வருக 2009 ; வாழ்நாள் முழுதும் பயன்தரும் இவற்றைப் போலப் பல பதிவுகளோடு !
➦➠ by:
எம்.ரிஷான் ஷெரீப்
புதியதொரு ஆண்டு அனைவருக்குமான எதிர்காலக் கணங்களைக் கைகளில் ஏந்தியபடி வந்திருக்கும் இந் நன்னாளில் என் சக பதிவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனதும், வலைச்சரம் பொறுப்பாளர்கள் அனைவரினதும் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பழையன கழிந்துவிட்டன. கடந்த வருடத்தின் நாட்களை நிறைத்த இனிப்பான, கசப்பான தருணங்களனைத்தையும் தாண்டிவந்து இப் புதுவருடத்தில் எல்லாம் மகிழ்வாகவும் நன்றாகவும் நிகழவேண்டுமென மனதிற்குள்ளும் வெளியிலும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் உங்களோடு எனது பிரார்த்தனைகளும் இணையட்டும்.
2008 இன் நாட்குறிப்பு எழுதி எழுதி அல்லது எழுதாமலேயே காலாவதியாகி விட்டது. புது நாட்குறிப்பில் தொடர்ந்து தினமும் எழுதவேண்டுமென்ற எண்ணம் மனதினை நிறைத்திருக்கும். எனக்கும் அப்படித்தான். ஆனால் நேரமின்மை என் விஷயத்தில் சிவப்புக்கோடிட்டு விட்டு " பதிவெழுதவே நேரமில்லை. டயறி எழுதப் போகிறாயா? எழுது பார்க்கலாம்" எனச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பதாகத் தோன்றுகிறது.
எப்படியோ...நாட்களின் கணங்களை அதன் போக்கில் விட்டுவிடலாமென்றும், நிகழ்வுகள் என் முன்னால் வரும்பொழுது எதிர்கொள்ளலாமெனவும் எண்ணியிருக்கிறேன். எப்படிச் சாத்தியப்படுகிறதெனப் பார்க்கலாம் :)
இப் புது வருடத்தின் முதல்நாளில் வருங்காலத்தின் ஒவ்வொரு நாளைக்கும் தேவைப்படும், பயன் தரும் பதிவுகள் பலவற்றைத் தங்களுள்ளடக்கியிருக்கும் நானறிந்த சில வலைப்பூக்களைத் தருகிறேன். இவ் வலைப்பூக்களில் அடங்கியிருக்கும் பதிவுகள் பொக்கிஷங்களையொத்தவை. எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. இப்பதிவுகள் கொண்டிருக்கும் உள்ளடக்கங்களின் சிறப்பான , அன்பான வழிகாட்டல் பாமரரையும் விஷயஞானம் உள்ளவராக ஆக்கக்கூடியவை. பதிவுகளில் உள்ள விடயங்கள் தொடர்பான சந்தேகங்கள் எழுமிடத்து சம்பந்தப்பட்ட பதிவாசிரியரைத் தொடர்புகொண்டால் உடனடியாகத் தீர்வுகள் கிடைக்கின்றன.
ஆரோக்கியம்
' ஹாய் நலமா?' எனக் கேட்டுத் தன் வலைத்தளத்தில் பயனுள்ள பல மருத்துவக்குறிப்புக்களை எழுதிவரும் இவர் ஒரு மருத்துவர். பிரபலமான சஞ்சிகைகளிலும் எழுதிவருவதோடு ஒரு இலக்கிய விமரிசகரும் கூட. காலத்திற்கேற்றவாறான நல்ல பல பதிவுகளை இவர் தொடர்ந்து தருவதோடு, ஆரோக்கியம், நோய்கள், சுகாதாரம், மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்கள் பின்னூட்டங்களாகக் கேட்கப்படுமிடத்து உடனடியாகத் தீர்வு சொல்கிறார். மிகப் பயனுள்ள வலைத்தளம் இவருடையது.
பயனுள்ள மருத்துவக் கட்டுரைகளைத் தனது வலைப்பூவில் எழுதி வரும் இவர் ஒரு மருத்துவர். பின்னூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகவும் பயனுள்ள விதமாக உரிய மருந்துகளோடு விளக்கமாகவும் தெளிவாகவும் பதிலளிக்கிறார். பலரும் பேசத் தயங்கும் பாலியல் தொடர்பான விரிவான பதிவுகள் இவருடையதாக உள்ளது. பாலியல் அறியாமை, அது சம்பந்தமான நோய்களுக்கான தீர்வுகள் போன்ற பல பதிவுகள் பயனுள்ளவையாக உள்ளன.
கணினி
கணினி, அதற்குத் தேவையான மென்/வன் பொருட்கள், வைரஸ் நீக்கிகள், இணைய வலைப்பின்னல்,இணையம், கைத்தொலைபேசி, அதற்குத் தேவையான மென்/வன்பொருட்கள், பிற நுட்பங்கள், இலவசப் பதிவிறக்கங்கள் போன்ற கணினி, கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களுக்குத் தேவையான அத்தனை உபயோகமான தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது இவரது வலைத்தளம். கணனி சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவெனக் கேட்டால் உடனடியாகத் தீர்வுகள் கிடைக்கும் இவரது வலைத்தளத்தில் பிடித்த சலனப்படங்கள், ஒளிப்படங்கள், ஒலிக் கோப்புகள், மென்புத்தகங்கள், நகைச்சுவைகள், செய்திகள், வேலை வாய்ப்புகள், விமர்சனங்களெனப் பல பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மிக அருமையான பதிவுகளை எழுதிவரும் இவரது ஒவ்வொரு பதிவோடுமொரு இணைய மென்புத்தகம் இலவசமாக வழங்கப்படுவது சிறப்பு.கணினி உலகின் புதிய மென்/வன்பொருட்கள், இலவச பதிவிறக்கங்கள், இலவச கல்விச் சேவைகள் , புதுப்புது தொழிநுட்பங்கள் எனப் பல பயனுள்ள பதிவுகளைத் தன்னிடத்தில் கொண்டிருக்கிறது இவரது 'தமிழ்2000' வலைத்தளம். சந்தேகங்கள் எழுப்பப்படுமிடத்து தீர்த்துவைக்கும் இவரது பதிவுகள் தொழில்நுட்பம், சலனப்படம், ஒளியோவியம், இசை, ஐ பேப்பர், வாழும் கலை, பாட் காஸ்ட் ,மொழியாக்கம், ஒலி ஊடகம் என இன்னும் பல தலைப்புக்களில் வகைப்படுத்தப்படுத்தப்பட்டு எல்லோருக்கும் பயனளிக்கும் விதமாக உள்ளன. ஆங்கிலச் சொற்களுக்கிணையான புதிய தமிழ்ச் சொற்களைத் தன் பதிவுகளில் பயன்படுத்துவது சிறப்பு.
- KRICONS -
"ஐடி வலம் பகுதியில் கணினித் துறையில் எனக்குத் தெரிந்த விடயத்தை தெரிந்த பாசையில் சொல்லிவருகிறேன். அவ்வளவுதான். இந்த ஆக்கங்கள் யாவும் நான் எழுதியிருப்பது எழுதுவது அத்தனையும் என்னைப் போன்ற சாதாரண கணினிப் பயனர்களுக்கே " எனத் தன்னடக்கமாகச் சொல்லிக் கொள்ளும் இவரது பதிவுகள் அத்தனையும் கணினிப் பயனர்கள் அனைவருக்கும் மிகப்பயனுள்ளவையாக இருக்கின்றன. இணைய உலகில் அறிமுகமாகும் கணினி சம்பந்தப்பட்ட புதுப்புதுத் தகவல்களை நம் பார்வைக்கு உடனடியாகக் கொண்டுவந்து விடுகின்றன இவரது பதிவுகள்.
'கணித் துளி - கணினி பற்றிச் சில துளிகள்' எனச் சொல்லும் இவரது வலைத்தளம் கணினி பற்றிய பயனுள்ள பல பெருந்துளிகளை உள்ளடக்கியுள்ளது. இணையம், கணினி, யூனிக்ஸ், லீனக்ஸ், விண்டோஸ், வைரஸ், ஹைபர்நேட், XP எனப் பல பிரயோசனமான வழிகாட்டல்களோடு கணினி வன்பொருட்கள் பாவனை பற்றிய உபயோகக் குறிப்புக்களையும் கொண்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட விடயங்களில் வினவப்படும் சந்தேகங்களுக்கு உடனடியாகப் பதிலளிக்கிறார்.
ஆங்கிலம்
- அருண் -
தொழில்நுட்பம்
புகைப்படக்கலை ஒரு அருமையான பொழுதுபோக்கு மட்டுமல்லாது சிறந்த வருவாயை ஈட்டித்தரக்கூடிய அற்புதமானதொரு கலை. பொதுவாக இக்கலையைக் கற்றுத்தர ஆங்கில இணையத்தளங்களே அனேகமுள்ளன. முதன்முதலாக இலகுதமிழில் புகைப்படக்கலையை இலவசமாகக் கற்றுத்தருகிறது இந்த வலைத்தளம். சிறந்த புகைப்படக் கலைஞர்கள் சிலர் ஒன்று கூடி உருவாக்கியுள்ள இவ்வலைத்தளத்தில் எல்லாப் பதிவுகளும் புகைப்படங்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளதோடு அக் கலையையும் கற்றுத்தருகின்றன. எப் பொருளை எந்த விதத்தில், எந்தக் கோணத்தில் எடுக்கவேண்டும், எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிற்தயாரிப்புக்களின் மூலம் மேலும் அழகு படுத்துவது எப்படி, புகைப்பட ஒளிக்கருவிகளை வாங்கும் முன்பு, உபயோகிக்கும் முன்பு கவனத்தில் கொள்ளவேண்டியவையென எல்லாப் பதிவுகளும் பயனுள்ளவையாக உள்ளதோடு, விடயமறியாப் பாமரர்க்கும் விளங்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளன. வாசகர்களின் புகைப்படங்களை வைத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகளும் வழங்குவதால் பலரதும் விருப்பத்துக்குரிய வலைத்தளமாகவும் இது உள்ளது.
சமையல்
- தூயா -
- மாதேவி -
புது வருடத்தின் துவக்க நாளிதில் உங்களனைவரையும் வலைச்சரமூடாகச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றதில் மகிழ்ச்சி.
மீண்டுமொருமுறை
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
|
|
உங்களோட தேடல்களும் பரந்த வாசிப்பனுபவமும் ஆச்சரியமளிக்கின்றன...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் ரிஷான்,
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரா..
வலைச்சரத்தில் முதலில் நீங்களா? அப்படி எனில் நிச்சயம் வலைச்சரம் வருடம் முழுவதும் ஒளிர போவது உறுதி
தொடருங்கள்...
எல்லாம் சரி தான்.. ஆனா சமையலுக்கு தூயாவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ?
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
நன்றி. திரு. rishanshareef
ReplyDeleteவாழ்த்துக்கள்.
!!! இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!!
ReplyDeletethanks rishan
ReplyDelete-- jeeves
for - PiT
அன்பின் ரிஷான்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பௌஅனுள்ள பல பதிவுகளைச் சுட்டியுடன் அறிமுகம் செய்த செயல் சாலச் சிறந்தது. ஆண்டு முழுவதும் பயனளிக்கக் கூடிய பதிவுகள் பலவற்றை ஆண்டின் முதல் நாளிலேயே அறிமுகம் செய்தது பாராட்டத் தக்கது
நன்றி நண்பா
அன்பின் மஹேஷ்,
ReplyDelete//உங்களோட தேடல்களும் பரந்த வாசிப்பனுபவமும் ஆச்சரியமளிக்கின்றன...
வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் திகழ்மிளிர்,
ReplyDelete//இனிய புத்தாண்டு வாழ்த்துகள்//
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் தூயா,
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் சேவை தொடரட்டும் !
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
வாங்க சஞ்சய் :)
ReplyDelete//எல்லாம் சரி தான்.. ஆனா சமையலுக்கு தூயாவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((//
இந்தப் பயம் கூடாது. சமையல் குறிப்புக்கள் மட்டும்தான் தூயாவுடையது. அவர் சமைத்தாரா இல்லையா என்று யாருக்கும் தெரியாது :P
அன்பின் தமிழ்நெஞ்சம்,
ReplyDelete//நன்றி. திரு. rishanshareef
வாழ்த்துக்கள். //
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சதங்கா,
ReplyDelete//!!! இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!!//
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ஜீவ்ஸ்,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நண்பர் சீனா,
ReplyDelete//அன்பின் ரிஷான்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் //
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே :)
//பயனுள்ள பல பதிவுகளைச் சுட்டியுடன் அறிமுகம் செய்த செயல் சாலச் சிறந்தது. ஆண்டு முழுவதும் பயனளிக்கக் கூடிய பதிவுகள் பலவற்றை ஆண்டின் முதல் நாளிலேயே அறிமுகம் செய்தது பாராட்டத் தக்கது //
இந்த வாய்ப்பினைத் தந்த உங்களுக்கு அன்பான நன்றி நண்பரே :)
நன்றி ரிஷான்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பயனுள்ள பதிவுகளை அறியத் தந்துள்ளீர்கள்.
நன்றி ரிஷான்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரிஷான்:)!
ReplyDeleteஅன்பின் ரிஷான்
ReplyDelete"இனிய புத்தாண்டு வாழ்த்துகள்"
பயனுள்ள பல பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் தோழரே... தொடர்ந்து எழுதுங்கள்
ரிஷான். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்கள் பரிந்துரைத்தவற்றில் பலவும் எனக்கும் மிகவும் பயனுள்ளவையே. இன்னும் பலருக்கும் உதவும். மிக்க நன்றி
ReplyDelete//ஆனா சமையலுக்கு தூயாவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ?
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((//
//
இந்தப் பயம் கூடாது. சமையல் குறிப்புக்கள் மட்டும்தான் தூயாவுடையது. அவர் சமைத்தாரா இல்லையா என்று யாருக்கும் தெரியாது :P
//
ஆகா ஆகா என்ன ஒரு பாசம் என் மேல்...
அன்பின் மாதேவி,
ReplyDelete//நன்றி ரிஷான்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பயனுள்ள பதிவுகளை அறியத் தந்துள்ளீர்கள். //
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..உங்கள் சேவைகள் தொடரட்டும் :)
அன்பின் அருண்,
ReplyDelete//நன்றி ரிஷான்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..உங்கள் சேவைகள் தொடரட்டும் :)
அன்பின் ராமலக்ஷ்மி,
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.. :)
அன்பின் சக்தி,
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி :)
அன்பின் டொக்டர்,
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர்..உங்கள் சேவைகள் தொடரட்டும் :)
வாங்க தூயா :)
ReplyDelete//ஆகா ஆகா என்ன ஒரு பாசம் என் மேல்...//
ஹி ஹி ஹி :)
ரிஷான் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete/
ReplyDeleteSanJaiGan:-Dhi said...
எல்லாம் சரி தான்.. ஆனா சமையலுக்கு தூயாவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
/
ரிப்பீட்டேய்ய்ய்ய்
ரிஷான் ஏன் இந்த கொலைவெறி
:))))))))))
தங்களின் புத்தாண்டு பதிவில் எனது வலைப்பூவையும் குறிப்பிட்டதருக்கு
ReplyDeleteநன்றி
அன்பின் மங்களூர் சிவா,
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு + பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)
//எல்லாம் சரி தான்.. ஆனா சமையலுக்கு தூயாவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ?
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
/
ரிப்பீட்டேய்ய்ய்ய்
ரிஷான் ஏன் இந்த கொலைவெறி
:)))))))))) //
மங்களூர் சிவா..தூயாவின் சமையல் என்றால் உங்களுக்கு அவ்வளவு கிண்டலாகிப் போச்சா ? சமைத்து கெட்டுப் போன எதையாச்சும் பார்சல்ல அனுப்பிட்டாவோ? :)
// KRICONS said...
ReplyDeleteதங்களின் புத்தாண்டு பதிவில் எனது வலைப்பூவையும் குறிப்பிட்டதருக்கு
நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
உங்கள் சேவைகள் தொடரட்டும் !