இலங்கைப் பதிவர்களில் சிலர்..!
➦➠ by:
எம்.ரிஷான் ஷெரீப்
உள் நாட்டில் மனம் வருத்தும் ஓயாப் போர்ச் சத்தம் வாழ்வினை அலைக்கழிக்கச் செய்திடினும் சென்ற இடமெல்லாம் தமிழுக்குச் சிறப்பினைச் சேர்க்கும் எனது தாய்த் தேச அன்புப் பதிவர்கள் சிலரை இப்பதிவில் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
கானா பிரபா - வலையுலகின் மூத்த பிரபல பதிவர். 'ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன் ' எனச் சொல்லும் வானொலி அறிவிப்பாளரான இவரது பிறப்பிடம் இணுவில், யாழ்ப்பாணம். தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வசித்துவருகிறார். பல வலைப்பூக்களுக்குச் சொந்தக்காரரான இவரது 'மடத்துவாசல் பிள்ளையாரடி' பல அனுபவக் கட்டுரைகளையும், புகழ்பெற்றவர்கள் பற்றிய கட்டுரைகளையும் கொண்டது. 'ரேடியோஸ்பதி' இசை,இசையமைப்பாளர்கள்,பாடகர்கள் பற்றிய குறிப்புக்களோடு , அவர்களது நேர்காணல்களும் உள்ளடக்கியது. அதில் இவர் கேட்கும் புதிர்க் கேள்விகள், வாசகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் பதிவுகள். 'உலாத்தல்' - இவரது பயண அனுபவக் கட்டுரைகளைக் கொண்ட வலைப்பூ. 'வீடியோஸ்பதி' பல பாடல்களின், படங்களின் ஒளித்தொகுப்புக்களையும், திரை விமர்சனங்களையும் கொண்டது. மிகச் சுவாரஸ்யமான பதிவரான இவரது பல பதிவுகள் வியப்புக்குள் ஆழ்த்துவதோடு, இன்னும் நிறைய எதிர்பார்க்கவும் வைக்கின்றன.
யோகன் - தற்பொழுது பாரிஸில் வசிக்கும் இலங்கையரான இவருக்குச் சொந்தமாக நான்கு வலைப்பூக்கள் உள்ளன. பார்க்கப்,படிக்கக்,கேட்கப் பிடிக்கும் எனச் சொல்லும் இவரது 'என் பார்வையில்', 'எனது பார்வை' என்பன எண்ணக்குறிப்புக்களையும் கட்டுரைகளையும் கொண்டிருப்பதோடு , 'பாட்டுக் கேட்போமா?' பிடித்த பாடல்களைப் பகிர்ந்துகொள்கிறது. 'My views through the lens' - இவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டிருக்கிறது. பன்முகப்பார்வை கொண்ட பதிவுகளுக்குச் சொந்தக்காரரான இவர் தற்பொழுது பதிவுகள் எழுதி பல மாதங்களாகிறது. இந்தப் பதிவின் மூலம் அவரைத் திரும்பவும் பதிவுகளையெழுத அன்பாக அழைக்கிறேன்.
நிர்ஷன் - '"அறிவில்லாதவன்" எனச் சொல்கிறார்கள் ' எனச் சொல்லிக்கொள்ளும் இவர் மலையக மண் ஈன்ற அறிவில் ஆதவன். 'புதிய மலையகம்', 'மேடை' என இரு வலைப்பூக்களைத் தனதாக்கி எழுதி வரும் இவர் இலங்கையில் இறக்குவானையைச் சேர்ந்தவர். இவரது கவிதைகள் 'மேடை'யில் மின்னுவதோடு பல காத்திரமான கட்டுரைகளும், அனுபவப் பகிர்வுகளும் 'புதிய மலையக'த்தில் நிறைந்திருக்கின்றன. இவர் தனது பதிவுக் கட்டுரைகளில் குறிப்பிடும் அனைத்தும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளக் கூடியதே. மலையகம் தந்த முதல் பதிவர் என நினைக்கிறேன். மிகவும் மகிழ்வுடனான வாழ்த்துக்கள் அவருக்கு உரித்தாகட்டும்...!
லோஷன் - வெற்றி FM முகாமையாளரான இவர் ஒரு வெற்றிகரமான அறிவிப்பாளரும் கூட. இலங்கை, வெள்ளவத்தையிலிருந்து அண்மையில் வலைப்பதிய வந்திருக்குமிவர் அதற்குள்ளாகவே பல வாசகர்களைத் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டவர். பணிகள் மிகைத்திருந்த பொழுதிலும் தொடர்ந்தும் தவறாமல் எழுதிவரும் இவருடைய பல பதிவுகள் பயன்மிக்கவை. தனது ஊடக அனுபவங்களை நகைச்சுவை கலந்த நடையில் பகிர்ந்துகொள்வதோடு வலைப்பதிய வந்த நான்கு மாத காலத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதிவிட்ட ஒரு உற்சாகமிக்க படைப்பாளி.
தாசன் - இலங்கையின் பிரபல பத்திரிகையொன்றில் ஊடகவியலாளராக எழுதி வந்த இவர் தற்பொழுது துபாயில் வசித்துவருகிறார். இவரது 'ஆரவாரம்' வலைப்பூவில் பத்திரிகையில் வெளிவந்த ஆக்கங்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனங்கள், நகைச்சுவைகள் எனப் பல பதிவுகளை எழுதியிருக்கிறார். இறுதிப் பதிவாக கடந்த மே மாதப் பதிவிற்குப் பின்னர் தனது வலைப்பூவில் இவர் எதையும் எழுதவில்லையெனத் தெரிகிறது . இந்தப் பதிவின் மூலம் அவரைத் திரும்பவும் பதிவுகளையெழுத அன்பாக அழைக்கிறேன்.
முரளிதரன் மயூரன் - தனக்கென நான்கு வலைத்தளங்களை உருவாக்கி, பல தரப்பட்ட விடயங்களை (கணனி, மென்பொருட்கள், கவிதைகள், கட்டுரைகள், பத்திகள் என ) எழுதிவரும் இவர் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்தவர்.
தமிழன் - கறுப்பி - ஒரு பெண்ணிடம் தோற்றவன் எனத் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் இவர் இலங்கையைச் சேர்ந்தவர். இவரது 'காதல் - கறுப்பி' வலைப்பூ முழுவதும் காதலின் குறிப்புக்களைத் தாங்கி நிற்கின்றன. குறிப்புக்களில் அனேகமானவை இழந்த நேசத்தின் துயரங்களைப் பாடுவதாகவே இருக்கின்றன . அவற்றையும் அழகாகவே எழுதுகிறார்.
தங்கராசா ஜீவராஜ் - இலங்கை, தம்பலகாமத்தைச் சேர்ந்த வலைப்பதிவரான இவர் ஒரு வைத்தியரும் கூட. தற்பொழுது திருகோணமலையில் வசித்துவரும் இவருக்குச் சொந்தமாக பல வலைப்பூக்கள் உள்ளன. அவற்றில் அருமையான மருத்துவக்குறிப்புக்கள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல எழுதிவருகிறார்.
மயூரன் - பல வலைப்பூக்களில் பங்குகொண்டு அருமையான பதிவுகளை எழுதிவருமிவர் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆன்மிகம், புகைப்படம், கலைஞர்கள் பற்றிய குறிப்பு ,இன்னும் பல பதிவுகளை எழுதிவருகிறார்.
கிங் - இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான இவரது வலைப்பூவில் கவிதைகள், பத்தி கட்டுரைகள், அனுபவக் குறிப்புக்கள், வலியும் நிதர்சனமும் உரைக்கும் புகைப்படங்கள் என்பன இடம்பெற்றுள்ளன.
வந்தியத்தேவன் - "நான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை." எனச் சொல்லும் இவர் இலங்கை, கொழும்பிலிருந்து பதிந்து வருகிறார்.
மதுவதனன் மௌ - 'நா' எனும் வலைப்பூவைத் தனதாக்கிக் கொண்டுள்ள இவர் ' "நா அசைய நாடே அசையும" என்று சொல்வார்கள். நான் நாடசைக்க இங்கு வரவில்லை. நாவுக்கு அகராதியிலே நாக்கு, தீயின் சுடர், சொல், அழகு மற்றும் நடு என வேறுபட்ட நல்ல அர்த்தங்களைப் பார்த்ததால்' எனத் தன் 'நா'வுக்கான விளக்கத்தை மிக அழகாகச் சொல்கிறார். தனது எண்ணக்குறிப்புக்களை சுவாரஸ்யமாக எழுதி வருகிறார்.
தங்க முகுந்தன் - 'கிருத்தியம்' எனும் தனது வலைப்பூவில் அரசியல் கட்டுரைகளை, ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி வரும் இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதிவர். தற்பொழுது ஸ்விட்சர்லாந்திலிருந்து பதிவுகளை எழுதிவருகிறார்.
கவின் - 'வேற்று கிரகவாசி' எனத் தன்னைச் சொல்லிக் கொண்டாலும் இவரது சுவாரஸ்யமான பதிவுகளில் பயன்படுத்தியிருக்கும் அழகு தமிழ் பிறப்பிடம் யாழ்ப்பாணமெனச் சொல்கிறது. தற்பொழுது பிரான்ஸில் வசித்துவருமிவர் அண்மையில்தான் வலையுலகிற்கு வந்தாரெனினும் அதற்குள்ளாகவே பல பதிவுகள் எழுதிவிட்டார்.
சித்தாந்தன் - 'நான் என் கடலில் இறங்கி நடக்கத்தொடங்கினேன் வெறும் படுக்கைதான் தெப்பமாக மிதந்துகொண்டிருக்கிறது' எனத் தன்னைப் பற்றிச் சொல்லும் கவிஞரான இவர் மிகச் சிறந்த மொழிக் கையாளுகையைத் தன்னுள் கொண்டிருக்கிறார். 'தமருகம்', 'தருணம்', 'விமர்சனங்கள்' எனும் வலைப்பூக்களைக் கொண்டுள்ள இவர் அவற்றில் தன் படைப்புக்களை எழுதிவருகிறார்.
இலங்கைப் பதிவர்கள் இன்னும் பலர் வலையுலகில் இருக்கிறார்கள்.இப்போதைக்கு என் பார்வைக்கு வந்தவர்களை இப்பதிவில் சமர்ப்பித்திருக்கிறேன். இன்னுமொரு பதிவில் மற்றவர்களையும் சந்திப்போம்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
|
|
இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எனக்கு புதிய அறிமுகங்கள். நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி ரிஷான்
ReplyDeleteமிக்க நன்றி ரிஷான்
ReplyDeleteபெண்கள்??
ReplyDeleteஎன்னையுமா என்னை யாருக்கும் தெரியாதென்றல்லவா நினைத்திருக்கிறேன்...:)
ReplyDeleteநான் சொல்ல விரும்பாதவைகளை எழுத வேண்டும் என்று நினைப்பவன் ஆனால் சொல்லப்போனால் எல்லாமே சொல்ல முடியாததாகத்தான் இருக்கிறது ...இத்தனை பேரோடு என்னை சேர்த்துக்கொண்டதற்கு நன்றி தோழா...
இவ்வளவு வேகமாய் இத்தனை அற்புதமான சுட்டிகளை கொடுத்த ஆள் நீங்கள்தான் ரிஷான்...
ReplyDeleteஎத்தனையோ பேருக்கு தெரியாத சுட்டிகளை கடந்த நாட்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்...
பல மூத்த பதிவர்கள், அதிகம் படிக்க கிடைக்காத பதிவர்கள் என்று பலரையும் வந்திருக்கிற புதிய பதிவர்களுக்கு வசதியாக சுட்டிக்காட்டி இருந்தீர்கள்.
மறுபடியும் எனக்கும் ஒரு சுட்டி கொடுத்ததற்கு நன்றிகள்...
தாயகப்பதிர்களை தொகுத்தமைக்கு நன்றி ... நன்றி ...
ReplyDeleteஇன்னும் இருக்கிறார்களே ?
// Thooya said...
பெண்கள்??//
ஏன் இல்லை இருக்கிறார்கள் . .
http://mayunathan.blogspot.com/2007/10/blog-post_27.html
இனைப்பாருங்கள்
அழகான தொகுப்பு ரிஷான்!!
ReplyDeleteஅன்பின் மஹேஷ்,
ReplyDelete//இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எனக்கு புதிய அறிமுகங்கள். நன்றி...//
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கானாபிரபா,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
உங்கள் சேவை இடையறாது தொடரட்டும் !
அன்பின் தங்கராசா ஜீவராஜ்,
ReplyDeleteஉங்கள் சேவை இடையறாது தொடரட்டும் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் தூயா,
ReplyDeleteஇலங்கைப் பெண் பதிவர்கள் சிலரை மற்றப் பதிவுகளில் அறிமுகப்படுத்திவிட்டதால் இதில் அறிமுகப்படுத்தவில்லை சகோதரி :)
அன்பின் கிங்,
ReplyDelete//என்னையுமா என்னை யாருக்கும் தெரியாதென்றல்லவா நினைத்திருக்கிறேன்...:) //
வலையுலகத்திற்கு வந்தபின்னால் வலைப்பதிவர்களை எல்லோருக்கும் தெரியும் நண்பரே..நீங்களும் அப்படித்தான் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
சேவை தொடரட்டும் :)
அன்பின் மாயா,
ReplyDelete//தாயகப்பதிர்களை தொகுத்தமைக்கு நன்றி ... நன்றி ...
இன்னும் இருக்கிறார்களே ?//
ஆமாம்..இன்னும் பரந்திருக்கிறார்கள். தற்சமயம் என் பார்வையில் பட்டவர்களைத் தந்திருக்கிறேன்..இன்னுமொரு பதிவில் மற்றவர்களையும் சந்திப்போமே ? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..தங்கள் சேவைகள் தொடரட்டும் :)
அன்பின் திவ்யா,
ReplyDelete//அழகான தொகுப்பு ரிஷான்!!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)
//இவ்வளவு வேகமாய் இத்தனை அற்புதமான சுட்டிகளை கொடுத்த ஆள் நீங்கள்தான் ரிஷான்...
ReplyDeleteஎத்தனையோ பேருக்கு தெரியாத சுட்டிகளை கடந்த நாட்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்...
பல மூத்த பதிவர்கள், அதிகம் படிக்க கிடைக்காத பதிவர்கள் என்று பலரையும் வந்திருக்கிற புதிய பதிவர்களுக்கு வசதியாக சுட்டிக்காட்டி இருந்தீர்கள்.//
நன்றி நண்பர் கிங் :)
மிக்க நன்றி ரிஷான்
ReplyDeleteஎன்னையும் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி
அன்பின் லோஷன்,
ReplyDelete//மிக்க நன்றி ரிஷான்
என்னையும் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..:)
உங்களது சேவை தொடரட்டும் !
//
ReplyDeleteThooya said...
பெண்கள்??
//
கண்டனங்கள்
அகில இந்திய
தூயாவின்ட சமையற்கட்டு கொலைவெறி வாசகர்கள் படை
மங்களூர் கிளை
இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எனக்கு புதிய அறிமுகங்கள். நன்றிகள் ரிஷான்
ReplyDeleteநன்றி ரிஷான்...
ReplyDeleteரிஷான்...
ReplyDeleteஆரம்ப காலங்களில் நான் அடிக்கடி பதிவிடுவேன். இப்போது வலைப்பதிவுகளிலிருந்து கொஞ்சம் தொலைவில்தான் நிற்கிறேன். உங்களது இந்த அறிமுகம் மீண்டும் அடிக்கடி பதியவேண்டும் என ஒரு எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
மிக்க நன்றி.
மதுவதனன் மௌ.
அன்பு நன்றிகள் ரிஷான்.
ReplyDeleteவாங்க மங்களூர் சிவா :)
ReplyDelete////
Thooya said...
பெண்கள்??
//
கண்டனங்கள்
அகில இந்திய
தூயாவின்ட சமையற்கட்டு கொலைவெறி வாசகர்கள் படை
மங்களூர் கிளை//
அதாவது பல்லி, கரப்பான்பூச்சிகளுக்கெல்லாம் கூட மங்களூர்ல கிளைகள் ஆரம்பிச்சாச்சா? (தூயாவின் சமையற்கட்டில் நிஜமாகவே இதுதான் இருக்கும்னு ஒரு மூ...த்த பதிவர் சொல்லலைங்க :P )
அன்பின் சக்தி,
ReplyDelete//இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எனக்கு புதிய அறிமுகங்கள். நன்றிகள் ரிஷான்//
இன்னும் பலர் இருக்கிறார்கள்..அறிமுகப்படுத்த நேரமும் இணையமும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி :)
அன்பின் தமிழன்,
ReplyDelete//நன்றி ரிஷான்...//
தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள் நண்பரே :)
அன்பின் மதுவதனன்,
ReplyDelete//ரிஷான்...
ஆரம்ப காலங்களில் நான் அடிக்கடி பதிவிடுவேன். இப்போது வலைப்பதிவுகளிலிருந்து கொஞ்சம் தொலைவில்தான் நிற்கிறேன். உங்களது இந்த அறிமுகம் மீண்டும் அடிக்கடி பதியவேண்டும் என ஒரு எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
மிக்க நன்றி.//
குறைந்தது மாதத்திற்கு 4 பதிவுகளாவது இடுங்கள் நண்பரே..உங்களால் முடியும்..!
தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள் நண்பரே ..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
அன்பின் நிர்ஷா,
ReplyDelete//அன்பு நன்றிகள் ரிஷான்.//
தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள் நண்பா..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
இப்ப தாங்க இனையபக்கம் வர நேரமே கிடைச்சிருக்குங்க...
ReplyDeleteநன்றிங்க நான் இதை எதிர்பார்கவே இல்லைங்க.... வலைப்பூபக்கம் வந்து கொஞ்சகாலம் தான் ஆகுது அதற்குள் என் மேலையும் கொஞ்சம் வெளிச்சம் பட்டிருக்குங்க... சந்தோசமக இருக்கிறது...
நன்றிங்க..
பல இலங்கைப்பதிவர்களை அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅன்பின் கவின்,
ReplyDelete//இப்ப தாங்க இனையபக்கம் வர நேரமே கிடைச்சிருக்குங்க...
நன்றிங்க நான் இதை எதிர்பார்கவே இல்லைங்க.... வலைப்பூபக்கம் வந்து கொஞ்சகாலம் தான் ஆகுது அதற்குள் என் மேலையும் கொஞ்சம் வெளிச்சம் பட்டிருக்குங்க... சந்தோசமக இருக்கிறது...
நன்றிங்க..//
வலைப்பதிய வந்து கொஞ்சநாள் என்றாலும் நல்ல பதிவுகள் தருகிறீர்கள்..தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்..வாழ்த்துக்கள் நண்பரே :)
அன்பின் ரஜீபன்,
ReplyDelete//பல இலங்கைப்பதிவர்களை அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு நன்றி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
சென்ற இடமெல்லாம் தமிழுக்குச் சிறப்பினைச் சேர்க்கும் எனது தாய்த் தேச அன்புப் பதிவர்கள் சிலரை அறிமுகம் செய்த முகம் காணா அன்பு நண்பர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றேன். மிக நல்லதொரு பணியை முன்னெடுத்து தமிழுணர்வை வெளிப்படுத்திய அவரது உயர்ந்த - பரந்த எண்ணத்திற்கு தமிழின் சார்பாக எனது அன்பு நன்றிகள். வாழ்க உமது தமிழ்ப்பணி வளர்க அன்புப் பதிவர்கள் தொடர்பு
ReplyDeleteஎன்றும் அன்புடன்
தங்க. முகுந்தன்.
அன்பின் தங்கமுகுந்தன்,
ReplyDelete//சென்ற இடமெல்லாம் தமிழுக்குச் சிறப்பினைச் சேர்க்கும் எனது தாய்த் தேச அன்புப் பதிவர்கள் சிலரை அறிமுகம் செய்த முகம் காணா அன்பு நண்பர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றேன். மிக நல்லதொரு பணியை முன்னெடுத்து தமிழுணர்வை வெளிப்படுத்திய அவரது உயர்ந்த - பரந்த எண்ணத்திற்கு தமிழின் சார்பாக எனது அன்பு நன்றிகள். வாழ்க உமது தமிழ்ப்பணி வளர்க அன்புப் பதிவர்கள் தொடர்பு//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..:)
உங்களது சேவை தொடரட்டும் !