07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 24, 2008

சுற்றுவது பயணம் !

ம‌னித‌ வாழ்வில் அனுதினம் தொடர்வது ப‌யண‌ம் தான் இல்லையா ? காலையில் வீட்டில் இருந்து ஒரு தேநீர் க‌டைக்குப் சென்று வ‌ந்தால் கூட‌ ப‌ய‌ண‌ம் மாதிரி தான். இதைச் சொல்வ‌த‌ற்கு கார‌ணம், தேநீர் க‌டையில் ஒரு இர‌ண்டு பேரைப் பார்த்து பேசுவோம், 'தின‌ச‌ரி பேப்ப‌ர்' அல‌சுவோம். இருப்ப‌து கொஞ்ச‌ நேர‌ம் தான் என்றாலும் அங்கு கிடைக்கும் அனுப‌வ‌ங்கள் அலாதியானது !

ஒரு தேநீர் க‌டையிலேயே உலகை அறிய முடிகிறதென்றால், ஊரெல்லாம் சுற்றி வ‌ந்தால் எவ்வ‌ளவு அனுப‌வ‌ம் கிடைக்கும். எப்பேர்ப்பட்ட 'அனுபவம்' அது என்பது இனி வ‌ரும் க‌ட்டுரைக‌ளில் க‌ண்கூடாக‌க் காணலாம். பயணம் பற்றிய கட்டுரைகளாதலால் சில அருமையான பழைய பதிவுகளும் சேர்த்திருக்கிறேன்.

ப‌ய‌ண‌த்திற்கு ஆயத்தமாயிருக்கிறீர்களா, புற‌ப்ப‌ட‌லாமா ....



நார்வே மற்றும் ஆர்டிக் பயணம் - பரணீ

பழைய பதிவு தான் என்றாலும், அற்புதமான படங்களுடன் பயணத்தை விளக்கியிருக்கிறார். பரணீ கைதேர்ந்த புகைப்படக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயணக் கட்டுரையிலிருந்து சில வரிகள் ...

இரண்டு புறமும் உள்ள செங்குத்தான மலைகளில் பனி மூடிய சிகரங்கள், பசும் புல் போர்த்திய அழகு கொஞ்சும் குன்றுகள், மலையில் இருக்கும் பனி உருகி சலசலவென ஓடும் பல நூறு எழில் கொஞ்சும் சிறு சிறு அருவிகள் அப்படுன்னு ஒரே அமர்க்களமா இருக்கும். அழகுன்னா அப்படி ஒரு அழகு. வார்த்தைகளில் விவரிக்கமுடியாத ஒரு ஒரு அழகு....



டெல்லி பயணம் - சில கோர்வையற்ற குறிப்புகள் + படங்கள் - விக்கி

தில்லியின் சாலைகளில் நாமே நடந்து போவது போல இருக்கிறது. நன்றாக ஆங்காங்கே நையாண்டியாக விவரித்திருப்பதும் அருமை. படங்களும் கொடுத்திருக்கிறார் விக்கி.

பதிவிலிருந்து ஒரு சில வரிகள் ...

* நாட்டின் தலைநகரமாயிருந்தாலும் டில்லி இன்னும் முழுமையான நகரத்து தன்மையை அடைந்து விடவில்லை. இன்னும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இருக்கிறது. ஆங்காங்கே நகர்ப்பகுதிகளில் இருக்கும் திறந்தவெளி புல் தரைகளில் மதியம் 12 மணிக்கு கூட மக்கள் கூட்டமாய் அமர்ந்திருக்கிறார்கள். நிறைய புறாக்கள் உயிறோடு பறக்க முடிகிறது...



மான்செஸ்டர் பயணம் - செல்வராஜ்

செல்வராஜ் அவர்களின் மான்செஸ்டர் பயணம். நிறைய குறிப்புக்கள் கொண்ட அருமையான ஒரு பயணக் கட்டுரை. நாமே சென்று வந்தது போன்ற ஒரு உணர்வு பதிவை படிக்கையில் ஏற்படுகிறது.

கட்டுரையிலிருந்து சில வரிகள் ...

ஊர் முக்கியப் பகுதிகளை இரண்டு தெருக்களில் அடக்கிவிடலாம் போலிருந்தது. ஞாயிறு என்பதால் கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. செந்நிறத்தில் ஆளுயர அஞ்சல் பெட்டிகள் இன்னும் சாலையோரத்தில் நிற்கின்றன. மூடியிருந்த கதவில் எழுதியிருந்தது பார்த்ததில், எதிரிலேயே இருந்த அஞ்சல் அலுவலகத்தில் டாலரைப் பவுண்டாக்கிக் கொள்ள முடியும் போலிருக்கிறது....



எனது இந்திய பயணம் - சென்னை ஒரு பார்வை - கிரி

சென்னையை ஒரு சுற்று சுற்றி வந்த அனுபவத்தைத் தருகிறார் கிரி. சாலைகளாகட்டும், விளம்பர அட்டைகளாகட்டும், உணவகங்களாகட்டும், பத்து வருடம் முன்னால் இருந்த சென்னையை நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை இக்கட்டுரையை வாசிக்கையில். அனைத்துமே வியப்பாக இருக்கிறது.

கட்டுரையிலிருந்து ஒரு சில வரிகள் ...

சென்னையில் உள்ள நண்பர்களை சந்தித்து அவர்களுடன் ரெசிடன்சி உணவகம் சென்றால் இடம் இல்லை என்று கூறி விட்டார்கள், சரி இன்னொரு ரெசிடன்சி (Globus அருகே) சென்றால் ரூப் கார்டன் செல்லுங்கள் அங்கே தான் இடம் இருக்கும் இங்கே கீழே இடம் இல்லை என்றார்கள், அங்கே சென்று அமர்ந்த பிறகு அந்த இடமும் நிரம்பி விட்டது. பிறகு நண்பர்களிடம் கேட்ட போது வார நாட்களில் அனைவரும் இது மாதிரி உணவகம் வந்து தான் சாப்பிடுகிறார்கள் வீட்டில் செய்வதே இல்லை என்றார்கள். சென்னை ரொம்ப மாறி விட்டது, வந்து இருந்ததில் பாதி பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான்...



மங்களூருக்கு ஒரு ரயில் பயணம் - கீர்த்தி

அவ்யுக்தா என்ற தனது தளத்தில் கவிதை, கதை, கட்டுரை, படங்கள் எனத் தீட்டி அசத்தி வருகிறார் கீர்த்தி. இந்தப் பதிவில் காட்சிகள் மட்டுமே இருந்தாலும், அழகான ஓவியங்கள் போல் காவியங்கள் பாடுகின்றன அத்தனையும்.

இப்பதிவைப் பற்றி சில வரிகள்.

மாலைச் சூரியனும், பறக்கும் பருந்தும், ரயில் ஜன்னலும், உயர் கோபுரமும் எல்லாவற்றிற்க்கும் மேலாய் பச்சை பசுமைகளும் நம் கண்களை குளிர்விக்கும் என்பது நிச்சயம்.



பாரீஸ் பயணம்

பயணம் என்றால் பாரீஸ் இல்லாமலா ?!! ஆனால் தேடலில் ஒன்றும் சரியாக அகப்படவில்லை. புகைப்படங்கள் மட்டும் கொண்டொரு பழைய பதிவு இது. 'டவின்சி கோட்' புகழ் 'லுவுர்' (உச்சரிப்பு சரியா எனத் தெரியவில்லை) மியூசியம், ஈஃபிள் டவர், மற்றும் பல அருமையான புகைப்படங்கள் கொண்ட சுரேஷ் பாபு அவர்களின் பதிவு.



ப‌ய‌ண‌ங்கள் இனிதாய் இருந்திருக்கும் என‌ ந‌ம்புகிறேன். நல்லா ஊரு சுத்திட்டு வாங்க. விடை பெறும் நேரம் வந்தாச்சு, அடுத்து நன்றி நவில்தலில் சந்திப்போம்.

4 comments:

  1. சதங்கா,

    அருமை அருமை - புதுமையான தேர்ந்தெடுப்பு - பயணக் கட்டுரைகளைக் கூட சுவையாகச் சொல்லிய பதிவுகளைத் தேடித்தேடிப் படித்து, ரசித்து, சுட்டி கொடுத்தது பாராட்டுக்குரிய செயல். கொடுத்த பணியினைச் சிறப்பாகச் செய்யும் சதங்கா - உழைப்பிற்கு நன்றி - ஈடுபாட்டிற்கு நன்றி - முழுமனதுடன் செயல் பட்டதற்கு நன்றி.

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சதங்கா,

    அலுவலகத்தில் ஆணி அதிகமாகி பிடுங்க ரொம்ப நேரமாகிவிட்டது ஆகையால் தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

    நானும் ஒரு பயணக் கட்டுரை எழுதுகிறேன் என்று சில மாதங்களுக்கு முன்பு சொல்லியிருந்தது நினைவில் ஆடியது. இருந்தாலும் விக்கியின் டில்லி பயணக் கட்டுரைபோலவோ, கிரியின் சென்னைக் கட்டுரை போலவோ கண்டிப்பாக எழுதியிருக்க முடியாது. நல்லா தேர்ந்தெடுத்து கொடுத்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். அதுக்குள்ள ஒரு வாரம் ஓடி விட்டதா.

    ஒரு விண்ணப்பம், நன்றி நவில்தலை ஒரு கவிதையாக எழுத முடியுமா? இது மீன் குட்டியை நீந்தத் தெரியுமா என்று கேட்பது போல இருக்கிறதோ?

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  3. சீனா ஐயா,

    பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. முரளி,

    வாங்க, வாங்க. தாமதமான வருகை என்றாலும் பரவாயில்லை. நேரம் கிடைக்கும்போது அனைத்து பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது