07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 21, 2009

ஜிகு ஜிக்காங் ஜிகு ஜிக்காங் ஜிக்காங்...

இன்று ஒரு நாளைக்கு பதிவர் அறிமுகம் கிடையாது. விருதுகளுக்கான அறிவிப்பு தான் இன்றைய ஸ்பெஷல். நான் கீழே குறிப்பிடுகிற விருதுகளுக்குப் பொருத்தமான பதிவர்களை வாசகர்கள் முன்மொழிந்தால், எங்களது தேர்வுக்குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும். நிபந்தனைக்கு உட்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

 

clip_image002

வெள்ளிச் சுத்தி விருது: அலுவலகத்தில் ஆணி அதிகமாகி, அதன் காரணமாகப் பதிவு எழுத முடியாதவர்களுக்கான விருது இது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது திடிரென பதிவு எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது சுத்தமாக நிறுத்திவிட்டாலோ அவர்களை இந்த விருதுக்கு முன்மொழியலாம்.

 

image

பகிரங்கக் கடித மன்னர்: வலைப்பதிவு தொடங்கிய நாளிலிருந்து ஒருவருக்காவது பகிரங்கக் கடிதம் எழுதியிருக்க வேண்டும். கவனச் சிதறல்களுக்கு இடங்கொடாத வகையில் எழுதப்பட்ட கடிதமாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்களை எழுதியிருந்தாலும் ஒரு பதிவருக்கு ஒரு கடிதம் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

 

image

இதயம் முரளி விருது: மிட்-நைட்ல (எந்த நாட்ல இருக்காரோ அந்த நாட்டோட மிட்நைட்) காதல் கவிதை எழுதி பதிவேற்றம் பண்ணுகிற ஆண் பதிவராக இருக்க வேண்டும். உருகி உருகிக் கவிதை எழுதியும் ஒரு ஃபிகரும் மாட்டாத ஏக்கத்தோடு அலைகிறவராக இருக்க வேண்டும். இந்தப் பிரிவில் சகட்டு மேனிக்கு முன்மொழிவுகள் இருக்கும் என்பதால் முதலில் வருகிற பத்து முன்மொழிவுகள் மட்டுமே ஏற்கப்படும். பத்தைத் தாண்டி பதினொன்றாக இருந்தால் அது எவ்வளவு பெரிய பதிவராக இருந்தாலும் நிராகரிப்புதான்.

 

image

ஒற்றை ரோசா விருது: பதிவுலகக் கவிதாயினிகளுக்கான விருது. அதிர்ச்சி மதிப்புகளுக்காக உடல் உறுப்புகளின் பெயர்களைக் கவிதைகளில் சேர்த்து எழுதுபவராக இருக்க வேண்டும். பெரும் கைகலப்புகளை எதிர்பார்ப்பதால், இவ்விருதுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் அரக்கு முத்திரையிட்ட உரையில் வைத்து அனுப்பப்பட வேண்டும். தங்களுக்குப் பிடித்த யாரை வேண்டுமானாலும் முன்மொழியலாம். ஆனால் நீங்கள் முன்மொழிந்ததை அந்தக் கவிதாயினி உள்பட யாருக்குமே தெரியப்படுத்தக் கூடாது. வீண் கலகங்களைத் தவிர்க்கும் பொருட்டே இத்தனைக் கட்டுப்பாடுகள்.

 

image

பெஸ்ட் போட்டோகிராபி விருது: ஐயா வலைமக்களே, நீங்கள் எதிர்பார்ப்பது போல இது ஒன்றும் நன்றாகப் படம் எடுக்கிறவர்களுக்கான விருது கிடையாது. நன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறவர்களுக்கான விருது. அப்படி யாராவது பதிவுலகப் “பட விரும்பிகள்” இருந்தால் தயங்காமல் இவ்விருதுக்கு முன்மொழியலாம்.

 

image

உலகம் சுற்றும் வாலிபன் விருது: அலுவலகக் காசில் ஆன்-ஷோர் போயிருந்தாலும், ஆணிகளை மறந்துவிட்டு பயணக் கட்டுரைகளைப் பதிவேற்றிய பதிவராக இருக்க வேண்டும். முன்மொழியப்படும் பதிவர் குறைந்தது இரண்டு முறையாவது வெளிநாடுகளுக்குப் பறந்திருக்க வேண்டும்.

 

மேற்கண்ட விருதுகளுக்கான முன்மொழிவுகளை வருகிற 23ம் தேதிக்குப் பிறகு எப்போ வேணுமானாலும் அனுப்புங்க. ஏன்னா, வலைச்சரத்துக்கு அப்போ வேற யாராவது ஆசிரியரா இருப்பாங்க. சைட்ல குப்பத் தொட்டி இருந்தா அதுல காறித் துப்பிட்டு தொடர்ந்து படியுங்க. எனக்கு வாக்குறுதி கொடுக்க மட்டும் தான் தெரியும். உண்மையிலயே யாருக்காவது இந்த மாதிரி விருதுகளக் குடுக்கனும்னு ஆசையா இருந்தா தாராளமா குடுக்கலாம். இத ஒரு கோரிக்கையா இல்லாம கட்டளையா ஏத்துக்கிட்டு வலையுலகச் சிங்கங்கள் யாராவது இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அப்படி யாராவது முயற்சி எடுத்து என் கண்களைப் பனிக்க வைத்து இதயத்தை இனிக்க வைத்தால், சார்மினார் எக்ஸ்பிரஸ்ஸில், டாய்லெட்டிலேயே ஹைதராபாத் “வந்து செல்லும்” அரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.

 

டிஸ்கி: மேற்கண்ட விருதுகள் யாரையும் கேலி செய்வதற்காக எற்படுத்தப்பட்டதல்ல. அப்படி நேர்ந்திருக்குமாயின் அது உள்நோக்கமற்றதே.

 

நாளை சந்திப்போமா...

8 comments:

  1. //உலகம் சுற்றும் வாலிபன் விருது://

    இது கண்டிப்பா கே.ஆர்.எஸ். க்கு தான் சும்மாவா, நட்சத்திர பதிவே பதித்தவராச்சே!

    ReplyDelete
  2. \\ஒற்றை ரோசா விருது\\

    எனக்கு ஒருத்தர் பேரு தெரியும்

    ஆனாலும் வேண்டாம் ...

    விட்டுடுங்க ...

    ReplyDelete
  3. பகிரங்க கடிதம் வால்பையன்..

    பெஸ்ட் போட்டோகிராபி விருது ஹ்ஹிஹிஹி.. என்னை விட வேற யாரு இருக்கா?

    ReplyDelete
  4. வெள்ளிச்சுத்தி விருது - கொஞ்சம் நமக்கு கிடைக்கிற மாதிரி பாருங்க.

    ப.க.மன்னர் - ஊட்டியில இருக்கிறவருக்கு.

    இதயம் முரளி விருது - இப்பவும் கல்லூரி பையன் தோற்றமளிக்கும் பரிசல்காரனுக்கு.

    ReplyDelete
  5. போட்டோகிராபி ஜெகதீசனுக்கு கொடுங்க...

    விமான டிக்கட்ட என் கிட்ட கொடுங்க... ஒரு டிக்கட்டு மட்டுமா இல்லை டிக்கட்டை அழைத்துவர டிக்கட் கிடைக்குமா?

    ReplyDelete
  6. நல்லாருக்கு வி.கோ.சாமி - விக்கிக்கு டிக்கெட்டும் கொடுத்து - டிக்கெட்டுக்கு டிக்கெட்டும் கொடுக்கணுமாம் - பாத்துக்கங்கப்பா

    ReplyDelete
  7. யோவ் உமக்கு நக்கல் அதிகம்யா... :)))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது