07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 4, 2009

படித்ததில் பிடித்தது & படைத்ததில் பிடித்தது

பதிவர் நண்பர்கள் நால்வரிடம் அவர்கள் படித்ததில் பிடித்த ஒரு இடுகையும், எழுதியதில் பிடித்த ஒரு இடுகையும், ஏன் பிடிக்கும் என்ற விளக்கத்தையும் தருமாறு கேட்டிருந்தேன்..

அவர்கள் எழுதியதில் எனக்குப் பிடித்த ஒரு இடுகையும்,
அவர்கள் எழுதியதில் அவர்களுக்குப் பிடித்த ஒரு இடுகையும்,
அவர்கள் படித்ததில் பிடித்த ஒரு இடுகையும் இந்த வலைச்சரத்தில்....

விக்னேஷ்வரன்
வாழ்க்கைப் பயணம், வாழ்க்கைச் சித்திரம் என்ற இரு வலைப்பூக்களின் சொந்தக்காரர்.. தமிழோசை நாளிதழில் கட்டுரைகள் எழுதுகிறார்..
இவரது 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் ஒரு நல்ல தொடர்கதை. இதை 17வது பகுதியுடன் நிறுத்திவிட்டார்.. விரைவில் கதையைத் தொடர வேண்டும் என அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்...

இனி அவருக்குப் பிடித்த இடுகைகள்...

நான் எழுதியதில் எனக்கு பிடித்தது என தனியாக எதையும் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. எழுதினவற்றை சில நாள் கழித்து படிக்கும் போது போயும் போயும் இதையா எழுதினோம் என்ற எண்ணம் மேலிடுகிறது. சில வேளைகளில் இதையெல்லாம் எதற்காக எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என சிந்திக்கச் செய்கிறது. மனிதனுக்கு அங்கிகாரம் மட்டும் இல்லாமல் போய்விட்டால் ஒவ்வொருவரும் சோர்வுடன் தான் இருப்பார்கள் போல. எனக்கு பிடித்த பதிவுகளை கேட்டு வலைச்சரத்தில் கொடுத்து உற்சாகம் கொடுக்கும் ஜெக தீசனுக்கு நன்றி. நான் எழுதியதில் இந்த பதிவு எனக்கு பிடிக்கும். http://vaazkaipayanam.blogspot.com/2008/11/troy.html

ஆதவனின் சிறுகதைகள் எனும் தொகுப்பு நூலினைப் படித்திருக்கிறீர்களா? அதில் நீர்க் குமிழிகள் எனும் தலைப்பில் ஒரு சிறுகதை இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்த எதிர்பார்ப்புகள் கனவுகளைப் போன்றவை தான். அவை வெடித்துச் சிதறும் தருனங்கள் எதிர்பார்க்கப்படாதவை. ஜி எழுதிய புரசைவாக்கம் நெடுஞ்சாலை எனும் கதையை படித்திருக்கிறீர்களா? http://veyililmazai.blogspot.com/2008/04/blog-post_22.html நிறந்தரமற்ற வாழ்க்கயில் எதையோ நோக்கி மனிதனின் பயணித்துக் கொண்டிருக்கிறார்ன். அவசியம் பெற்றவனுக்கு கிடைப்பதில்லை. கிடைத்தவனுக்கு அவசியம் இல்லை என்பது தான் இக்கதையின் சாரம்.


ஜோதிபாரதி
சென்ற வாரம் வலைச்சர ஆசிரியராக இருந்து வலைச்சரத்தைக் கலக்கியவர்..
தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தால் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற "ஈழத்தமிழரும் இந்திய அரசியலும்" கட்டுரையைப் படித்துப் பாருங்களேன்..

இது http://jothibharathi.blogspot.com/2008/12/blog-post_19.html அவரது இடுகைகளில் அவருக்குப் பிடித்ததாம்...எதனால் பிடிக்கும் எனக்கேட்டால், "என் பதிவைப் பற்றி நானே பெருமையாகப் பேசக்கூடாது" என்று சொல்லிவிட்டார்...:P

இனி அவர் படித்ததில் பிடித்த இடுகையும் ஏன் பிடிக்கும் என்று அவர் அளித்த விளக்கமும்..
தமிழக அரசியல்வாதிகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக துரோகம் செய்துவிட்ட நிலையில், ஈழமக்களுக்காக தமிழக மக்கள் எந்தெந்த வகைகளில் போராட முடியும் என்பதை பல்வேறு வகைகளில் எடுத்தியம்பியிருக்கிறார் திரு நாக இளங்கோவன் அவர்கள். அவருடைய பல பதிவுகள் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. அவருடைய நயனம் வலைப்பக்கத்தில் சில அறிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுகிறார். நாமும் அவரது கட்டுரைகளை வாசிப்போமே!
http://nayanam.blogspot.com/2009/02/blog-post_02.html


நட்புடன் ஜமால்

இந்தப் பின்னூட்ட சுனாமியின் இடுகைகளில் எனக்குப் பிடித்தது.. மின்னல் - மின்னஞ்சல்

இனி அவருக்குப் பிடித்த இடுகைகள்...
http://pirathipalippu.blogspot.com/2008/11/blog-post_10.html
ஜீவன் ‘கண்ணாடி’ என்ற பெயரில் பதிவிடுகிறார்.
இவர் சிகரெட்டை எப்படி விட்டேன் என்று பதிவு போட்டு இருக்கார்.
மிகவும் தத்ரூபமாக இருந்தது.
நான் இதனை படித்த பொழுது மிகவும் நெகிழ்வாய் உணர்ந்தேன்.
பதிவுலகின் ஆரம்ப காலம் எனக்கு அது.

என்னில் இரசித்தது.
http://adiraijamal.blogspot.com/2008/11/1992.html
கண் இல்லாதவர்களுக்காக என் காதலி கேட்டு நான் எழுதிய முதல் கவிதை வடிவம்.
கண் தானத்தை முன்னிருத்தி எழுதியது


கோவி.கண்ணன்
கோவி.கண்ணனின் இடுகைகளில் எனக்குப் பிடித்தது, கண்ணபிரான் ரவிசங்கரின் (கேஆர்எஸ்) மாதவிப்பந்தல் பற்றி அவர் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட இந்தப் பதிவு..

அவருக்குப் பிடித்த இடுகைகள்...
காலஞ்சென்றவை: சமஸ்கிருதமும் லத்தீனும் என்ற தலைப்பில் சமஸ்கிரதம் மற்றும் லத்தீன் குறித்த சிறு ஆயுவுக்கட்டுரையை பதிவர் ஜெகத் எழுதி இருக்கிறார். கணனி அறிவு செறிவுடன் மொழிகள் குறித்தும் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். மேற் சொன்ன கட்டுரையில் லத்தீனும், சமஸ்கிரதமும் பழங்காலத்தில் கோலொச்சியதற்கு
காரணமே அவை வழிபாட்டு மொழிகளாக முன்மொழியப் பெற்றதாகும். புனிதம் கருதியதாலேயே புதிய சொற்களேற்பும், வெறும் இலக்கிய மொழி என்ற அளவில் இருந்ததால் புழக்கத்தில் இருந்து மறைந்ததாகவும் கூறுகிறார். இருமொழிகளுக்கு இடையே பெரும் ஒற்றுமை இருப்பதை எடுத்துகாட்டுகளுடன் விளக்கி யுள்ளார்.
நாமன் -> நாமம், நாமகரணம்
nomen -> name, nomenclature
தந்த் -> தாந்த் (ஹிந்தி: பல்)
dentis -> dental
த்ரி -> த்ரிமூர்த்தி, த்ரிவேதி
tria -> triangle, trinity
இன்னும் ஏராளமான சொற்கள் படித்துபாருங்கள். மிகவும் சிறந்த ஆவணம்


இவர்கள் பெயர் ஏன் அரிசியில் இல்லை ?
பக்தி, இறைநம்பிக்கை இவை எதுவுமே தவறு அல்ல. ஆனால் இவற்றின் வழியாக ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டியவை மனித நேயம் தான். இதை வலியுறுத்துவிதமாக எழுதப்பட்ட கட்டுரை.


படித்ததில் & படைத்ததில் பிடித்த இடுகைகளைப் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றி!

14 comments:

  1. அடுத்து சுட்டதில் சுட்டதுன்னு ஒரு பதிவு போடு !

    ஐ மீன் புகைப்பட தொகுப்பில் விரும்பியவை !

    ReplyDelete
  2. மூன்றாம் நாள் வாழ்த்துகள்!

    ஓ!
    இதுல போடத்தான் கேட்டதா?

    ReplyDelete
  3. வித்தியாசமான முயற்சி !!!! ஜெகதீசன்..

    மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. :-)))...

    ஆகட்டும்...ஆகட்டும்!!!

    ReplyDelete
  5. மூன்றாம் வாழ்த்துகள்! படித்ததில் பிடித்ததை படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  6. இதுக்குத்தான் கேட்டியளோ ...

    ReplyDelete
  7. முதன் முதலில் என்னை பற்றிய அறிமுகம் வலைச்சரத்தில்

    நன்றிங்க.

    ReplyDelete
  8. ஜீவனின் "சிகரெட்" பதிவு அருமை.புகைப்பவர்கள்,கல்யாணமாகியிருந்தால் கட்டாயம் படிக்கவேண்டும்.

    ReplyDelete
  9. //இவரது 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் ஒரு நல்ல தொடர்கதை. இதை 17வது பகுதியுடன் நிறுத்திவிட்டார்.//

    ஒரே நேரத்தில் மனைவியையும் , காதலியையும் சமாளிக்க முடியலையாம்.
    அதான் தற்காலிகமா நிறுத்தி வச்சிருக்கார்

    ReplyDelete
  10. வித்தியாசமான தொகுப்பு

    படித்ததில் பிடித்தது..படைத்தலில் பிடித்தது...

    அப்படியே “கும்மி அடித்தலில்” பிடித்ததையும் சேர்க்க வேண்டுகிறேன்.. :-)

    ReplyDelete
  11. மூன்றாம் நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. மூன்றாம் நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது