07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 2, 2009

வலையரசிகள் !


சமையல், தையல், கைவேலைகளெனச் சில குறிப்பிட்ட செயல்களை மாத்திரமே செய்பவர்கள் பெண்களென்று நம்பிவந்த காலமும் சொல்லிவந்த காலமும் மலையேறி விட்டது அல்லது சாதனைப் பெண்களால் துரத்தியடிக்கப்பட்டுவிட்டது .

வலைப்பதிவுலகம் எல்லோரையும் ஒன்று சேர்த்திருக்க, வீட்டு விடயங்களில் மட்டும் மூழ்கியிருந்த இல்லத்தரசிகளும், தொழில் புரியும் மாந்தர்களும் கூடத் தங்கள் ஆற்றல்களைக் கைவண்ணங்களைக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமிடமாக வலையுலகம் ஆகியுள்ளதின்று !

இது மிகவும் மகிழ்வுக்குரிய விடயம். காலங்காலமாய்ப் பூட்டி வைக்கப்பட்ட மனக்கிடங்குகளில் தூய ஒளி பாய்ந்து, உள்ளே மூச்சடக்கிக் கிடந்த திறமைகள் பல வெகு இயல்பாயும் ஆச்சரியம் தரக்கூடியதாயும் வெளிவரக் கணனியும் காலமும் பேருதவி செய்கிறது. அவ்வாறாகக் கணனியையும் காலத்தையும் பயன்படுத்தித் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வாசகர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்துள்ள பிரபல வலையரசிகளை இன்று பார்க்கலாம்.

ஷைலஜா - பிரபல எழுத்தாளரான இவரது வலைப்பூ - எண்ணிய முடிதல் வேண்டும். இத் தலைப்பினைப் போலவே இவர் எண்ணியதெல்லாம் செய்து முடித்திருக்கிறார். எழுத்தாளராக, பாடகியாக, நடிகையாக, திரைப்படங்களில் பிண்ணனிக்குரல் கொடுப்பவராக, பதிவராக எனப் பலமுகங்கள் இவருக்குண்டு. இவரது வலைப்பூ முழுதும் அருமையான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், பாடல்கள் என நிறைந்திருக்கிறது .


ராமலக்ஷ்மி - தனது கல்லூரிக்காலத்தில் எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்திய திறமைகளை முத்துச் சரமாய்க் கோர்த்திருக்கிறார் இந்த இல்லத்தரசி. பெரும்பாலான இவரது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்பன சமூகச் சீரழிவுகளையே சாடி நிற்கின்றன. மிக அழகான புகைப்படங்களைக் கவிதைகளோடு சமர்ப்பித்திருக்கும் இவருள் மிகத் திறமையான புகைப்படக்கலைஞரும் ஒளிந்திருக்கிறார்.

துளசி கோபால் - வலையுலகின் மூத்தபதிவர். அறிமுகமே தேவையற்றபடிக்கு எல்லோராலும் அறியப்பட்ட இல்லத்தரசி. எனக்கும் இன்னும் பலருக்கும் நகைச்சுவை கலந்த மொழிநடையோடு அருமையான பாடங்கள் நடத்தும் கைகளில் பிரம்பற்ற பெண் வாத்தியார். இவருடைய துளசி தளத்தில் அனுபவக் கட்டுரைகள், பயணக்கட்டுரைகள், புதுப்புது சமையல் குறிப்புக்கள், தான் எடுத்த அழகிய புகைப்படங்களென எண்ணூறுக்கும் அதிகமான மிகச் சிறந்த பதிவுகள் நிறைந்திருக்கின்றன. தனது மறுமொழிப் பின்னூட்டங்களிலும் நகைச்சுவை மிதக்கப் பதிலளிக்கும் சிறந்த பதிவர்களில் இவரும் ஒருவர்.

கவிநயா - நினைவின் விளிம்பில் இவரது எழுத்துக்களின் சாம்ராஜ்ஜியம். கணனி வல்லுனரான இவரது பணி மிகுந்த நேரங்களுக்கிடையில் கிடைக்கும் தனது நேரங்களைப் பயனுள்ள வழிகளில் கழிக்கும் இவரொரு நடன ஆசிரியை, பாடலாசிரியை, பாடகியும் கூட. இவரது வலைப்பூ அழகிய கவிதைகள், சிறுகதைகள், பாடல்கள், ஆன்மிகக்கட்டுரைகளென நிறைந்திருக்கிறது.

சுவாதி சினேகன் - "யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனால் புலம் பெயர்ந்த தமிழ் பெண்; தமிழன்பினாலும் எழுத்தார்வத்தினாலும் கவிதை புத்தகமொன்றை அச்சேற்றியவள்; இன்னுமொரு கவியாக்கத்திலீடுபட்டிருப்பவள். சினேகம் என்ற ஒன்றிணைப்புக் குழுவொன்றை உருவாக்கி அதன் மூலம் புற்று நோய் , தொழுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கட்கு எங்களாலான உதவிகளைச் செய்வதற்காக இன்றும் முயன்று கொண்டிருப்பவள்." எனத் தன்னைப் பற்றிய அறிமுகத்தோடு வலம்வரும் இவரது புதிய கலித்தொகை போரின் பன்முக இன்னல்களைப் பாடும் கவிதைகளைக் கொண்டது. 'பிரவாகம்' எனும் தமிழ்குழுமமொன்றின் தலைவியாகவும் பல சிறந்த பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பல காத்திரமான கட்டுரைகளுக்குச் சொந்தக்காரரான இவர்.

சாந்தி ஜெயசிங் - கவிதைகள், சிறுகதைகள், குறுந்தொடர்களெனப் பல்சுவைகளையும் கொண்டது இவரது புன்னகை தேசம். இணைய வானொலியிலும் கலக்கும் இவரது குரல்வளத்தால் கல்கியின் படைப்புக்களை பலருக்கு அறியத்தருகிறார்.

திவ்யா - சோர்ந்து போயிருக்கும் கணங்களில் இவரது வலைப்பக்கம் போய் நின்றால் மனசுக்குள் மத்தாப்பூக்கள் இதழ்விட்டு மலரும். மிக ரசனை மிக்க இளமை சொட்டும் குறுந்தொடர்கள் கணனி வல்லுனரான இவரது சிறப்பு. அதுபோலவே இவரது அனுபவக்குறிப்புக்களும் கட்டுரைகளும் கூட நகைச்சுவையிழையோடச் சொல்லப்பட்டிருக்கின்றன.

மதுமிதா - பிரபல எழுத்தாளரான இவரது காற்றுவெளி, நீங்கா இன்பம், தழல் வீரம், பேசாப்பொருள் ஆகிய நான்கு வலைப்பூக்களிலும் கவிதைகளும் கட்டுரைகளும் மின்னுகின்றன. கவிஞர், எழுத்தாளர், பல நூல்களின் ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்ட சிறந்ததொரு படைப்பாளி.

பூங்குழலி - கவிதைகள், அனுபவக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் எனப் பலவற்றைத் தனது பூச்சரத்தில் தொடுத்திருக்கிறார் மருத்துவரான இவர். இவர் பகிர்ந்துகொண்டுள்ள மருத்துவ அனுபவங்கள் விழிகசியச் செய்பவை. மிகுந்த பணிகளுக்கும் மத்தியில் வலையில் எழுதிவரும் சாதனைப்பெண்மணி.

முத்துலட்சுமி கயல்விழி - இவரது சிறுமுயற்சி பயணக்கட்டுரைகள் , தான் ரசித்த திரைப்படங்களின் விமரிசனங்களெனப் பலவற்றை சுமந்தவண்ணம் இருக்கிறது. மிக இயல்பான , மனங்கவரும் எழுத்துநடை இவருடையது.

பாசமலர் - இவரின் பெட்டகத்தில் கவிதைகள்,சிறுகதைகள், கட்டுரைகள், டயறிக்குறிப்புக்கள், திரைப்பட விமர்சனங்கள், நகைச்சுவைகள் எனப்பலதும் நிறைந்திருக்கின்றன. இவரது மொழிபெயர்ப்புப் பயிற்சி ரசனைக்குரிய முயற்சி.

கயல்விழி - ரிலாக்ஸ் ப்ளீஸ் எனும் வலைப்பூவுக்குச் சொந்தக்காரரான இவரது எழுத்துக்கள் மிகவும் துணிச்சல்மிக்கவை. தன் மனதில் தோன்றுவதை வெளிப்படையாகத் தேவையற்ற தயக்கங்களின்றி வெளிப்படுத்தும் இவரது அருமையான எழுத்துக்கள் அதிரச் செய்வதோடு நாம் அறியா உலகொன்றின் கதவுகளைத் திறந்து காட்டுகின்றன. பிடித்திருக்கிறது இவரது எழுத்துக்கள்.

செல்விஷங்கர் - 'என் எண்ணங்கள்...நினைவுகள் இங்கே' எனச் சொல்லும் பட்டறிவும் பாடமும் இவரது வலைப்பூ. அழகான கவிதைகளை இதில் எழுதிவரும் பேராசிரியரான இவரது எண்ணச் சிறகுகள் அருமையான மரபிலக்கியப் பாடல்களின் விளக்கங்களைச் சொல்கின்றது. இவர் தனது எழுத்துக்களைப் பற்றிச்சொல்கையில் "ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன்! ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது! என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன்! இது தான் நான்! இது - மெய்! இதைத் தவிர வேறில்லை எனக்கு! " என்கிறார்.

இன்னும் பல வலையரசிகள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்திய வண்ணம் இப் பதிவுக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களையும் இன்னுமொரு பதிவில் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

47 comments:

  1. வலை உலகில் இன்னும் 'முடி'யாட்சிதான் நடக்குதா?:-))))

    மகளிர் சார்பில் நன்றி ரிஷான்

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு.

    நன்றி.

    ReplyDelete
  3. எங்களுக்கெல்லாம் மகுடமே சூட்டி விட்டீர்கள். நன்றி ரிஷான்:))!

    ReplyDelete
  4. நல்ல தொகுப்பு.. பெண்கள் வலைப்பதிவுகளின் கண்கள்.. ;)

    ReplyDelete
  5. வலைப்"பூவையர்"களுக்கு வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  6. நல்ல பதிவு!!!!

    தேவா....

    ReplyDelete
  7. அருமையான தொகுப்பு

    ReplyDelete
  8. இன்னும் சிலரை எதிர்பார்த்தேன். பிறிதொரு பதிவு என்று சொன்னதால் தப்பித்தீர்கள்.!

    ReplyDelete
  9. நல்ல தொகுப்பு ரிஷான். உங்களுக்கும், நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமையான தொகுப்பு..அடுத்த பகுதியையும் போடுங்கள்..

    ReplyDelete
  11. //வலை உலகில் இன்னும் 'முடி'யாட்சிதான் நடக்குதா?:-))))//

    அதே ! அதே !!

    :)

    ReplyDelete
  12. வலைச்சரம் இந்த வாரம் உங்கள் கையில் என்பதை இந்த பதிவுக்கு வந்து தான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.:( தனிமடலில் அக்கா நான் தான் இந்த வாரத்து தொகுப்பாளன் என்று ஒரு சொல் எழுத அவ்வளவு பஞ்சியா? x-( திறமையான வலையரசிகளின் பட்டியலில் என் பெயரையும் சேர்த்ததற்காக நன்றி. ஆனால் எனக்கு முன்னாலேயே பதிவுலகில் கொடி நாட்டிய பலரை விட்டுவிட்டீர்கள். அவர்கள் பின்னால் என் பெயர் வந்தால் தான் பெருமை. கீதாம்மா, ஈழத்துச் சகோதரிகள் தூயா, மதி கந்தசாமி, மற்றும் சஹாரா, வேதா போன்றவர்கள் இருக்கிறார்கள். என்றாலும் தம்பிக்கு சுவாதி அக்கா ஷைலஜா அக்காவிடவிடமிருந்து ஆயுதம் வாங்கி அனுப்புவேன்.....நன்றி! :):)

    ReplyDelete
  13. வலை உலகில் இன்னும் 'முடி'யாட்சிதான் நடக்குதா?:-))))

    அதையும் மாற்றிவிடலாம் , நம்பிக்கையிருக்கிறது...!! :)

    ReplyDelete
  14. அன்பின் ரிஷான்
    உங்களின் தேடலும் வாசிப்பும் என்னைத் திகைக்க வைக்கிறது.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. நன்றி ரிஷான்:)))

    ReplyDelete
  16. தமிழ்நதி, ஜெஸிலா, உமாசக்தி போன்றவர்களை விட்டுவிட்டீர்களே...

    ReplyDelete
  17. தமிழ்நதி, ஜெஸிலா, உமாசக்தி போன்றவர்களை விட்டுவிட்டீர்களே...

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. வாங்க துளசி டீச்சர் :)

    //வலை உலகில் இன்னும் 'முடி'யாட்சிதான் நடக்குதா?:-))))

    மகளிர் சார்பில் நன்றி ரிஷான் //

    :)

    உங்க விடுமுறையிலும் முதல் ஆளா வந்திருக்கீங்க..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டீச்சர் :)

    ReplyDelete
  20. அன்பின் அதிரை ஜமால்,

    //அருமையான தொகுப்பு.

    நன்றி. //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  21. அன்பின் ராமலக்ஷ்மி,

    //எங்களுக்கெல்லாம் மகுடமே சூட்டி விட்டீர்கள். நன்றி ரிஷான்:))!//

    நீங்களும் சாதனையாளர்தான் சகோதரி..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

    ReplyDelete
  22. அன்பின் லோஷன்,

    //நல்ல தொகுப்பு.. பெண்கள் வலைப்பதிவுகளின் கண்கள்.. ;) //

    அப்ப ஆண்கள்? :P

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  23. அன்பின் மஹேஷ்,

    //வலைப்"பூவையர்"களுக்கு வாழ்த்துக்கள் !!!//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  24. அன்பின் தேவா,

    //நல்ல பதிவு!!!!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  25. அன்பின் அமுதா,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

    ReplyDelete
  26. அன்பின் தாமிரா,

    //இன்னும் சிலரை எதிர்பார்த்தேன். பிறிதொரு பதிவு என்று சொன்னதால் தப்பித்தீர்கள்.! //

    மற்றும் சிலர் எனது மற்றப்பதிவுகளில் வந்துவிட்டார்கள் நண்பரே :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  27. அன்பின் மௌலி,

    //நல்ல தொகுப்பு ரிஷான். உங்களுக்கும், நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  28. அன்பின் தூயா,

    //அருமையான தொகுப்பு..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

    ReplyDelete
  29. அன்பின் சதங்கா,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  30. அன்பின் சுவாதி அக்கா,

    //வலைச்சரம் இந்த வாரம் உங்கள் கையில் என்பதை இந்த பதிவுக்கு வந்து தான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.:( தனிமடலில் அக்கா நான் தான் இந்த வாரத்து தொகுப்பாளன் என்று ஒரு சொல் எழுத அவ்வளவு பஞ்சியா? x-( //

    தனிமடலில் உங்களுக்கு முதல்நாளே தகவல் அனுப்பிவிட்டேன்..கிடைக்கவில்லையா? :(

    //திறமையான வலையரசிகளின் பட்டியலில் என் பெயரையும் சேர்த்ததற்காக நன்றி. ஆனால் எனக்கு முன்னாலேயே பதிவுலகில் கொடி நாட்டிய பலரை விட்டுவிட்டீர்கள். அவர்கள் பின்னால் என் பெயர் வந்தால் தான் பெருமை. கீதாம்மா, ஈழத்துச் சகோதரிகள் தூயா, மதி கந்தசாமி, மற்றும் சஹாரா, வேதா போன்றவர்கள் இருக்கிறார்கள். //

    அவர்களைப் பற்றி எனது மற்றப்பதிவுகளில் குறிப்பிட்டிருப்பதால் இதில் குறிப்பிடவில்லை அக்கா.

    //என்றாலும் தம்பிக்கு சுவாதி அக்கா ஷைலஜா அக்காவிடவிடமிருந்து ஆயுதம் வாங்கி அனுப்புவேன்.....நன்றி! :):) //

    எதற்கு இவ்வளவு பெரிய தண்டனை ? ஏனிந்தக் கொலைவெறி அக்கா? :(

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா :)

    ReplyDelete
  31. அன்பின் ஃபஹீமாஜஹான்,

    //
    உங்களின் தேடலும் வாசிப்பும் என்னைத் திகைக்க வைக்கிறது.
    பாராட்டுக்கள்.//

    வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)

    ReplyDelete
  32. அன்பின் திவ்யா,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)

    ReplyDelete
  33. அன்பின் செல்வேந்திரன்,

    //தமிழ்நதி, ஜெஸிலா, உமாசக்தி போன்றவர்களை விட்டுவிட்டீர்களே...//

    இவர்கள் எனது 'இவர்களுக்குக் கவிதைமுகம்' எனும் பதிவில்
    http://blogintamil.blogspot.com/2008/12/blog-post_30.html ஏற்கெனவே வந்துவிட்டதால் இதில் குறிப்பிடவில்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  34. அருமையான தொகுப்பு.

    நன்றி.

    ReplyDelete
  35. அருமையான தொகுப்பு ..நன்றிகளும் வாழ்த்துக்களும் ரிஷான்

    ReplyDelete
  36. நன்றி ரிஷான். நல்ல தொகுப்பு.

    இதென்ன அரசி பட்டம் கொடுத்து தலையில் சுமையை ஏற்ற்ற்ற்ற்ற்ற்ற்றி வைத்துவிட்டீர்கள்:)

    ReplyDelete
  37. ரிஷான்

    சும்மா தெரப்பிக்காக எழுதுவதை தொடர்ந்து படிப்பதற்கும், இங்கே குறிப்பிட்டதற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  38. அன்பின் மங்களூர் சிவா,

    //அருமையான தொகுப்பு.

    நன்றி.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  39. அன்பின் சக்தி,

    //அருமையான தொகுப்பு ..நன்றிகளும் வாழ்த்துக்களும் ரிஷான்//

    தொடர் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)

    ReplyDelete
  40. அன்பின் மதுமிதா,

    //நன்றி ரிஷான். நல்ல தொகுப்பு.

    இதென்ன அரசி பட்டம் கொடுத்து தலையில் சுமையை ஏற்ற்ற்ற்ற்ற்ற்ற்றி வைத்துவிட்டீர்கள்:)//

    :)
    உங்களது பெரும் சேவைகளுக்கு எனது சிறிய அறிமுகம் அவ்வளவே..:)
    உங்கள் சேவைகள் தொடரட்டும் சகோதரி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  41. அன்பின் கயல்விழி,

    //ரிஷான்

    சும்மா தெரப்பிக்காக எழுதுவதை தொடர்ந்து படிப்பதற்கும், இங்கே குறிப்பிட்டதற்கும் மிக்க நன்றி//

    பெண்பதிவர்களிடையே மிக தைரியமான பதிவராக உங்களை நான் காண்கிறேன்..உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும் சகோதரி..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  42. நன்றி ரிஷான்.. என் பேரையும் சேர்த்துள்ளீர்கள்.. இப்பதான் அறிந்தேன், தாங்கள் ஆசிரியர் என. வாழ்த்துகள் .

    ReplyDelete
  43. நன்றி ரிஷான்
    என் பெயரை முதலில் சொல்லிய உங்க இந்த பதிவுக்கு கடைசியா நான் மடல் இடக்காரணம் ஊர்ல பல நாட்கள் இல்லாததே.
    ரொம்ப பெருமையா இருக்கு ராணியாகிட்டோம்னு ஆமா க்ரீடம் செங்கோல்லாம் எப்போ தரப்போறீங்க?:):) சாமரம் வீச பாவனா தமனாவை அனுப்பவேண்டாம் :):)

    ReplyDelete
  44. அன்பின் சாந்தி,

    //நன்றி ரிஷான்.. என் பேரையும் சேர்த்துள்ளீர்கள்.. இப்பதான் அறிந்தேன், தாங்கள் ஆசிரியர் என. வாழ்த்துகள் . //

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி..:)
    உங்கள் சேவைகள் தொடரட்டும் !

    ReplyDelete
  45. வாங்க ஷைலஜா அக்கா :)

    //நன்றி ரிஷான்
    என் பெயரை முதலில் சொல்லிய உங்க இந்த பதிவுக்கு கடைசியா நான் மடல் இடக்காரணம் ஊர்ல பல நாட்கள் இல்லாததே.
    ரொம்ப பெருமையா இருக்கு ராணியாகிட்டோம்னு ஆமா க்ரீடம் செங்கோல்லாம் எப்போ தரப்போறீங்க?:):)//

    நல்லவேளை தாமதமா வந்தீங்க...நான் ஆசிரியர இருந்தப்போ கேட்டிருக்கணும் அக்கா..அப்பதான் கொடுக்கலாம் :)
    (அப்பாடா...தப்பிச்சேன் : P )

    //சாமரம் வீச பாவனா தமனாவை அனுப்பவேண்டாம் :):)//

    சாமரம் வீச இவங்களா? அடடா..வலையுல ரசிகர் பட்டாளமே கொந்தளிக்குமே அக்கா :)

    ReplyDelete
  46. // எழுத்தாளராக, பாடகியாக, நடிகையாக, திரைப்படங்களில் பிண்ணனிக்குரல் கொடுப்பவராக, பதிவராக எனப் பலமுகங்கள்.//

    டி டி பொதிகையில் தான் இவங்கள பாத்திருக்கேன்.

    ராமலக்ஷ்மி,துளசி கோபால் இவங்கெல்லாம் நம்ம பிட்டுல மிரட்டுவாங்க.

    ஜெஸிலா,உஷா,காயத்ரி,லேகா இவங்கலையும் சேர்த்திருக்கலாம் ரிஷான்.

    ReplyDelete
  47. அன்பின் கார்த்திக்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது