மறுபடி மறுபடி ஒரே வேலைய செஞ்சுகிட்டு செக்கு மாடு போல உழன்றுகிட்டு இருக்கறவங்க கூட, வருஷத்துக்கு ஒரு தடவையாவது எங்காவது புதிய ஊர்களுக்கு, சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம்.இதுல நம்ம விட வெளி நாட்டு காரங்க ரொம்பவே ஈடுபாடு காட்டுவாங்க. ஒரே ஒரு பெரிய பையை தோளில் மாட்டிகிட்டு அந்த ஊர் வரைபடத்தை வெச்சுகிட்டு கிளம்பிடுவாங்க. நாம அப்படியா?பால்காரன், பேப்பர்காரன், பூக்காரி, கரண்ட் பில், போன் பில், கேபிள்காரன் என எல்லாரையும் கேட்டுகிட்டு...
மேலும் வாசிக்க...
ஒரு சமூகம் முன்னேறி இருக்கிறது, நாகரீகம் வளர்ந்து இருக்கிறது என்பதற்க்கு பெருகி வரும் கலைகளே அத்தாட்சி. அது சிற்பமாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம், ஒரு மொழியாக இருக்கலாம். வலையுலகிலும் பலப்பல வித்தகர்கள் பலதரப்பட்ட கலைகளை தம் வலைப்பூ வழியாக வளர்த்து வருகிறார்கள்.எல்லோருக்குமே தம்மை புகைபடம் எடுத்து கொள்ள ஆர்வம் அதிகம் தான்.இந்த கல்யாண வீடுகளில் பொண்ணு மாப்பிள்ளை நீங்கலாக சுமார் ஒரு முப்பது பேர் மொய் எழுதிய உரிமையில் போட்டோவுக்கு...
மேலும் வாசிக்க...
இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை. இசைக்கு மொழியும் ஒரு தடை இல்லை.ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி?வலையுலகில் இத்தகைய இசை இன்பத்தை வாரி வாரி வழங்கும் பதிவர்கள் பலர் உள்ளனர். குழுவாகவும் இணைந்து செயல்பட்டு இசைத்தொண்டாற்றி வருகிறார்கள். இதில் இசை இன்பம், கண்ணன் பாட்டு, முருகனருள் போன்ற குழுக்கள் மிக அழகாக, பாடல்களை தொகுத்து வருகின்றன. ராக மாலிகையை போல பல வித்தகர்கள் இந்த குழுவில் இடம்பெற்று இருப்பது...
மேலும் வாசிக்க...
"உடம்பை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே!- திருமூலர்உலகில் அனைத்து ஜீவராசிகளும் ஆடி ஓடுவது என்னவோ வயிறார உணவுண்ண தான். ஒருவருக்கு என்னத்த குடுத்தாலும் திருப்தியே வராமல் இன்னும் வேணும்! இன்னும் வேணும்! என்று தான் கேட்பர். ஆனால் வயிறு ரொம்பி விட்டால் போதும்! போதும் என் ஏப்பம் விடுவர். "பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்"னு சும்மாவா மின்சார பெண் கஜோல் அம்பாள் பாடியிருக்கா? :)நல்ல சங்கீதமும் சமையலும் ஒன்னு. இரண்டுக்கும் உடனே...
மேலும் வாசிக்க...
விளம்பரத்தை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டோ? நாமே எத்தனை பேர் பின்னூட்டமே வேணாம்னு சொல்லி பதிவு போடறோம்?நாம எழுதினத யாரேனும் படித்து சூப்பர்! பிச்சுடீங்க! அட ஒன்னுமில்லைனா ரீப்பீட்டேய்னு ஒரு பின்னூட்டம் வரலைனா நமக்கு சாதம் செமிக்கிறதா?இதே மாதிரி தானே, ஒரு நுகர்வோர் பொருளை தயாரித்து விட்டு எந்த மாங்காயாவது தம் பொருளை வாங்க மாட்டானா?னு பன்னாட்டு நிறுவனங்கள் தவியா தவிச்சுட்டு இருக்கும்?பெயிண்டை விக்க ஒரு முதலாளி தலைல கலர் பூச வேண்டி...
மேலும் வாசிக்க...
கீதா பாட்டி, ஷைலஜா அக்கானு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்து தொகுத்து விட்டு போயிருகாங்க. நாம் ஏதோ ஓரமா உக்காந்து ஒப்பேத்திட்டு இருந்தோம். திடீர்னு முத்து லட்சுமி அக்காவிடமிருந்து வலைசரத்துக்கு திருஷ்டி கழிக்கறோம். உங்க சவுகரியம் எப்படி?னு மடல். என்னத்த சொல்ல? விதி வலியது.இந்த ஜிலேபி தேசத்துக்கு (கன்னட எழுத்துக்கள் எனக்கு அப்படி தான் தெரியுது) வந்தபுறம், ஆபிஸ்லயும், ரூம்லயும், தமிழ்ல பேசவே அதிகம் வாய்பில்லாம போச்சு. உடனே உலக தமிழ்...
மேலும் வாசிக்க...
கடந்த ஒரு வார காலமாக, வலைச்சரத்தின் ஆசிரியராகப் பணியாற்றிய அருமை நண்பர் சதங்கா, புதுமையாகவும் பயனுள்ளதாகவும், இதுவரை பலருக்கு அறிமுகம் ஆகாத பதிவுகளையும் தேடிப் பார்வைக்குத் தந்தமை பாராட்டுக்குரியது. . தினம் ஒரு பதிவெனத் திட்டமிட்டு காலையில் குறித்த நேரத்தில் பதிவிட்ட கால ஒழுங்கு மிகவும் பாராட்டத் தக்கது. தலைப்புகளே கவிதையாய் இருப்பது புதுமை அல்லவா !பின்னுவது கவிதைஅளப்பது கதைமணப்பது சுவைகட்டுவது கதம்பம்சுற்றுவது பயணம்விடுப்பது...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தில் எனது எண்ணங்களுக்கு மதிப்பளித்து பதிவு இட அழைப்பு விடுத்த சீனா ஐயாவிற்கும், வலைச்சரக் குழுவினருக்கும் முதற்கண் நன்றி.ஒரு வார காலம் தொடர்ந்து வாசித்து இன்புற்ற உள்ளங்களுக்கும், தவறாது அனைத்து பதிவுகளுக்கும் வந்து உற்சாகப்படுத்திய சீனா ஐயா, மற்றும்அநேக பதிவுகளுக்கு வந்து ஊக்கமளித்த நல்உள்ளங்கள் நாகு, செல்வி மேடம், ஜீவா வெங்கட்ராமன், அம்பி, கவிநயா, நியூபீ, சின்ன அம்மிணி, சாம் தாத்தா, துளசி டீச்சர், பித்தன், திகழ்மிளிர்,...
மேலும் வாசிக்க...
மனித வாழ்வில் அனுதினம் தொடர்வது பயணம் தான் இல்லையா ? காலையில் வீட்டில் இருந்து ஒரு தேநீர் கடைக்குப் சென்று வந்தால் கூட பயணம் மாதிரி தான். இதைச் சொல்வதற்கு காரணம், தேநீர் கடையில் ஒரு இரண்டு பேரைப் பார்த்து பேசுவோம், 'தினசரி பேப்பர்' அலசுவோம். இருப்பது கொஞ்ச நேரம் தான் என்றாலும் அங்கு கிடைக்கும் அனுபவங்கள் அலாதியானது !ஒரு தேநீர் கடையிலேயே உலகை அறிய முடிகிறதென்றால், ஊரெல்லாம் சுற்றி வந்தால் எவ்வளவு அனுபவம்...
மேலும் வாசிக்க...

கதம்பம் பார்ப்பதற்கே அழகாக இருக்கும் பல பூக்கள், இலைகள் நிறைந்த ஒரு கட்டு. அப்படி ஒரு கதம்பம் கட்ட நினைத்து, மொழி, ஆன்மிகம், நகைச்சுவை, தொழில்நுட்பம் என்று எனக்குப் பிடித்த, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நோக்கில் கட்டிய கதம்பம் ...தேவாரம் பற்றி ஃப்ளாஷ்பேக் பதிவு பதிந்திருக்கிறார் கோகுலன் அவர்கள். சில இடங்கள் பதிவிலும், பின்னூட்டங்களிலும்...
மேலும் வாசிக்க...
பதிவென்றால் கவிதையும், கதையும் தானா ? இந்த எண் சாண் வயிறு பத்தி அக்கறையில்லாதவர் எவரேனும் இருக்கத்தான் முடியுமா !!!நம்மூர் பழங்கதைகள் மாதிரி இங்க சொல்லும் ஒரு கதை. "ஒரு ஊருல ஒரு பெரிய வெவசாயக் குடும்பம் இருந்துச்சாம். தினம் அவங்க வேலை எல்லாம் முடிச்சிட்டுஆண்கள் முதலில் சாப்பிடுவாங்களாம். தினம், தினம் கோழியும், கறியும், வித விதமா அந்த வீட்டுப் பெண்கள் சமைச்சுப் போட்டிருக்கிறார்களாம். இவங்க சத்தம் போடாம சாப்பிட்டு போய்டுவாங்களாம்....
மேலும் வாசிக்க...
வாழ்வில் கவிதை எப்படி ஒரு அங்கமோ, அதே போல கதையும், என்று திடமாக நம்புவர்களில் அடியேனும் ஒருவன்.பிரியமுடன் பாட்டி சொல்லி நிறைய கதைகள் சிறுவயதில் கேட்டிருப்போம். அம்மாவை, அப்பாவை கதை சொல்லச் சொல்லி நச்சரித்திருப்போம்."ஒரு ஊருல, ஒரு ராஜா இருந்தாராம் ..." என்று ஆரம்பிக்கும்போதே, சுத்தி கூட்டமா உட்கார்ந்திருக்கும் பசங்க எல்லாம், இன்னும் கொஞ்சம் கைய, கால இழுத்து கதை சொல்லுபவரின் அருகில் நெருக்கமாகச் சென்று அமர்வோம். ஆரம்பத்திலேயே...
மேலும் வாசிக்க...
இதுவரை வந்த அநேக வலைச்சர ஆசிரியர்களும், கவிதை பற்றி குறிப்பிடாமல் சென்றதில்லை. கவிதைகள் இல்லாமல் ஒரு உலகை சிந்தித்தும் பார்க்க இயலவில்லை. அதனால் முதலில் கவிதை பின்னுவோம்.அசத்தும் சில வரிகளில் நம்மைக் திளைக்க வைக்க வருகிறார்கள் (இளம்) கவிஞர்கள் சிலர்.சில மாதங்கள் முன்பு, மகேஷ் எனும் இவ்விளம் கவிஞரின் வலைப்பூ சுட்டி அனுப்பி, வாசிக்குமாறு கூறியிருந்தார் நண்பர் நாகு. "சுருக்கல்" எனும் தலைப்பில் 'மகேஷ்' எழுதியிருக்கும் முப்பதைத் தொடும்...
மேலும் வாசிக்க...
சும்மா பதிவு போட்டுகிட்டு இருந்த என்னையும் மதித்து, ஆசிரியராக ஒருவார காலம் இருக்கிறீர்களா எனக் கேட்ட சீனா ஐயாவின் தைரியத்தை என்னனு சொல்ல, நன்றி பாராட்டுவதைத் தவிர !!! மனம் ஒரு விநாடி மெய்சிலிர்த்தது உண்மையோ உண்மை. முதற்கண் அவர்களுக்கு என் நன்றிகள்.செல்வி ஷங்கர் மேடம், நல்ல பதிவர்களை அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார்கள். சரியா பதிவுகள் இடமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சீனா அவர்களையும், மேடம் அவர்களையும்,...
மேலும் வாசிக்க...
செல்வி ஷங்கர் ஒரு அவசர அழைப்பின் பெயரில் ஆசிரியராக ஆனவர். தன் கடமையைச் சரிவர செய்ய நேரமில்லையே-இயலவில்லையே என்ற வருத்தத்தின் இடையேயும் அழகாக சிலபதிவுகளைச் செம்மையாகக் கொடுத்திருக்கின்றார். அடுத்து ஒரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பாகச் செய்யலாம் எனக் கூறுகிறார். நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள் செல்வி ஷங்கர். --------------------------அடுத்து இந்த வாரம் 19 - ஆம் நாள் முதல் ஒரு வார காலத்திற்கு ஆசிரியராக அருமை நண்பர் சதங்கா...
மேலும் வாசிக்க...
வாய்ப்பிற்கு நன்றி கூறும் நேரமிது. கருத்துகளில் மனத்தினை வாழ வைப்பது கவிஞர்களின் இயல்பு. கனவுகளில், கற்பனையில் மனிதனை மகிழ வைப்பது படைப்பாளியின் இயல்பு. நிகழ்வுகளை, செய்திகளை நெருக்கமாய்த் தந்து மகிழ்வூட்டுவது பதிவர்களின் பாங்கு. பன்முகச் சிந்தனையோடும், பல்வேறுபட்ட அறிவுத் திறனோடும், பதிவுகளைத் திறந்த உடன் கொட்டித் தீர்க்கின்ற கருத்துகள் ஏராளம் ஏராளம். என்னால் சிலவற்றைத்தான் சுவைக்க முடிந்தது. குணம் நாடி, குற்றமும் நாடி அவற்றுள்...
மேலும் வாசிக்க...
வலைப்பூக்களில் வலம் வந்த போது, மனத்தில் வரிசையாய் பதிந்து சென்ற பதிவர்கள் பலர். கண்ணில் படுவதற்கும்-பார்ப்பதற்கும் வேறுபாடு இருப்பது போல் எண்ணத்திலும் சில பதிவுகள் எட்டிப் பார்த்தன. "பெண்" பதிவர்கள் என்று பொதுவாக இல்லாமல் சிறப்புடன் அமைப்பதற்கு சிந்தனை தூண்டியது. எத்தனை காலங்கள் மாறினும் ஏற்ற இறக்கங்கள் ஏணிப்படியாய் இருப்பினும் பொதுமை என்று கொள்வதற்கு இன்னும் புதுமை பிறக்க வில்லை. அந்தப் புதுமையின் எட்டிப்பார்ப்புத் தான் இந்தப்...
மேலும் வாசிக்க...
அண்ணாகண்ணன் பன்முகச் சிந்தனையும், ஆய்வுத் தமிழின் புலமையும் பெற்றவர். ஆளுகைத் தமிழால் இதழாசிரியராய் தன்னை ஆழமாய் நிலை நிறுத்திக் கொண்டவர். இவரின் கவிதைகள் இனிமைத் தமிழாய் சுவைக்கின்றன. வரவேண்டும் அவள் என்ற கவிதை அருமை. ஆங்கிலக் கவிதைகளும் எழுதுகிறார். நிலாரசிகன் தனிமைக்குத் துணையாய் கவிதையை அழைப்பவர். ஏறத்தாழ 150 பதிவுகள் இட்டிருக்கிறார். சிறு கதையும் அப்பதிவுகளில் உண்டு. மூன்று நூல்கள் வெளியிட்டிருக்கிறார். ஆழமான அருமையான கருத்துகள்...
மேலும் வாசிக்க...
நிலா :நிலாவிற்கு வயது இரண்டு. பார்வையப் பாருங்க ! அந்த மழலை மலர்ச்சி கண்களில் தெரிகிறதா ? அது தான் நம்ம மனதுக்கு டானிக் !அடுத்துப் பாருங்களேன் - அந்த முகத்துலே மறுப்பு, எதிர்ப்பு, தடுப்பு, மகிழ்வு. அந்த செல் பேசுதா இல்ல நிலா கண் பேசுதா ? பாவம் அழக்கூடாதடா கண்ணா !! ஆ ஆ நிமிர்ந்த நன்னடை சூப்பர்-சீரிய சிந்தனைத் தோற்றம் - கை விரலில். பாப்பா கதை நமக்கும் பிடிக்கும். யானை வந்துச்சாம். குருவி வந்துச்சாம். இல்லல்ல எறும்பு வந்துச்சாம்...
மேலும் வாசிக்க...
வலைப்பூக்களில் எல்லாரும் அறிந்த பதிவர் வாத்தியார் சுப்பையா அவர்கள். அவரை அறியாதவர்களே இல்லை. அவரது வலைப்பூக்களைப் படிக்காதவர்களே இருக்க முடியாது. இருந்தும், வலைச்சர விதிமுறைகளுக்கு உட்படாமல், அவரைப் பற்றி எழுத வேண்டும் என்ற அவாவினால் விளைந்ததே இப்பதிவு. தமிழ் மணத்திற்கு வாழ்த்து என்ற அவருடைய பாடலில் பதிவரின் தமிழ் மணக்கிறது. அதில் கவிதை வாழ்கிறது. பதிவர்கள் அனைவரும் வாழ்த்தப் படுகின்றனர். பாடலால் வாழ்த்திய பாமுறை அருமை அருமை....
மேலும் வாசிக்க...
அன்புள்ள சகபதிவர்களே, அனைவருக்கும் வணக்கம். முதற்கண் என்னையும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்த வலைச்சர நிர்வாகத்தின் பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும் மற்றும் சிந்தாநதி, சகோதரிகள் முத்துலட்சுமி, பொன்ஸ் ஆகிய அனைவருக்கும், என மனங்கனிந்த வாழ்த்துகளுடன் கூடிய நன்றி. என்னுடைய அச்சமே என் இறை நம்பிக்கையை வலுவாக்கியது. இடைவிடாத முயற்சியும் செயல்திறனுமே தவம் என்பதை வள்ளுவத்தால் அறிந்தேன். ஒவ்வொரு செயலிலும் எனக்கு நினைவிற்கு...
மேலும் வாசிக்க...
அன்பு நண்பர் ஜமாலன் அழகான பதிவுகளை அள்ளித் தந்திருக்கிறார். எல்லையற்று விரிந்த சுட்டிகள், அதனுள் நீந்தி அத்தனையையும் படிக்க பொறுமை வேண்டும். அதில் புதிய சொற்கள் பலப்பல. யாரும் இதுவரை அதிகம் அறியாமல் / படிக்காமல் இருந்தவற்றை அருமையாகக் கையாண்டுள்ளார். ஆழ்ந்து படித்துச் சுவைக்கலாம். புதுமையான புதிர்களை இவர் பதிவில் பார்த்தோம். மாறுபட்ட சிந்தனையிலும் பதிவுகளைப் பரவலாய்த் தந்த தங்கள் முயற்சி பாராட்டத் தக்கது.நன்றி நண்பர் ஜமாலன்...
மேலும் வாசிக்க...

இந்த ஒருவாரம் வலைச்சரம் ஆசிரியப் பொறுப்பை தந்த நண்பர் கயல்விழி முத்துலெட்சுமிக்கும் பொறுப்பாக இருந்து உதவிகள் புரிந்த நண்பர் சீனாவிற்கும் நன்றிகள். அவர்களது நம்பிக்கை பாழாகாமல் இந்த ஒரு வார பொறுப்பை நல்லவிதமாக முடித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். எண்ணற்ற பதிவர்களை எல்லாம் அறிமுகப்படுத்த வாய்க்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட வேறு சில...
மேலும் வாசிக்க...

தமிழக தத்துவங்களின் பன்முகம் என்கிற இக்கட்டுரை உலகப் புகழ்பெற்ற பொருளியல் நிபணரும் நோபல் பரிசு பெற்ற இந்தியருமான அமர்தியா சென்னின் மிகமுக்கியமான நூலான The Argumentative Indian ("வாதிடும் இந்தியன்”) என்ற நூல் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை தருகிறது. பொதுவாக இந்திய தத்துவத்தில் மறைக்கப்பட்ட லோகாயுதவாதம் பற்றிய குறிப்புகளை பற்றியும் பேசுகிறது....
மேலும் வாசிக்க...