகளில் திமிங்கிலங்கள் மிதக்குதப்பா. இதுலே நான் என்னத்தைன்னு 'பிடிச்சு' உங்களுக்குக் காட்டுறது? அதுதான் சூடாவும், குளிர்ச்சியாவும், நாப்பதுக்குக்கீழேயாவும், அதே நாப்பதுக்கு மேலேயாவும் முகப்புகளில் ஆடுதே.....எதையாவது கவனிக்காம விட்டதை எழுதலாமுன்னா, நம்ம வலை ஆசிரியர்கள் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தோமுன்னு ஆழமாத் தோண்டி எல்லாத்தையும் புரட்டிப்போட்டு வச்சிருக்காங்க. என்னடா.....நமக்குப் பின்னாலேயும் சக ஆசிரியர்கள் வருவாங்களே.....அவுங்களுக்கு எதாவது மிச்சம் மீதி வச்சுட்டுப்போணும் என்ற எண்ணமே துளியும் இல்லாதவங்கப்பா:-)))நம்மளை(யும்) ஒரு டீச்சருன்னு வலை உலக மக்கள்ஸ் ஒருவழியாச் சொல்லி வச்சுருக்காங்க. அதனால் கிடைச்ச வாய்ப்பை விடாம ஆசிரியர்களுக்கே ஆ.........'சிறியரா' வந்துட்டேன், இந்தப் பெரிய டீச்சர். மத்த டீச்சருங்க என்ன செஞ்சுவச்சுருக்காங்கன்னு பார்த்தாப் போதும்தானே? பள்ளிக்கூடத்துக்கு 'டீவோ' வர்றாருங்கற மாதிரி. அந்தக் கொள்கையின் படி இதுவரை இருந்த நாற்பத்தியொன்பது வலைச்சர ஆசிரியர்கள் ரிப்போர்ட்டைத்தான் இந்த வாரம் பார்க்கப் போறோம்.

புதுசா வந்தவங்களை அப்புறம் ஒரு நாள் பார்க்கலாம். இன்னிக்குக் கணக்குக்கு ஆசிரியர்கள் வரிசை இப்படி................
2 முதல் 18 வரை

29 comments:

 1. வாங்க டீச்சர் அது என்னாது 2 முதல் 18 வரை? புரியவில்லை!!!

  ReplyDelete
 2. //நாற்பத்தியொன்பது வலைச்சர ஆசிரியர்கள் ரிப்போர்ட்டைத்தான் இந்த வாரம் பார்க்கப் போறோம்.//

  நான் வேற கொஞ்சம் பயந்துதான் போய்விட்டேன் நம்ம பிராகிரஸ் ரிப்போர்டை டீச்சர் ஏன் பாக்க போறாங்கன்னு:)))

  ReplyDelete
 3. டீச்சர் முதல் மற்றும் இரண்டு மற்றும் மூன்றாவது இடமும் நானே வந்ததால் எனக்கு ஏதும் சிறப்பு பரிசு உண்டா?

  ReplyDelete
 4. டீச்சர்,

  //நம்ம பிராகிரஸ் ரிப்போர்டை டீச்சர் ஏன் பாக்க போறாங்கன்னு:)))//

  நான் நினைச்சேன். குசும்பன் சொல்லிட்டாரு.

  ReplyDelete
 5. //டீச்சர் முதல் மற்றும் இரண்டு மற்றும் மூன்றாவது இடமும் நானே வந்ததால் எனக்கு ஏதும் சிறப்பு பரிசு உண்டா?
  //

  உண்டு!

  பெஞ்சின் மேல் ஏறி நின்று வசதியாக வகுப்பை கவனிக்க சிறப்பு அனுமதி உண்டு!

  ReplyDelete
 6. ;))

  வாழ்த்துக்கள் டீச்சர் ;))

  ReplyDelete
 7. வாங்க துள்சிங்க,

  ஓ! நீங்கதானா அந்த ஆளு, இந்தப் பக்கமே வரவிடாம நான் பார்த்துக் கொண்டேன் ஒரு வாரத்துக்கு மக்களை. இப்ப நீங்க வந்து திரும்ப எல்லோரையும் வர வைச்சிடுங்க பாவம், வலைச்சரம் :))...

  வாங்க அசத்துங்க...

  ReplyDelete
 8. தொகுப்பு பற்றி பொதுவான பாராட்டு, விமர்சனம், குறைகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டும் மறுமொழிகளை வரவேற்கிறோம். பாராட்டுகள், வாழ்த்துக்கள், விமர்சனங்கள் //

  டீச்சரம்மா பூத்தொடுக்கப் போறாங்களா!!!!!!!!
  வாழ்த்துக்கள் துளசி.

  ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

  ReplyDelete
 9. //பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)
  //

  அதானே பார்த்தேன்!

  ReplyDelete
 10. வாங்க டீச்சர்! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. வாங்க வாங்க...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. துள்சி!
  வீசும் வலையில் திமிங்கிலங்கள் மாட்டுதா? அல்லாட்டி ப்ளாக்மாலி மாட்டுதா பார்ப்போம்...'ஆ..சிறியரே!'
  ஸ்வாரஸ்யத்தை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 13. துளசி, ஆரம்பமே அருமை. வலைப்பூக்களைப் பார்த்து, மற்றவர்கள் படிக்காத வலைப் பூக்களை அறிமுகம் செய்யச் சொன்னால், தங்களுக்கே உரித்தான பாணியில், இது வரை இருந்த ஆசிரியர்கள் என்ன கிழித்தார்கள் என்று ஆரமபித்திருக்கிறீர்கள். புதுமை செய்கிறீர்கள். கலக்குங்க - வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் டீச்சர்

  ReplyDelete
 15. //அது என்னாது 2 முதல் 18 வரை? புரியவில்லை!!!// சீக்கிர‌ம் சொல்லுங்க‌. ம‌ண்டை வெடிச்சிரும் போல‌ இருக்கு.

  ReplyDelete
 16. அது யாரு நாமக்கல் சிபின்னு புதுசா ஒரு பதிவர் வந்திருக்காரு பதிவுலகத்தில. வரவேற்போம்.

  ReplyDelete
 17. மக்கள்ஸ் மக்கள்ஸ்,

  அந்த 2 முதல் 18 என்னன்னு தெரியணுமா? அதுலே ஒரு தப்பு நடந்து போச்சு. உண்மைக்கும் சொன்னால் 1 முதல் 18ன்னு இருக்கணும்:-)))))

  குசும்பன், ஆடுமாடு,

  ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுன்னு ஏங்க இந்த பதற்றம்?

  பாருங்க, நமக்கல்லார் சரியான பரிசைச் சொல்லி இருக்கார்:-))))

  கோபி, வடுவூரார், தெகா,தமிழ் பிரியன்,மங்கை, கானா பிரபா
  வாங்க,வாங்க, வாங்க,வாங்க,வாங்க, வாங்க, வாங்க.

  வல்லி,

  எல்லாப்பூவும் கதம்பத்துக்குச் சரிப்படுமான்னு தெரியலைப்பா. முயற்சிக்கலாம்.....

  வாங்க டெல்ஃபீன்.

  அதெல்லாம் அசத்திரலாம்.இப்பவே ஒரே அசதியாத்தான் இருக்கு:-)

  நானானி,

  எதிர்ப்பார்ப்புக்கள் ஏமாற்றம் தரலாம் :-)))))


  ஏங்க சீனா,

  //தங்களுக்கே உரித்தான பாணியில், இது வரை இருந்த ஆசிரியர்கள் என்ன கிழித்தார்கள் ....//

  நாரதர் கலகமோ? அய்யோ...இந்த ஆட்டத்துக்கு நான் வரலை:-)))

  சின்ன அம்மிணி,

  நாமக்கல் சிபி யாருன்னு தெரியாதா? பிடி சாபம் ஃப்ரம் பித்தானந்தா:-)))))

  ReplyDelete
 18. //நாரதர் கலகமோ? அய்யோ...இந்த ஆட்டத்துக்கு நான் வரலை:-)))//

  ஏங்க துளசி, நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும். இல்லன்னா, நாமக்கல்லாரின் பரிசு கொடுத்துடுங்க

  ReplyDelete
 19. வலைச்சர ஆசிரியரா? டீச்சருக்கே டீச்சர் பட்டமா? கலக்குங்க.

  ReplyDelete
 20. எந்த எதிர்பார்ப்பும் இல்லை துள்சிம்மா!
  ஒன்லி சுவாரஸ்யம்தான் வேண்டும்.
  காரணம் என்னையும் வலைச்சரம் தொடுக்க அழைத்திருந்தார்கள். சிறிது காலம் போகட்டும்..கொஞ்சம் அனுபவமும் சேரட்டும் என்று வலையில் சிக்காமல் விலாங்கு மாதிரி தற்காலிகமாக நழுவியிருக்கிறேன்.முன்னோர்களின் அடிச்சுவட்டை ஒட்டிப்போக...தெரிந்துகொள்ள.சேரியா?

  ReplyDelete
 21. வாங்க டீச்சர்
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. வாங்க காட்டாறு.

  நானானி எல்லாம் சேரிதான்ப்பா:-))))

  மங்களூர் சிவா... உங்களை அடிச்சுக்க ஆள் இன்னும் வரலை:-))))

  வாழ்த்துகளுக்கு நன்றி

  ReplyDelete
 23. Hi,

  Look at this site, by typing in tamil can able to search in google.

  http://www.yanthram.com/ta

  ReplyDelete
 24. வாங்க மது.

  யந்திரம் வேலை செய்யுது. துளசி கோபால்னு அடிச்சுப் பார்த்தா 709 எண்ட்ரீ காமீச்சது:-)

  ஆனா...கலப்பையை ஓட்டும்போது கொஞ்சம் சிக்கல். 'ச 'க்கு ஆங்கில எஸ் போடாம ஆங்கில சி போடணும்.

  வேகமாட் தட்டச்சும்போது சரிவருமான்னு தெரியலை

  ReplyDelete
 25. ப்ரஸன்ட் டீச்சர்!
  வாழ்த்துகள் டீச்சர்!

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் மேடம், ஆவலோட எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 27. கோகுலன் கண்ணனா...
  அதுவும் ஃபெப்ரவரி மாதத்தில். ரொம்பத் தூங்கிட்டேனா துளசி:)

  மீண்டும் வாழ்த்துகள்

  ReplyDelete
 28. வலை வீசம்மா வலை வீசு!
  வணக்கம் சொல்லி வலை வீசு!
  அலையென வருமே பின் ஊட்டம்
  அதைப் பிடிப்போம் வலை வீசு!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது