07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 26, 2008

வலைசரத்துக்கு வந்த சோதனை!


கீதா பாட்டி, ஷைலஜா அக்கானு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்து தொகுத்து விட்டு போயிருகாங்க. நாம் ஏதோ ஓரமா உக்காந்து ஒப்பேத்திட்டு இருந்தோம். திடீர்னு முத்து லட்சுமி அக்காவிடமிருந்து வலைசரத்துக்கு திருஷ்டி கழிக்கறோம். உங்க சவுகரியம் எப்படி?னு மடல். என்னத்த சொல்ல? விதி வலியது.

இந்த ஜிலேபி தேசத்துக்கு (கன்னட எழுத்துக்கள் எனக்கு அப்படி தான் தெரியுது) வந்தபுறம், ஆபிஸ்லயும், ரூம்லயும், தமிழ்ல பேசவே அதிகம் வாய்பில்லாம போச்சு. உடனே உலக தமிழ் மாநாடு நடத்தவோ(கணக்கு வேற காட்டனுமே), கடைசங்கம் வைத்து தமிழ் வளர்க்கவோ என்கிட்ட டப்பு இல்லாததால், கூகிள் ஓசில பிளாக் தறாங்கனு பிகருக்கு வடை அளித்த வள்ளல் டுபுக்கு பதிவை யதேச்சையாக பாத்து (ஆமா! மூணு வருஷமா கடை நடத்தறேனு அவரு சொல்லவேயில்லை என்கிட்ட) நானும் கி.பி 2006 பிப்ரவரி 18, சுக்ல பட்சத்துல ஒரு கடைய தொறந்தாச்சு.


நான் பதிந்ததெல்லாம் சொந்த அனுபவங்கள், நிகழ்வுகள், பயணங்கள்.

நேர் நேர் தேமா! நிரை நேர் புளிமா!னு கவிதை எல்லாம் எழுதனும்னு தான் ஆசை, ஹிஹி, இன்னும் வார்த்தை தான் அருவியா கொட்ட மாட்டேங்குது.
சாதனைனு சொல்லிக்கற மாதிரி ஒன்னும் எழுதிடலை. பதிவு எழுதினதுக்கு பதிவுலகில் இருந்து பின்னூட்டத்தோட ஒரே ஒரு தங்கமணியும் கிடச்சாங்க.

உன் பதிவுகளை படிச்சுமா அந்த பொண்ணு உன்னை நம்பிச்சு?னு எனக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான். அதோட பல நல்ல உள்ளங்களின் நட்பு கிடைச்சது. இதுல பலபேரை இன்னும் நான் பார்த்ததே இல்லை. ஒரு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் ரேஞ்சுக்கு(கொஞ்சம் ஓவரா தான் போறேனோ?) நட்பு வட்டங்கள் பெருகி உள்ளது. 


வரும் நாட்களில் ஏற்கனவே வலை சர ஆசிரியர்கள் தொகுத்தது போக ஏதாவது மிச்சம் சொச்சம் இருந்துச்சுனா (எங்க இருக்கு?) அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறேன். ரீப்பிட்டேய் ஆச்சுனா அது என் வாசிப்பு வட்டம் மிக சிறியது என நீங்களே முடிவு செஞ்சு மன்னிச்சு விட்ருங்க.

நாளைக்கு எல்லோருக்கும் மிகவும் பிடிச்ச, ருசிகரமான விஷயத்தோட வரேன். என்ன சரியா?

51 comments:

  1. வட்டமோ சதுரமோ.....

    தெரிஞ்ச அளவுலே தொடுத்தா ஆச்சு.
    இல்லையா அம்பி?

    ஆமாம்.கேக்க மறந்துட்டேனே.....

    தங்கமணி சவுக்கியமா? அவுங்களுக்கு வழக்கமாப் பூத் தொடுக்கறது நீங்கதானே?

    ReplyDelete
  2. ஆஹா.. அம்பியா இந்த வாரம்..

    அசத்தல் சரமா தொடுக்க வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  3. //தெரிஞ்ச அளவுலே தொடுத்தா ஆச்சு.
    இல்லையா அம்பி?
    //

    அத சொல்லுங்க டீச்சர். :))

    //தங்கமணி சவுக்கியமா? //

    பரம சவுக்கியம். ஏதேது விட்டா சனிகிழமை எண்ணேய் தேய்த்து குளிக்க சொல்லவும்னு பின் குறிப்பு குடுப்பீங்க போலிருக்கே! :p

    //அவுங்களுக்கு வழக்கமாப் பூத் தொடுக்கறது நீங்கதானே?
    //

    பூ தொடுக்க தெரியாது, இனிமே தான் கோபால் சார் கிட்ட ஆன்லைன்ல கத்துக்கனும். :))

    ReplyDelete
  4. //அசத்தல் சரமா தொடுக்க வாழ்த்துக்கள்//

    எல்லாம் அக்கா உங்கள் ஆசிர்வாதம். :)

    ReplyDelete
  5. அண்ணே,
    சுப்பர் இன்ட்ரோ. உங்க கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு பார்முலால நானும் ஒரு பிசிராந்தயாரினினு நெனைக்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //உங்க கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு பார்முலால நானும் ஒரு பிசிராந்தயாரினினு நெனைக்கிறேன். //

    @rapp, ஆமா! ஆமா! நீயும் ஒரு பிசிராந்தையாரினி தான். :))

    ReplyDelete
  7. //ஒரே ஒரு தங்கமணியும் கிடச்சாங்க.//
    ithula engayo idikuthay...enna mr.vambi.. ;)

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. //ithula engayo idikuthay...enna mr.vambi.. ;)
    //

    @gils, கரக்ட்டா உனக்கு மட்டும் இதெல்லாம் கண்ணுல படுமே! ப்ரீயா விடுப்பா. :))

    ReplyDelete
  10. வாழ்த்துக்கு மிக்க நன்றி திகழ்மிளிர் அக்கா.

    ReplyDelete
  11. கோபால் சார் கிட்டேயா?

    அவ்வளோ பாக்கியம் அவர் பண்ணலையே அம்பி.

    இங்கே பூவை ஜாடியில்தான் வைக்கணும் (-:

    இப்ப இந்தியாதான் வந்துருக்கார். வேணுமுன்னா நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒண்ணாக் கத்துக்குங்கோ:-)

    ReplyDelete
  12. நெம்ப தேங்க்ஸ் அண்ணே.

    ReplyDelete
  13. //அவ்வளோ பாக்கியம் அவர் பண்ணலையே அம்பி.
    //

    இப்படி உசுப்பேத்தியே தான் எல்லா ரங்கூஸ் உடம்பும் ரணகளமாகி இருக்கு. :))

    //இப்ப இந்தியாதான் வந்துருக்கார். வேணுமுன்னா நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒண்ணாக் கத்துக்குங்கோ//

    //இங்கே பூவை ஜாடியில்தான் வைக்கணும் //

    இப்பவும் விடறதாயில்ல..? :p

    ReplyDelete
  14. ஆஹா அம்பி தம்பி!யப்பா பேராண்டினு கூப்பிடற வயசொன்னும் இல்லை எனக்கு;)உங்க தங்கமணி மேட்டர் இப்படியா?குட் குட் வாழ்க தமிழும் மணமும் போல பதிவும் பின்னூட்டமும் போல
    வலைச்சரத்துல இது போல ஜோடிக் கதையிருந்தா எடுத்து வுடுங்க

    ReplyDelete
  15. அம்பீ! ஒருவாரம் வலைவசமா?:) ம்ம்ம்....கலக்குங்க:)

    ReplyDelete
  16. //யப்பா பேராண்டினு கூப்பிடற வயசொன்னும் இல்லை எனக்கு//

    வாங்க இன்னோரு டீச்சர், நீங்க தான் கண்ணாடி இல்லாமயே விக்கோ வஜ்ரதந்தி எடுக்கற ஆளாச்சே! :))

    //உங்க தங்கமணி மேட்டர் இப்படியா?குட் குட் வாழ்க தமிழும் மணமும் போல பதிவும் பின்னூட்டமும் போல
    //

    ஹிஹி, ஆமாங்கோ!

    //வலைச்சரத்துல இது போல ஜோடிக் கதையிருந்தா எடுத்து வுடுங்க
    //

    அதானே! எங்கூர் காத்து பட்டாலே இப்படி கிசுகிசு கேக்க தோணுமே! :p

    ReplyDelete
  17. வாங்க 'கானா குயில்', 'வலையுலக மை.பா புகழ்', 'திருவரங்க ப்ரியா' :p

    வாழ்த்துக்கு நன்னி.

    ReplyDelete
  18. ஹாய் அம்பி,

    // பின்னூட்டத்தோட ஒரே ஒரு தங்கமணியும் கிடச்சாங்க.என்னத்த சொல்ல? விதி வலியது.
    /

    ஹா ஹா ஹா....வாங்க வாங்க வாழ்த்துக்கள் உங்கள் வலைவாசத்துக்கு.

    ReplyDelete
  19. ஹாய்,

    //நாளைக்கு எல்லோருக்கும் மிகவும் பிடிச்ச, ருசிகரமான விஷயத்தோட வரேன். என்ன சரியா?//

    சரி சரி, கேசரினு கே விட்டுபோச்சுனு சொல்லபோறீங்க. சரியா?

    ReplyDelete
  20. அம்பி,
    கொஞ்சம் லேட் தான். நானும் வந்துட்டேன்ன்........

    ReplyDelete
  21. //கேசரினு கே விட்டுபோச்சுனு சொல்லபோறீங்க. சரியா?
    //


    வாங்க சுமதிக்கா, கேசரி கதை எல்லாம் இங்க எழுதினா, மாத்து வாங்க வேண்டி இருக்கும். :)

    ReplyDelete
  22. //கொஞ்சம் லேட் தான். நானும் வந்துட்டேன்ன்........//

    பரவாயில்ல எம்ஜி நிதி, லேட்டஸ்ட்டா வந்தீடீங்க இல்ல, அதான் வேணும். :))

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் அம்பி :)

    ReplyDelete
  24. ஆரம்பமே கலக்கல். வாழ்த்துக்கள் அம்பி !

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் அம்பி!!

    ReplyDelete
  26. /
    சாதனைனு சொல்லிக்கற மாதிரி ஒன்னும் எழுதிடலை. பதிவு எழுதினதுக்கு பதிவுலகில் இருந்து பின்னூட்டத்தோட ஒரே ஒரு தங்கமணியும் கிடச்சாங்க.
    /

    சாதனைக்கு வாழ்த்துக்கள்!!!!!!
    :)))))))))))))))

    ReplyDelete
  27. வருக வருக அம்பி

    தங்க்ஸைக் கண்டதே வலைப்பூவில் தானா - சாதனைதான்

    வாழ்த்துகள் - தங்க்ஸுக்கு - போனாப்போகுது அம்பிக்கும்

    ReplyDelete
  28. அம்பி பதிவுன்னாலே மறுமொழிக்கு கொறச்சலில்லே - குறைந்த பட்சம் ஐம்பது.

    ம்ம்ம் - அனுபவங்களில்/ நிகழ்வுகளில் புடவை வாங்கிய அனுபவம் தான் - கலக்கறாரையா - தங்க்ஸ் கொடுத்து வச்சவங்க

    பயணங்களில் சிருங்கேரி பற்றி அருமையாக எழுதி இருக்கிறார்.
    கவிதை சுட்டி வேலை செய்ய வில்லை
    பதிவு எழுதி தங்க்ஸைப் பிடிச்ச கதை சூப்பர். தங்க்ஸோட ஆங்கிலப் பதிவு - ம்ம்ம் - புரில

    ஆக அம்பி கலக்கற முடிவோட வந்துட்டார் = ஒரு வாரத்துக்கு வர பதிவுகளில்லெ மொத்தம் 1000 மறு மொழி வரும் - பாக்கலாமா ?

    ReplyDelete
  29. நன்றி ஆயில்யன், சதங்கா :)

    ReplyDelete
  30. @மங்க்ளூர் சிவா. கவிதை எல்லாம் பெருக்கெடுத்து ஓடுது போல? :p

    ReplyDelete
  31. //வாழ்த்துகள் - தங்க்ஸுக்கு - போனாப்போகுது அம்பிக்கும்
    //

    அட சடவோட சம்பந்தி...எனக்கு இந்த பழமொழி நினைவுக்கு வருது சீனா சார். :))

    //கவிதை சுட்டி வேலை செய்ய வில்லை
    //

    ஆமா, கொஞ்சம் அவசரமா லிங்கினேன். இப்ப சரி பண்ணிட்டேன். சுட்டியதற்க்கு ரொம்ப நன்னி. :))

    //ஒரு வாரத்துக்கு வர பதிவுகளில்லெ மொத்தம் 1000 மறு மொழி வரும் - பாக்கலாமா ?
    //

    இவ்ளோ நம்பிக்கையா? ஆயிரம் எல்லாம் டூ மச். சரி, பாக்கலாம். :)

    ReplyDelete
  32. எங்க என் பின்னூட்டம் அம்பி சார். காணாமப் போச்சே. துளசி , இவரு பூவை எல்லாம் சூட்டி ப் பாத்துக் கிட்டுதான் இருக்காரு. நடுவில வலைச்சரமும் தொடுக்க வந்துட்டாருப்ப்பா.

    வாழ்த்துகள். ரொம்ப சந்தோஷம்மா.

    ReplyDelete
  33. //எங்க என் பின்னூட்டம் அம்பி சார். காணாமப் போச்சே.//

    அடடா இதை தவிர வேற எந்த பின்னூட்டமும் வரலையே.

    //இவரு பூவை எல்லாம் சூட்டி ப் பாத்துக் கிட்டுதான் இருக்காரு. நடுவில வலைச்சரமும் தொடுக்க வந்துட்டாருப்ப்பா.
    //

    முடிவே பண்ணியாச்சா? :))

    ReplyDelete
  34. //எங்க என் பின்னூட்டம் அம்பி சார். காணாமப் போச்சே.//

    அடடா இதை தவிர வேற எந்த பின்னூட்டமும் வரலையே.

    //இவரு பூவை எல்லாம் சூட்டி ப் பாத்துக் கிட்டுதான் இருக்காரு. நடுவில வலைச்சரமும் தொடுக்க வந்துட்டாருப்ப்பா.
    //

    முடிவே பண்ணியாச்சா? :))

    ReplyDelete
  35. //எங்க என் பின்னூட்டம் அம்பி சார். காணாமப் போச்சே.//

    அடடா இதை தவிர வேற எந்த பின்னூட்டமும் வரலையே.

    //இவரு பூவை எல்லாம் சூட்டி ப் பாத்துக் கிட்டுதான் இருக்காரு. நடுவில வலைச்சரமும் தொடுக்க வந்துட்டாருப்ப்பா.
    //

    முடிவே பண்ணியாச்சா? :))

    ReplyDelete
  36. /சாதனைனு சொல்லிக்கற மாதிரி ஒன்னும் எழுதிடலை. பதிவு எழுதினதுக்கு பதிவுலகில் இருந்து பின்னூட்டத்தோட ஒரே ஒரு தங்கமணியும் கிடச்சாங்க.
    /
    இது போதாதா?

    :)):)))))

    ReplyDelete
  37. //வலைசரத்துக்கு திருஷ்டி கழிக்கறோம். உங்க சவுகரியம் எப்படி?னு மடல். என்னத்த சொல்ல? விதி வலியது.//

    :)) நல்லா எழுதறீங்க. வலைச்சரத்திலும் அசத்த வாழ்த்துக்கள். அப்படியே தங்கமணிக்கும்!

    ReplyDelete
  38. //கீதா பாட்டி, ஷைலஜா அக்கானு //

    அந்த வரிசையில இப்ப 'அம்பி மாமாவா' :-) அது கல்யாணம் ஆயிடுச்சே! இனிமேல் மாமாதான் சார்.

    // பின்னூட்டத்தோட ஒரே ஒரு தங்கமணியும் கிடச்சாங்க.என்னத்த சொல்ல? விதி வலியது.
    //

    என்னத்த சொல்ல! இப்பப் பாரு, சிங்கத்தை சிக்க வச்சு, பூச்சரம் தொடுக்க விட்டுட்டாங்க. :-(

    ReplyDelete
  39. // பதிவுலகில் இருந்து பின்னூட்டத்தோட ஒரே ஒரு தங்கமணியும் கிடச்சாங்க.//

    ஒரு பழைய இடுகையில் http://ammanchi.blogspot.com/2006/06/blog-post_24.html நீங்கள் எழுதியிருந்தது :

    Ms.Congeniality - பிளாக் உலகம் கண்டேடுத்த பத்மா சுப்ரமணியம். இவங்க எழுதறதும் ரொம்ப நளினமா இருக்கும்.

    :-)

    ReplyDelete
  40. //Ms.Congeniality - பிளாக் உலகம் கண்டேடுத்த பத்மா சுப்ரமணியம். இவங்க எழுதறதும் ரொம்ப நளினமா இருக்கும்//

    வழி மொழிகிறேன்!
    வழி மொழிகிறேன்!
    வழி மொழிகிறேன்!
    வழி மொழிகிறேன்!
    வழி மொழிகிறேன்!

    :-)

    பாகீ சார்! நன்றி! :-))

    ReplyDelete
  41. 41 கமெண்டுகளும் உங்க வாழ்க்கை வரலாறையே புட்டுப் புட்டுப் வச்சிட்டே!

    ReplyDelete
  42. //இது போதாதா?
    //

    வாங்க தமிழன், சரி, அடக்கி வாசிக்கிறேன். :)))

    ReplyDelete
  43. //நல்லா எழுதறீங்க. வலைச்சரத்திலும் அசத்த வாழ்த்துக்கள். அப்படியே தங்கமணிக்கும்!
    //


    மிக்க நன்னி கவிநயா. வீட்லயும் சொல்லிடறேன். :)

    ReplyDelete
  44. //அது கல்யாணம் ஆயிடுச்சே! இனிமேல் மாமாதான் சார்.
    //

    @sridhar, வேணாம் அழுதுடுவேன். :))

    //இப்பப் பாரு, சிங்கத்தை சிக்க வச்சு, பூச்சரம் தொடுக்க விட்டுட்டாங்க.//

    பூச்சரம் மட்டுமா? மீதியெல்லாம் ... சரி சரி, நானே வாயை குடுத்து மாட்டிக்கிறேன். :p

    ReplyDelete
  45. //ஒரு பழைய இடுகையில் நீங்கள் எழுதியிருந்தது ://

    @B/geetha, நீங்க சிபிஐல இருக்கீங்களா சார்..? :p

    இப்படி ஒன்னு ஒன்னா கிளறி விட்டறீங்களே? :)))

    ReplyDelete
  46. //வழி மொழிகிறேன்!
    //

    @KRS, எங்கடா பாயிண்ட் கிடைக்கும்னு? இருப்பீங்களே. வாங்க அண்ணே வாங்க. :p

    ReplyDelete
  47. //41 கமெண்டுகளும் உங்க வாழ்க்கை வரலாறையே புட்டுப் புட்டுப் வச்சிட்டே!

    //

    @ramalakshmi, ஆமா! எல்லாம் நம்ம பாசகார மக்கள்ஸ் தான். :)

    ReplyDelete
  48. பின்னூட்ட கயமைதனம் 49

    ReplyDelete
  49. கொத்தனார் பெயரை சொல்லி பின்னூட்ட கயமைதனம் 50 :))

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது