07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 11, 2008

வலைச்சரம் தொடுக்கப் போகிறேன்...

அப்பப்போ என்னையும் நினைவில் வைச்சு இப்படி ஏதாவது உருப்படியாக செய்யுமிடத்தில் கூட கூப்பிட்டு விட்டுடுறாங்கப்பா. திக்கித் திணறி இப்பத்தான் என்னோட முதன்மை வலைத் தளத்தில் 99 பதிவுகள் போட்டுருக்கேன், அதுவும் இரண்டு வருட அவகாசத்தில் அப்படின்னா பார்த்துக்கோங்க எவ்வளவு சரக்கு நம்மகிட்ட இருக்குன்னு.

இந்தச் சூழலில் இப்படித் திடீர்னு நெஞ்சடைக்கிற மாதிரி மத்த பதிவுகளை எல்லாம் படிச்சி அவைகளுக்கு தொடுப்பு வேற கொடுக்கணுமின்னு கட்டாயத்தோட இந்த வலைச்சரங்கள் இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டாங்க. எதிர்பார்ப்பை கொஞ்சம் உங்க கைக்குள்ளயே வைச்சிக்கோங்க, இந்தப் பக்கம் வரவங்க இந்த ஒரு வாரத்திற்கு மட்டும்.

நான் எழுத ஆரம்பிச்ச வருஷத்தில இருந்து இன்னிக்கு வரைக்கும் என்கிட்ட ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றமின்னு பார்த்தா, தட்டச்சும் பொழுது இப்ப வேகமாக தமிழில் தட்டச்ச முடிகிறது முன்பிருந்ததை விட. இரண்டாவது, அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி இந்த இடத்தில் இவங்க சொன்ன மாதிரியே எழுத்தில் எந்தவொரு பெரிய மாற்றமுமில்லை, அதே காய்ந்த விசயங்களை பற்றித்தான் பெரும்பாலும் என் பதிவுகள் அமைந்திருக்கிறது. மேலும் எழுத்துப் பிழைகள் கொஞ்சம் மட்டுப் பட்டிருப்தை மறுப்பதற்கில்லை.

என்னோட ஆரம்பக் கால பதிவுகள் ரொம்பவே வேகமாக இருந்தது. அந்த நேரத்தில் இங்கும் நடந்த வலை அரசியல் எல்லாம் தெரியாமல் சமூக அவலங்களை முகமூடி அகற்றி காட்டுகிறேன் பார் என்று புறப்பட்ட பதிவுகள் எல்லாம் உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே சென்று உறங்க ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் சீரங்கத்து எழுத்தாளர் வலை பதிவுகளைப் பற்றி வரையறுத்திருந்தது அதாவது "ஒரு பத்து நிமிட பாப்பிலாரிட்டிக்காகத்தான்" எழுதுகிறேன் என்று விளங்காமலேயே இங்கே பதிப்பித்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால், இப்பொழுது தான் தெரிகிறது இப்படி இங்கு எழுதுவதற்கு (காசு வாங்காமல்) உளவியல் ரீதியான காரணமிருப்பதை.

அந்த நேரத்தில் ஊரில் பார்த்த காட்சிகளாக, படித்து விட்டு பொற்றோர்களையும், சமூகத்தையும் சுரண்டிச் சாப்பிடும் இளைஞர்களை பார்த்து உதவாக்கரை பட்டாதாரிகள்...! என்றழைத்து ஒரு பதிவும், பிரிதொரு சமயம் அவர்களே எப்படி பரிணமித்து பல்கிப் பெருகி மனித அட்டைகளாக சமூகத்தில் வாழ எத்தனிக்கிறார்கள் என்பதனை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஜீவராசிகள் மனதில் ஈவு இரக்கமற்ற நிலையில் நம்மூர் அனாதைக் குழந்தைகளை அலட்சியம் செய்து அவ் குழந்தைகளை புலம் பெயர வைக்கிறார்கள் என்று தொடர்ந்து கொண்டே செல்லும் அந்நாளைய பதிவுகள்.
பிறகு தமிழ்மணத்திலிருந்து திடீரென்று ஓர் அழைப்பு. அந்த வாரத்தில் நான் வழங்கிய சில பதிவுகள் எனக்கே பிடித்து விட்டதுதான். குழந்தைகளை எப்படி நமது தேவைக்காக நம்முடைய நிறைவேறா எண்ணங்களை அவர்களுனூடையே வைத்து திணித்து நம் அவர்களின் படைப்பாற்றலையும், வாழ்வையுமே பாலடிக்கிறோம் என்பதனை குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்... என்ற பதிவிலும், வளர்ந்து வரும் நாகரீக உலகில் முதலில் எது நாகரீகமென்று கேட்டு விட்டு, பிறகு நட்சத்திர வாரத்தில் அதன் தாக்கம் எங்கே கொண்டு போய் விடுகிறது நம்மை என்பதனை எரோப்ளேனில் நான் கண்ட மேற்கத்தியப் பாதை என்று சொல்லி முடித்திருப்பேன்.

மேலும் இயற்கை நேசி என்ற வலைத் தளத்தில் இயற்கை சார்ந்த விசயங்களை சொந்த அனுபவங்கொண்டு என்னோட (தெகா) வாசனையையும் அதில் குழைத்து பல பதிவுகள் கொடுத்திருக்கிறேன், ஆர்வமுள்ளவர்கள் அங்கே சென்றும் பார்க்கலாம்.

ஊருணியிலும் எனது சிந்தனைகளை வேற்றுக் கிரக வாசிகளும் படிக்க வேண்டும் (முடிந்தால் படிச்சிக்கட்டுங்கிற தைரியத்தோட:) என்ற நல்லெண்ணத்தில் வைத்திருக்கேன். தோண்டிப் பார்க்க நினைக்கிறவங்க தோண்டிப் பாருங்க, ஏதாவது கிடைக்கலாம்.


அப்படா, முடிந்தது சுய-புராணம். அடுத்த பதிவில் இருந்து எப்பலாம் அடுத்தவங்க பதிவு படிக்க நேர்ந்து, அப்படி படித்த பதிவுகளில் எது மனதில் தைத்துப் போனதோ அவர்களை மனதிலிருந்து எடுத்து வெளியே அறிமுகப் படுத்தி வைக்கிறேன். அது வரைக்கும் நிம்மதியா மூச்சு வாங்கிக்கோங்க, ஏன்னா, மூச்ச பிடிச்சி திரும்ப இழுத்துப் பிடிக்க வருவேன் அதான்.

10 comments:

  1. தெகா வெல்கம்.பின்னுங்க.

    ReplyDelete
  2. தெகா,
    வந்து ஒரு காட்டு காட்டுங்க :-))தெகா புகழ் எட்டு திக்கும் பரவ வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. துள்சிங்க,

    வாங்க, வாங்க... நானேதான் அது. வாரம் முழுதும் வந்து போகணும்.

    ஆடுமாடு,

    பின்னாடியே வந்துட்டோம்ல... நல்ல வேளை எனக்கு முன்னாடி நீங்க, ஏன்னா நீங்க அருமையா கொடுத்திருந்தீங்க, நம்ம இப்ப அப்படி இப்படின்னு இருந்தாக் கூட மக்கள் எடுத்துக்குவாங்க :).

    //வவ்வால் said...
    தெகா,
    வந்து ஒரு காட்டு காட்டுங்க :-))தெகா புகழ் எட்டு திக்கும் பரவ வாழ்த்துகள்!//

    வவ்ஸ்... ம்ம்.. ம்ம் வந்து வந்து பாருங்க...

    ReplyDelete
  4. தெகா,

    சரம் மணக்க வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  5. வெல்கம்

    தெகா.

    கலக்குங்க. பொறுமையா உங்க சுட்டிகளை படிக்கிறேன்.

    சரம் மணக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தஞ்சாவூரான்,

    தங்களின் ஏகோபித்த ஆராவாரங்களுக்கிடையே இதோ வந்துட்டேன்... :)

    ReplyDelete
  7. வாங்க டாக்டர்,

    கும்மிகளுக்கு தடையில்லைன்னு சொல்லியாவது ஒரு ரெண்டு பேரை இந்தப் பக்கமா கொண்டு வந்திடுவோமின்னு பார்க்கிறீங்களா... :))

    எப்படி இருக்கீங்க??

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தெகா...

    ReplyDelete
  9. தெக்கிக்காட்டான்,

    நான் வருகிற சொற்பநேரத்தில் நீங்கள் மீண்டும் முன்புபோல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பதைக்கூட அறியாதவளாயிருந்தேன்:(( இனித்தான் வந்து படிக்கவேண்டும். இயற்கைநேசியாக நீங்கள் எழுதிக்கொண்டிருந்த கட்டுரைகள் எனக்குப் பயனுள்ளவையாக இருந்ததுண்டு. இப்போதும் அங்கு எழுதிவருகிறீர்களா?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது